×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஈஞ்சம்பாக்கம் மீனவர் சமுதாய பால்குட விழா

Saturday, 17 May 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

injambakkam palkudam small

 

ஈஞ்சம்பாக்கம் மீனவர் பகுதி கடற்கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகௌரியம்மனுக்கு 17 ஆம் ஆண்டு சித்ரா பெளர்ணமி பால்குட அபிஷேக விழா 14-05-2014 அன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது. 14-05-2014 அன்று காலை 9.00 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் குளக்கரையில் வீற்றிருக்கும் ஸ்ரீகௌரியம்மன் ஆலயத்திலிருந்து பால்குட ஊர்வலம் மேள தாள வாத்தியங்களுடன் புறப்பட்டு ஸ்ரீதுலக்கானத்தம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீகௌரியம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தது. கலந்து கொண்டனர். பால் குட ஊர்வலம் வரும் பாதை முழுவதும் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் ஊர்வலத்தினரை வரவேற்று அவர்களுக்கு பாத பூஜை செய்தனர். பின் அம்மனுக்கு மக்கள் அவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பாலை அவர்கள் கைகளினாலேயே அபிஷேகம் செய்யும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த பால்குட ஊர்வலத்தில் 191 பேர் பால் குடம் எடுத்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களும், வெளியூர் மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பிறகு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் நடைப்பெற்றது.

 

injambakkam palkudam small1

இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவினை பற்றி ஊர் தலைவர் திரு. மதியழகன் கூறுகையில் சித்ரா பெளர்ணமியன்று ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த பால்குட விழா அன்று மாலையில் விநாயகர், பரசுராமர், கௌரி அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் வைத்து வீதி ஊர்வலமாக வருவது வழக்கம் என்றும் ஆனால் இவ்வருடம் ஊர்வலம் செல்லும் பாதை முழுவதும் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் இவ்வருடம் நடத்த முடியவில்லை என்றும் கூறினார். மேலும், இக்கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று இராகு கால பூஜை நடைப்பெற்று வருவதாக 

 

இவ்விழாவிற்கு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தினருக்கு ஈஞ்சம்பாக்கம் மீனவர் சமுதாய ஊர் தலைவர் விடுத்திருந்த அழைப்பினை ஏற்று விழாவில் செய்தி தொடர்பாளர், தலைமை தொழில்நுட்ப அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Read 1264 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 18:10

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment