×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

சபதம் ஏற்பு தினம் – வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் அனுசரிப்பு

Monday, 15 September 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

1947ம் வருடம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி அன்னிய ஆட்சியிலிருந்து நமது பாரத நாடு சுதந்திரம் பெற்றாலும், அந்தத் தருணத்தில் தேசப்பிரிவினை ஏற்பட்டு நமது பாரத நாட்டிலிருந்து ஒரு பகுதி பாகிஸ்தானாக உருவானது. அப்போது பாகிஸ்தானில் வசித்து வந்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் லக்ஷக்கணக்கில் விரட்டப்பட்டனர். கொன்று குவிக்கப்பட்டனர்; பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்; குழந்தைகளும் கொல்லப்பட்டனர். தேசப்பிரிவினை என்பது உண்மையான தேச பக்தர்களின் நெஞ்சத்தில் இன்றும் ஒரு சோகமான நிகழ்வாகத்தான் இருந்து வருகிறது. இருப்பினும் அகண்ட பாரதம் என்றேனும் ஒரு நாள் அமைந்தே தீரும்; அதற்கு வாழ்நாள் உள்ளவரையில் பாடு படுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

அந்த நம்பிக்கையின்பாற்பட்டு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம், கடந்த 18 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 14-ம் தேதி “சபதம் ஏற்பு தினம்” அனுசரித்து வருகிறது. ஏதேனும் இரு பொருள்களில் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்து, தேச பக்திப் பாடல்கள் பாடி, கூடியிருக்கும் அனைவரையும் இணையச் செய்து, “அகண்ட பாரதம் அமைப்போம்; இழந்த நிலப்பரப்பை மீட்போம்; இழந்த கோவில்களை மீட்டு மீண்டும் புனர்நிர்மாணம் செய்வோம்; இழந்த சகோதர சகோதரிகளை மீண்டும் தாய்மதம் திரும்பச் செய்வோம்” என்று சபதம் ஏற்கச் செய்து அனுசரிப்பது வழக்கம்.

இவ்வாண்டும் சபதம் ஏற்பு தினம், சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஆகஸ்டு 14-ம் தேதி சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. சாரதி கிருஷ்ணன் தேசிய கீதம் வந்தேமாதரம் பாடி ஆரம்பித்து வைக்க, ராஜேஷ் ராவ் வந்திருந்தவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீனிவாசன் ராமகிருஷ்ணன் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தினைப் பற்றிய அறிமுகம் தந்தார்.

வெங்கடாத்ரி வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் லட்சியம் மற்றும் நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார்.

 

 

 

சாரதி கிருஷ்ணனும் கோபால கிருஷ்ணனும் தேசபக்திப்பாடல்கள் பாடினர்.

 

 

 

 

பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் “தமிழகத்தைச் சூழும் தேச விரோத சக்திகள்” என்கிற தலைப்பில், இஸ்லாமிய பயங்கரவாதம், கிறிஸ்தவ மதமாற்றம், கிறிஸ்தவ நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படும் தமிழ் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ-நக்ஸலைட்டு இயக்கங்கள், இந்த சக்திகள் அனைத்துக்கும் இடையே உள்ள வலைப்பின்னல் இணைப்பு ஆகியவை பற்றி விரிவாக உரையாற்றினார்.


வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பால கௌதமன் “அபாயச் சூழலில் தமிழகம்” என்கிற தலைப்பில் சமீப காலமாக தமிழகமெங்கும் பரவி வரும் இஸ்லாமிய அடிப்படைவாதமும், இஸ்லாமிய இயக்கங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடத்திவரும் வன்முறை நிகழ்ச்சிகளையும், அவற்றை திராவிட அரசியல் கட்சிகள் எவ்வாறு கண்டுகொள்ளாமல் வாக்கு வங்கியை மனதில்கொண்டு ஊக்குவித்து வருகின்றன என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

 

பின்னர் வந்திருந்த அனைவரும் கைகளில் ரக்ஷை கட்டிக்கொண்டு அகண்ட பாரதம் அமைக்கும் சபதம் ஏற்றனர். அதனைத் தொடர்ந்து ஹிந்துத்துவ கொள்கைகளுக்காக சிறப்பாக சேவை புரிந்து வரும் ஆறு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ்ப்பண்பாட்டின் உயிர்நாடியான ஆலயங்கள் மீண்டும் பொலிவுடன் விளங்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெரும் தொண்டாற்றி வரும் திரு.ச. ஸ்ரீகுமார் அவர்களுக்கு “ஆலய அறப்பணி அருங்காவலர்” என்கிற விருதும்,

பாரதத்தை அடிமைப்படுத்தி, தமிழ்ப்பண்பாட்டைச் சிதைத்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோருக்காக அரசு ஏற்பாடு செய்திருந்த மணிமண்டபத்தை திண்டுக்கல் மாவட்டம் அகரம் பகுதியில் கட்டவிடாமல் தடுக்க, அனைத்து இந்துக்களையும் ஒருங்கிணைத்த திரு. ம. வினோத்ராஜ் அவர்களுக்கும் திரு. ச. சங்கர்கணேஷ் அவர்களுக்கும் “தன்மானம் காத்த தளபதி” என்கிற விருதும்,

vinoth

sankar

ஆசைவார்த்தைகள் காட்டியும் மூளைச்சலவைச் செய்தும் மதம் மாற்றப்பட்ட, மதம் மாற்றப்படுகின்ற அப்பாவி இந்துக்களை நல்வழியில் அறிவுரையூட்டி மீண்டும் தாய்மதம் திருப்பும் அறப்பணியைச் செய்துவரும் திரு. செ.வெங்கடேஷ் அவர்களுக்கு, ”மன(மத)மாற்றவித்தகர்” என்கிற விருதும்,

venkatesh


வஞ்சகமாக காதல் வலை விரித்து மதம்மாற்றம் செய்யும் இஸ்லாமிய சூழ்ச்சியான லவ் ஜிகாத் மூலம் வழிமாறிய பெண்களை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வு பெற்றுக்கொடுத்து குடும்ப மாண்பைக் காக்கும் திரு.கோ.மகேஷ் அவர்களுக்கு, “குடும்பம் காக்கும் குலமகன்” என்கிற விருதும்,

ஆரம்பப்பள்ளி முதல் ஆராய்ச்சி கல்லூரி வரை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் இலக்கியம், போட்டிகள் மற்றும் வகுப்புகள் வாயிலாக நற்பண்புகளை நல்கிவரும் திரு.க. கணேசன் அவர்களுக்கு, “பண்பாட்டுப்பதிவுத்திலகம்” என்கிற விருதும்,

பாரதப் பண்பாட்டின் அடித்தளமான கோமாதாவின் அருமைகளையும், பெருமைகளையும் உலகுக்கு உணர்த்தி அவற்றை பேணிக்காத்து வரும் திரு.சேஷாத்ரிராகவன் அவர்களுக்கு “ஆநிரைக்காவலர்” என்கிற விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

rahavan

இறுதியில் அருண் பிரபு ஹரிஹரன் நன்றி கூற சபதம் ஏற்பு தினம் அனுசரிப்பு முடிவடைந்தது.

Read 2254 times
Rate this item
(3 votes)
Last modified on Wednesday, 08 October 2014 18:25

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link kirubaharan Monday, 15 September 2014 12:59 posted by kirubaharan

    அருமையான முயற்சி பாரம்பரியத்தை காப்போம் பாரதத்தை காப்போம் ஜெய்ஹித் வந்தேமாதரம்

Leave a comment