×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

உலகம் உய்ய ஹிந்துத்துவமே வழி

Friday, 03 October 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

பாரதத்தின் மேன்மையும், உலகம் உய்ய பாரதத்தின் தேவையும், இன்றைய இன்னல்களுக்கான தீர்வு ஹிந்துத்துவமே என்றும் தனது விஜயதசமி உரையில் குறிப்பிட்டார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதத் தலைவர் திரு.மோகன் பாகவத் அவர்கள்.

mohanbhagawat

நம் நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்துக்களையும் அதை வெற்றிக்கொள்ளவது நமது கடமை என்றும் அதற்கான குணநலன்களையும் விவரிக்கும் மேலான கருத்துரையின் முக்கியத் துளிகள் இதோ. கருத்தை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவது நமது கடமை என்று வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் கருதுகிறது.

  • மங்கள்யானின் மகத்தான வெற்றி உலக அரங்கில் மிகப்பெரியளவில் சுய மரியாதையையும் நன் மதிப்பையும் நமக்கு ஏற்படுத்தியுள்ளது.

 

  • இந்த வெற்றிக்கு அரும்பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளையும் ஆர் எஸ் எஸ் வாழ்த்துகிறது.

 

  • மாவீரன் ராஜேந்திர சோழன் முடி சூடிய ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்த ஆண்டில் அவரை வணங்குகிறோம். பண்டித தீனதயாள் உபாத்யாயாவின் உன்னதக் கோட்பாடான “ஏகாத்ம மானவ வாதம் (Integral Humanism)” - ன் பொன்விழா ஆண்டாகவும் இந்த ஆண்டு அமைந்துள்ளது மிகவும் பெருமிதம் தருகிறது.

 

  • உலகின் குருவாக நமது பாரத நாட்டை ஆக்குவதே நமது லட்சியம். அமைதி, மகிழ்ச்சி, ஒத்திசைவு ஆகிய கோட்பாடுகளை செயல்படுத்துவதில் உலகிற்கே நாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

 

  • உலகின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு அனைவரையும் மதித்து அன்புடன் வாழ வேண்டும். இதைப் புரிந்துகொண்டு செயல்படுத்துவதன் மூலமாகவே அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் அழகிய மனிதசமுதாயம் உயர்வு அடையும்.

 

  • அடிப்படைவாதத்தையும், வெறித்தனத்தையும், வன்முறையையும் கைவிட்டு அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட அகிம்சை நெறியை கடைபிடிக்க வேண்டும்.

 

  • உயர்ந்த கருத்துகளை பேசுவதோடு அல்லாமல் அவற்றை செயல்படுத்தி வாழ்ந்து காட்டுவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

 

  • ஆணவம், அகந்தை, சுயநலம், முரட்டுத்தனமான பிடிவாதம் ஆகியவற்றைக் கொண்ட நபர்கள் மற்றும் நாடுகளே இன்றைய உலகப் பிரச்சனைகளுக்கு காரணம்.

 

  • அறிவுபூர்வமாக கணிசமான வளர்ச்சியை நாம் அடைந்த போதும் மனித சமுதாயம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. நம்மால் அடையாளம் காட்டப்படும் வளர்ச்சி அல்லது முன்னேற்றம் தீர்க்க முடியாத பல சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது.

 

  • சுற்றுச்சூழல் சீரழிவினால், இந்த உலகு புதிது புதிதாக உருவாகிவரும் இயற்கை சீற்றங்களின் வாயிலாக பேரழிவை எதிர்கொள்கிறது.

 

  • சுயநலமும், பேராசையும் கொண்டவர்களின் எண்ணிக்கை கூடுவதினால் சுரண்டல், மேலாதிக்கம், வெறித்தனம், வன்முறை தாண்டவமாடுகிறது.

 

  • ஜனநாயக வழியில் வருங்கால நாட்டினை உருவாக்கும் பணியில் பாரதத்தின் சாமானிய மனிதனின் பங்களிப்பை உலகம் உணர்ந்து வருகிறது. உலகின் குருவாக, உலகின் முன்னுதாரணமான நாடாக பாரதத்தை உருவாக்கும் நமது பயணத்தில் இது ஒரு மைல் கல்.

 

  • பாரதத்தை உலகின் குருவாக ஆக்கும் லட்சியம் ஒரு நீண்ட நெடும்பயணம்

 

  • பரஸ்பர அன்பு, ஒத்திசைவு, மற்றவர்கள் உணர்வை மதித்தல், அகிம்சை ஆகிய நெறிமுறைகளின் மூலமாகவே மனித சமுதாயம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

 

  • பயங்கரவாதமும், அடிப்படைவாதமும் புதுப்புது அவதாரம் எடுப்பதற்கு, மேலை நாடுகளின் சுயநலமே காரணம்

 

  • ISIS என்ற உருவில் தலையெடுத்து வருகிற பயங்கரவாதத்திற்கு மேலை நாடுகளின் சுயநலமே காரணம்.

 

  • பாரதத்தில் குறிப்பாக தென்கோடி பகுதிகளில் ஜிஹாதிகளின் பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் இவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இத்தகைய ஜிகாதி பயங்கரவாதத்தால் நாம் பல ஹிந்து இயக்க தலைவர்களையும் இழந்துள்ளோம்..

 

  • பாரதத்தின் கடல் வழி எல்லையோர மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு ஆகியவை மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது. இந்த கடலோர மாநிலங்களில் பயங்காரவாதிகள் அவ்வப்போது நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 

  • பயங்கரவாதத்தின் வேரையும், வேரடி மண்ணையும் களைந்து எறியாவிடில் இந்த உலகைக் காக்க முடியாது.

 

  • உலகமயமாக்கல் (globalization) என்ற பெயரில் சில நாடுகள் தங்கள் பொருளாதார மேலாதிக்கத்தை வளர்த்து வருகின்றன.

 

  • சத்தியம் மற்றும் அமைதி வழியில் இன்னல்களுக்கு தீர்வுகாண பாரதம் மட்டுமே நேர்மையான முயற்சி எடுத்து வருகிறது.

 

  • இமயம் தொட்டு கடல் வரை பரந்த இப் பகுதியின் இடையறாத தேசிய உணர்வே -ஹிந்துத்துவா

 

  • வாழ்வின் உண்மையான தேடல், வாழ்வியல் அனுபவம், வாழ்வைப்பற்றிய அனுமானம் ஆகியவற்றை ஒவ்வொரு மனிதனுக்கும் நிர்ணயிக்கும் முழுசுதந்திரத்தை ஹிந்துத்துவம் மட்டுமே அளிக்கிறது.

 

  • மற்றவர்களின் நம்பிக்கையை ஏற்று, மதித்து, நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதே ஹிந்து கலாச்சாரத்தின் தனிச்சிறப்பாகும்.

 

  • அன்பு, பாசம், உலக நன்மை ஆகிய பாரதீய பண்பாட்டுக்கூறுகளின் மூலம் மட்டுமே முனிவர்களும், ரிஷிகளும் உலகை வென்றனர். உலகின் எந்த சாம்ராஜ்ஜியத்தையும் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் மூலம் பாரதீயர்கள் வெற்றிக்கொள்ளவில்லை.

 

  • இந்த உலகு உய்வதற்கான உன்னதமான வழிமுறை பாரதத்தின் மூலமாகவே உருவாகும் என்று சிந்தனையாளர்களும் நேர்மையான அறிவு ஜீவிகளும் நம்பிக்கையோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 

Read 2365 times
Rate this item
(7 votes)
Last modified on Friday, 03 October 2014 12:27

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment