×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வாங்கின காசுக்கு நல்லாத்தான் கூவுறானுங்கய்யா!

Saturday, 18 October 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தமிழ் தெரியாத தமிழ் வியாபாரி சைமன் என்ற சீமான் ஒட்டிய சுவரொட்டியில் //தீபாவளி தமிழருக்கானது அல்ல. இது வந்தேரிகளால் உருவாக்கப்பட்டது.// அதனால் கொண்டாதீர்கள் என்று தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

nam tamilar seeman deepavali poster

ஆங்கில அடிவருடியும் மிஷினரிகளிடமிருந்தும், ஜிகாதிகளிடமிருந்தும் காசு வாங்கி பிழைப்பு நடத்துபவர்களுக்கு மொழிபற்றைவிட காசு பற்றுத்தானே அதிகம் இருக்கும். அதனால், அவர்கள் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பில்லை. தீபாவளி தமிழர் பண்டிகை. சங்க காலம் தொட்டு தீபாவளி தமிழர்களால் காலங்காலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான சான்றுகளை “முத்தமிழ் வித்தவர்” என்ற புத்தகத்தில் பால.கௌதமன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவை மேலும் மெருகு சேர்த்து இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

//தீபாவளி – கார்த்திகை…. அய்யோ! அய்யோ!


இருளுக்கு ஒளி எதிரிதான்


விஞ்ஞானத்திற்கு ஞானம் எதிரிதான்


அதனால்தான் ஞானக் கடவுளான தட்சிணாமூர்த்தியின் பெயரை, தனக்கு சூட்டப்பட்ட அந்த இயற்பெயரை, அவர் தனக்கு ஒத்துவராது என்று மாற்றிக் கொண்டார்.


சரி கருணாநிதி என்று அவர் வைத்துக் கொண்ட பெயரைக்கூட அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், கருணை ஒளியுடன் சம்பந்தப்பட்டது.


என்னை கருணாநிதி என்கிறார்களே? என்று மனம் நொந்து கொண்டார்.


ஏன் ஒளியின் மீது இவருக்கு இந்தக் கோபம்? அது தமிழர்களின் திருவிழா?


தமிழர்களே வள்ளுவத்தின்படி வாழ்பவர்கள். எப்படி இவருக்கு அது ஒத்துவரும்.


தீபாவளி வடவர் விழா….


கார்த்திகை விரதம் மூடத்தனமானது…. என்றெல்லாம் கொக்கரிப்பார்.


ஆனால், சங்க இலக்கியமான அகநானூறு என்ன சொல்கிறது?


அறுமீன் சேரும் அகலிரு நடு நாள் (அகநானூறு)


ஆந்திர மாநிலம் அமராவதிக்கு தீபாவளி திண்ணே என்ற பெயர் உள்ளதாக 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதன் பொருள் ஆந்திராவும் திராவிட நாடுதானே?


தஞ்சாவூர், பாபநாசம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் கல்வெட்டில் அபிநவ தீபாளி வல்லப என்ற தெலுங்கு சோழனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்து வடக்கு எல்லையாகக் குறிப்பிடப்பட்ட வேங்கட மலை கல்வெட்டில் உகாதி தீபளிகை நாள்அதிரசப்படி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இப்படி சிறப்புமிக்க தமிழர் திருவிழாக்களை மூட நம்பிக்கை என்று சொன்னால், சங்ககாலம் தொட்டு இன்று வரை வாழ்ந்த, வாழுகின்ற தமிழர்களென்ன மூடர்களா?// (முத்தமிழ் வித்தவர் - பக்கம் 28, 29)

மேலே குறிப்பிட்டுள்ள அகநானூற்று பாடலை இன்னும் ஆராய்வோம்.

//உலகு தொழில்உலந்து நாஞ்சில் துஞ்சி
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில்! அம்ம,
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இறீஇ
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
பாசவல் இடிக்கும்.
வேங்கட வைப்பின் சுரன்இறந் தோரே!  - (அகநானூறு பாடல் 141)

 
பொருள்தேட வெளியூர் சென்ற கணவன் ஊர் மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடும் கார்த்திகை விளக்கு விழாவின்போது வந்துவிடுவான்

என மனைவி மகிழ்ந்து தோழியிடத்துக் கூறுவதாக 141ம் பாடலில் விளக்கேற்றி வழிபடுதற்கான காலச்சூழல் முதலில் நக்கீரரால் கூறப்படுகிறது.

 

உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது.

உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழைபொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது.

ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது.

இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடுவார்கள்.

இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக

வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்துகிறார்கள்.


அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை

தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன.

இத்தகு மரங்கள் அடர்ந்த இடையாறு என்னும் வளம்மிக்க நகரத்தைப் போன்று பெரிய செல்வ வளத்தைத் தேடி வருவதற்காகத் திருவேங்கட மலையைக் கடந்து சென்ற கணவன், கார்த்திகை விழாவின் போது

வந்துவிடுவான் என மனைவி எண்ணிக் கூறுவதாக நக்கீரர் இப்பாடலை அமைத்துள்ளார்.

அப்பாடலில் "மதிநிறைந்து அறுமீன் சோரும் அகல் இருள் நடுநாள்" என்றது, கார்த்திகை மாத முழுநிலா நாளைக் (பெளர்ணமி) குறிப்பதாகும். முருகனைக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்ததால் அவர்கள் வரம் வேண்டியபடி வானில் ஆறு விண்மீன்களாயினர் என்பது புராணச் செய்தி. முருகனோடு தொடர்புடைய கார்த்திகை நாள் ஒவ்வொரு மாதத்தில் வந்தாலும் அது கார்த்திகை மாத முழு நிலவோடு கூடி நிற்கும்போது சிறப்புக்குரியது என்பதால் மேற்படித் தொடர் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும்.

மேலும் இப்பாடலில் "புதுமணமகடூஉ" என்றது, புது மணமகனை மட்டும் குறித்தாலும் தலைதீபாவளியை மணமகள் வீட்டில்தான் கொண்டாடும் வழக்கம் இன்றும் உள்ளதால் புது மணமக்களைத் தலைதீபாவளிக்கு அழைத்துவரும் செய்தியைக் குறிப்பதாகக் கருதலாம். இதனால் புது மணமக்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டதாகவும் கருதலாம்.

இன்னும் இப்பாடலில் புதுமண மகடூஉ "அயினிய" என்றதால் மணமக்கள் உண்ண வேண்டி பால் உலையில் பசுமையான அவலையிட்டு இனிப்புப் பொருள் செய்ய முயற்சித்தக் குறிப்பு கூறப்பட்டுள்ளதால் பொதுவாகத் தீபாவளிக்கு இனிப்பு செய்யும் வழக்கம் அன்றுமுதல் இருந்ததாக அகநானூற்றால் அறிய முடிகிறது.


எனவே, பழந்தமிழ்க் கார்த்திகை விளக்கு வழக்கம் இக்காலத்தில் ஐப்பசி மாதத்தில் விளக்கை வரிசையாக ஏற்றி வைப்பதைத் தவிர்த்ததாக அமைந்துவிட்டதற்கு வேற்றுப்புல நாகரிகக் கலப்பே காரணமன்றி வேறு காரணம் இல்லை எனலாம்.

தமிழாகரர் தெ.முருகசாமி
நன்றி: தமிழ்மணி (தினமணி)//
http://www.heritagewiki.org/

தீபாவளி கொண்டாட்டம் சங்க காலத்தைச் சார்ந்தது என்ற கருத்தும் இருப்பதை நாம் கண்டோம். இந்த அகநானூறுப் பாடலுக்கு முன் சொல்லப்பட்ட சான்றுகள் 15ம் நூற்றாண்டுக்கு முந்தியது. ஆய்வு, அறிவு, நேர்மை என்று ஏதாவது சிறுதுளியாவது ஒட்டியிருந்தால் இப்படி போஸ்ட்ர் ஒட்டியிருக்கமாட்டார் சீமான்.

இது போலவே, தீபாவளியைப் பற்றி The Deccan Chronicle, The Asian Age ஆகியவற்றின் Op Ed பகுதியில் எழுதிய கஞ்சன் இலையாவிற்கு கொடுத்த பதிலடியை http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/item/352-2013-11-06-18-10-13 இந்தப் பதவில் காண்க.

கடலூருக்கு சைமனால் (சீமானால்) அழைத்து வரப்பட்ட யாசின் மாலிக் கொண்டாடும் திருவிழாக்களை கொண்டாடதே என்று சைமன்  (சீமான்) என்றாவது போஸ்டர் ஒட்டியிருப்பாரா? பக்ரீத்தும், ரம்ஜானும், முகரமும் பாரம்பரிய தமிழ் விழாக்களா?  சைமன்  (சீமான்) சார்ந்த மத விழாக்களான கிறிஸ்துமசும், ஆங்கில புத்தாண்டும், புனித வெள்ளியும் தமிழுக்கு எதிரானது அதற்கு அரசு விடுமுறை அளிக்க கூடாது என்று சைமன்  (சீமான்) என்றாவது முழங்கி இருக்கிறாரா? மதமாற்ற, நாடு பிடிக்க, இனத்தை அழிக்க காத்திருக்கும் அந்நிய சக்திகளின் ஏஜெண்டாகத்தானே  சைமன்  (சீமான்) செயல்படுகிறார்?

வாங்கின காசுக்கு நல்லாத்தான் கூவுறானுங்கய்யா!

Read 3309 times
Rate this item
(1 Vote)
Last modified on Sunday, 19 October 2014 04:56

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment