×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

நாடார் சமூகத்தினரை அவமதிக்கும் CBSE ஒன்பதாம் வகுப்பு பாடம்

Monday, 10 August 2015 16:34 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
 
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT – National Council of Educational Research and Training), மத்திய மேனிலைக் கல்வித்துறை (CBSE – Central Board of Secondary Education) பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், “Clothing – A Social History” என்கிற பாடத்தில், சாணார் சமூக மக்களை மட்டம் தட்டும் விதமாக எழுதப்பட்டுள்ளதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. 
 
 
ஜானகி நாயர் என்பவர் எழுதியுள்ள இந்தப்பாடத்தில், 1820களில் கிறிஸ்தவ மிஷனரிகள் தான் சாணார் (நாடார்) சமூகப் பெண்களிடம் உடலின் மேல் பாகத்தை மறைத்து ரவிக்கை முதலிய மேலாடைகள் அணியும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்றும், அவ்வாறு ரவிக்கையையும் மேலாடைகளையும் அணிந்த சாணார் சமூகத்தவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாயர் சமூகத்தினரால் தாக்கப்பட்டார்கள் என்றும், நாயர் சமூகத்தினர் உயர்ஜாதியினர் என்றும், சாணார் சமூகத்தினர் கீழ்ஜாதியினர் என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள பகுதி, வரலாற்றுப்பிழைகள் நிறைந்தது என்றும், சாணார் சமூகத்தினரை அவமதிப்பதாகவும் உள்ளது என்றும், சாணார் (நாடார்) சமூகத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியைப் பாடத்திலிருந்து நீக்கிவிட்டு, உண்மையான வரலாற்றைச் சேர்க்கவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. 
 
 
இந்த சர்ச்சைப் பற்றியும், அதன் பின்னணி பற்றியும், உண்மையான வரலாறு பற்றியும் நம்முடன் கலந்துரையாட,  கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், வரலாற்று ஆய்வாளரும்,  தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் (SIRSHI –South Indian Social History Research Institute) செயலாளருமான திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் வந்திருந்தார்கள். 
 
இந்தப் பிரச்சனை சம்பந்தமாக நம் மனதில் பல கேள்விகள் எழுந்தன.
 
 
வரலாற்றைப் படிக்கும் மாணவர்களுக்கு வரலாறு சம்பந்தப்பட்ட பாடங்களை சமூக விஞ்ஞானம் அல்லது சமூக அறிவியல் என்று வரையறுப்பது சரியா?
 
 
இப்போது இந்த சி.பி.எஸ்.இ திட்டத்தின்  9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தினால் ஏற்பட்டுள்ள சர்ச்சை என்ன? இதில் என்ன மாதிரியான வரலாற்றுப்பிழைகள் உள்ளன? இந்த வரலாற்றுப்பிழைகளினால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?
 
 
இந்தப் பாடத்தை எழுதியுள்ள ஜானகி நாயர் என்பவர் வரலாற்று ஆய்வுலகிலும், எழுத்துலகிலும், நன்கு அறியப்பட்டவரா? அவர் அரசியல்சார்பு உடையவடராக இருக்க வாய்ப்புள்ளதா?
 
 
இந்தப் பிரச்சனையை நாடார் சமூகத்தினர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? மேற்கொண்டு அவர்கள் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? 
 
 
ஒரு பொய்யான தகவல் பரப்பப்படுவதற்கு, அதுவும் உயர்பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கு என்ன காரணம்? இந்த மாதிரியான தவறுகள் வேண்டுமென்றே நடத்தப்படுவதற்கு அரசியல் காரணங்கள் இருக்குமா? அப்படியென்றால் இப்போது இந்த நாடார்கள்  சமூகம் பாடப்புத்தகத்தில் இழிவுபடுத்தப்பட்டதற்கும் அரசியல் காரணம் இருக்க வாய்ப்பிருக்கிறதா? 
 
 
இவ்வாறு கல்வித்துறையில் அரசியல் நுழைவதிலும், இந்தியாவின் உண்மையான வரலாறு மறைக்கப்படுவதற்கும் அன்னிய சக்திகளின் ஊடுருவலும், மதமாற்ற முயற்சிகளும் காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதா? இதை எதிர்காலத்தில் எப்படி எதிர்கொள்வது? நாட்டின் மாணவர்களுக்கு உண்மையான வரலாறு கற்றுத்தரப்பட வேண்டாமா? 
 
 
மேற்கண்ட நமது கேள்விகளுக்கு திரு.இராமச்சந்திரன் அவர்கள் பொறுமையாகவும் விளக்கமாகவும் பதில்கள் தந்தார்கள். அந்த உரையாடலை இங்கே காணொளியாகத் தருவதில் பெருமை அடைகிறோம். 
 
 
 

-ஆசிரியர் குழு, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்
 
Read 2134 times
Rate this item
(2 votes)
Last modified on Tuesday, 11 August 2015 17:08

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment