×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

காஷ்மீரின் கண்ணீர் கதை தொடருமா?

Saturday, 03 January 2015 00:00 Written by  ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி font size decrease font size decrease font size increase font size increase font size

பல ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கின்றது. முன்பு நடந்த தேர்தல்களை தீவிரவாதிகள் புறக்கணித்துமட்டுமல்லாமல், மற்றவர்கள் வாக்குச்சாவடிக்குப் போவதையும் தடுத்தனர். ஆனால் இந்தத் தடவை மக்கள் துணிந்து வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கின்றனர்.

இந்த தேர்தலும், மக்களின் வாக்கும் காஷ்மீரின் வருங்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது. இந்தியாவிற்குச் சாதகமாக அமையுமா அல்லது எதிராக அமையுமா என்பது புரியாத நிலைநிலவுகிறது.

கடந்த60 ஆண்டுகளாக மத்திய அரசு காஷ்மீர் மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களையும் மற்ற அத்தியாவசியப் பொருட்களையும் மிக மலிவான விலையில் கொடுத்தும், நிதி பற்றாக்குறையை ஈடு செய்ய 2 லக்ஷம் கோடி ரூபாய் நிதியுதவி (Financial Grant) கொடுத்தும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் செய்து வந்துள்ளது.  காஷ்மீரிகளின் உயிரைப் பாதுகாக்க தங்கள் உயிரைப் பலி கொடுக்க ஆயிரக்கணக்கில் ஜவான்களை அனுப்பிப் பாதுகாப்பு அளித்து வந்துள்ளது இந்தியா.

இந்தத் தேர்தல் மூலம் காஷ்மீரின் கண்ணீர் கதைக்கு முடிவு  வருமா

 கஷமரன கணணர கத தடரம-13

பூர்வ சரித்திரம்:

காஷ்மீரின் பூர்வ சரித்திரத்தை எழுதியவர் கல்ஹனா என்கிற கவிஞர், அறிவாளி. தான் எழுதிய ராஜதரங்கிணிநூலில் காஷ்மீரில் புராண காலத்திலிருந்து தனது காலம் வரை (1150A.D) ஆண்ட வம்சாவளிகளின் சரித்திரத்தை புராண ஆதாரங்கள் கொண்டும், இடிக்கப்பட்ட கோயில்கள், மறைந்து கிடந்த சுவடிகள் மூலமும் அறிந்து எழுதினார்.

காஷ்மீரின் பூர்வ குடிகள், நாகர்கள் என்றும், 52 அரசர்கள் தனது காலம் வரை காஷ்மீரை ஆண்டுள்ளனர் என்றும் ராஜதரங்கிணியில் எழுதியுள்ளார். காஷ்மீரைப் பற்றி நிலமத புராணம்விரிவாகக் கூறியுள்ளது.

கல்ஹனா மறைவிற்குப்பிறகு காஷ்மீரின் சரித்திரத்தை (1150க்குப் பிறகு) ஜோன ராஜா தன் ராஜதரங்கிணியில் எழுதியுள்ளார்.

கஷமரன கணணர கத தடரம-1

உலகின் அதி அற்புதமான, அழகான பிரதேசம் காஷ்மீரம். காவியங்களிலும், இலக்கியத்திலும், புராணங்களிலும் பேசப்பட்ட காஷ்மீரம் .மகாபண்டிதர்களும், சக்ரவர்த்திகளும், வீரர்களும், மகான்களும் வாழ்ந்த  காஷ்மீரம். காஷ்மீரம் தத்துவ சித்தாந்தர் மண்டன மிஸ்ரருடன் வாதம் நடத்திய சங்கரர் விஜயம் செய்த பிரதேசம்.

பனிமலைகளும், பரிசுத்த தடாகங்களும், பூக்கள் நிரம்பிய வனங்களும் நிறைந்த பிரதேசம். பார்வதி தேவியின் வாசஸ்தலம். பாரதத்தின் சிகரம்.

2000 ஆண்டுகளாக, இன்று வரை இந்தப் புனித பூமி அல்லலுற்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கதை கண்ணீரை வரவழைக்கும்.

மகாபாரத காலத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முடிவின்படி மகத தேச ஜராசந்தனுடைய உறவினன் கோ நந்தனா  இளவரசனாக முடிசூட்டப்பட்டார். ஆதலால் மக்கள், காஷ்மீர் பாண்டவர்கள் ஆட்சியின்  தொடர்ச்சியாக கருதி வந்தனர்.

கி.மு.273ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சாம்ராட் அசோகர் காஷ்மீரைப் பிடித்து தன் ஆட்சியை ஏற்படுத்தினார்.ஸ்ரீநகரி நகரத்தை நிர்மாணித்து 96 லக்ஷம் வீடுகள் கட்டினார். விஜயேஸ்வர் சிவன் கோவிலை திருப்பி கட்டினார். புதிதாக அசோகேஸ்வரா கோயிலைக் கட்டினார். மௌரிய சாம்ராஜ்யம் வீழ்ந்த போது குஷானிய அரசன் கனிஷ்கர் வசம் காஷ்மீர் வந்தது. அவர் பௌத்தத்தைப் பரப்பலானார்.

பிறகு ஹூனர்களின் வெறிபிடித்த தளபதி மிகிரகுலா காஷ்மீரை பிடித்தான். அவனது ஆட்சி சிறிது காலம் தான்.  மறுபடியும் கோநந்தனா ஆட்சி காஷ்மீருக்கு வந்தது.

லலிதாதித்யா  ஆட்சி:

சீனயாத்திரிகர் ஹுவான் சுவாங் காஷ்மீருக்கு வந்து இரண்டு ஆண்டு தங்கியிருந்தார். அச்சமயம் கார்கோடாகா வம்சத்து அரசர் ஆட்சி இருந்தது. இந்த வம்சத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசன் லலிதாதித்யா.

37 வருடங்கள் (724-761A.D) ஆண்ட மிகச் சிறந்த அரசர். நிர்வாகத்தைச் சீர்ப்படுத்தினார். வட இந்தியா மீது படையெடுத்து பல ராஜ்யங்களை பிடித்துக் கொண்டார். இந்தியா முழுவதையும் ஆள ஆசை கொண்டார்.

அவருடைய பெருமை மிகுந்த பணி சூர்யபகவானுக்கு மார்த்தாண்ட திருக்கோயிலைக் கட்டியது தான்.

மிகவும் அறிஞனான லலிதாதித்யா தன்னுடைய நாட்டிற்கு பவபூதிவாக்படி ராஜா என்கிற இரண்டு பெரும் புலவர்களை, அறிஞர்களைகன்னோஜிலிருந்து அழைத்து வந்து சிறப்பித்தான்.

கஷமரன கணணர கத தடரம-2

ஒன்பதாம் நூற்றாண்டில் திறமையற்ற ஆட்சியால் இந்த வம்சம் அழிந்தது.

அதற்குப் பிறகு உப்தல வம்சத்தைச் சேர்ந்த அவந்தி வர்மன் ஆட்சிக்கு வந்தான் (855-883) .  அவந்தி வர்மன் அவந்தீஸ்வபுரி நகரத்தையும், அவந்தீஸ்வரன் கோயில்களையும் நிர்மாணித்தான்.

ஆட்சி வளமாக இருந்தது. ஜீலம் நதியில் அணை கட்டப்பட்டு பாசன வசதியைப் பெருக்கினான். ஏரிக்கரையில் சுரேஸ்வரர் கோயிலைக் கட்டினான்.

அதற்குப்பிறகு அரசனாக வந்த சம்கார வர்மன் ஆட்சி சீரடைந்த நிலையில் பார்வகுப்தா என்னும் முதன் மந்திரி ஆட்சியைப் பிடித்துக் கொண்டார். குப்தா வம்சம் ஆட்சி துவங்கியது.

ராணி தீதா ஆட்சி:

குப்தா வம்ச அரசன் க்ஷேம குப்தாவை திருமணம் செய்து கொண்ட தீதா மிகவும் அழகும், சாதுர்யமும், சாமர்த்தியமும், புத்திகூர்மையும், வீரமும் கொண்டவள். க்ஷேம குப்தா இறந்த பிறகு (958 A.D) ஐம்பது ஆண்டு இந்த அழகு ராணியின் தன்னிச்சையான ஆட்சியில் காஷ்மீர் இருந்தது.

தன் ஆயுள் காலத்திலேயே தன் லோகரா குடும்பத்தைச் சேர்ந்த சம்கிரகராஜா என்பவரை தீதா அரசனாக்கினாள். 1003ல் இறந்த திதா 50 ஆண்டுகளில் காஷ்மீர் நிர்வாகத்தையும், தேசத்தையும் கட்டிக்காத்த பெருமை அடைந்தார். இந்த லோகார வம்சம் 100 ஆண்டுகாலம் ஆட்சி செய்தது.

இந்த வம்சத்தில் வந்த அரசன் ஜெயசிம்மன் 28 ஆண்டுகள் ஆண்டான். (1128-1155). இவரின் ஆட்சியில் காஷ்மீர் மிக்க சிறப்பு எய்தியது. பல புதிய கோயில்களை நிர்மாணித்தான். மக்களின் ஒழுக்கத்தை உயர்த்தினான். மடங்களை நிறுவி மான்யங்கள் கொடுத்தான். அறிஞர்கள் போற்றப்பட்டார்கள்.

அதற்குப் பிறகு காஷ்மீர் மறுபடியும் பலமான அரசர்கள் இல்லாததால் 150 ஆண்டுகள்  வீழ்ச்சியையும் குழப்பத்தையும் சந்தித்தது.

இச்சமயம் ஹர்ஷ சக்ரவர்த்தி காஷ்மீரைப் பிடித்து தன் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்தார்.

இந்தக் குழப்பமான நிலையில், மங்கோலிய ராணுவ தளபதி துலாச்சா (1320A.D)  படையெடுத்து செய்த நாசத்தையும், லடாக் பௌத்த வீரர் ரிஞ்சனாவின் சூறையாடலையும் சந்தித்தனர் மக்கள்.

ரிஞ்சனா பௌத்த அரசனாக தன்னை அறிவித்து ஆண்டான். ரிஞ்சனா தன்னால் கொலை செய்யப்பட்ட முதன் மந்திரியாயிருந்த ராமச்சந்திராவின் பெண் கோடா ராணியைத் திருமணம் செய்து கொண்டான்.

தனது நிர்வாகத்தில் ஷா மிர் என்கிற முஸ்லீமை நியமித்துக் கொண்டான்.

தான் பௌத்த மதத்தை விட்டு, ஹிந்து மதத்திற்கு வர ரிஞ்சனா விரும்பினான். ஆனால் பண்டிதர்கள் அதற்கு அனுமதி கொடுக்காததால் ரிஞ்சனா முஸ்லீமாக மதம் மாறினான்.

முதன் முதல் முஸ்லீம் அரசன் கீழ் காஷ்மீர் வந்தது.

ரிஞ்சனா 1323ல் இறந்தவுடன் அரச சபையினர் முன்னாள அரசர் சுகதேவரின் சகோதரர் உத்யான தேவாவை அரசனாக்கினார்கள்.

உத்யான தேவா இறந்த ரிஞ்சனாவின் மனைவி கோட்டா ராணியை மனைவியாக்கிக் கொண்டு அரசுப் பொறுப்பை ஏற்றான்.

சோம்பேறி உத்யான தேவாவை செயலற்றுப் போகச் செய்துவிட்டு கோட்டா ராணி நிர்வாகத்தைத் தானே நடத்தினார். உத்யான தேவா இறந்த பிறகு ஷா மிர், கோட்டா ராணியை தன் வயப்படுத்தி  திருமணம் செய்ய  முயன்றபோது கோட்டா ராணி, தன்னை கத்தியால் குத்திக் கொண்டு இறந்தாள். காஷ்மீர் முஸ்லீம் சூழ்ச்சிக்காரன்  ஷா மிர் கைக்கு மீண்டும் சென்றது. மூன்று ஆண்டு காலம் அவன் ஆட்சி இருந்தது.

அதன் பிறகு ஷா மீரின் பேரன் ஷிகாபுதின் 20 ஆண்டு ஆட்சி செய்தான். (1354-73) அவன் காஷ்மீர் முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். அவன் காலத்தில் பிரளயம் வந்து ஸ்ரீ நகர் நாசமடைந்தது. மலை மேல் புதிய நகரம் நிர்மாணம் செய்து அதற்கு லக்ஷ்மி நகரம் என்று தன் மனைவி லக்ஷ்மியின் பெயரை வைத்தான்.

அவனுக்குப் பிறகு அவன் சகோதரன் ஹின்டால் ஆட்சி வந்தது. அவன் காலத்தில் சையது அலி ஹம்தானி எனும் இஸ்லாமிய மௌல்வி காஷ்மீரத்திற்கு வந்து இஸ்லாமை பரப்ப தீவிர முயற்சி எடுத்தார்.

சிக்கந்தரின் கொடுமைகள்:-

1389 முதல் 1413 வரை ஆண்ட சுல்தான் சிக்கந்தர் ஹிந்துக்களுக்கு இழைத்த கொடுமை வர்ணிக்க இயலாது. ஒரு கோயிலைக் கூட விடாது இடித்துத் தள்ளினான். ஹிந்துக்கள் மீது ஜிஸியா வரி விதித்தான். ஆயிரக்கணக்கான சுவடிகளை ஏரியில் போட்டு முழுக்கினான். பிராம்மணர்கள் பூணூலை அறுத்து தீவைத்துக் கொளுத்தினான். வெளிநாட்டிலிருந்து இஸ்லாமிய மதபோதகர்களை வரவழைத்து இஸ்லாமைப் பரப்பச் செய்தான். புதிய மசூதிகளை எங்கும் கட்டினான். ஸ்ரீ நகரில் ஜும்மா மசூதியை கட்டினான்.

அவனுடைய மகன் சுல்தான் அலிஷா தந்தையின் கொடுமைகளைத் தொடர்ந்தான். இதன் மூலம் இந்தக் காலக்கட்டத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு முஸ்லீம் பிரதேசமாக மாறியது.

இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த சுல்தான் செயின்உல் அப்தீன் (1420-70) ஹிந்துக்களை கொடுமைப்படுத்தாது அவர்களுக்கு ஆதரவு கொடுத்தான். பசுவதையைத் தடுத்தான. கோயில்களை திருப்பி கட்டிக் கொடுத்தான். ஜிஸியா வரியை விலக்கினான். ஹிந்து சாஸ்திரங்களையும் மகாபாரதத்தையும் பாரசீக மொழியில் எழுதச் செய்தான். நல்ல அறிஞனாகவும், நிர்வாகத் திறமை உள்ளவனாகவும் விளங்கினான். கலைகளை வளர்த்தான். விவசாயம் பெருகியது. புதிய நகரங்களை உருவாக்கினான். லடாக்கையும், பல்டிசானையும் பிடித்தான்.

அப்தீனின் மறைவிற்குப் பிறகு அவனுடைய சந்ததியார்கள் கேளிக்கைகளில் ஈடுபட்டு நிர்வாகம் சீர்குலைந்தது. 120 ஆண்டுகள் காஷ்மீர் குழப்பத்திலும், தொற்று நோயிலும் அவதிப்பட்டது.

டெல்லியின் ஆட்சி:

 அச்சமயம் (1541) டெல்லியை ஆண்ட ஹுமாயூன் படைகள் காஷ்மீரைப் பிடித்தன. பிறகு 1589ல் அக்பர் காஷ்மீரில் தன் ஆட்சியை ஏற்படுத்தினான். சிறிது அமைதி வந்தது.

ஆனால் டெல்லியை ஆண்ட ஔரங்கசீப் ஆட்சியில் (1658/1707) மறுபடியும் ஹிந்துக்களுக்குப் பலவித கொடுமைகள் ஏற்பட்டது. ஹிந்துக்கள் பஞ்சாப் சீக்கியர்களின் உதவியை நாடினர். சீக்கிய குரு தேஜ் பகதூர் ஹிந்துக்களுக்காக ஔரங்கசீப்பை எதிர்க்க முயற்சி செய்தார். சீக்கியர்களையும் ஹிந்துக்களையும் ஒன்றுபடுத்தினார். ஆனால் அவர் ஔரங்கசீப்பால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.ஔரங்கசீப்பிற்கு பிறகு டெல்லியில் முகலாய ஆட்சி விழ்ச்சியடைந்தது.

காஷ்மீரில் மறுபடியும் குழப்பம்.

இந்தச் சமயத்தில் வெறிபிடித்த ஆப்கானிய அரசன் அகமத் ஷா அப்தாலி காஷ்மீரைத் தாக்கிப் பிடித்துக் கொண்டான். ஆப்கானியர் ஆண்ட 67 ஆண்டுகளில் ஹிந்துக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் வர்ணிக்க இயலாது. ஆப்கானிய கவர்னர்களின் அட்டகாசம் ஹிந்துக்களை உணர்வு இழக்கச் செய்தது.

கஷமரன கணணர கத தடரம-4

முஸ்லீம் கவர்னர்கள், தளபதிகள் ஆகியோரிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஹிந்து பெண்கள் தங்கள் முகங்களிலும், உடம்பிலும ஆசிட் ஊற்றி விகாரப் படுத்திக் கொண்டார்கள். நூற்றுக் கணக்கான பண்டிதர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொடுமை ஆப்கானிய கவர்னர்கள் ஜாப்பர்கான், முகமது கான் ஆட்சியில் உச்சத்தை அடைந்தது.காஷ்மீர் வறுமையில் தள்ளப்பட்டது. பஞ்சம் கூத்தாடியது. ஆப்கானியர்கள் காஷ்மீரிகளின் நிதி முழுவதையும் அள்ளிச் சென்றுவிட்டனர்.

சீக்கியரிடம் காஷ்மீர்:-

இச்சமயம் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் பஞ்சாப் சிங்கம், சீக்கிய அரசன் ரஞ்சித் சிங்  மூன்றாவது தடவை 1819ல் படையெடுத்து ஜாபாகர்கானை தோற்கடித்து காஷ்மீரைப்  பிடித்து 67 ஆண்டு ஆப்கானிய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். ரஞ்சித்சிங் ஆட்சி 27 ஆண்டு இருந்தது. (1819-1846).

கஷமரன கணணர கத தடரம-5

 

லடாக்கை காஷ்மீருடன் சேர்த்தார். ரஞ்சித் சிங் மறைவிற்கு பிறகு சீக்கியர்களுடன் நடந்த  போரில் ஆங்கிலேயர் வெற்றிபெற்று காஷ்மீரை 1846ல் டோக்ரா தளபதி குலா சிங்கிடம்   ஒப்படைத்தனர்.

இந்த டோக்ரா வம்சத்தினர் ஆட்சி நூறு ஆண்டுகள் நீடித்தது. கடைசி ஹிந்து அரசர் ராஜா ஹரிசிங் (1925-1952) ஆவார். டெல்லி ஆங்கில ஆட்சியின் தாக்கமும் இருந்து வந்தது. ஏனென்றால் சுதேச மன்னர்கள் ஆங்கில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.

ஷேக் அப்துல்லாவின் சூழ்ச்சி:-

இந்தக் காலக்கட்டத்தில் முஸ்லீம்கள் தங்கள் தனித்தன்மையை நாடு முழுவதும் காட்ட ஆரம்பித்தனர். அலிகார் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டு அதில் படித்த முஸ்லீம்கள் ஒன்றுபட்டு, தங்க்ள் சமூக தனித்தன்மைக்கு ஊக்கமளித்தனர்.  அலிகாரில் கல்வி கற்ற காஷ்மீர் இளைஞன் ஷேக் அப்துல்லா காஷ்மீருக்குத் திரும்பி வந்து, 1932ல் ஜம்மு - காஷ்மீர் முஸ்லீம் மாநாட்டை துவக்கினார்.

கஷமரன கணணர கத தடரம-6

இவர்கள் குறிக்கோள் முஸ்லீம்களுக்கு பதவி, பொருளாதார அபிவிருத்தி,. மனித உரிமை என்பதாகக் கூறப்பட்டது. இந்திய முஸ்லீம் லீகின் மறு அவதாரமாக மெதுவாக மாறி, அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தை கைப்பற்ற ஷேக் அப்துல்லா  திட்டமிட்டான்.

1938-39ல் இந்த ஸ்தாபனம் ஜம்மு காஷ்மீர் நேஷனல் கான்பரன்ஸ் என்ற பெயர் வைத்துக் கொண்டு செயல்படத் துவங்கியது.

ஜின்னாவின் ஆதரவு:-

இச்சமயம் ஜின்னாவை வரவழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஜின்னா தனித்தன்மைக்கு தூபம் போட்டுவிட்டு போய் விட்டார். ஜனநாயகம் பேசப்பட்டது. மன்னர் ஆட்சி வேண்டாம், மக்கள் ஆட்சி தான்  வேண்டும் என்று பேசப்பட்டது. ஹிந்து அரசரை நீக்கிவிட்டு முஸ்லீம்கள் கைக்கு ஆட்சியைக் கொண்டுவருவதே நோக்கமும் திட்டமும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தையொட்டி காஷ்மீர் சுதந்திரம்”,  மன்னர் ஆட்சியிலிருந்து சுதந்திரம்ஆகியவைபேசப்பட்டது. ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது.

கஷமரன கணணர கத தடரம-7

1946ல் நடந்த தேசிய மாநாட்டுக் கட்சி (National Conference) கூட்டத்தில் காஷ்மீரை விட்டு வெளியேறு (Quit Kashmir”) என்று ராஜா ஹரிசிங்கிற்கு ஷேக் அப்துல்லா எச்சரித்தார். மன்னர் வேண்டாம். மக்கள் கருத்து வேண்டும். பொது வாக்கெடுப்புதான் (Plebicite) வேண்டும் என்று கொக்கரித்தார் ஷேக் அப்துல்லா. இந்தப் பேச்சுக்காக அப்துல்லா கைது செய்யப்பட்டார்.

ஆனால் நேரு உடனே காஷ்மீருக்கு ஓடிப்போய் ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்ய ஏற்பாடு செய்ய முயற்சித்தார். நேரு வருவது தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் நேரு ராஜா ஹரிசிங்கிற்கு எதிராகச் செயல்படத் துவங்கினார். ஷேக் அப்துல்லாவிற்கு ஆதரவு காட்டத் தொடங்கினார். ராஜாவிடம் மன்னிப்பு கேட்டபிறகு ஷேக் அப்துல்லா விடுவிக்கப்பட்டான்.

கதையின் இரண்டாம் பாகம்

1947ல் நாடு பிரிக்கப்பட்டு, ஆங்கிலேயர் வெளியேறிய போது சுதேசி சமஸ்தானங்கள் பாகிஸ்தா னுடனோ அல்லது இந்தியாவுடனோ சேரலாம் என்று ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டது.

சர்தார் படேல்  560 சமஸ்தானங்களை சுமுகமாகப் பேசி இந்தியாவுடன் இணைத்தார். காஷ்மீர் அரசர் ராஜா ஹரிசிங் குழப்பத்தில் இருந்த சமயம் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில்  நுழைந்தது.

காஷ்மீரின் முஸ்லீம் ராணுவ வீரர்கள் கூட பாகிஸ்தானியர்களுடன் சேர்ந்து கொண்டனர். போலீஸ் படை ஒதுங்கி கொண்டது. இந்த நிலையில் மன்னர் இந்தியாவுடன் உடனே சேர Instrument of Accession  ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டார். இந்திய ராணுவம் அனுப்பப்பட்டு பாகிஸ்தான் ராணுவம் விரட்டப்பட்டது. தற்போது சேருவதை ஒப்புக் கொண்டாலும், பிறகு மக்கள் ஆதரவு கேட்கப்படும் என்கிற ஷரத்தை இந்தியா இதில் சேர்த்தது.

கஷமரன கணணர கத தடரம-8

ஏன் சேர்த்தது? மக்கள் முடிவு தான் என்பது எங்கிருந்து வருகிறது? போன்ற கேள்விகள் எழுந்தன.

கவர்னர் ஜெனரல் மவுண்ட்பாட்டன் காஷ்மீர்  இணைவதைத் தற்போது ஏற்றுக் கொண்டாலும் மக்களின் முடிவு ஏதுவோ அதன்படி டெல்லி நடக்கும் என்று மன்னருக்கு எழுதுகிறார். 560சமஸ்தானங்களுக்கு இல்லாத நிபந்தனை காஷ்மீருக்கு  மட்டும் எதற்கு? யாருடைய வற்புறுத்தல்?

நாட்டு பிரிவினைச் சமயத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது லாகூர் சென்று ஜின்னாவிடம் பேச்சு நடத்திய போது, காஷ்மீர் மக்களின் முடிவை (plebiscite) தான் இந்தியா ஏற்கும் என்று உறுதி கொடுத்துள்ளார். அதன் தொடர்ச்சி தான் இந்த மக்கள் முடிவுநிபந்தனை.

எவ்வாறெல்லாம் ஹிந்துக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்!

பாகிஸ்தான் படைகளை பாராமூலா, ஜில்ஜிட், ஊரி பிரதேசங்களிலிருந்து விரட்டியடிக்க இந்தியா அனுப்பிய ராணுவ வீரர்கள், தளபதிகள் பிரிகேடியர் ராஜேந்திர சிங், மேஜர் சோம் நாத் சர்மா, கர்னல் ரஞ்சித்ராய் பலியானார்கள். காஷ்மீரைக் காப்பாற்றிய இந்தத் தளபதிகளின் தியாகம் என்ன ஆனது?

அதையும் மீறி இந்திய துருப்புகள் காஷ்மீரை மீட்ட பிறகு, இந்த பிரச்னையை 1948ல் ஐக்கிய நாட்டு சபைக்கு இந்தியா ஏன் எடுத்து சென்றது? மறுபடியும், நேருவின் உயிர் தோழன் மவுண்ட்பாட்டன் யோசனைதான். இன்றுவரை தீர்வு வந்துள்ளதா? இல்லை.

இதன் பிறகு நேருவின் வற்புறுத்தலால் அப்துல்லாவை பிரதம மந்திரியாக்கினார் மன்னர்.  அப்துல்லாவின் கொடுமை தாங்காமல் மன்னர் ஹரிசிங்  பதவியை துறந்தார். (1949 ஜூன்). அதன் பிறகு இளவரசன் கரன் சிங்கை ஆட்டிப் படைத்தான் அப்துல்லா. டெல்லி இதைக் கண்டு கொள்ளவில்லை.

ஷரத்து 370

இந்த நிலையில் இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு ஷேக் அப்துல்லாவுடன் சமரசம் பேசிக் கொண்டு, “காஷ்மீருக்குத் தனி அந்தஸ்துஅரசியல் சட்டத்தில் க்ஷரத்து 370 மூலம் திணிக்கப்பட்டது.

இதன் ஆரம்பம் எங்கு துவங்கியது. மன்னரின் Instrument of Accession உடன்படிக்கையில் நேருவால் சேர்க்கப்பட்ட ஷரத்து. அது என்ன? காஷ்மீருக்கு என்று பிறகு தனி அந்தஸ்து ஏற்படுத்தப்படும்என்பதுதான் அது.

1920லிருந்து சுதந்திரப் போராட்டத்தை நடத்திய ஹிந்து அரசியல்வாதிகள் எந்தத் தொலை நோக்கும் இல்லாமல் ஹிந்து சமுதாயத்தையும், நாட்டையும் சீரழித்துவிட்டனர்.

ஷேக் அப்வதுல்லாவின் திட்டம் தெரியாமல் அவனை நம்பினார்கள். ஷேக் அப்துல்லா காஷ்மீரைத் தனி முஸ்லீம் நாடாக மாற்றி, ராஜா ஹரி சிங்கை நீக்கி தான் சர்வாதிகாரியாகச் செயல்படத் திட்டமிட்டான்.

அந்தத் திட்டத்தின்படி காய்களை நகர்த்தினான். நாடு பிளக்கப்பட்டு 2 கோடி ஹிந்துக்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்தனர். 10 லக்ஷம் ஹிந்துக்கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டனர். 2 லக்ஷம் பெண்கள் கடத்தப்பட்டனர்.

சர்தார் படேல் இந்த ஹிந்து அகதிகளை காஷ்மீரில் குடியேற்ற விரும்பினர். ஆனால் நேருவும் ஷேக் அப்துல்லாவும் அதை எதிர்த்தனர்.

காஷ்மீரை ஹிந்துப் பெரும்பான்மையாக மாற்றக்கூடிய சந்தர்ப்பம் நேருவால் முறியடிக்கப்பட்டது.

தனி அந்தஸ்து கொடுத்த Ariticle 370  கூறுவது எந்தச் சட்டம் டெல்லி இயற்றினாலும் அது காஷ்மீர் Constituent Assembly யின் அங்கீகாரம் பெற வேண்டும்.

இந்தத் தனி அந்தஸ்து பிரகாரம் இந்தியர்கள் காஷ்மீரில் குடியேற முடியாது. சொத்துக்கள் வாங்க முடியாது. குடியுரிமை கிடையாது. தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. மேலும் காஷ்மீர் பெண் இந்தியாவல் உள்ளவரை திருமணம் செய்து கொண்டால் அவள் சொத்து உரிமையை இழப்பாள்.

கஷமரன கணணர கத தடரம-9

காஷ்மீருக்குத் தனிக் கொடி,  சின்னம்; இந்திய ஜனாதிபதி காஷ்மீர் அரசை விலக்க முடியாது. ஏனென்றால் காஷ்மீருக்கு தனி அரசியல் சாஸனம் உள்ளது.இதற்குப்பிறகு 1953ல் ஷேக் அப்துல்லாவுடன் சமரசம் பேசி டெல்லி ஒப்பந்தம் உருவாகியது.இவ்வளவு சலுகைகள் கொடுத்தும் காஷ்மீர் முழுமனதுடன் இந்தியாவுடன் இணையவில்லை. முஸ்லீம் மனோபாவம், தனித்தன்மை கைவிடப்படவில்லை.

இந்தத் தனி அந்தஸ்து ஷரத்தை Ariticle 370 370 ஒழிக்க முடியாதா? முடியாது என்கின்றனர் சிலர். முடியும் என்பதை பலர் கூறியுள்ளனர்.

இரட்டை வேடம்

நேருவுடன் டெல்லி ஒப்பந்தம் செய்து கொண்டு, “எந்தக் காலத்திலும் இந்தியாவை விட்டு பிரிய மாட்டோம்என்று பல தடவை கூறியிருந்தாலும், ஷேக் அப்துல்லா காஷ்மீரைத் தனி நாடாக மாற்ற பல ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

ஜூலை 4, 1950ல் நேரு ஷேக் அப்துல்லாவிற்கு,  காஷ்மீர் விஷயத்தில் உன்னை நம்பி இருந்தேன். ஆனால் எனது எண்ணமும், நம்பிக்கையும் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் நான் என்ன செய்வது என்று புரியவில்லைஎன்று எழுதுகிறார்.

மேலும், நேரு மனம் புழுங்கி காஷ்மீர் உதவி பிரதம மந்திரி பக்ஷி குலாம் முகம்மதுக்கு 27-4-1953 அன்று,  “எந்த விஷயத்தையும் என்னால் சமாளிக்க முடியும், ஆனால் இந்தக் காஷ்மீர் விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏன் என்றால், என்ன செய்வது என்பது தெரியாததால்என்று கடிதம் எழுதினார். இவர் எல்லாம் நாட்டின் பிரதம மந்திரி!

1953ல் கூட பாகிஸ்தானுடன் அப்துல்லா குலாவ ஆரம்பித்தது நேருவிற்கு அதிர்ச்சியை ஊட்டியது. Plebicite Frontவைத்துக் கொண்டார். ஐக்கிய நாட்டு சபையிடம் நேரடியாக தொடர்பு கொண்டார்.

பாகிஸ்தான் உதவியுடன் காஷ்மீரைத் தனி நாடாக்கிக் கொள்ள முயன்றார். பிரிட்டனும், அமெரிக்காவும் இன்று வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிக்கின்றன; ரஷ்யா மாத்திரம் காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்று தீர்மானமாக நமக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீரை பிடித்துக் கொள்ள முயன்று வருகிறது.

1965, 1971லும் பாகிஸ்தான் துவங்கிய போரில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. தான் பிடித்த இடங்களை இந்தியா திருப்பிக் கொடுத்தது. எப்பேர்ப்பட்ட முட்டாள் தனம்!

ஷேக் அப்துல்லா எப்படியாவது காஷ்மீரில் ஆதிக்கம் செலுத்தவேண்டும்என்பதற்காகத் தனது  Plebicite Frontஐக் கலைத்து விட்டு National Conference என்கிற இயக்கத்தை பலப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று 1977ல் மறுபடியும் முதன் மந்திரியானார். தன் மகன் டாக்டர் பருக்  அப்துல்லாவை    அரசியலுக்கு கொண்டு வந்து தனக்கு அடுத்த முதல்வராக வர வழி செய்தார்.

ஷேக் அப்துல்லா 1982ல் காலமாவதற்கு முன் எத்தனை பிரிவினை வாத சக்திகளை உருவாக்க முடியுமோ அவ்வளவையும் உருவாக்கினார்.

Jummu & Kashmir Liberation Frontஎன்பதை (பிரிட்டனில்) பர்மிங்ஹாம்ல் படித்துக் கொண்டிருந்த பருக் அப்துல்லா உருவாக்கினார். வன்முறையில் ஈடுபடும் அமைப்புகள் பல உருவாயின.அவற்றின் நோக்கம் காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து விடுவது தான். சுமார் 41 பிரிவினை வாத  இயக்கங்கள் உள்ளதாக அறியப்படுகிறது.

பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி, சவுதி அரேபியா நிதி உதவி, மேலை நாடுகளில் ஆதரவு, முஸ்லீம் நாடுகளின் ஆயுதம் உதவி, இந்தியாவில் உருவான மனித உரிமை கூட்டங்களின் ஆதரவுக் குரல், ஹிந்து உணர்வு அற்ற அரசியல் சூதாட்டக்காரர்களின் சட்ட ரீதியான ஒத்துழைப்புஆகிய அனைத்தும் கிடைக்கின்றன.1980லிருந்து காஷ்மீரம் கொந்தளிக்கத் துவங்கியது.

மூன்றாவது பாகம்

வன்முறை தாண்டவம் ஆத்துவங்கியது. 1988 முதல் 99 வரை, 2100 ராணுவத்தினர் மற்றும் 9900 பொதுமக்கள் உட்பட, 12,000 பேர்களை பயங்கரவாதிகள் கொலை செய்கின்றனர்.

கஷமரன கணணர கத தடரம-11

அக்டோபர் 23,1989:பாகிஸ்தான் அதிபர் ஜியா திட்டப்படி 25000 பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைய தயாராய் இருந்தனர்.

20.3.1990 :ஒரு ஆறு மாத காலத்திற்குள் ஒரு லக்ஷத்திற்கு மேல் பண்டிதர்கள் காஷ்மீரைவிட்டு வெளியே ஓடி  வந்துவிட்டனர். சென்னைக்கு கூடஅந்தப் பண்டித அகதிகள் வந்தனர்.

23.3.1990:பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் பூட்டோ காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு எப்போதும் இருக்கிறது என்றார்.

10.4.1990:ஹெச்.எம்.டி கம்பெனி ஜெனரல் மானேஜர் கேரா கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

21.3.1997: சங்கராபுர கிராமத்தில் எழு பண்டிதர்கள் கொல்லப்பட்டனர். பண்டிதர்கள் வெளியேறத் துவங்கினார்கள்.

26.1.1999: வந்தனா கிராமத்தில் இருபத்து மூன்று பண்டிதர்கள் (10 பெண்கள் 4 குழந்தைகள் உள்பட) கொல்லப்பட்டனர்.

ஜுலை 1999: ஜம்முவில் 19 ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.

3.3.2000:அனந்த நாக் அருகே ஒரு பாலத்தில் அரசு ஊழியர்கள் 35  சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

3.8.2000: 12 மணி நேரத்திற்குள் பகல்காமில் நூற்றுக்கு மேற்பட்ட அமர்நாத் யாத்திரிகள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

ஜுலை 2000:டோடா கிராமத்தில் ஹிந்துக்கள் படுகொலை

அக்டோபர் 2001:தீவிர வாதிகள் காஷ்மீர் சட்ட சபையை தாக்கி சாம்பலாக்கினார்கள். 31பேர் கொல்லப்பட்டனர். சபாநாயகர் காப்பாற்றப்பட்டார்.

25.11.2002:ஜம்முவில் பிரபல ரகுநாத் கோயில் தாக்கப்பட்டு 12 பேர் கொல்லப்பட்டனர்.

24.3.2003:புல்வாமா பகுதி நதிமார்க் கிராமத்தில் தூங்கிக் கொண்டருந்த 24  பண்டிதர்களை (11 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட) தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். போலீஸ் முகாமையும் சூறையாடினார்கள்.

29.6.2003:தீவிரவாதிகள் ராணுவ முகாமைத் தாக்கி 7 மணி நேரம் போராடி 12 ஜவான்களை சுட்டுக் கொன்றனர்.

7.7.2003: ஸ்ரீநகர் அருகே ராணுவ முகாமை தாக்கி ஒரு பிரிகேடியர், 9 ஜவான்களை கொன்றனர்.

23.5.2004:பி.எஸ்.எப். வாகனங்களை தாக்கி  36 ஜவான்களை கொன்றனர்.

ஏப்ரல் 2004:பி.டீ.பி. கட்சித் தலைவர் மெகபூபா ஊர்வலத்தை தாக்கி ஒன்பது பேரை கொன்றனர். 80 பேர் காயமடைந்தனர். மெகபூபா உயிர் தப்பினார்.

2006:முதன் மந்திரி குலாம் நபி ஆசாத் பெரும் அளவில் ஊடுருவல்காரர்கள் காஷ்மீருக்குள் வந்துவிட்டனர் என்று கூறுகிறார்.

4.4.2011: சமாதான பிரியர் மௌலானான சொகட் அகமத் ஷா மசூதி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்.

இது ஜிகாத்தான்:

24.4.2002 : இது ஜிகாத் தான். இது தொடரும். ஏனென்றால் இது முஸ்லீம்களின் கடமையென்றார் ஜமாத் இஸ்லாமியத் தலைவர் சையது அலி ஷா கிலானி.

23.3.2002 புது டெல்லி : பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபிஸ் சையது ஹிந்துக்களை கொல்வது ஜிகாதின் ஒரு பகுதிஎன்றார்.

கஷமரன கணணர கத தடரம-12

 

சமீபத்தில் ஹிஜ்புல் முஜாகிதீன்  இயக்கம் துவங்கப்பட்டு  ஜிகாதி தீவிரமடைந்துவிட்டது.

இவர்களுக்குப் பாகிஸ்தானில் பயிற்சியும் ஆயுதமும் கொடுக்கப்படுகிறது. பெரும் அளவில் கள்ள நோட்டுக்கள் தயாரித்து இந்தியாவிற்குள்  அனுப்புகிறது.

உலக  நாடுகளின் நிலை என்ன?

  1. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் முதலான மேலை நாடுகளின் கருத்து: காஷ்மீர் இணைந்தது சர்ச்சைக்குரியது. ஆதலால் ஐக்கிய நாடு சபை மூலம் தீர்வு எடுக்கலாம்.
  1. ரஷ்யா ஆரம்பம் முதல் தீர்மானமாக இந்தியாவின் பக்கம் நின்று வருகிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பாகம் தான் என்று கூறிவிட்டது.
  1. சீனா மதில் மேல் பூனை போன்ற கொள்கை. ஆனால் சுதந்திர காஷ்மீர்என்பதை நிராகரித்து விட்டது.

முஸ்லீம் நாடுகளின் நிலை:

ஏப்ரல் 1990 :ஜெ.கே.எல்.எப்.தலைவர் அமானுல்லா அமெரிக்கா சென்று ஐக்கிய நாட்டு சபை வளாகத்திலேயே நிருபர்களைச் சந்தித்து, ஐக்கிய நாட்டு சபை ஆதரவையும் கோரி, வன்முறை அதிகரிக்கப்படும் என்று எச்சரித்தார்.

ஏப்ரல் 19,1990:இஸ்லாமிய நாடுகள் மகாநாடும், சவுதி அரேபியாவும் பாகிஸ்தானின் காஷ்மீர் கொள்கைக்கு முழு ஆதரவு அளித்து தீர்மானம் இயற்றியது.

ஜூலை 13, 1990:காஷ்மீருக்குச் சென்று பார்த்து வந்த அமெரிக்க செனட்டர் கூறினார்: காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு இரான் ஆயுத சப்ளையும், சவுதி அரேபியா நிதியும் அளித்து உதவுகின்றன.

1994CIA அறிக்கை கூறியது என்ன? “இஸ்லாமிய நாடுகள் காஷ்மீர் ஜிகாதிகளுக்கு ஆதரவு கொடுப்பது தங்கள் இஸ்லாமிய கடமையாகக் கருதி ஆயுதங்களையும், பயிற்சியும் கொடுக்கின்றன”.

16.3.2008ல் நடந்த முஸ்லீம் நாடுகளின் கூட்டம் (O.I.C.) திட்டவட்டமாகத் தங்களின் எல்லாவித ஆதரவும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உண்டு என்று கூறிவிட்டது.

ஐக்கியநாடு சபை நிலை என்ன?

 

ஐக்கிய நாட்டு சபை ஏற்படுத்திய டிக்சன் கமிஷன் அறிவிப்பு: காஷ்மீரை மூன்று பகுதிகளாக பிரித்து விடுவது.

1. இந்தியாவுடன் சேர விரும்பும் பகுதி, 2. பாகிஸ்தானுடன் சேர விரும்பும் பகுதி, 3. எதிலும் சேராமல் தனியாக இருக்க விரும்பும் பகுதி.

மூன்றாவது பகுதி விருப்பத்தை மக்கள் ஓட்டுப் போட்டு தெரிவித்து கொள்வது. அந்தப் பகுதியிலிருந்து இந்திய, பாகிஸ்தான் ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்தை பாகிஸ்தானும், இந்தியாவும் நிராகரித்துவிட்டது.

அரசியல் சட்டம் மூலம் ஹிந்துக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். சட்ட சபையில் பாரபக்ஷம்

1992ல் ஏற்படுத்தப்பட்ட Delimitation Commission முடிவு படி காஷ்மீர் சட்டசபை உறுப்பினர் தொகுதிகள்: ஜம்மு நிலப்பகுதி 28000 சதுர கிலோ மீட்டர் - 37 தொகுதிகள்; காஷ்மீர் நிலப்பகுதி 15000 சதுர கிலோ மீட்டர் - 46 தொகுதிகள்; லடாக் நிலப்பகுதி 96000 சதுர கிலோ மீட்டர் - 4 தொகுதிகள் தான்; ஐம்முவின் ஜனத்தொகை 21 லக்ஷம்; காஷ்மீரின் ஜனத்தொகை 23 லக்ஷம்; இப்படி இருந்தும்  காஷ்மீருக்கு 12 தொகுதிகள் அதிகம் ஏன்? சட்ட சபையில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்க, ஜம்முவிற்கு 2 M.P. தொகுதிகள்காஷ்மீருக்கு 3 M.P. தொகுதிகள். நியாயம் எங்கே உள்ளது?    

பருக் அப்துல்லாவின் இரட்டை வேடம்:

15.2.1994: பருக் அப்துல்லாவின் நேஷனல் கான்பரன்ஸ் கூட்டத்தில் காஷ்மீருக்கு 1947ல் இருந்த நிலை திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் போட்டது.

அது என்ன நிலை? காஷ்மீர் பாக்குடன் சேரலாம். இந்தியாவுடன் சேரலாம் அல்லது தனி நாடாக இருக்கலாம் என்பது.

1995 பிரதம மந்திரி நரசிம்மராவை பருக் அப்துல்லா சந்தித்து காஷ்மீரில் 1947 நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்.

26.6.2000: குடியரசு தினத்தன்று காஷ்மீர் சட்டசபை பருக் அப்துல்லா  ஆதரவுடன் காஷ்மீருக்கு முழு ஆட்சி சுதந்திரம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

18.8.2008: பெரிய பாகிஸ்தான் ஆதரவு கூட்டம் ஸ்ரீ நகரில் அனுமதிக்கப்பட்டது.

2009: ஓமர் அப்துல்லா காஷ்மீரிலிருந்து இந்திய ராணுவத்தை திருப்பி அழைத்துவிட வேண்டும் என்றார்.

கஷமரன கணணர கத தடரம-10

ஆதாரம் : 

 

V.P.Menon -“Integration of States”

Jagmohan - “My frozen Turbulence”

Kalhana   - “Rajatharangini”

Newspaper Reports, Government Statements

------------------------------------------------------------------------------------------------------

 

காஷ்மீரின் வரலாற்றை எழுதிய கல்ஹனா

காஷ்மீரின் பூர்வ வரலாறை உலகிற்கு கொடுத்த பெருமை கல்ஹனா என்கிற கவிஞர், அறிஞரைச் சாரும்.12வது நூற்றாண்டில் வாழ்ந்த கல்ஹனாவின் தந்தை  காஷ்மீரைச் சேர்ந்த சம்பகா ஹர்ஷ சக்ரவர்த்தியின் எல்லைப் பாதுகாப்புப் படைத்தலைவராக இருந்தார். கல்ஹனாவின் சிறிய தந்தை சங்கீதப் பிரியர். ஹர்ஷருடன் சங்கீதத்தில் ஆர்வம் காட்டி வந்தார்.

கல்ஹனாவின் குடும்பம் சம்ஸ்கிருத அறிஞர்களாக இருந்ததிலிருந்து அவர் பிராமணராக இருக்கலாம் என்று தெரிகிறது.

கல்னாவின் சிறிய தந்தை ஹர்ஷரின் மறைவுக்குப் பிறகு வாரணாசிக்குச் சென்று அங்கு தியானத்தில் வாழ்க்கையை கழித்தார். தந்தை சம்பகா தீர்த்தயாத்திரையில் ஈடுபட்டபோதெல்லாம் கல்ஹனாவும் அவருடன் சென்று க்ஷேத்திரங்களின் மகிமையை அறிந்து கொண்டார்.

கஷமரன வரலறற எழதய கலஹன

பரிஹாஸ புராவில் பிறந்த கல்ஹனா தாந்திரிகத்தையும், சைவசித்தாந்தத்தையும், பௌத்த மததத்துவங்களையும் நன்றாக அறிந்தவர்.

வங்காள வீரர்களின் பராக்ரமத்தை புகழ்ந்தவர் கல்ஹனா.

கல்ஹனாவின் சமகாலத்துக் கவிஞர்கள் பில்ஹனாவும், மாங்காவும்.

பில்ஹனா விக்ரமாங்கதேவ சரிதா எழுதினார். மாங்கா ஸ்ரீகாந்தசரிதா எழுதினார்.

ராஜ  தரங்கிணி

 அவருக்குப் பின் காஷ்மீரின் சரித்திரத்தை எழுதிய  ஜோன ராஜா  கல்ஹனாவின் ஞானத்தைப் புகழ்ந்துள்ளர்.காஷ்மீரின் முழு சரித்திரத்தையும் எழுதிய பெருமை கல்ஹனாவிற்குத் தான். ஆதிகாலம் தொட்டு, தான் வாழ்ந்த 12ஆம் நூற்றாண்டு வரை எழுதினார். ராஜ தரங்கிணியில் தான் வாழ்ந்த காலத்தில் சக்ரவர்த்தி ஹர்ஷர் கொல்லப்பட்டதும், அரசியலில் வாரிசு குழப்பம் ஏற்பட்டதையும், அரண்மனை சூழ்ச்சி ஏற்பட்டதையும், அடிப்படை மக்களின் அசிரத்தைப் பற்றியும் எந்தவித உள்நோக்கம் இல்லாமல் நடந்த வரலாறை அப்படியே சித்தரித்துள்ளார் தன்னுடைய நூலான ராஜ தரங்கிணியில்.

காஷ்மீர் மக்களின் குணங்களைப் பற்றியும், வாழ்க்கையை பற்றியும், பொருளாதாரம் பற்றியும் ராஜ தரங்கிணி எடுத்துக் காட்டுகிறது.

பெரிய கவியாக இருந்தாலும் கல்ஹனா ஒரு சரித்திர ஆசிரியராகத்தான் இருந்தார். புராணங்களையும், கதைகளையும் எந்த பாரபக்ஷமில்லாமல், சரித்திர கண்ணோட்டத்தில் எழுதினார் கல்ஹனா.  ராஜதரங்கிணி 8 அத்தியாயத்தில் ஆதிகாலம் முதல் 1150ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட அரச வம்சங்களையும், ஆட்சிகளையும் விவரிக்கிறது.

3500 ஆண்டு வரலாற்றை, 52 வம்சாவளிகளின் ஆட்சியை விவரிக்கும் ஒரு சம்ஸ்கிருத காவியமாக உள்ளது ராஜதரங்கிணி

திருக்கோயில்களின் நிர்மாம், நிர்வாக முறையை அறிந்து அவைகளின் சுவடிகளையும், பழக்கங்களையும் ஆராய்ந்து சேர்த்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்க்கையை விவரிக்கும்போது,அதிகம் படித்தவர்கள், பெரிய வீடுகள் கொண்டவர்கள், காவி, குங்குமப்பூ ரசிப்பவர்கள், பனிமலை தண்ணீர் , திராட்க்ஷை முதலியனஎன்று வர்ணிக்கிறார்.

ராஜதரங்கிணிஒரு ஒப்பற்ற வரலாற்று பொக்கிஷம் என்று சிறந்த ஆராய்ச்சியாளர்கள் ஆ.எஸ்.பண்டிட் அவர்களும், M.Auriel Steinஅவர்களும் புகழ்ந்து எழதியுள்ளனர்.

Read 2263 times
Rate this item
(1 Vote)
Last modified on Thursday, 08 January 2015 09:31

Leave a comment