×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

நாயக்கருக்குத் தெரிந்தது ஐயருக்குத் தெரியவில்லையே!

Monday, 29 September 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

10.09.2014 துக்ளக் தலையங்கத்தில் இந்த நாடு ஹிந்து நாடு இல்லை என்று ஆணித்தரமாக எழுதி விட்டு இதை ஒப்புக்கொள்ளமுடியாத மாபெரும் குற்றம் என்றும் திரு. சோ அவர்கள் எழுதியுள்ளார். ஹிந்து மஹா சமுத்திரம் என்ற பெயரை பள்ளிப்புத்தகங்களில் இருந்து மாற்ற வேண்டும்  என்று போராடாமல் இருந்தால் சரி. 10.09.2014 தலையங்கத்தில் திரு. சோ அவர்கள்  //இது ஹிந்து நாடு. இங்குள்ள அனைவரும் ஹிந்துக்கள்தான். என்று பாஜகவினர் சிலரும் ஹிந்து அமைப்பினர் பலரும் பிரச்சாரம் செய்யத்தொடங்கி இருக்கின்றனர்.  ஆர்.எஸ்.எஸ். தலைவரே கூட இப்படி பேசியிருக்கிறார். இது சற்றும் ஏற்க முடியாத பேச்சு. இங்குள்ள அனைவரும் இந்துக்கள் தான் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் மட்டுமல்ல, ஹிந்துக்களே கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை வலுவாக திணித்து ’எல்லோருமே ஹிந்துக்கள் என்று பேசுவது சற்றும் ஏற்கக் கூடிய விசயம் அல்ல. ‘அனைவரும் இந்தியர்கள் என்றால் ஒப்புக்கொள்ளலாம்’. //

thuglak4

இப்படிப்பட்ட கருத்தை ஹிந்து மஹா சமுத்திரம் எழுதிய சோ பதிவிடலாமா? ஹிந்து என்ற சொல்லுக்கும் இந்தியன் என்ற சொல்லுக்கும் மொழி வேறுபாட்டை தவிர வேறு என்ன இருக்கிறது.

இந்தியா என்பது ஹிந்து என்ற சொல்லின் மருவு என்கிறது விக்கிபீடியா.

The name India is derived from Indus, which originates from the Old Persian word Hinduš.
http://en.wikipedia.org/wiki/India - retrieved on 28.09.2014

இந்தக்கருத்தை ஆங்கில அகராதியான oxford English dictionary மேற்கோள் காட்டியும் உள்ளது. இந்த முடிவிற்கு oxford English dictionary வருவதற்கான பின்னணி என்ன என்பதைச் சற்றே பார்க்கலாம். இந்தியா என்ற சொல்லின் விளக்கத்தை பதிவிட்ட சிகாகோ பல்கலைகழகத்தின் குறிப்புகளை நாம் சற்று பார்க்கலாம். ”Digital Dictionaries of South Asia” என்ற நூலில் ”A Glossary of Anglo-Indian Words and Phrases” என்ற தலைப்பில் இந்தியா என்ற சொல் பல தரவுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. இந்த அகராதி, சிகாகோ பல்கலைகழகம் மற்றும் மத்திய ஆராய்ச்சி நூல்நிலையத்தின் வெளியீடாகும். இந்தியா என்பது United Kingdom, United States போன்ற பல நாடுகளின் தொகுப்பு என்ற பிதற்றல்களும், ஆங்கிலேயன் வருவதற்கு முன்னால் அப்படி ஒரு நாடே இருந்ததில்லை என்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் ஊடகங்களில் சில காலமாக வளைய வந்து கொண்டிருக்கிறது. இந்த அரைவேக்காட்டு பிரச்சாரத்திற்கும் பதிலளிக்க திரு. சோ அவர்களின் தலையங்கத்தை பயன்படுத்துவது ஒருவகையில் மகிழ்ச்சிதான். Digital Dictionaries of South Asia, பல தரவுகளிலிருந்து வெளியிட்ட இந்தியா பற்றிய தொகுப்பை இப்போது பார்ப்போம்.

dds logo

//இந்தியா பற்றிய விளக்கங்களின் துல்லியம், சில கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பிரதிபலிப்பதோடு, இப்போது நாடு பற்றி நமக்கு இருக்கும் கருத்தோடு இசைந்து போகிறது; இந்தக் கருத்து தான் Hwen Tsang, இன்னும் பிற சீன யாத்ரீகர்களின் உரைகளில் துலக்கிக் காட்டப் பட்டிருக்கிறது. அசோகர் காலத்திய கல்வெட்டுக்களில் (கி.மு..250) இந்தக் கருத்தை கணிசமாக ஒட்டியபடி இந்திய ராச்சியங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன; கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத்தான தஞ்சாவூர் கல்வெட்டில் தஞ்சை சோழ அரசன் வீர சோழனால் இந்தியாவின் பெரும்பகுதி கைப்பற்றப்பட்டது (கற்பனையோ நிஜமோ) தெளிவுபடுத்தப்பட்டிருப்பதோடு, அதிலும் இதே முறை தான் பின் பற்றப்பட்டிருக்கிறது. கல்யாணின் சாளுக்கிய வம்சத்தவர், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்புப் பட்டயத்தில், ”ஹிமாலயம் முதல் பாலம் வரை” என்ற ஒரு சொற்றொடர் வருகிறது (Ind. Antiq. i. 81) அதாவது ராமரின் பாலம் என்னும் நமது வரைபடங்களில் காணப்படும் Adam's Bridge. இதன் கீழே அதே காலத்தைச் சேர்ந்த முகம்மதிய விளக்கங்களிலும் இந்தப் பெயர் காணப்படும். விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த ஹிந்து அரசர்களின் (14ம் நூற்றாண்டு முதல்) கல்வெட்டுக்களிலும் இந்தியாவை இது போன்ற விளக்கங்கள் மூலம் குறிக்கிறார்கள்.

இந்தப் பெயரின் தோற்றம் சந்தேகமே இல்லாமல் (சமஸ்கிருதம்), சிந்து, ‘கடல்’, அது மேற்கில் இருக்கும் மகத்தான ஆறு, அதன் கரைகளில் இருக்கும் நாடு, இதை இன்றும் கூட நாம் சிந்த் என்றே அழைக்கிறோம். உலகின் பல பாகங்களில் நிலவும் மாற்றம் காரணமாகவும், இந்தியாவிலேயே கூட பல பாகங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும், இந்தப் பெயர் இஸ் ஒலியின் இடத்தில் மெய்யொலி இடம் பெறுகிறது அதுவே கடைசியாக பாரசீகத்தில் ஹிந்து என்று ஆகி, கிரேக்கர்களுக்கும், லத்தீன் மொழிக்காரர்களுக்கும் அளிக்கப்பட்டு மக்களுக்கு INDOI எனவும், ஆற்றுக்கு INDO/S எனவும், INDIKH/ and INDIA என அதன் கரைகளில் இருக்கும் நாட்டுக்கும் மறுவிப் போனது, மேற்கத்தியர்களுக்கு இந்தப் பெயர் அளிக்கப்பட்டு, நாம் முன்னே கூறிய நாடு பற்றிய ஒட்டு மொத்த கருத்தும் அந்நிய நாட்டவர் வாய்களில் இயல்பாக, ஆனால் காலப் போக்கில் மொத்தமாகவே மாறிப் போனது.//

//கி.மு486இல் , “டேரியஸ் என்ற மன்னன் கூறுகிறான்: Ormazdஇன் கருணையால் நான் பாரசீகம் உட்பட இவை தாம் நான் கைப்பற்றிய நாடுகள். நான் என் அதிகாரத்தை அவற்றின் மீது நிறுவி இருக்கிறேன். அவர்கள் எனக்கு கப்பம் கொண்டு வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் கூறியதை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என் சட்டத்துக்கு கீழ்படிகிறார்கள். Medea.... Arachotia (Harauvatish), Sattagydia (Thatagush), Gandaria (Gadaara), India (Hindush)... " - Nakhsh-i-Rustamஇல் உள்ள Dariusஇன் கல்லறையில், Rawlinson's Herod, iv. 250 பார்க்கவும்.

இந்தியா என்ற நிலப்பரப்பை ஒரே நாடாக எப்படி உலகம் தொன்றுதொட்டே கருதி வந்ததோ அது போலவே தென்னகத்துச் சோழனும் வடநாட்டு அசோகனும் மத்திய இந்தியாவின் சாளுக்கியனும் பார்த்துவந்ததை இந்த நூல் மேற்கோள் காட்டியுள்ளது. வெளிநாட்டவன் வைத்த பெயர் இந்தியா என்று கொக்கரிக்கும் தமிழ் வியாபாரிகள் வீர சோழனை வந்தேரி என்று திட்டாமல் விட்டால் சரி தான். பெளத்தமே கதி என்று சொல்லி அடிப்படை பெளத்தம் தெரியாமல் ஹிந்துக்களை மதமாற அழைக்கும் பகுத்தறிவுவாதிகள், உலகத்திலேயே முதன்முறையாக அரசு எந்திரத்தை பயன்படுத்தி மதம்மாற்றம் செய்த ’பெளத்த’ மன்னன் அசோகனின் ஆதாரத்தையாவது நம்புவார்களா?
Ashoka
இந்த நிலப்பரப்பின் பெயர் ஹிந்து என்ற சொல்லின் அடிப்படையாக கொண்டது என்பதை நிறுவியுள்ளது Digital Dictionaries of South Asia. இதன் அடிப்படையில் இந்த நிலப்பரப்பில் வசிப்பவர்கள் அனைவருமே ஹிந்துக்கள் என்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இந்த India, Hindu என்ற சொல்லாட்சி எந்தெந்த காலங்களில் எப்படி யாரால் பயன்படுத்தபட்டது என்பதை Digital Dictionaries of South Asia தரவுகளுடன் சுட்டிக்காட்டுகிறது. 

//கி.மு486இல் , “டேரியஸ் என்ற மன்னன் கூறுகிறான்: Ormazdஇன் கருணையால் நான் பாரசீகம் உட்பட இவை தாம் நான் கைப்பற்றிய நாடுகள். நான் என் அதிகாரத்தை அவற்றின் மீது நிறுவி இருக்கிறேன். அவர்கள் எனக்கு கப்பம் கொண்டு வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் கூறியதை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என் சட்டத்துக்கு கீழ்படிகிறார்கள். Medea.... Arachotia (Harauvatish), Sattagydia (Thatagush), Gandaria (Gadaara), India (Hindush)... " - Nakhsh-i-Rustamஇல் உள்ள Dariusஇன் கல்லறையில், Rawlinson's Herod, iv. 250 பார்க்கவும்.//

இதில் ‘Hindush’ என்று தான் இந்தியா அழைக்கப்பட்டுள்ளது. ஆக, ஹிந்துஸ்தான் என்பது இந்த நாட்டின் பெயர் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு 486 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. இங்கு கூட நம்மவர்கள் கிரேக்க மன்னனுக்கு கப்பம் செலுத்திய செய்தி பதிவாகியுள்ளது. அந்த அடிமைத்தனத்தின் விளைவோ என்னவோ பிற்கால கிறிஸ்தவ மிஷனரிகளிடம் அடிமைப்பட்டு கிடக்கும் சிந்தனாவாதிகளால், இந்தியா ஒரே நாடு இல்லை என்றும் ஆங்கிலேயன் வந்த பிறகே இது ஒரு நாடானது என்ற கருத்து மேலோங்கியுள்ளது போலும்!.

கி.மு.440 ல் சிந்து நதி முதல் கடல் வரை இருக்கும் அனைவரும் இந்தியர்கள் அவர்கள் உதயசூரியனுக்கு மிகவும் நெருக்கமாக வசிக்கிறார்கள் என்ற குறிப்பு உள்ளது. இதைப் படித்து விட்டு தான் அண்ணா அமெரிக்கா சென்று அமெரிக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழனின் சின்னம் உதயசூரியன் என்று அறிவித்தார் என்று கழகக் கண்மனிகள் முழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரே ஒரு சிக்கல் அது சிந்து முதல் குமரி வரை என்று உள்ளது. சிந்துவுக்கு கூட புது விளக்கங்கள் உதயசூரியன் மண்ணில் உதயமாகலாம். இதோ அந்த கிமு 440 ஆண்டின் மேற்கோள்.

//கி.மு.. 440 - “இந்தியாவுக்கு கிழக்கே முழுமையாக மணலாக ஒரு பிரதேசம் விளங்குகிறது. ஆசியாவில் வசிக்கும் அனைத்து பேர்களிலும், அவர்களைப் பற்றித் தெரிந்த வரையில், இந்தியர்கள் தாம் கிழக்குக்கும், உதயசூரியனுக்கும் மிக நெருக்கமாக வசிக்கிறார்கள்.” Herodotus, iii. c. 98 (Rawlinson) //

இந்தியாவின் வரைபடத்தையே கிமு300ல் தத்ரூபமாக விளக்குகிறார் கிரேக்க பயணியும் புவியியலாளருமான மெகஸ்தனிஸ்.

//கி.மு. 300 - இந்தியா அப்போது (H (TOI/NUN*) INDIKH\) வரைபடத்தில் நான்கு பக்கம் கொண்டதாக இருக்கிறது, கிழக்கு நோக்கி ஒன்றும், தெற்கு நோக்கி ஒன்றும், பெரிய கடல் அதைச் சூழ்ந்தும்; வட துருவத்தை நோக்கிய பகுதி Hēmōdus என்ற மலைச் சங்கிலியால் Scythia முதல் பிரிக்கப் பட்டிருக்கிறது, அங்கே Sakai என்று அழைக்கப்படும் Scythianகள் பூர்வகுடிகள் வசிக்கிறார்கள்; நான்காவது பக்கமான மேற்கு நோக்கிய முகத்தில், இண்டஸ் எல்லைக்கோடாக இருக்கிறது, இது தான் நீல நதிக்குப் பிறகு மிகப் பெரிய அல்லது அனைத்து நதிகளிலும் பெரியதாக இருக்கிறது.” - Megasthenes in Diodorus, ii. 35. (ம்யூலரின் Fragm. His. Graec., ii. 402)//

 indimapl

இங்கு 'indikh' என்ற சொல் ஆளப்படுகிறது. இங்கிலாந்து என்ற நாடு உருவாவதற்கு பல் நூற்றாண்டுகள் முன்பே எல்லை வரையருக்கப்பட்டது மட்டுமின்றி இந்தியா என்ற பெயரும் பயன்பாட்டில் உள்ளதையாவது, ஆங்கிலேயன் வந்தபின் இந்தியா உருவானது என்று கொக்கரிக்கும் கூட்டங்கள் ஒப்புக்கொள்வார்களா? அல்லது போலி இனவாதம் பேசுவார்களா?

கி.பி. 590ல் இந்தியாவின் விஸ்தீரணத்தை அதைப் பயணித்துக் கடக்கும் நேரத்தைக்கொண்டு விளக்கும் பயணக்குறிப்பை Digital Dictionaries of South Asia கீழ்கண்டவாறு விளக்குகிறது.

//c. 590 - ஹிந்த் நிலத்தைப் பொறுத்த மட்டில் இது கிழக்கே பாரசீக கடலாலும், (அதாவது இந்தையக் கடல்) மேற்க்கிலும், தெற்கிலும், இஸ்லாத்தின் நாடுகளாலும், வடக்கே சீனப் பேரரசாலும் சூழப்பட்டிருக்கிறது..... இந்த ஹிந்த் நிலத்தின் நீளம் Mokraan நாட்டு அரசிலிருந்து, Mansoora நாடு, Bodha, சிந்த் முழுக்கவிருந்தும் Kannuj வரை நீண்டும், பிறகு Tobbat (TIBET) வரையும், சுமார் 4 மாதங்கள், அதன் அகலம் இந்தியக் கடலிலிருந்து Kannuj நாடு வரை சுமார் 3 மாதங்கள்”: Istakhri, pp.6ம் 11ம்.//

பன்நெடுங்காலமாகத் தொடர்ந்த அன்னியப் படையெடுப்புகளால் இந்தியாவின் பெயர் விளக்கம் பல சிக்கல்களை சந்திக்க தொடங்கியது. இந்தியாவை இந்து என்று அழைக்கவேண்டும் என்று ஹுவான் சுவாங் சொன்னதை மேற்கோள் காட்டுகிறது Digital Dictionaries of South Asia.

//c.650. - "Tien-chu (இந்தியா) என்ற பெயர் பல்வேறு, குழம்பிய நிலைகளைக் கடந்து வந்திருக்கிறது......... பண்டைய காலங்களில் அவர்கள் Shin-tu என்று அழைத்தார்கள் ஆனால் சில எழுத்தாளர்களோ, இதை Hien-teou என்று அழைத்தார்கள். இதன் உண்மையான உச்சரிப்பின் படி பார்த்தால் இதை In-tu என்று தான் சொல்ல வேண்டும்” - Pèl, Bouddh, i i, 57ல் ஹுவான் சுவாங்.//

இந்து என்ற பெயரைக்கேட்டவுடன் ஆரியம், வெள்ளையனின் கண்டுபிடிப்பு என்றெல்லாம் ஓலமிடுபவர்கள் அவர்கள் சிந்தனைகளை செதுக்கும் சீனா நாட்டின் பயணியின் குறிப்பை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டில் உள்ளவர்கள் ஹிந்துக்கள் என்று ஒப்புக்கொள்வார்களா?

சீனர்களும், கிரேக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்த நாட்டின் மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் வாங்காதவர்கள் அதனால் அவர்கள் இந்து சார்பு நிலையை எடுப்பவர்களாகத்தான் இருப்பார்கள் இந்த நாடுகளில் சகோதரத்துவம் சமத்துவம் கிடையாது. ஆகவே, சகோதரதுவத்தையும், அமைதியையும் உலகுக்கு கொடுத்த இஸ்லாமியர் சொன்னால் நம் நாட்டு அறிவுஜீவிகள் பொதுவாக ஒத்துக்கொள்வார்கள் சில சமயங்களில் ஒசாமா பின்லேடனுக்கு எதிராக அப்துல் கலாம் கருத்து தெரிவித்தால் கலாமை கலகம் என்று முத்திரை குத்தும் பழக்கமும் உண்டு. என்ன தான் நிலைக்கெட்ட மனிதர்களாக இருந்தாலும், பாரசீக முஸ்லீமான அபு அல்-ரைஹான் முகமது இபின் அகமது அல்-பிருனியின் 11ம் நூற்றாண்டு குறிப்பிற்கு தடைவிதிக்கக் கோரி மெளண்ட்ரோட்டுக்கு மூடுவிழா நடத்தினாலும் நடத்துவார்கள்! எப்படி இந்த நாட்டை அவர் வருணிக்கிறார் என்று பாருங்கள்.

Biruni-russian

// c. 1020. - ”இந்தியா (அல்-ஹிந்த்) என்ற ஒரு சமவெளி, தெற்கிலே இந்தியர்கள் கடலால் சூழப் பட்டிருக்கிறது. வானளாவிய மலைகள் அதன் மற்ற இடங்களை சூழ்ந்திருக்கிறது. இந்த சமவெளி வழியாக மலைகளிலிருந்து பெருகி வரும் நீர்கள் வெளியேறுகின்றன. மேலும் இந்த நாட்டை உங்கள் கண்களா நீங்கள் ஆராய்ந்தால், இங்கே உருண்டையான, தேய்ந்து போன கற்கள் இருப்பதை இதன் மண்ணில் காணலாம், ஆனால் நீங்கள் மலைகள் அருகே, ஆறுகள் வலிமையோடு கீழே பெருகி வரும் இடங்களில் தோண்டிப் பார்க்கலாம், அங்கே கற்கள் பெரியவையாக இருக்கின்றன; ஆனால் மலைகளிலிருந்து சற்றுத் தள்ளி நீரோட்டம் சற்று மட்டுப் பட்டிருக்கும் இடங்களில் சிறியவையாக இருக்கின்றன; நீரோட்டம் சலனமில்லாமல் இருக்கும் இடங்களில் மணல் நிரம்பிக் கிடக்கிறது, அங்கே நீர்கள் நிலத்தில் ஊறுவதைப் பார்க்க முடியும், கடல் இருக்கும் இட்த்தில், இந்த இடமே ஒரு காலத்தில் கடலில் இருந்திருக்கலாம் என்றும் நீரோட்டங்கள் கொண்டு வந்த மணல், கற்கள் மூலமே இது உருவாகியிருக்க கூடும் என்று கூட நினைக்கத் தோன்றுகிறது...... “ அல் பிரூனியின் Reinaud's Extracts, பத்திரிக்கை. As. ser. 4. 1844.//

அன்பு மணக்குது அருள் சுரக்குது அரபு நாட்டிலே என்று பாட்டு எழுதும் தமிழ் கவிஞர் பாரசீக அல்பரூனியை படித்திருந்தால் தெளிவு பெற்றிருந்திருப்பார். பாரசீகத்தில் இவர்கள் கண்ணில் தென்படுவது திருடர், கொள்ளையர் போன்ற குறிப்புகள் தானே. நீ எதுவாக இருக்கிறாயோ அதுபோல்வே தான் உனக்கு பார்ப்பதெல்லாம் தோன்றும் என்ற முதுமொழியை இப்போது நன்றாக புரிந்து கொள்ளலாம்.

இன்னொரு இஸ்லாமியர் இந்திய நிலப்பரப்பை மெகஸ்தனீஸ் போல் 13ம் நூற்றாண்டில் விவரிக்கிறார்.

//1205. - "இந்த மொத்த நாடான ஹிந்தும், Pershaur முதல் கடலின் கரைகள் வரையும், மற்ற திசையில், Siwistan முதல் Chin மலைகள் வரை.........” - Hasan Nizaami, in Elliot, ii. 236. அதாவது, வடக்கே பெஷாவர் தொடங்கி, தெற்கே இந்தியப் பெருங்கடல் வரையும்; Sehwan (இண்டஸ் நதியின் மேற்குக் கரையில்) தொடங்கி சீனாவை கிழக்கே பிரிக்கும் மலைகள் வரை.//

வாஸ்கோடகாமா ஒரு ரோமானியராக இருந்திருந்தால் தன் பெயருடன் இந்தியாவை சேர்த்திருப்பார் என்கிறது 16ம் நூற்றாண்டு குறிப்பு.

vasgodagama

//1533. - "வாஸ்கோடகாமா ரோமானியர்களைப் போன்ற மகோன்னதமான நாட்டைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், அவர் தனது குடும்ப பாணிக்கு அழகு சேர்த்திருப்பார், அதாவது Of India என்ற அடைமொழியை தன்னோடு சேர்ப்பதன் மூலமாக. ஏனென்றால், இத்தகைய கௌரவ சின்னங்கள் ஒருவருக்கு வம்ச வழியாக கிடைக்கும் சின்ன்ங்களை விட பெருமை சேர்ப்பதாக இருக்கும், ஆனால் Scipio தான் ஆப்பிரிக்காவைக் கண்டுபிடித்த அடையாளமாக Africanus என்று தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டார், கார்னீலியஸ் என்ற தன் குடும்பப் பெயரை சூட்டிக் கொள்வதால் அல்ல.//

கிறிஸ்து பிறப்பதற்கு 450 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நம் நாட்டில் காலனி படையெடுப்புகளும் குடியேற்றங்களும் ஏற்படும் வரை இமயம் முதல் குமரி வரையிலான நிலப்பரப்பு இந்தியா, ஹிந்த் என்றும் இங்குள்ளவர்களை இந்தியர்கள் ஹிந்துக்கள் என்று அழைக்கப்பட்டு வந்ததை இந்தக்குறிப்புகள் உறுதி செய்கின்றன.


மேற்கூறப்பட்ட அனைத்து தரவுகளையும் தொகுத்தளித்த ‘Digital Dictionaries of South Asia’வின் லிங்க் இதோ:

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:191.hobson

இந்தியாவை ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் 'East India Company' என்ற பெயரையே தாங்கி நின்றன.

1600 -  English East India Company (இங்கிலாந்து)
1602 - Dutch East India Company (நெதர்லாந்து)
1628 - Portuguese East India Company (போர்ச்சுகல்)
1664 - French East India Company (பிரெஞ்சு)

இதில் வேடிக்கை என்னவென்றால் போர்ச்சிகீஸ் கிழக்கிந்திய கம்பெனியின் சின்னத்தில்(logo) நம் தென்னிந்திய கோவில் இடம் பெற்றிருக்கிறது போர்ச்சிகீசியர் இந்த நாட்டிற்குள் படையெடுத்து வரும் போது இங்கு ஹிந்துக்கள் முஸ்லீம்கள் பெளத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்தனர். ஆனால் போர்ச்சுகீசியரோ ஹிந்து ஆலயத்தை மட்டும் சின்னத்தில் இடம்பெறச்செய்ததது இந்த நாட்டில் வழிபாட்டு முறைகள் வேறாக இருந்தாலும் பண்பாட்டில் அனைவரும் ஹிந்துக்கள் என்பதை உணர்த்துகிறது.

 portuguese east india company logo

தமிழ்நாட்டு அரசின் கோபுரசின்னமும் இதே கருத்தை பிரதிபலிக்கிறது. இந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தும் தெரிந்து ஹிந்து என்பது இந்த தேசமும் அதன் குடிகளும் என்று உரக்க முழங்கியவர் நாயக்கர் ராமசாமி.

//பொதுவாகச் சொல்லப்பட வேண்டுமானால் இந்து என்பது இந்தியனைத் தான் குறிக்கும். அரபிக்காரனை ஒரு அரப் என்பது போல், இந்தியனை வட மொழியில் இந்து என்று ஆதியில் அழைக்கப்பட்டது என்பது தான் என் அபிப்ராயம்//

- (குடி அரசு, டாக்டர் பி.வரதராசலு நாயுடு கட்டுரைக்கு விடை, 8.9.1940)- பெரியார் ஈ.வே.ரா.சிந்தனைகள், வே.ஆனைமுத்து அவர்கள் புத்தகத்தின் 348 ஆம் பக்கத்தில் இந்த மேற்கோள் இடம்பெற்றுள்ளது.

evra sinthanaigal

 ஹிந்துக்களை அனுதினமும் அவதூறாக பேசிவந்த நாயக்கர் இராமசாமிக்கு தெரிந்த இந்த உண்மை ஹிந்து மஹா சமுத்திரம் எழுதிய ஐயர் இராமசாமிக்கு தெரியாமல் போனது ஏனோ?

 cho ramasamy

Read 9523 times
Rate this item
(3 votes)
Last modified on Wednesday, 01 October 2014 10:14

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

19 comments

 • Comment Link ராஜசிங்கமங்கலம் மோகன் Tuesday, 21 October 2014 15:13 posted by ராஜசிங்கமங்கலம் மோகன்

  @ சுப்ரமணியமன்
  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? => கட்டுரையை முழுதாக கவனத்துடன் படித்தால் புரிந்துவிடும். நம் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்வோர் அனைவரும் ஹிந்துக்களே என்பதையே சொல்கிறது கட்டுரை.

  தமிழன் என்பது மொழியின் பாற்பட்ட வகைப்படுத்தல். ஹிந்து என்பது பண்பாடின் பாற்பட்ட வகைப்படுத்தல். இதை ஏன் குழப்பிக் கொள்கிறீர்கள்?

  சீக்கியர் ஹிந்துக்களா? ஆம். ஐயா வழி, அம்மா வழி (மாதா அம்ருதானந்தமயி) என்று இங்கிருப்பது போல வடக்கே கல்சா என்ற வழிமுறையைப் பின்பற்றினார்கள். தர்மம் காக்கவும் அதர்மம் அழிக்கவும் போராடு என்ற கீதையின் வாக்கைக் கொண்டதே அந்த வழிமுறை. குரு நானக் முதல் குரு கோவிந்த் சிங் வரையிலான பெரியோரின் உபதேச மொழிகள் அதைத்தான் சொல்கின்றன. ஐயா வழி வாழ்வோர் ஹிந்துக்கள் இல்லை என்று கொள்வது எவ்வளவு பேதைமையோ அதே போன்ற பேதைமையே சீக்கியர் ஹிந்துக்கள் இல்லை என்று சொல்வது. ஆங்கிலேயர் உருவாக்கி வைத்த மதப் பிரிவினை இது. சற்றே விவரமறிந்து கொண்டால் உண்மை புலப்படும்.

  //நீண்டகால பார்வை தேவை// கட்டுரையை ஊன்றிப் படித்தால் பார்வையில் தெளிவு வரும்.

  //வாய் புளித்ததோ மாங்காய் புளித்தததோ என்று பேசக்கூடாது.// உங்கள் பின்னூட்டத்துக்கு நீங்களே சரியான பதில் சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

  //பழைய கதைகள் வேண்டியதில்லை.// பழைய கதை வேண்டியதில்லை என்பது அறிவீனம். பழைமை போற்றப்பட வேண்டியது. காலமாற்றங்களுக்கேற்ப மாறுதலுக்கு உட்பட்டது. வேண்டியதில்லை என்று ஒதுக்கப்படவேண்டியதில்லை.

  //எதார்தத்துக்கு வாருங்கள்.// எதார்த்தம் என்ற சொல்லுக்குப் பொருளை உண்மை, நிதர்சனம் அகிய சொற்களில் காணலாம். ஆகவே கட்டுரையில் எதார்த்தம் தான் சொல்லப்பட்டுள்ளது.

 • Comment Link சுப்ரமணியமன் Sunday, 19 October 2014 02:28 posted by சுப்ரமணியமன்

  ஐயா,
  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
  நமது நாடு இந்தியா. இது இந்துக்கள் நாடா?இல்லலையா?
  தமிழன் இந்துவா சீக்கியன் இந்துவா?
  சீக்கியன் இந்து என்பதை அவர்கள் ஒதுக்கொன்ண்ட மாதிரி தெரியவில்லையே.?
  நீண்டகால பார்வை தேவை.வாய் புளித்ததோ மாங்காய் புளித்தததோ என்று பேசக்கூடாது.
  பழைய கதைகள் வேண்டியதில்லை.எதார்தத்துக்கு வாருங்கள்.

 • Comment Link அருண்பிரபு Thursday, 16 October 2014 05:32 posted by அருண்பிரபு

  @ செந்தில்.
  ஆடு புல் மேய்வது போன்றதொரு புரிதலில் கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள் என்பதில் உங்கள் அறிவார்ந்த சிந்தை கண்டு இறும்பூது எய்துகிறேன்.
  ஹிந்து என்பது பாரசீகர்கள் நம்மை அழைக்கப் பயன்படுத்திய சொல் என்கிறீர்கள். ஆனால் அதற்குப் பன்னெடுங்காலம் முன்னமே வேதங்களில் ஹிந்துஸ்தானம் என்ற பெயர் வழங்கிவந்துள்ளது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளாததற்கு என்ன காரணம் என்பதை விளக்குவீர்களா?
  //பாரத வர்ஷம், பரத கண்டம், தக்ஷிண பாரதே//
  மிகத் தவறான அடிப்படைப் புரிதல். இரண்டொரு சொற்களை எடுத்துக் கொண்டு (அதுவும் தவறாக) இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுக்கும் திராவிட அரசியல் வழக்கம் உங்களுக்குக் கைவரப் பெற்றது குறித்து மகிழ்ச்சி. திராவிடக் கட்சிகளுக்கு அவர்களது கொள்கைகள், கோட்பாடுகள் என்று சொல்லிக் கொள்பவற்றை இந்த முறையில் விளக்கிக் கசப்பு மருந்து கொடுக்கலாம்.
  ஸங்கல்ப மந்திரம் இது:
  சுபாப்யாம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண:த்வீதிய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்த்ரே அஷ்டாசாவிகும்சதி தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்புத்வீபே பாரத வருஷே பரத கண்டே மேரோ: தக்ஷ’ணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே பிரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே.....
  இதில் காலக்கணக்குகள் சொல்லப்பட்டுள்ளன. மேரோஹோ தக்ஷிணே பார்ஸ்வே என்பது மேரு மலைக்குத் தெற்கே இருப்போர் சொல்வது. தக்ஷிணே பாரதே என்பது உங்கள் கண்டுபிடிப்பா புரிதலா?

  பாரத வர்ஷம் என்பது தவிர இந்தப் பரந்த நிலப்பரப்புக்குப் பெயர் வேறேதும் இல்லை என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது?

  ஹிதோபதேசம், உள்ளிட்ட பல நூல்களில் சொல்லப்பட்டுள்ள ஹிந்துஸ்தானம் என்ற பெயர் தவறு என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மறுக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்லவில்லை. சொல்லத் தெரியவில்லையா இல்லை விவரம் தெரியவில்லையா?


  கட்டுரையாளருக்கு கௌதமன் என்று பெயர். அதைவைத்து அவரை மற்றவர்கள் அழைக்கிறார்கள். சில காலம் சென்ற பிறகு இது மற்றவர்கள் வைத்த பெயர் அவரது சொந்தப் பெயர் இல்லை என்று சொல்லும் அறிவுக்கூர்மை தெரிகிறது உங்களது ஹிந்து என்பது பாரசீகர்கள் வைத்த பெயர் என்ற வாதத்தில்.

  சிந்து என்பதன் மரூஉ ஹிந்து என்ற வாதம் ஆங்கிலேயர் வைத்தது. இண்டஸ் என்று கிரேக்கர்கள் சிந்து நதிக்குப் பெயரிட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் பாரசீகர்கள் அந்த ந்திப்பகுதியை ஹிந்து என்று அழைத்தார்கள் என்பது. பாரசீகர்கள் ஏன் அப்படி அழைத்தார்கள்? அது அவர்கள் கண்டுபிடித்துச் சூட்டிய பெயரா?அல்லது அப்பகுதி மக்களைக் குறித்த பெயரா? சிந்துவைத் தாண்டி வசித்த மக்களின் பெயர் என்ன? இதெல்லாம் கிரேக்கர்கள் பதிவு செய்யவில்லை. பல கேள்விகள் கேட்காமல் கேள்வி ஞானத்தில் ஆங்கிலேயர்கள் எழுதிவைத்த வரலாறு சிந்து தான் ஹிந்து. அது நதி சார்ந்த பெயர். அதை அப்படியே பரப்பிவிட்டனர் என்பது.

  சிந்து என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு கடல் என்று ஒரு பொருள் உண்டு. திருச்செந்தூர் முருகனை ”ஸிந்துதீரேய ஆஸ்தே தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்” என்று ஆதிசங்கரர் பாடினார். முருகன் சிந்து நதியின் மிசை கோவில் கொண்டவரா அல்லது தென்கோடிக் கடலின் கரையில் உறைகிறாரா என்பதை உங்கள் மேலான முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.
  இந்த சொல் வழக்குப்படி கடற்கரையில் வசிப்போர் எல்லாம் ஹிந்துக்கள் என்று பாரசீகர்கள் அழைத்தார்களா?

  //ஹிந்து என்ற சொல்லில் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை// யார் தலையில்?

  //முஸ்லிம்கள் எல்லாரும் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் அல்ல.. அவர்களீன் பூர்வீக அடையாளமே அதற்கு சாட்சி..//
  முஸ்லிம்களில் யார் வந்தவர்களின் வாரிசுகள், யார் மாறியவர்களின் வாரிசுகள் என்பது விவாதம் அல்ல.

  //இங்கிருப்பவர்களை, இந்து மதம், இந்துக்கள் என்று செயற்கையான அடையாளத்தை திணித்து, தங்களது பூர்வீக அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்..//
  பூர்விக அடையாளத்தில் கொங்கு தேசம் என்பது 56ல் ஒன்று இல்லையே! அதுவும் புதிய அடையாளத் திணிப்பு தானா?

  பல ஹிந்துத்வவாதிகளிடம் பேசியதாகச் சொல்கிறீர்கள். உங்களது அடிப்படைப் புரிதல்களைக் கொண்டு பார்க்கிறபோது நீங்கள் உங்கள் அளவுக்குப் புரிதல் கொண்ட சிலரிடம் பேசியிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

  அரைகுறைப் புரிதலுடன் வந்து அனைத்தும் அறிந்தவர் போலப் பேசும் மூடர்கூடத்தில் மூத்த உறுப்பினரான உங்களுக்கு வாழ்த்துக்கள். இனியேனும் முன்முடிபுகள் கொண்டு மூடிய மனதுடன் பேசாது திறந்த மனதுடன் விவரங்களைத் தெரிந்து தெளிந்த புரிதலுடன் பேசத் தலைப்படுங்கள். கடினம் தான். முயன்றால் முடியாதது இல்லை.

 • Comment Link அருண்பிரபு Thursday, 09 October 2014 14:54 posted by அருண்பிரபு

  @ யுவசெந்தில்குமார்
  மயிலை ஸம்ஸ்கிருதக் கல்லூரி நூலகத்தில் காணக் கிடைக்கும். இந்த சுலோகம், ஹிதோபதேசம், சுபாஷிதம் உள்ளிட்ட பல தொகுப்புகளில் கையாளப்பட்டுள்ளது.

 • Comment Link செந்தில் Sunday, 05 October 2014 15:19 posted by செந்தில்

  எல்லா ஹிந்துதுவவாதிகளையும் போல, VSRC எழுதும் முட்டாள்தனமான கட்டுரைகளில் இதுவும் ஒன்று..

  ஹிந்து என்ற அடையாளம் பாரசீகர்கள் நம்மை கூப்பிட வைத்தது.. நாம் நமக்காக வைத்த பெயர் அல்ல.. நமது முன்னோர்கள் உபயோகப்படுத்திய அடையாளம் "பாரதம்", 56 தேசங்களின் பெயர்கள்.. வங்காளத்தில் வசிப்பவர்களுக்கு வங்கர்கள், கேரளத்தில் வசிப்பவர்கள் கைராளர்கள், சோழ தேசத்தில் வசிப்பவர்கள் சோழியர்கள் - இவர்கள் அனைவரையும் பாரத வாசிகள் என்ற அடையாளம். மகாபாரதத்திலும், இன்னும் பிற சமஸ்கிருத இலக்கியங்களிலும் இது தெளிவாக சொல்லப்பட்டிருக்கு..

  "பாரத வர்ஷம், பரத கண்டம், தக்ஷிண பாரதே..." என்ற சங்கல்ப மந்திரமே இதற்கு சாட்சி..

  பாரத வர்ஷத்தில்ன் எல்லை - இமய மலைக்கு தெற்கே, சமுத்திரம் வரை, கிழக்கே இந்தோனேசியா வரை.. இந்த நிலத்தில்தான் சதுர்வர்ணம் அமைப்பு உள்ளது.. தர்ம பூமி..

  பாரசீகம் (ஈரான்) என்பது இமயமலைக்கு அப்பால் உள்ளது.. சாகஸ்தான் (இன்றைய ஆஃப்கானிய பாஷ்டூன் பகுதி), பாரசீகத்திற்கு வடக்கில் உள்ளது.. அதுவும் இமய மலைக்கு அடுத்து உள்ளது.

  சிந்து தேசம் என்பது பாரத வர்ஷத்திலிருக்கும் 56 தேசங்களில் ஒன்று.. பாரசீகத்தை ஒட்டி, இமயமலை அடிவாரத்தில் ஓடும் சிந்து நதியை சுற்றி இருக்கும் தேசம்.

  பாரசீகர்கள், தங்களுக்கு அடுத்த பகுதியில் இருக்கும் சிந்து தேசத்தவர்களையே ஹிந்துக்கள் என்று அழைத்தார்கள். அதை தாண்டி உள்ள மக்களும் சிந்து தேசம் வழியே சென்றதால் பாரதத்திலிருந்து வரும் மக்கள் அனைவரையும் ஹிந்துக்கள் என்று அழைத்தார்கள்.. பாரசீகத்தை தாண்டி இருக்கும் அரேபியர்களும், இதே அடையாளத்தை பயன்படுத்தினார்கள்.. அதை தாண்டி உள்ள ஐரோப்பியர்கள் இந்த அடையாளத்தை Indica என்று சொல்லி, பின் ஆங்கிலத்தில் இந்தியா என்றானது..

  ஆக இந்த அடையாளங்கள் அனைத்து அவர்கள் இருக்கும் பகுதியின் அடிப்படையில் ஏற்பட்ட மிலேச்சகர்களின் பார்வையில் உருவானது.. அந்த அடையாளத்தை இங்குள்ளவர்கள் எதுக்கு பயன்படுத்த வேண்டும்?

  ஹிந்துதுவவாதிகள் பலரிடம் இதைப்பற்றி கேட்டுவிட்டேன்.. ஒருத்தராலயும் பதில் சொல்ல முடியவில்லை.. மெக்காலே கல்வி முறையை சாடும் இவர்கள், எதுக்கு இந்த காலனியர்கள் பயன்படுத்திய அடையாளத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்?

  நம்மை அடிமைப்படுத்த உதவும் ஆயுதங்களில் இந்த அடையாள சிக்கலும் ஒன்று..

  சோழியர் என்று சொல்வதில், 5000 வருட வரலாறே அடங்கியிருக்கிறது.. ஆனால் இந்த ஹிந்து என்ற சொல்லில் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை..

  சோ சொன்னது மெக்காலே பார்வையில்.. அதுவும் தவறு.. இந்த கட்டுரையில் சொல்லப்பட்டதும் தவறு..

  பாரத வாசிகள் யார்.. மிலேச்சகர்கள் யார் என்பது தெளிவாக உள்ளது.. முஸ்லிம்கள் எல்லாரும் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் அல்ல.. அவர்களீன் பூர்வீக அடையாளமே அதற்கு சாட்சி.. இங்கிருந்து மதம்மாற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்றும் தங்களது ஜாதி தேச அடையாளங்களை வைத்திருக்கிறார்கள்.. உதாரணத்திற்கு ராஜபுத்திரர்கள், சௌகான்கள், படேல்கள் (அகமது படேல்) போன்ற முஸ்லிம்கள் இந்த மண்ணை பூர்வீகமாக கொண்டவர்கள்..

  போஹ்ராஸ், குரேஷிகள், ஷேக்குகள், ராவுத்தர்கள், பதான் இவர்கள் எல்லாரும் மிலேச்சகர்கள்.. அவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் அல்ல..

  மாப்ளாக்கள், அரேபிய ஆண்கள் இங்கு கல்யாணம் செய்த வம்சாவளியினர்.. அவர்களும் மிலேச்சகர்களே..

  மதம் என்றுமே ஒருவனுக்கு அடையாளம் தராது.. முஸ்லிம்களே ஆனாலும், இன்றும் அரேபியர்கள், துருக்கியர்க்ள் என்று பூர்வீக அடையாளங்களை வைத்திருக்கிறார்கள்.. ஷியா, சன்னி சண்டையே அரேபிய பாரசீகர்களின் இன சண்டையே..

  ஆனால் இங்கிருப்பவர்களை, இந்து மதம், இந்துக்கள் என்று செயற்கையான அடையாளத்தை திணித்து, தங்களது பூர்வீக அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்..

 • Comment Link Mohan Sunday, 05 October 2014 12:58 posted by Mohan

  In olden days the land and people living in this land are called Hindus. This might have originated from the word Indus which denotes the river Indus.
  Even today, India is called as 'Al Hind' in Arabic language.

 • Comment Link p.s.subramanian Thursday, 02 October 2014 17:02 posted by p.s.subramanian

  Well researched . Cho was writing in the present day contest where lot of other believers also live in our Hindustan. But Mr.Cho has to realise that even the other believers ( Muslims Christians etc) whose for-fathers where Hindus who got converted to other believes due to various reasons ( of course i am sure many of them got converted by force or economic emancipation and NOT BY MAKING A SWAT analysis between Hindu texts and texts of other believes) and hence it is 100% correct to call this country as a Hindu country. My personal opinion is that when the partition ( not Independence)happened our country should have been declared as Hindu country and established the past glory of our culture. But our leaders kept compromising for the sake of so called minorities and that is the reason we are in a sorry state of the present day where we discuss about calling our country as a Hindu nation which should have been done naturally.

 • Comment Link யுவசெந்தில்குமார் Wednesday, 01 October 2014 16:27 posted by யுவசெந்தில்குமார்

  @அருண் பிரபு
  பிரஹஸ்பத்ய ஸாஸ்திரம் - இந்த கிரந்தம் எங்கு கிடைக்கும். நான் பார்க்க விரும்புகிறேன்.

 • Comment Link யுவசெந்தில்குமார் Wednesday, 01 October 2014 16:20 posted by யுவசெந்தில்குமார்

  @ த்ரிவிக்ரமன்
  ///இப்பாண்டியரின் முதல் தலைநகரான மதுரை குமரிகண்டம் என்றழைக்கப்படும் தீவில் இருந்ததாக சொல்லப்படுகிறது...பின்னாளில் இக்கண்டத்தின் தெற்குபகுதி நீரில் மூழ்கி பாண்டியன் தன் மக்களை வடக்கு நோக்கி அழைத்துச் சென்றான் என்று கூறப்பட்டுள்ளது..////
  குமரிக்கண்டம் என்ற சொல் எந்த இலக்கியத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது?

  ///சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய நச்சினார்கினியார் பாண்டியரின் மூன்று தமிழ்சங்கத்தையும் கடலில் மூழ்கிய கண்டத்தையும் பற்றிக்கூறியுள்ளார்////
  நன்றாக படிக்கவும். தி.க. பாடுகள் (மறைமலையடிகள்) எழுதியதை இங்கே உரைக்க வேண்டாம்.
  குமரிக்கண்டம் vs குமரிக்கோடு ---> https://www.youtube.com/watch?v=xnXBwpgSYfI

 • Comment Link த்ரிவிக்ரமன் Wednesday, 01 October 2014 10:15 posted by த்ரிவிக்ரமன்

  இந்து - ஹிந்து போன்ற சொற்களின் அர்த்தம் தெரியும் முன் தமிழ் சமஸ்கிருதத்தில் நன்றாக இதற்கு விளக்கம் தேடிப்பாருங்கள் உண்மை விளங்கும்...வடநாட்டவர் தம்மை ஹிந்து என்கின்றனர் நாமும் அவர்களைப் போன்றே நம் சான்றிதழ்களில் ஆங்கிலத்தில் Hindu என்று எழுதுகிறோம் ஆனால் தமிழில் எழுதும் போது இந்து என்று தான் எழுதுவோம் ஹிந்து(ஹி என்னும் கிரந்த சொல் தமிழில் தற்போது நடைமுறையில் உள்ள போதும் இந்து என்ற சொல்லைத் தான் பயன்படுத்துகிறோம்...இந்து(indu) என்ற சொல்லுக்கு தமிழிலும் சமஸ்கிருதத்திலும் சந்திரன் என்று பெயர்..ஆனால் ஹிந்து என்ற பெயருக்கு எந்த அர்த்தமும் இல்லை மேலும் வேற்றுநாட்டவன் வைத்த பெயர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்,அர்த்தமேயில்லாத வேற்றுநாட்டவன் வைத்த பெயரையா நாம் வைத்திருப்போம்?.indus என்பது கூட இந்துக்கள் என்பதன் ஆங்கில பன்மை பெயராக இருக்கலாம்...ப்ரென்ஞ் தீர்க்க தரிசியான நாஸ்ட்ராடாமஸ் கூட வருங்காலத்தில் கடல் பெயரிலான மதம் உலகையாலும் என்று கணித்திருக்கிறார் (ராமசாமி ஐயருக்கும்,நாயக்கருக்கும் 400 வருடத்துக்கு முன்பே பிறந்தவர் என்பது கவனிக்கத்தக்கது) அப்படிப்பார்த்தால் அது சிந்து என்னும் நதியல்ல இந்துமாக்கடல் என்னும் indian ocean தான் இருக்கும் இன்றும் ஏழு சமுத்திரங்களில் ஒரு நாடு,மதத்தின் பெயர் இருக்குமானால் அது நம்முடையது தான் அந்தளவிற்கு பழமையானது...indi"an" என்பது கூட தமிழ் பெயர் போல் தோன்றுகிறது வார்த்தை முடிவில் அன் சேர்ப்பது தமிழில் ஆண்பாலை குறிக்கும்...இந்துக்களின் வருடம்,தேதி,திதி பஞ்சாங்கம் அனைத்தும் சந்திரனின் நகர்வை வைத்தே கணக்கிடுகிறோம் 27 நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிப்பது நாம் காலகண்கீடுகளில் முக்கியமான ஒன்று சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள் இருப்பினும் ஏன் சந்திரனுக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம்? சூரிய மண்டலத்துக்கு வௌியே உள்ள 27 நட்சத்திரங்களுக்கும் சந்திரனுக்கும் இடையே எத்தனை கோடி கிமீகள் உள்ளன ஆயினும் எதற்கு இந்த நட்சத்திரங்களோடு சந்திரனை சேர்த்து பார்க்கிறோம்?...உலகில் ஜீவராசிகள் உயிர் வாழ சூரியன் மிகவும் அவசியம் ஆனால் அதே சமயம் நிலவும் எவ்வளவு முக்கியம் என்பது பலருக்கும் தெரியாது...சிவனடியார்கள் தமிழில் சிவனைக் குறித்து பாடும்போது இந்துசேகரன் என்றே அழைத்துள்ளனர்...இந்து என்னும் சந்திரன் சிவனின் இடது கண் ,சேகரன் என்னும் சூரியன் சிவனின் வலது கண்,அக்னி என்னும் நெற்றிக்கண் மூன்றாவது கண்...இம்மூன்றிலிருந்தே தமிழ்மன்னர்களான பாண்டியர்,சோழர்,சேரர் தோன்றியதாக சொல்லப்படுகிறது...இவர்களில் பாண்டியரே மூத்தவர் என்று கூறுவர் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய நச்சினார்கினியார் பாண்டியரின் மூன்று தமிழ்சங்கத்தையும் கடலில் மூழ்கிய கண்டத்தையும் பற்றிக்கூறியுள்ளார் அதில் தமிழ்சங்கத்தில் புலவர்களாக அமர்ந்திருந்தவர்கள் என்று உவமைபடுத்தப்பட்ட திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்(சிவன்),குன்றெரியிளஞ்சேய்(முருகன்),துவரைக் கோமான்(கண்ணன்) ஆகியோர் தமிழர் மட்டுமல்லாது இந்தியர் அனைவராலும் வணங்கப்படுவர்...இந்து புராண(ஸ்ரீமத்பாகவதம்,மச்ச,வாமன,வீஷ்ணு புராணம்),இதிகாசம்(ராமாயண,மகாபாரம்) மற்றும் தமிழ் இலக்கியம் அனைத்திலும் வரும் ஒரே இந்திய அரச மரபினன் பாண்டியன் மட்டுமே ...பாண்டியன் தன் முன்னோராக சந்திரனைக் கொண்டுள்ளான் புரூரவன் சரிதையில் இது கூறப்பட்டள்ளது...சிறுவயதில் நாம் பாண்டிய அரசு அவன் தலைநகரம் பற்றி கூட படித்திருப்போம் மதுரை என்றால் மதியென்னும் சந்திரன் உறையும் நகரம் என்று...இப்பாண்டியரின் முதல் தலைநகரான மதுரை குமரிகண்டம் என்றழைக்கப்படும் தீவில் இருந்ததாக சொல்லப்படுகிறது...பின்னாளில் இக்கண்டத்தின் தெற்குபகுதி நீரில் மூழ்கி பாண்டியன் தன் மக்களை வடக்கு நோக்கி அழைத்துச் சென்றான் என்று கூறப்பட்டுள்ளது...இது சமஸ்கிருத புராணங்களில் கூறப்படும் மனுவின் கதையை ஒத்திருக்கிறது...ஸ்ரீமத் பாகவதத்தின் படி மச்சாவதாரம் நிகழ்ந்து ஏழாம் மனு தன் மக்களை காத்ததாக சொல்லப்படும் நகரம் மலைய மலைத்தொடரில் இருந்துபாயும் கிருதமாலா என்ற இன்றளவும் இருக்கும் நதிக்கரை அமைந்திருக்கும் இடமான தமிழ்நாட்டு மதுரை...இந்துக்கள் அனைவரும் மனித குலத்தின் மூதாதையராக இருந்தது தெற்கில் இருந்து வந்த திராவிட மன்னனான மனு என்று நம்புகின்றனர்,ஸ்ரீமத் பாகவதம் இந்நிகழ்வினால் தான் பாண்டியன் மீன் சின்னத்தை பயன்படுத்தினான் என்று கூறுகிறது...ஏழாவது மனுவின் நகரமும் மதுரை,முதல் மனுவின் புதல்வனான உத்தானபாதன் ஆண்ட நகரமும் மதுரை என ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது ஆனால் இம்மதுரை ஜம்பு என்னும் தீவில் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது,வடஇந்தியர் நம்புவது போல் வரலாற்றில் ஒரேயொரு மதுரை தான் இருந்துள்ளது அது ஏழாவது மனுவின் காலத்தில் வாழ்ந்த மது என்னும் அரசனால் உருவாக்கப்பட்ட மதுவனம்,பிறகு ராமனின் சகோதரன் சத்ருக்கனால் கவரப்பட்டு மதுரா என்றழைக்கப்பட்டது பின்னாளில் யாதவ குலத்து கிருஷ்ணனால் ஆளப்பட்ட மதுரா...ஆனால் இவர்கள் வாழ்ந்ததற்கு பன்னெடுங்காலத்துக்கு முந்தைய மதுரையும் முதல் மனுகாலத்தில் இருந்ததாக ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது அதனால் முதல் மனு ,உத்தனபாதன்,அவன் மகன் துருவன் ஆகியோர் ஜம்புத்தீவு என்னும் குமரிகண்டத்தில் வாழ்ந்திருக்கவும் பாண்டியராக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது...இன்றும் பாண்டிய நாட்டு வைணவ கோயில்களில் தான்  ஸ்ரீமத் பாகவதத்தில் கூப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் மறக்கப்படாமல் அனைத்தும் நடத்தப்படுகின்றது(உதாரணம் துருவனுக்கு விஷ்ணு அருளுதல்,கஜேந்திர மோட்சம் போன்றவை) ...பாண்டியனின் நிலப்பகுதி கடலில் மூழ்கிய இடமே பிற்காலத்தில் இந்துமாக்கடல் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்,பாண்டிய வம்சத்தின் பிற்காலத்திய சங்க கால பெயரில் ஒரு பெயர் கவுரியன்(மீனாட்சியின் கணவரான சொக்கநாதர்)...இன்றும் வடக்கில் பலர் கவுரியன் என்ற புனைப்பெயரை பயன்படுத்துகின்றனர்,கவுரியன் என்ற கோத்திரம் கூட வடக்கில் உள்ளது...பாண்டியர் இந்து என்னும் பெயரை பயன்படுத்தியதற்கு இன்னொரு உதாரணம் அவர்கள் சீனரோடு இணைந்து ஆட்சிபுரிந்த இந்து-சீனம் என்ற நிலப்பகுதி(indo-china)...சீனாவில் பாண்டியன் பெயரில் ஒரு நகரம்,தமிழ் கல்வெட்டு ,சிவன்கோவில் இருக்கையில் தென்கிழக்காசிய பகுதியான இந்தோசைனாவை சீனாவுடன் பாண்டியர் இணைந்து ஆண்டிருப்பதில் ஆச்சரியமில்லை...இந்து பெண்களின் உடையான சேலையணியும் வழக்கம் சிந்து நதிக்கரை,சில வடஇந்திய பகுதிகளிலேயே மறக்கப்பட்ட போதும் "indo"china, "indo"nesia போன்ற பகுதிகளில் இன்றும் வழக்கத்தில் உள்ளது...இதன் மூலம் இந்து கலாச்சாரம் என்பது சிந்து நதிக்கரையில் பிறந்தது என்பதை விட பாண்டியரின் சந்திர வம்சமும் அம்மன்னரின் கீழ் வாழ்ந்த மக்கள் பின்பற்றிய கலாச்சாரமாகவே நம்பத் தோன்றுகிறது...தமிழில் இ என்பது வடக்கில் ஹி என்று அழைக்கப்படும் உதாரணம் இரண்யன்- ஹிரண்யா ,இருதயம் - ஹ்ருதயா, இமாலயம் - ஹிமாலயா ...இவ்வாறு தான் இந்து ஹிந்துவாகியிருக்கும்

 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  Next 
 •  End 

Leave a comment