×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

திரு. கிருஷ்ணப்பாஜி அவர்களுக்கு அஞ்சலி

Monday, 10 August 2015 17:01 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

மூத்த ஆர் எஸ் எஸ் தலைவரான திரு.கிருஷ்ணப்பா அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

தொண்டர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களில் ஒருவராய்க் கலந்து பழகும் அன்பாளர். "வீட்டிற்கு வந்தவரை வாங்க என்று வரவேற்று உட்கார ஆசனம் தர வேண்டும்; குடிக்க நீரோ அல்லது ஆகாரமோ தந்து உபசரிக்க வேண்டும்; அவர் விடைபெற்றுச் செல்லும்போது எழுந்திருந்து வழி அனுப்பவேண்டும்......”இது போன்று ஏராளமான சிறு சிறு விஷயங்களை ஒவ்வொரு வீட்டிற்குச் சென்று பழகும்போதும் வீட்டில் உள்ள எல்லாருக்கும் புரியும்படி உணர்த்தி - ஒரு ஹிந்துக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்ற உயர்ந்த வாழ்வியலை எளிமையாக நடைமுறைப் படுத்திக் காட்டியவர்.

அயராத இயக்கப் பணிகளுக்கிடையேயும், ஒவ்வொரு ஸ்வயம்சேவகரின் தனிப்பட்ட வளர்ச்சியில் முனைப்புடன் கவனம் செலுத்துவார். ஒவ்வொரு தொண்டரும் தனது சுய வளர்ச்சி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக உழைப்பதும் கூட இயக்கப் பணியின் ஒரு பங்குதான் என்ற புதிய பரிமாணத்தைக் கூறியவர்.

ஒரே ஒரு முறை அவரிடம் பழகியவர்கள் கூட தங்களின் வாழ்க்கை முழுவதும் அவரை நினைவு கூறும் அளவுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தகைமையாளர்.

தென் பாரதத்தில் உள்ள 4 மாநிலங்களின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளராகப் பணிபுரிந்தபோது தமிழகத் தொண்டர்களுக்கு வழிகாட்டியவர். தீராத நோய் மற்றும் முதுகு வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தபோதும், அதைச் சிறிதும் வெளிக் காட்டாமல் சிரித்த முகத்துடன்  தென்பாரதம் முழுவதும் வலம் வந்து இடையறாது சமூகப் பணியாற்றிய கர்ம வீரர்.

அன்னாரது உடல் தேக தானமாக மருத்துவக் கல்லூரிக்குத் தரப்பட்டுள்ளது. வாழும்போது சமுதாயப் பணிக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர், வாழ்ந்தபிறகு தனது உடலையும் சமுதாயத்திற்கு அர்ப்பணித்துவிட்டார்.

ஹிந்து சமுதாயத் திருப்பணியில் நம்மையும் இணைத்துக் கொள்வதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாக அமைய முடியும்.

Read 798 times
Rate this item
(1 Vote)
Last modified on Monday, 10 August 2015 17:20

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment