×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

புதிய தலைமுறை.... பழைய பயங்கரவாதம்

Thursday, 12 March 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

பெண்களுக்கு தாலி தேவையா? என்ற தலைப்பில் 8.3.15 அன்று உரக்கச் சொல்வோம் என்ற விவாதத்திற்கு முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டது புதிய தலைமுறை தொலைக்காட்சி. மகளிர் தினம் சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் பெண் விடுதலைக்காக பாரத பண்பாடோடு இரண்டறக் கலந்த இந்த மண்ணின் மான்பை பறைசாற்றும் பழக்கத்தை சர்ச்சைக்குள்ளாக்கி இனத்துரோகம் செய்வதையே நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது.

thirumangalyam

தாலி கட்டிக் கொள்வதைப் பற்றியோ, தாலியால் குடும்பம் அழிந்து விட்டது என்றோ எந்தப் பெண்ணும் எந்த ஆணும் இதுவரை காவல் துறையிலோ நீதிமன்றத்திலோ உரிமைப் பிரச்சினையை எழுப்பவில்லை. மாறாக பலதாரத் திருமணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று சொல்லி உச்சநீதிமன்றம் வரைச் சென்ற வழக்குகளோ பல. வாழைத் தாரை பழுக்க உரையிலிடுவது போல் நடமாடும் பெண்களை பர்தாவுக்குள் உரையிடும் பழக்கத்திலிருந்து பெண்களை விடுவிக்க இந்த முற்போக்குவாதிகள் தயாராக இல்லை.

muslim girls

இந்தக் கூட்டத்திலிருந்து பெண்ணியம் கொப்பளித்து வேறொரு பெண்ணுக்கு துரோகம் செய்து தியாகு என்ற முற்போக்கை திருமணம் செய்துக் கொண்டு சில காலம் வாழ்ந்து, முற்போக்கு தியாகுவால் கழட்டி விடப்பட்டு வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்திய பிற்போக்கு தாமரைக்கு இந்த மகளிர் தின விழாவை அர்ப்பணித்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியிருக்கலாமே?

thiyagu sent mail to thamarai thiyagu released publicly

பலதாரத் திருமணம், தலாக் என்று சொன்ன மாத்திரத்திலேயே விவாகரத்து, தொகுதி எம்.எல்.ஏ வை மாற்றுவதுபோல் தோன்றும் போதெல்லாம் மனைவியை மாற்றி பெண்களை ப்ளாட்ஃபாரத்தில் ஒதுங்க வைக்கும் பகுத்தறிவு என்று நீதிமன்றங்களிலும், காவல்நிலையங்களிலும், வீதிகளிலும் நடக்கும் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் சுமூகமான உறவை ஏற்படுத்தி எந்த சர்ச்சையுமின்றி வழக்கத்தில் இருந்து வரும் இந்த தாலியை விவாத பொருளாக்கி சமூக ஒழுக்கங்களை உருகுலைக்கும் விவாதத்தை நடத்தும் செயல் உள்நோக்கம் கொண்டது.

இந்த ஈனச் செயலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் மீது பொய்ப்புகார் கொடுத்தும், ஊடகங்களை பயன்படுத்தி துஷ்ப்ரச்சாரம் செய்தும் வருகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி.

tv

இதில் பங்கெடுத்த என்.ராம், வழக்கறிஞர் சாந்தகுமாரி, ஞாநி, ஆழி செந்தில்நாதன் போன்றோர் ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் புதிய தலைமுறையில் மண்ணின் மான்புக்கு எதிரான நிகழ்ச்சியை நியாப்படுத்திவிட்டு இந்து முன்னணியினரை சமூக விரோதிகள் போல் சித்தரித்தனர். பெண் விடுதலைக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தினர். இந்தப் பெண்ணியவாதிகளுக்கு பாரதீய ஜனதாக் கட்சியின் சின்னமான தாமரை சின்னத்தின் மீதுள்ள காழ்ப்பின் காரணமாகவோ, என்னவோ ப்ளாட்பாரத்திற்கு வந்துவிட்ட சக பெண்ணிய போராளி தாமரை இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை.

தமிழைக் காட்டுமிராண்டி மொழியென்று வீதிதோறும் முழங்கிய ஈ.வே.ராமசாமியை அடையாளம் காட்டியதற்காக பாஜகவின் அகில பாரத செயலாளர் திரு. ஹெச்.ராஜாவை கைது செய்! என்று போராட்டம் நடத்திய போது கருத்துச் சுதந்திரம் காற்று வாங்க போயிருந்ததா? தடைசெய்யப்பட்ட திரைப்படத்திற்காக நான்கு நாட்கள் மௌண்ட் ரோடு மூடப்பட்டு அமெரிக்க எம்பஸி தாக்கப்பட்ட போதும் விஸ்வரூபம் போராட்டத்தின் போதும் கருத்து சுதந்திரம் கற்பழிக்கப்பட்டவில்லையா?

american embacy attack

இவர்கள் யாரை வேண்டுமென்றாலும் வரம்பு மீறி பேசலாம் அது கருத்து சுதந்திரம். ஆனால் ஒரு உண்மையையோ, ஒரு நிகழ்வையையோ வேறொருவர் மேற்கோள்காட்டினால் அது மதத்தீவிரவாதம். இந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அதிபர் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டியது தெரியுமா? டைரக்டர் ஷங்கர் இயக்கிய ”நண்பன்” என்ற திரைப்படத்தில் பாரி வேந்தனோ? பூரி வேந்தனோ? என்ற வசனம் இடம்பெற்றதிற்காக சினிமாக்காரன் தனது ஜாதியையே கேவலப்படுத்திவிட்டான் என்று சொல்லி திரையரங்குகளை தனது கட்சிக்காரர்களை விட்டு தாக்க வைத்தார். தனக்குத் தானே பாரிவேந்தர் என்று “முடி”சூட்டிக் கொண்ட பச்சமுத்து தன் சொந்தப்பிரச்சினையை ஜாதிப்பிரச்சினையாக மாற்றியது தான் இந்த ’தீரா’விட தகர உண்டியல்களின் கருத்துச் சுதந்திரமும், முற்போக்கும்.

http://ibnlive.in.com/news/nanban-runs-into-troublemultiplex-shows-cancelled/220819-62-128.html

முதலாளித்துவம், சர்வதேச ஊடகம் என்றெல்லாம் மாய்மாலம் செய்யும் இந்த தீராவிட தகர உண்டியல் கூட்டங்கள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் கட்டப்படும் போது என்ன செய்தார்கள். அது ஏரியையும், விவசாய நிலத்தையும் அல்லவா ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது.

srm

இவர்களின் நச்சுக் கருத்துக்களை பரப்ப உதவி செய்தால் கொலைகாரன், கொள்ளைக்காரன் கடவுளாகிவிடுவான். மாண்டவன் புதைக்கப்படமாட்டான் விதைக்கப்படுவான், தியேட்டரில் புகுந்து தாக்குதல் நடத்தியவனும், பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து சுட்டுக்கொல்பவனும், கொளுத்தி அங்கிருக்கும் பணியாளர்களை கொளுத்துபவனும், அப்பாவி மக்களை நடுரோட்டில் ஓட ஓட அடித்து விரட்டுபவனும் தியாகியாகி விடுவான்.

பொய்ப்புகார் கொடுத்து இந்து முன்னணியினரை கைது செய்ததுடன் இந்து அமைப்பினர் அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க களமிறங்கியுள்ள இந்த தீராவிட தகர உண்டியல் கூட்டத்தினரால் ஏற்படுத்தப்பட்ட இயக்கம் "சரிநிகர்". இந்த அமைப்பினர் தொடர்ந்து மூன்று நாட்களாக கருத்துச் சுதந்திரத்திற்காக போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று(12.3.2015) காலை புது புது அர்த்தங்கள் விவாதத்தில் இந்து அமைப்பினர் பயங்கரவாதிகள் என்று துருப்பிடித்த தகர உண்டியல்களான அருணனும், நெய்வேலி பாலுவும் “ஆதாரத்துடன்??” விளக்கினார்கள். அது என்ன ஆதாரம்?

cpm 640x320 450x225

12.3.2015 அன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் புதிய தலைமுறை அலுவலகத்தின் மீது குண்டெறிந்து விட்டு தப்பிச் சென்றார்கள். இந்தத் தாக்குதல் இந்து அமைப்பினரின் ஞாயிறன்று(8.3.2015) நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியே ! குண்டு வைப்பவர்கள் எல்லாம் முஸ்லீம்கள் என்று இஸ்லாமியர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, இந்து அமைப்பினர் தான் குண்டு வைக்கிறார்கள் என்று பாகிஸ்தானின் ISI-ன் வாதத்தை எதிரொலித்தார் “நெய்வேலி பழைய நிலக்கரி பாலு” இந்த பயங்கரவாதத்திற்கும்,வன்முறைக்கும் எதிராக குரல் கொடுக்கும் யோக்கியவான்கள் கொலை செய்வதை தகுதியாகக் கொண்டுதான் கம்யூனிச கட்சியின் பொறுப்பாளர்களாக நியமிக்கிறார்கள். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டச் செயலாளர் மணி எத்தனை கொலை செய்தோம் ? எப்படி கொலை செய்தோம்? என்று பொதுமேடையில் விளக்கி கட்சியை(பயங்கரவாதத்தை) வளர்த்த பெருமையை இந்த வீடியோ லிங்கில் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=bhEj9lSEGlw

இவர்களின் கூட்டாளிகளான தீராவிடக் கூட்டங்கள் போஸ்ட் ஆபிஸ், சென்னை அயோத்யா மண்டபம், ஈரோடு ஸ்ரீ ராகவேந்திரர் மடம், முத்தரச நல்லூர் ரயில் நிலையம், குடமுருட்டி பாலம்.அரியலூரில் வங்கி என்று அங்கிங்கெனாதபடி எங்கும் குண்டு வைத்து வெடி குண்டு கலாச்சாரத்தில் புதிய அத்தியாயமே படைத்தவர்கள்.

erod11 raghavendrar

 

erod3 raghavendra

ayo1

 

Ref: 

http://www.deccanchronicle.com/131030/news-current-affairs/article/seven-bombs-thrown-chennai-post-offices

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/5-held-for-attack-on-ayodhya-mandapam/article3032157.ece
http://www.sundaytimes.lk/000924/news5.html

இவ்வளவு கைத்தேர்ந்த கொலைஞர்கள் ஆத்திரக்கார்களானதால் புத்தி மட்டானது. புதிய தலைமுறையில் வெளியான குண்டெறிந்தவர்களின் CCTV Footage ஐ பாருங்கள்.

 cctv1

cctv2

மெலிந்த உடல்வாகு கொண்ட இளைஞர்கள், இந்த குண்டெறி சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரம் அதிகாலை 3 மணி(12.3.15) அன்று காலை 11 மணிக்குள் “இந்து இளைஞர் சேனா” வைச் சேர்ந்த பாண்டி என்பவர் மதுரையில் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளாராம்.

 இந்தப் புகைப்படத்தை பாருங்கள், நடுத்தர வயதில் பருத்த உடலுடன் காணப்படுகிறார். முன்பு பார்த்த CCTV Footageல் தோன்றிய உருவத்திற்கும் இந்த உருவத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? காலை 3 மணிக்கு குண்டெறிந்தவர் சென்னை கிண்டி கத்திப்பாரா ஜங்ஷனிலிருந்து 3.30 மணிக்கு பஸ் ஏறினால் கூட மதுரைக்குப் போக முடியாதே?

HINDHU SENA

எறிந்த குண்டு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வெடித்ததாம்? இந்த குண்டெறி சம்பவமும், இதற்கு முன் இந்து முன்னணியினர் மீது சுமத்தப்பட்ட பொய்ப்புகாரும், இந்து அமைப்புகள் மீது களங்கம் சுமத்தவே உள்நோக்கத்துடன் தேச துரோக, பிரிவினைவாத, சதிகார, தீராவிட தகர உண்டியல் கூட்டத்தினரால் புனையப்பட்டது என்று தெளிவாகிறது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நியாயமான விசாரனை நடத்தினால் உண்மையான குற்றவாளிகள் பிடிபட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தில், தீராவிட தகர உண்டியல் பயங்கரவாத சதி தெரிந்துவிடும் என்பதாலும் இந்த “சரண்” நாடகத்தை அரங்கேற்றி இருக்க வாய்ப்புள்ளது.

முற்போக்கு ஊடகம் என்று சொல்லும் இவர்களது இந்தச் செயல் இஸ்லாமிய பயங்கரவாதம், கிருஸ்துவ மதமாற்றம் போன்றவற்றை ஊக்குவித்து இந்த மண்ணின் மான்பை தாங்கி நிற்கும் இந்து சமய தமிழ்ப்பண்பாட்டு மரபுகளை அழிக்கும் நோக்கத்துடன் அரங்கேற்றப்பட்ட சதி.

இது போன்ற தேச விரோத, சமூக விரோத, பிரிவினைவாத செயல்களை பரப்பிவிடும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க அரசு முன்வர வேண்டும்.

கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் என்ற போர்வையில் செயல்பட்டுவரும் தீய சக்திகளின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் மண்ணின் மான்பைக் காக்க அனைத்து தேச பக்தர்களும் ஒன்று சேர வேண்டும்.

 

Read 3597 times
Rate this item
(7 votes)
Last modified on Friday, 13 March 2015 08:09

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment