×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தமிழும் சம்ஸ்க்ருதமும் இணைந்த தமிழகம்

Thamizhum-Samskruthamum-Inaintha-Thamizhakam-1

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் உள்ள முத்துக் கருப்பன் கல்வெட்டுகள் பிராந்திய மொழிகளின் நிலையயும் காலப்போக்கில் அவற்றின் வளர்ச்சியையும், உள்ளங்கை நெல்லிக்கனி என காட்டுபவை. தமிழ் மொழியின் தொடக்கம் இன்னும் தெளிவாக விளக்கப்படவில்லை. இருப்பினும் கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து காணப்பெறும் கல்வெட்டு வாயிலாக ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர். பாண்டிய மன்னர்களாலும் சேர மன்னர்களாலும் வெளியிடப்பட்ட மிகவும் தொன்மையான பிராமித் தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

Thamizhum-Samskruthamum-Inaintha-Thamizhakam-2

பாண்டியன் கல்வெட்டு மதுரைக்கருகில் மாங்குளம் என்ற ஊரில், குன்றில் கிடைத்துள்ளது. அது, “கணி நந்த ஆசிரியக உவன் கே தம்மம். இத்த நெடுஞ்செழியன், கடலன் பணவன் வழுத்தி கொட்டூபித்த பள்ளி” எனக் கூறுகிறது. இதில் கணி, ஆசிரியகன், தம்மம் என்ற வட சொற்கள் உள்ளன. மிகவும் தொன்மையான இக்கல்வெட்டு சமண சமயத்தவர்களால் வெளியிடப்பட்டது. வடமொழி தெரிந்த ஒருவராலேயெ இதன் பொருளை அறிய முடியும். வடமொழி அறியார் அறியாரே!

இது போல் கரூருக்கு அருகில் புக்ளூரில் மலையில் உள்ள சேரர் கல்வெட்டு "மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயிபன் உறை , கோஆதன் சேரல் இதும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோன் இளங்கோ ஆகி ஆகி அறுபித்த கல்” எனக் கூகிறது. இதிலும் அமண்ணன், செங்காயிபன் முதலிய வடசொற்கள் இடம் பெற்றுள்ளன.

இங்கேயே உள்ள பிற கல்வெட்டுக்களில் வாணிகன் அதட்டானம் முதலிய வடபெயர்ளும் உள்ளன. இவையும் சமணர்களால் வழங்கப்பட்டவை. இதேபோன்று ஆனைமலையில் “இவ்குன்றத்து உறயுள் பா தந்தான் அத்துவாயீ அரட்ட காயபன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதிலும் வடமொழிச் சொற்கள் உள்ளன .

இது போல் சித்தன்னவாசல் கல்வெட்டில் அரட்டன், அதிட்டானம் ஆய வட சொற்கள் உள்ளன. இது போல கி. மு காலக்கட்டத்திற்கு முன்பும் அதன் சமகாலத்தும், அதைத் தொடர்ந்த காலத்தும் எழுதப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டுகளில் ஏராளமான வடசொற்கள் கலந்தே காணப்படுவதிலிருந்து தமிழின் வரலாற்றின் தொடகத்திலிருந்தே வடமொழி இணைமொழியாகவே விளங்கி வந்துள்ளது என்பது தெரிகின்றது. இதனால் தமிழ் தேய்ந்தோ வீழ்ந்தோ போகவில்லை. இதேகாலத்தில் தான் சஙத்தமிழ் பாடல்கள் முறறிலும் இயற்றப்பட்டன. தமிழ் மகோன்னத நிலைய அடைந்தது. கபிலர், பரணர், மௌதமனார், காசிபர், பாரத்தாயர், ஆரிதர், வான்மீகி, பிரமசாரி போன்ற வடமொழிச்சான்றோர் தமிழ் மொழிப்புலவரோடு இணந்து தமிழுக்கு ஏற்றம் அளித்தனர்.

சங்கத் தமிழில் கண்ணன், பலராமன், இந்திரன், வருணன், சிவன் முருகன் போன்ற தெய்வங்கள்
சங்கத் தமிழில் கண்ணன், பலராமன், இந்திரன், வருணன், சிவன், முருகன் போன்ற தெய்வங்கள், தமிழக நிலப் பிரிவுகட்குத் தலைவராக வணங்கப்பட்டனர். சிலப்பதிகாரம் போன்ற ஈடில்லா காப்பியங்கள் தோன்றின. இதற்குப் பின்னர் வந்த பல்லவர் ஆட்சியில் கி பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஒரு இரு நூறு ஆண்டுகள் ப்ராகிருத மொழியில் தஙகளது ஆணைகளை வெளியிட்டனர். இருப்பினும் இறுதியில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை மேற்கோள்களாகக் காட்டினர். ஆனால் நான்காம் நூற்றாண்டிலிருந்து ஆட்சி நீதி, கணிதம் ஆய மொழிகளில் துல்லிய சம்ஸ்க்ருத சொற்கள் ஆக்கம் பெறவே, தமது ஆணைகளைச் சருக்கமாக சம்ஸ்க்ருதத்திலும் தானம் முதலிய ஆணைகளைத் தமிழிலும் மிகவும் விரிவாக எழுதினர்.

ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் பல்லவன் சிம்மவிஷ்னுவின் தந்தை சிம்ம வர்மனால் வெளியிடப்பட்ட பள்ளன்கோயில் செப்பேடு இருமொழிச் செப்பேடாக உள்ளது. முதல் பகுதி சம்ஸ்க்ருதத்தில் சுருக்கமாகவும் இரண்டாம் பகுதி தமிழில் விரிவாகவும் உள்ளன. இதைப் பார்க்கும் போது எந்த அளவு தமிழ் ஆட்சி மொழியாக வளர்ந்திருந்தது என்பது புலனாகும். இது சமணப் பெரியார்களுக்குக் கொடுத்தது. ஆதலின் இது சம்ஸ்கிருதம் ப்ராம்மணர் மொழி, அதனால் ஒழிக்கப்பட வேண்டும் என்னும் வாதம் வரலாற்று நெறியில் பகுத்தறிவாளர் ஏற்றுக் கொள்ளும் முடிவாக இருக்க முடியாது.

பின்னர் வந்த அத்தனைப் பல்லவ மன்னர்களின் செப்பேட்டு ஆணைகளும் பெரும்பாலும் தமிழாகவே இருந்தாலும், இரு மொழி ஆணைகளாகவே இருந்திருக்கின்றன.

பாண்டிய மன்னர்கள் செப்பேடுகள்
தென் பாண்டி நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமது செப்பேடுகளில் தொடக்கத்திலிருந்தே தமிழ் முழுதும் ஆய்ந்தவர்களாகக் கூறிக்கொள்கிறார்கள். குறிப்பாக பொதிகைமலை குறுமுனியாம் அகத்தியரிடம் தமிழ் படித்தார்கள் என்றும், தமிழ் ஆய்ந்தார்கள் என்றும் கூறுகிறார்கள் . "அகத்தியன் வாய் தமிழ் கேட்டும்" "அகத்தியனோடு தமிழ் ஆய்ந்தும்" என்றும் அவர்கள் செப்பேடுகள் கூறுகின்றன.

தளவாய்புரமென்ற இடத்தில் கிடைத்த செப்பேட்டில் "தென் மதுராபுரம் செய்தும், அங்கதனில் அருந்தமிழ் நற்சங்கம் இரீயும் தமிழ் வளர்த்தும்" என்றும் செய்தி உள்ளது. இதே மன்னர்கள் சம்ஸ்கிருதத்தையும் போற்றியிருக்கிறார்கள் என பல செப்பேடுகள் வாயிலாக கூறுகிறார்கள்.

சின்னமனூர் பெரிய செப்பெட்டில் தங்களைப்பற்றி கூறும் இடத்து "பஞ்சவன் என்று பெயர் நிரீயும் வளமதுரை நகர்கண்டும் மற்றதற்க்கு மதிள் வகுத்தும் உளமிக்க மதி அதனால் ஒண் தமிழும், வடமொழியும் பழுதற தான் ஆரய்ந்து பண்டிதரில் மேல் தோன்றியும் விளங்கினார்கள்” என்றும் கூறியுள்ளனர்.

இவர்களுக்கு ஏராளமான பட்டங்கள் உள்ளன. அதே போல் பராந்தகன், அரிகேசரி போன்ற வடமொழிப் பட்டங்களும் உள்ளன. இவர்களது. செப்பேடுகள் பெரும்பாலும் அழகிய தமிழ்ச் செய்யுள்களால் வரையப்பட்டுள்ளன. வேள்விக்குடி செப்பேடும் தளவாய்புரம் செப்பேடும் அரசன் நீதி வழங்கியதைக் கூறும் தீர்ப்பு ஆகும். நீதிமன்றத் தீர்ப்பு கூட எழிலான செய்யுளாகவே அமைக்கப்பட்டுள்ளது வியப்பை அளிக்கும். அவ்வளவுக்கு தமிழ் பற்று மிகுந்த பாண்டியப் பெருமன்னர்கள் இடை இடையே வடசொற்களை பயன் படுத்த தயங்கவில்லை.

ஆதலின் தமிழகத்தில் என்றுமே சம்ஸ்க்ருதமும் தமிழும் இணைந்தே இருந்திருக்கின்றன. என்றுமே சம்ஸ்கிருதத்துக்கு எதிர்ப்போ, வெறுப்போ இருந்தது கிடையாது. அது முற்றிலும் 20 ஆம் நூற்றாண்டு அரசியல் கற்பனை.

Read 2195 times Last modified on Monday, 18 August 2014 08:47

1 comment

  • Comment Link Dr Govindarajan Tuesday, 19 August 2014 12:16 posted by Dr Govindarajan

    This is not 20th century belief or imagination. It is the imagination of DK, DMK politicians to harvest votes and for luxuries life in divide and rule policy.

Leave a comment