×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஒரு மாமா கோஷ்டியின் பிதற்றல்!

Friday, 01 August 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

July 24, 2014 அன்று வினவு வலைத்தளம் இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியைப் பற்றிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. இதில் உள்ள பிதற்றல்களுக்கு மறுமொழி அளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காரணத்தினால் இதைப்பதிவிடுகிறோம்.

வினவின் பிதற்றல்: http://www.vinavu.com/2014/07/24/hindu-spiritual-service-fair-experiences-1/

vianavu

//சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு எமது செய்தியாளர்கள் சென்ற போது நூற்றுக் கணக்கான வேடிக்கை, வினோத அனுபவங்கள் கிடைத்தன.//

”வேடிக்கை வினோத அனுபவங்கள்”, மிகவும் சரியான மேற்கோள் இராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகளில் பிரசித்திப் பெற்ற மீன்காரி பூக்காரி கதையை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. மூக்கை நன்றாகப் பொத்திக் கொண்டு மல்லிகைப் பூவின் வாசத்தை பிடிக்காமல் இருப்பது நலம்.

பழக்க தோஷம்!

….. தெரியுமா? கற்பூர வாசனை?

சாதனைகளும் சத்தியங்களும் காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களுக்கு வேடிக்கை வினோதமாகத்தான் இருக்கும்.

//ஏதோ இந்து என்ஜிவோ கும்பல் போலவும் இருந்தது.//

இந்து ஆன்மீக கண்காட்சியில் இந்து என்ஜிவோ இல்லாமல் வேறு என்ன என்ஜிவோ இருக்க முடியும்? கண்டுபிடிச்சுட்டாரு கலெக்டரு!

//கடையை நெருங்கும் போதே முஸ்லீம்கள், தீவிரவாதம், ஜிகாதி, பயங்கரவாதம், இந்துக்கள் பாவம் என்கிற வார்த்தைகள் எல்லாம் ஒருசேர ஒலித்துக்கொண்டிருந்தன. //

இப்படி ஒலிப்பதில் என்ன தவறு?

//‘வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரிலான கடைக்கு உள்ளே நுழைந்தால் விஞ்ஞானத்திற்கும் ஸ்டாலுக்கும் சம்பந்தமே இல்லை. வீச்சரிவாள், சைக்கிள் செயின், கத்தி கபடா என்று ஏதாவது ஒரு பெயர் வைக்க வேண்டிய ஸ்டாலுக்கு விஞ்ஞானத்தை இணைத்து பெயர் வைத்திருக்கிறார்கள்.//

இந்துக்கள் பாவம் என்று ஒலித்தது என்று முந்திய வரியில் சொல்லிவிட்டு இந்த வரியில் கத்தி கபடா என்று முற்றிலும் மாறான ஒரு கற்பனை கதையை எழுதுகிறது வினவு. அது ஒன்றும் தப்பில்லை தொழிலாளர்கள் பாவம் என்று சொல்லி அரிவாளை சின்னமாக கொண்டு அவர்கள் இரத்ததையே கொடியாக கொண்ட மனிதாபிமானிகளுக்கு (?) அவர்களைப் போலவே பிறரையும் நினைக்கத்தோன்றுகிறது போலும். தன்னைப் போல் பிறரை நினை.

//எந்தப் பள்ளியிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவிகளோ தெரியவில்லை அனைவரையும் அந்த ஸ்டாலுக்குள் உட்காரவைத்து தொலைக்காட்சியில் எதையோ போட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் அனைத்தும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தன.//

வயல் வரப்புகளிலிருந்தும், டீ எஸ்டேட்களிலிருந்தும் ரப்பர் தோட்டங்களிலிருந்தும் லாரி லாரியாக லோட் ஏற்றிக்கொண்டு வந்து அப்பாவி மக்களுக்கு புரியாத பூஷ்வா, இங்குலாப் போன்ற தூய தமிழ் சொற்களைப் பயன்படுத்தி தொண்டை கிழிய வீர முழக்கமிட்டு அவர்கள் புரியாமல் உட்கார்ந்து கொண்டு இருப்பது போல் இல்லாமல் குழந்தைகள் ஆர்வத்துடன் வீடியோ படத்தை கவனித்ததை பார்க்கும் போது அடி வயிறு 1000 டிகிரி செல்சியஸை எட்டத்தான் செய்யும்.

//அந்த ஸ்டாலை சுற்றிலும் இந்து மதவெறியை கக்கும் நச்சுப்பிரச்சார சுவரொட்டிகளை எக்கச்சக்கமாக ஒட்டி வைத்திருந்தனர்//,

இந்துக்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளையும், நம் நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இழைக்கப்படும் ஒரவஞ்சனைகளை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினால் அதற்கு பெயர் மதவெறி!

சூப்பர்! மதவெறிக்கு புது இலக்கணம் வகுத்த வினவுக்கு நன்றி!

// “சிறுபான்மையினருக்கு தான் இந்த நாட்டில் எல்லா உரிமைகளும் இருக்கு, இந்துக்களுக்கு என்ன இருக்கு சார்? இந்து தலைவர்களுக்கே கூட இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை, கொலை செய்யப்படுகிறார்கள்” என்று கூறி “பாருங்க எவ்வளவு தேச பக்கதர்கள் கொல்லப்பட்டிருக்காங்க” என்று மனைவியால் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டவர்கள், கள்ளக்காதல், கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் பிரச்சினைகளுக்காக கொல்லப்பட்டவர்கள் என்று கொல்லப்பட்ட தேஷபக்தர்களின் நீண்டதொரு பட்டியலை காண்பித்து அனைவரையும் கண்ணீர் விடச் சொன்னார்.//

படுகொலை செய்த ஜிகாதி பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் வெட்டு காயங்களும் ஜிகாதி கொலையை உறுதி செய்கிறது. எல்லா கொலைகளிலும் 20க்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள். இருப்பினும் வினவினால் விடையளிக்கவேண்டியது நம் கடமை தானே. ஆனால் வினவியவர்கள் யார்? கள்ளத்தொடர்பில் மகளை பெற்றெடுத்து நண்பனின் மகள் என்று உலகுக்கு அடையாளம் காட்டிய கார்ல் மார்க்ஸ், மகள் வயதில் இருப்பவளை மணந்த பெண்ணின காவலர் ஈவேரா, லட்சகணக்கில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த மக்கள் தலைவர்கள் லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டவர்கள் ஆயிற்றே. பாவம் இந்த நாட்டில் பிறந்ததால் மட்டுமே இவர்களது மகள்களும் பேச்சுரிமைகளும் இவர்களது மேலான உயிரும் பத்திரமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் சரி!

//“ஹிந்துக்களுக்கு இந்த நாட்டில் ஜனநாயகமே இல்லை. விஸ்வரூபம் என்கிற ஒரு படப்பிரச்சினையை வைத்துக்கொண்டு அவர்கள் எவ்வளவு பெரிய பிரச்சினை செய்தார்கள், அமெரிக்க தூதரகத்தையே முற்றுகையிட்டார்கள். இதையெல்லாம் நாம் அனுமதிக்கக்கூடாது.”//

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டது Innocence of Muslims என்ற ஏற்கனவே தடைசெய்யப்பட்ட படத்தை தடைசெய்ய மவுண்ட்ரோட்டில் முஸ்லீம்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை என்று தான் அந்த கண்காட்சி பேனரில் கருத்திடப்பட்டிருந்தது. விஸ்வரூப திரைப்படம் வேறு ஒரு இஸ்லாமிய வன்முறை பிரோயகத்திற்காக தடை செய்யப்பட்டதாக கண்காட்சியில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. மொட்டைத்தலைக்கும் முழ்ங்காலுக்கும் முடிச்சுப்போட இப்படி வினவு எழுதுகிறதா? அல்லது வினவு செய்தியாளர்களின் தகுதியின் குற்றமோ? இந்த வினவுகளெல்லாம் நமக்கு எதற்கு?

//புத்தக ஆசிரியர் (பால கௌதமன் என்று பெயராம்) நெற்றியில் குங்குமப் பொட்டுடன் அக்மார்க் அம்பியாக காட்சியளித்தார்.//

முதல் ஜனநாயக கம்யூனிஸ்டு ஆட்சியை நடத்திய EMS நம்பூதிரி பாடு ISI அம்பியோ?

//“நீங்க எழுதின இந்த புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினேன். அதில ஒரு சந்தேகம். திப்புசுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்தானே. அவரைப் பத்தி ஏன் இப்படி எழுதியிருக்கீங்க”

“என்ன சார் நீங்க! ஆங்கிலேயரை எதிர்த்து அவன் எதுக்கு போராடினான்னு பாருங்க. அவனோட தன்னோட முஸ்லீம் ஆதிக்கத்தை காப்பாத்தத்தான் போராடினான்”.

“இருந்தாலும், ஆங்கிலேயரை எதிர்த்து நம்ம மண்ணை காக்க போராடியது முக்கியமில்லையா”

தொடர்ந்து, “திப்பு சுல்தான் ஆங்கிலேயரோடு எத்தனை ஒப்பந்தம் போட்டுக் கொண்டான் தெரியுமா” என்றார்.

“கேள்விப்பட்டிருக்கேன், ஒரு ஒப்பந்தத்தில, தன்னோட இரண்டு மகன்களையும் பணயக் கைதிகளா அனுப்பி வைச்சிருக்காரு. வேறு எந்த மன்னனாவது நாட்டுக்காக தன்னோட குழந்தைகளை பணயம் வைச்சிருக்காங்களா. அந்தக் காலத்துல திருவிதாங்கூர், கொச்சி ராஜாக்கள் எல்லாம் இந்துவா இருந்து கிட்டே ஆங்கிலேயன் கிட்ட சரணடைஞ்சு அடிமையா நடந்துகிட்டாங்களே, அதோட ஒப்பிட்டுப் பாருங்க”

“நீங்க இதையெல்லாம் இவ்வளவு எளிமையா பார்க்கக் கூடாது. ஆங்கிலேயரை எதிர்த்து போராடினவங்க எல்லாத்தையும் தேச பக்தர்கள்னு சொல்ல முடியுமா? அல்லது ஆங்கிலேயரை எதிர்க்காதவங்க எல்லாத்தையும் தேசத் துரோகிங்கள்னும் சொல்ல முடியுமா? திப்பு சுல்தான் தன்னோட ஆதிக்கத்தை தக்க வச்சுக்க ஆங்கிலேயரை எதிர்த்ததை தேசபக்தின்னு சொல்ல முடியாது சார்” என்றார்.

“இந்து ராஜான்னு சொல்லிக்கிற திருவிதாங்கூர், கொச்சி மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமையா இருந்து சுகமா வாழ்ந்த துரோகத்தை விட தன்னோட நாட்டை அன்னியனிடமிருந்து பாதுகாக்க போர்க்களத்துல போரிட்டு உயிர் தியாகம் செய்த திப்பு மேலானவர்தானே சார்.”

“கேரள ராஜாக்கள், எதுக்காக ஆங்கிலேயருக்கு அடிமையா இருந்தாங்கன்னு பார்க்கணும். இந்து மதத்தையும் இந்து மதத்தோட சொத்துக்களையும் பாதுகாக்கத்தான் ஆங்கிலேயரோட ஒப்பந்தம் போட்டுக் கிட்டாங்க” என்று தேசபக்திக்கு புதிய வரையறை சொன்னவர் தொடர்ந்து “திப்பு சுல்தானை பாருங்க, ஃபிரெஞ்சு காரங்கள கூடச் சேர்த்துக் கிட்டான், இந்தியா மேல படை எடுத்து வரும்படி ஃபிரெஞ்சு காரங்களுக்கு லெட்டர் போட்டிருக்கான்”

“ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பதற்கு ஃபிரெஞ்சு தளபதிகளை சம்பளம் கொடுத்து தளபதிகளா வேலைக்கு வச்சுகிட்டாரு. ஆனா, இந்து ராஜாக்கள் எல்லாம் நம்மை நாட்டை அடிமைப்படுத்தின ஆங்கிலேயனுக்கு கால்ல விழுந்து கிடந்தாங்களே. அப்போ யாருக்கு மணிமண்டபம் வைக்கணும்?” என்று கேட்டோம்.//

“ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பதற்கு ஃபிரெஞ்சு தளபதிகளை சம்பளம் கொடுத்து தளபதிகளா வேலைக்கு வச்சுகிட்டாரு. ஆனா, இந்து ராஜாக்கள் எல்லாம் நம்மை நாட்டை அடிமைப்படுத்தின ஆங்கிலேயனுக்கு கால்ல விழுந்து கிடந்தாங்களே. அப்போ யாருக்கு மணிமண்டபம் வைக்கணும்?” என்று கேட்டோம் இந்த உரையாடலில் இந்த பகுதி இடம் பெறவில்லை இது ஒரு இடைச்செருகல். இடைசெருகலுக்கு முன் வினவுக்கு பிடித்தமான வெட்டும் பணியும் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அமீருக்கு திப்பு கடிதம் எழுதி இந்தியாவின் மீது படையெடுத்து வர வேண்டியதை அவரிடம் நான் சொன்னதை வினவு ஏன் விழுங்கிவிட்டது? இந்தியாவில் இஸ்லாமிய ஏகாதிபத்தியத்தை நிறுவும் நோக்கத்துடன் மட்டுமே திப்பு ஆங்கிலேயனை எதிர்த்தான் என்று என் புத்தகத்தில் வண்டி வண்டியாக ஆதாரம் கொடுத்தும், ஆயிரக்கணக்கான கோயில்களை இஸ்லாத்தின் அடிப்படையில் அழித்து லட்சகணக்கான இந்துக்களை கொன்றும், மதமாற்றியும் ஆடிய கோரத்தாண்டவங்களை வெளிப்படுத்திய இஸ்லாமிய ஆவணங்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றது வினவின் பச்சை கண்ணாடியில் மறைந்து விட்டதோ? நம் நாட்டின் சிறிய மன்னர்கள் இஸ்லாமியர்களின் பெரும் படைபலத்தைத் தாக்கு பிடிக்கமுடியாமல் வெள்ளையனிடம் வேறு வழியின்றி சரணடைந்தார்கள். இந்த நாட்டில் வெள்ளையன் ஆட்சிக்கு வழிவகுத்தது இந்த இஸ்லாமிய படையெடுப்பு தான் அதற்கு ஆதாரமாக Lallyயின் தலைமையில் 30,000பேர் கொண்ட பீரங்கி படை திடீரென்று ஒரு சிறிய ராஜ்ஜியத்திற்குள் நுழைந்தால் என்ன செய்யமுடியும்? இதை அந்த கால சூழ்நிலையை வைத்து நாம் பார்க்கவேண்டும் என்று நான் அளித்த விளக்கத்தை அவர்களுக்கே உரித்தான வெட்டுவலையில் சிக்க வைத்து விட்டார்.

சுதந்திரத்திற்காக போராடி ஜெயிலுக்கு போனவர்களும், அதே நேரத்தில் சொம்பு திருடி உள்ளே போனவனும் ஒன்றா? வெள்ளையனுக்கு எதிராக போராடியதால் மட்டுமே ஒருவன் சுதந்திர போராட்ட வீரனாக முடியுமா என்ற வாக்கியத்தை ஏனோ வினவு விட்டுவிட்டது.

//“அதெல்லாம் இருக்கட்டும். துலுக்கனுக்கு நம்ம நாட்டுல என்ன சார் வேல. ஹைதர் அலி யாரு, பஞ்சாபிலேருந்து வந்து மைசூர் மகாராஜாவை தூக்கி எறிஞ்சுகிட்டு ஆட்சியை புடிச்சவன். அவனை நாம எதுக்கு சார் மதிக்கணும்?” என்று பேச்சை மாற்றினார்.

“பஞ்சாபும் இந்தியாலதான இருக்கு, அப்போ ஹைதர் அலிக்கு சொந்த ஊரான பஞ்சாப் பாரதத்தில் இல்லையா?”

இதில் அதிர்ச்சியானவர், “யாரு சொன்னாங்க, பஞ்சாபுக்கு அவன் எங்கேருந்து வந்தான், மத்திய ஆசியாவில இருந்து வந்தான். இவனுங்க எல்லாம் வந்துதான் நம்ம நாடு சீரழிஞ்சு போச்சு. நம்ம நாட்டோட பெருமைய மீட்டெடுக்கணும்”//

பார்வையிலேயே அதிர்ந்து போவதையும் பிளட் பிரஷரையும் கண்டுபிடிக்கும் டாக்டர்கள் தான் உங்கள் ரிப்போர்டர்கள். இதில் கூட இந்த டாக்டர்கள் போலி சர்ட்பிகேட் கொடுப்பதில் புத்திசாலிகள் தான்! பாரசீக நாட்டிலிருந்து படையெடுத்து பஞ்சாப்பிற்கு வந்த இஸ்லாமியர்களின் சந்ததிதான் ஹைதர் அலி என்று நான் சொன்னதை அவர்கள் நுழைந்த கைபர் போலன் கணவாயிலேயே வினவு மறைத்து விட்டதே! எனது புத்தகத்தை வாங்கி படித்து விட்டு வினவு எழுப்பும் வினவிகள் அந்த புத்தகத்திலுள்ள செய்திகளையும் சான்றுகளையும் இதுவரை ஆதாரத்துடன் மறுக்கவில்லை. இது தொடர்பாக தமிழக அரசியல் பத்திரிகையில் திரு. ஹாஜா கனி மற்றும் சில இஸ்லாமிய அறிஞர்களுடன் தொடர் விவாதம் நடைபெற்றது வினவின் கண்களுக்கு படவில்லை போலும். அந்த விவாதங்களில் என்னால் முன் வைக்கப்பட்ட சான்றுகளை மறுக்கமுடியாமலும், திப்புவை பற்றிய முஸ்லீம்களின் வாதத்திற்கு நான் இட்ட மறுமொழிகளும் திப்பு தேசபக்தனா, ஜிகாதி கொலை வெறியனா? என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி விட்டது. சிவப்புக் காமாலையும், பச்சை காமாலையும் வந்த கண்களுக்கு நாட்டு நடப்புகள் எப்படி தெரியும்?

// “இப்போ நம்ம பலவீனமா இருக்கோம் சார். வெளிநாட்டில இருந்துதான் எல்லாம் வர வேண்டியிருக்கு. நம்ம நாடு எப்படி இருந்த நாடு தெரியுமா. இந்த நாட்டுல என்ன இல்லை சார். 1800-ம் ஆண்டுல உலக ஜி.டி.பில 40% நம்ம நாட்டுலதான் உற்பத்தி ஆகிட்டு இருந்துச்சு. அன்னியர்கள் வந்துதான் எல்லாம் சீரழிச்சிட்டாங்க”//

இதிலேயும் தப்பா? நான் சொன்னது 20%. எனக்கு பொருளாதாரம் தெரியாது என்று ஒரு மாயையை ஏற்படுத்த தானே 40% என்று உள்நோக்கத்துடன் பதிவிட்டிருக்கிறீர்கள்? இப்படி ஒரு பொழப்பு தேவையா?

//“அப்படியா சொல்றீங்க. அப்படீன்னா முகலாயர் ஆட்சி முடியிற கால கட்டத்துல அவ்வளவு சிறப்பா இருந்ததுன்னா அப்போது நம்ம நாட்டில் நல்ல பொருளாதார வளர்ச்சி இருந்திருக்குன்னு சொல்லுங்க”
1000 ஆண்டு அன்னியர் ஆக்கிரமிப்பு என்று புரட்டல் சொல்லும் சங்க வரலாற்றுப் பாரம்பரியத்தை விட்டுக் கொடுத்து விட்டோமோ என்று ஒரு கணம் திகைத்துப் போனவர், “அவன் நம்ம பொருளாதாரத்து மேல கை வைக்கல சார், அது நல்லா நடந்தாத்தான் வரி வசூலிக்க முடியும். ஆனா இந்துக்களை எல்லாம் மதம் மாத்தினான், அதை நெனைச்சு பாருங்க.” என்றார்.//

இங்கேயும் ஒரு திரிபுவாதம். முகாலய ஆட்சி வருவதற்கு முன் மேலும் சிறப்பாக இருந்தது இந்திய பொருளாதாரம் முகாலய ஆட்சியில் இந்தியர்களை உரிந்து செல்வத்தை முஸ்லீம்கள் பெற்றனர் என்று சொன்னதுடன் கடல்வணிகம் படிப்படியாக அந்த காலக்கட்டத்தில் குறையத் தொடங்கியதே பிற்கால பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று சொன்னது காதில் விழவில்லையோ?

ஒரு கூட்டத்தில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் நடந்த உரையாடலில் கேள்வி கேட்டவர் சற்று படித்தவர் என்று நான் எடைபோட்டது தவறு என்பதை இப்போது புரிந்து கொண்டேன். இஸ்லாமிய ஆட்சி ஒவ்வொரு முறையும் பல இந்து மன்னர்களால் தோற்கடிக்கப்பட்டு, குறுகிய காலங்களே நம் நாட்டின் பெருவாரியான பகுதிகளில் பரவி இருந்தது என்பது சாதாரணமாக வரலாற்றை படித்தவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் மேலும், இஸ்லாமிய படையெடுப்பு கடல் மார்க்கமாகவோ, வியாபாரத்தை முன்னிறுத்தியோ நம் நாட்டிற்குள் வரவில்லை. வினவிகளுக்கு இந்த பாலபாடம் கூட தெரியவில்லை என்பது இப்போது தான் புரிகிறது. அப்படியே நான் சொல்லிக்கொடுத்திருந்தாலும் வெட்டிப் பதிப்பதுதானே இவர்கள் வழக்கம்.

//“சரி, இன்னொரு சந்தேகம். இவ்வளவு கஷ்டப்பட்டு போராடி வெள்ளைக்காரன வெரட்டியடிச்சோம். ஆனால, இன்னைக்கு ஐ.டி கம்பெனில வேலை பார்க்கிற நாங்கெல்லாம், வெள்ளைக்காரனுக்குத்தான் சலாம் போடுறோம். அவன் ஆட்டுவிக்கிற மாதிரிதான் ஆடுறோம். இந்த அடிமைத்தனத்துக்கு என்ன செய்றது?”

“அவன்தான் உங்களுக்கு காசு தாறான் சார். அப்போ அவன் சொல்றபடிதான் கேக்கணும். இன்னைக்கு எவன்னாலும் மேடையில ஏறி பொருளாதாரம், வளர்ச்சின்னு அடிச்சி விட்றான். ஜி.டி.பின்னா என்னன்னு தெரியுமா இந்த தாயளிகளுக்கு. ஜி.டி.பி எப்படி கணக்கு போடுறாங்கன்னு தெரியுமா. பேச வந்துட்டானுங்க, நம்ம நாட்டுல துலுக்கனுங்களுக்கு என்ன சார் வேலை” என்று சரமாரியாக கெட்ட வார்த்தைகளை அவிழ்த்து விட ஆரம்பித்தார்.//

அமெரிக்காவை விட 4 மடங்கு ஜனத்தொகை கொண்டது இந்தியா. ஆனால், GDPயில் அமெரிக்கா நம்மைவிட 16 மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிலை சரிசெய்யப்படவேண்டும். சங்ககாலங்களிலேயே கடல்கடந்து வாணிபம் செய்து உலகமயமாக்கலை ஏற்று கொண்டு வாழ்ந்தவர்கள் இந்தியர்கள் என்பது தானே உண்மை. இப்படி நான் சொன்னதை விழுங்கிய வினவு மேதைகள் விஷயத்தை மறைத்து வசையை ஹைலைட் ஆக்கியது பத்திரிக்கை தர்மத்தின் உச்சக்கட்டம்.

//பழம் பஞ்சாங்கத்துக்கு வந்த வாழ்வை வீடியோவாக்கி போட்டுக் காட்டித்தான் அந்த பள்ளிக் குழந்தைகளை டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்களா, என்று நினைத்துக் கொண்டே, “இதனால் என்ன பலன், இந்தியா சந்திராயன் ராக்கெட் விடுவதற்கு இந்த பஞ்சாங்கத்தைப் பார்த்து கணக்கு போட முடியுமா” என்று விளக்கம் கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பே வேறு யாரோ அவரை கூப்பிட, விட்டால் போதும் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.//

பழம் பஞ்சாங்கத்தின் கணிதத்தை சந்திராயன் ராக்கெட் ஏவிய விஞ்ஞானிகள் யாரும் இதுவரை தவறு என்று சொல்லவில்லை.

அந்த படத்தை பார்த்துவிட்டு அதைப்பற்றிய திறனாய்வு செய்யும் அறிவியல் திறன் வினவுக்கு இருந்தால் அதை தாரளமாக செய்யலாமே?

தகர உண்டியல் குலுக்குவது, தொழிலாளிகளிடமிருந்து பணம் பிடுங்குவது, அன்னிய சக்திகளுக்கு உளவு பார்ப்பது, குடும்பத்தை கெடுப்பது, நல்லொழுக்கங்களை சீரழிப்பது என்ற வினவின் சித்தாந்த மேடையில் மட்டுமே நீங்கள் ஆடினால் போதுமானது. பொருளாதாரம், அறிவியல், சமூகவியல், வரலாறு போன்றவற்றில் ஏன் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து உடைத்துக் கொள்ளவேண்டும்? வாங்கின காசுக்கு மட்டும் கூவினால் போதுமே! மணிமண்டபம் கேட்டவனே திப்புவை விட்டு ஓடிவிட்டான் துப்புகெட்ட உங்களுக்கு எதற்கு திப்பு சேவை?

சத்தியம் வத (உண்மையே பேசு)
தர்மம் சர (அறவழியில் செல்) என்று சொன்ன வேதங்கள், துஷ்ட நிக்ரஹ (தீயவர்களை ஒழி), சிஷ்ட பரிபாலன (ஆன்றோரை காப்பாற்று) என்றும் சொல்லியுள்ளது. அதனால், வேதத்திற்கும் ஜிகாதி பயங்கரவாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது வேதத்தை புரிந்தவர்களுக்கு தெரியும். வாடிகனை புரிந்தவர்களுக்கா தெரியப்போகிறது?

நான்கு பக்க கட்டுரை எழுதிய இந்த வினவிகள் தங்களை தைரியமாக ஒரு பத்திரிக்கையாளன் என்று சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியிருந்தால் நாம் மெச்சியிருக்கலாம். நாம் சொல்லாததை சொன்னதாகவும் அவர் கேட்காததை கேட்டதாகவும் நாம் சொல்லியதை மறைத்தும் திரித்தும் எழுதிய பாங்கை பார்க்கும்போது வினவு என்பதற்கு பதிலாக வசை / வஞ்சனை என்று வலைத்தளத்திற்கு பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

Read 3661 times
Rate this item
(5 votes)
Last modified on Friday, 01 August 2014 17:21

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

9 comments

 • Comment Link T V Ramesh Sunday, 03 August 2014 13:04 posted by T V Ramesh

  We hindus are ever rich in scientific knowledge and even the most advanced nations are doing research on our palm sheet literature and recordings for their upliftment let the dogs bark we shall proceed ignoring and if required by beating them up

 • Comment Link natarajasastry Sunday, 03 August 2014 10:41 posted by natarajasastry

  I like this exhibition. Paarvaiyalanaga vandhaargal. Hindhuvaga sendrargal. Paadam ketka vandavargal paadam Kettka sendrargal. Paazum netri palichunu aagi pochu.

 • Comment Link R. ANANTHA PADMANABHAN Sunday, 03 August 2014 04:16 posted by R. ANANTHA PADMANABHAN

  இதுவே ஒரு இஸ்லாமிய இயக்கமோ அல்லதுய் கிறிஸ்துவ இயக்கமோ இப்பிடி ஒரு கண்காட்சி நடத்தி இருந்தால் இப்பிடி எல்லாம் விமரிசனம் பண்ண துணிச்சல் வருமா???......கூட்டி குடுத்து காவல் காக்கிறான் நிலைமைக்கு வந்து விட்டார்கள்.......பாவம்...

 • Comment Link ஆர்யத்தமிழன் Saturday, 02 August 2014 17:07 posted by ஆர்யத்தமிழன்

  நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

 • Comment Link Sasikumar Saturday, 02 August 2014 10:32 posted by Sasikumar

  please upload the booklet "கம்யூனிஸ்ட்கள் காலை சுற்றும் நச்சுப் பாம்புகள்"

 • Comment Link deebac Saturday, 02 August 2014 10:05 posted by deebac

  evanuga ellam thiruthave mudiyathu kanchi ku aasai pattu Communist karanin aanurupu kudita viraivil islamiyanal sunnath seiyapadum enbathu uruthi

 • Comment Link Raman S Saturday, 02 August 2014 08:10 posted by Raman S

  மார்க்ஸிட்டுகள் தங்களது ேகேடு ெகெட்ட கட்சியின் இந்து எதிர்ப்பு சிந்தைனைக்காக தங்களது தாயின் கண்ணியத்ைதையும் களங்கப்படுத்தத் தயங்கமாட்டார்கள்

 • Comment Link sury Saturday, 02 August 2014 07:56 posted by sury

  சமீபத்தில் ஒரு சங்க நிகழ்ச்சியில் ஒரு பௌதிக் : சீதை என்ன அவ்வளவு அழகானவளா என பார்க்க ஒரு குரங்கு கூட்டம் சென்றதாம் . ஒரு குரங்கு சொன்னதாம் ஐயே என்ன முகம் சப்பையாக இருக்கு.; இன்னொன்று அயே என்ன இடுப்பே இல்லே; அதை விட மோசம் இன்னொரு குரங்கு அட என்ன அசிங்கம் இரண்டு காலால் நடக்கிறாள் இந்த சீதை. அருகில் இருந்தவர்கள் முதலில் வியந்தார்கள். பின்பு சொன்னார்கள் ஆமாம் குரங்குகள் அதன் கண்ணோட்டத்தில் தானே எதையும் பார்க்கும் . இந்த வினவு குரங்குகளும் அப்படிதான்.

 • Comment Link கோமதி செட்டி Friday, 01 August 2014 19:36 posted by கோமதி செட்டி

  உண்டியல் குலுக்கி பிழைப்பு நடத்திய காலம் போய்... இப்ப மாமா வேலை பார்த்து பிழைப்பு நடத்தும் வேலைக்கு வந்து விட்டார்கள்...
  ஐயோ பாவம்

Leave a comment