தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இஸ்லாமிய பயங்கரவாதம் நாளடைவில் பெருகி வளர்ந்துள்ளது. இதுவரை 134 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கொலைவெறித் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர்.
இவை மட்டுமல்லாது, கோவில் இடிப்பு, திட்டமிட்டு இந்துப் பெண்களை ஏமாற்றிக் காதலித்துத் திருமணம் செய்வது, பெண்களுக்கு எதிரான வன்முறை, இந்துக்களின் வியாபாரத்தை அழிப்பது, திருவிழாக்களுக்குத் தடை, பாரம்பரிய ஊர்வலப் பாதைகளுக்குத் தடை, பசுவதை, தேசியக் கொடி - தேசிய கீதம் அவமதிப்பு, பாகிஸ்தான் ஆதரவுப் பிரச்சாரம், சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களை வேரூன்றச் செய்வது, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல், ஆயுதக் கடத்தல், கள்ள நோட்டுப் புழக்கம், வெளிநாட்டினரைக் குடியமர்த்தல், காவல் நிலையங்கள் மீதும் போலீசார் மீதும் தாக்குதல்கள், போன்ற, இந்து விரோத, சமூக விரோத, தேச விரோதச் செயல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
சிறுபான்மையினரின் வாக்கு வங்கியைக் குறி வைத்து அரசியல் நடத்திவரும் தமிழகத்துத் திராவிடக் கட்சிகளும், இதர போலி மதச்சார்பின்மை பேசும் கட்சிகளும் இந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பையும், ஜிகாத் பயங்கரவாதத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. கடந்த 49 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி புரிந்து வரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க கட்சிகள் இந்த பயங்கரவாதத்தை ஒடுக்க எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காததால், மேன்மேலும் பெருகி வருகின்றது ஜிகாத். இன்று காவல்துறையும், அரசு இயந்திரமும் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்குப் பயந்து பணிந்து செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் நடந்துள்ள இஸ்லாமிய பயங்கரவாத நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளது இந்து முன்னணி. 2006ஆம் வருடத்திலிருந்து நிகழும் ஆண்டுவரை 21 மாவட்டங்களில் நிகழ்ந்துள்ள 300க்கும் அதிகமான பயங்கரவாத நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளது இந்து முன்னணி. இந்த ஆவணங்களை “தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்” என்கிற தலைப்பில், 3 DVDக்களில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணப்பட வெளியீடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை 21.02.2016 அன்று சென்னை தி.நகரில் உள்ள குரு பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்து முன்னணி நிறுவனர் திரு.இராம கோபாலன் அவர்கள் வெளியிட, பா.ஜ.கவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர்.சுப்ரமணியன் ஸ்வாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். “காஷ்மீரின் வேர்கள்” (Roots in Kashmir) என்கிற அமைப்பின் நிறுவனரும் காஷ்மீர் பண்டிட் சமுதாயத் தலைவர்களுள் ஒருவருமான திரு.சுஷில் பண்டிட் அவர்களும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சி தொடக்கம்

யோகா ஆசிரியர் திரு.சாரதி அவர்கள் தேசிய கீதமான ’வந்தே மாதரம்’ பாட நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. இந்து முன்னணியின் சென்னை நகரப் பொதுச் செயலாளர் திரு.திருநாவுக்கரசு இளங்கோ அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து திரு.சுஷில் பண்டிட் உரையாற்றினார்.
திரு.சுஷில் பண்டிட் உரை
இங்கே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தான் சொல்ல நினைக்கிறேன். ஆனால், நேற்று மாலை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் ஒன்றரை மணிநேரம் பேசித் தெரிந்துகொண்ட தகவல்கள், அவ்வாறு சொல்ல விடாமல் என்னைத் தடுக்கின்றன. ஆம், நேற்றிரவு என்னால் உறங்கமுடியவில்லை. 2006லிருந்து ஆவணப்படுத்திய நிகழ்வுகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள்.
என்னைப் பொறுத்தவரை, காஷ்மீர் நிகழ்வுகளையும் தமிழக நிகழ்வுகளையும் ஒப்பீடு செய்ய முடியாது. காஷ்மீரில் அந்த மண்ணின் உண்மையான மைந்தர்களான இந்தியர்கள், இந்துக்கள் ஒற்றை இலக்க சிறுபான்மையினராகக் குறுகிக் குறைந்து போவதற்கு 500 ஆண்டுகால அன்னிய ஆட்சி காரணமானது. ஷா மீர் வம்சம், சாக் வம்சம், முகலாயர்கள், பதான்கள் என்று தொடர்ந்த முஸ்லிம்களின் ஆட்சி 1890ல் மஹாராஜா ரஞ்ஜித் சிங் அவர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவர் முஸ்லிம்களின் கொடுங்கோலிலிருந்து காஷ்மீருக்கு விடுதலை பெற்றுத்தந்தார். அன்றிலிருந்து 1947 வரை நம்மால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. 1947ல் ஆங்கிலேயரிடமிருந்து நாம் விடுதலை அடைந்தபோது, ஜவஹர்லால் நேரு அப்துல்லாவின் தலைமையின் கீழ் காஷ்மீரைக் கொடுத்தபோது, மீண்டும் காஷ்மீர் அன்னியர் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது. ஆகவே, 1947லிருந்தே, திட்டமிட்ட ஒடுக்குதல், அரசிலும் அரசு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பின்மை, தொழிற்கல்விக்கான தொடர்பின்மை, தகுதிக்குக் எதிரான பாரபட்சம், போன்றவைகளால் காஷ்மீர் இந்துக்கள் பொருளாதாரத்தையும் வாய்ப்புகளையும் தேடி படிப்படியாகக் காஷ்மீரை விட்டு வெளியேறத் தொடங்கினர். வெளியில் கிடைத்த சுதந்திரமும் அவர்களை காஷ்மீருக்கு வெளியே இட்டுச் சென்றது. எனவே தான், காஷ்மீர் இந்துக்கள் நிறைய பேர் காஷ்மீருக்கு வெளியே பரந்து உள்ளனர்.
ஆனால் 1990ல், படிப்படியாக இருந்த இந்த வெளியேறல், இந்து சமுதாயம் முழுவதும் தனக்கு எதிரான சூழ்நிலையில் வாழமுடியாத காரணத்தால், அதற்கு முன்பு கண்டிராதா வகையில் மிகவும் அதிகமாக ஆனது. கடந்த 600 ஆண்டுகளில் ஏற்பட்ட 7வது வெளியேற்றம் ஆகும் இது. ஆரம்பத்தில் 70,000 குடும்பங்கள் இருந்தன, ஆனால் தற்போது 600 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. இவர்கள் வெளியேற வழியில்லாததால், எவ்வளவு மோசமான சூழ்நிலையானாலும், சகித்துக்கொண்டு இருப்போம் என்று முடிவு செய்தவர்கள்.
ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன? இங்கே நன்றாக வளர்ந்து வரும் பெரும்பான்மையினர், வெறும் 6% சதவிகிதம் மட்டுமே இருக்கும் சிறுபான்மையினரால் பயங்கரமாக மிரட்டப்படுகின்றனர். இந்த இடத்தில்தான் காஷ்மீருடனான ஒப்பீடு தவறாகப் படுகிறது. அப்போது தான் இது வெறும் எண்ணிக்கை சம்பந்தப்பட்டதன்று என்பதை நான் புரிந்துகொண்டேன். இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்கள்தொகை 30 லக்ஷம் அல்லது 25 லக்ஷம் இருந்திருக்கலாம். இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி. ஆனால் அவர்களால் பிரச்சினை இன்று வாழ முடிந்தது. இன்று ஆம்பூரில் அவர்கள் 16% சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே; வங்காளத்தில் 25% சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள்; பிகாரில் 24% சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள். ஆனால், இந்த மாநிலங்களில் முஸ்லிம் பெரும்பான்மை கிராமங்களில் உள்ள ஹிந்துக்கள், தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் விற்றுவிட்டு வெளியேறுகிறார்கள். இதற்குக் காரணம், திருமண ஊர்வலத்திற்கும், சவ ஊர்வலத்திற்கும், ஊர்வலப்பாதை, ஊர்வல நேரம், ஊர்வலங்களில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை, எழுப்பப்படும் சத்தத்தின் அளவு, அணிந்துகொள்ளும் ஆடைகளின் விதம், ஆகியவற்றுக்கு இந்துக்கள் அவர்களிடம் அனுமதியைப் பெறவேண்டும் என்பதாகும். இந்த இடங்களில் அரசியல் சாஸனத்தின் 370வது க்ஷரத்து அமுலில் இல்லை. ஆகவே, உங்களுக்குக் குற்றம் சுமத்த எதுவும் கிடையாது. இந்த இடங்களில் எல்லாம் இந்துக்கள் சிறுபான்மையினர். எனவே இதற்கு மனப்பான்மையே காரணம். மனத்தில் தான் எல்லாம் இருக்கிறது. எண்ணிக்கையிலோ, அரசியல் சாஸனத்திலோ, அரசியல் அமைப்புச் சட்டத்தின் க்ஷரத்துகளிலோ, சட்டவிதிகளிலோ இல்லை. இங்கே, இந்த மனதில் தான் இருக்கிறது.
இந்த ஆவணப்படமும் ஆவணப்படுத்தலும் மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். நாங்களும் எங்கள் வீடுகள், கோவில்கள் ஆகியவை அழிக்கப்பட்டதை ஆவணப் படுத்தி வைத்திருக்கிறோம். நாம் ஆவணப்படுத்துவதில் வல்லவர்கள். ஆனல் இதையும் தாண்டி நாம் செல்ல வேண்டும். இந்த உண்மைகளும், ஆவணப்படங்களும், ஆவணங்களும் நம்மை செயல்படத் தூண்ட வேண்டும். சொல்வதற்கு இவ்வளவு தான் என்னிடம் இருக்கின்றன. நன்றி.
சுஷுல் பண்டிட் அவர்களின் முழு உரை
ஆவணப்படம் வெளியீடு
சுஷில் பண்டிட் அவர்கள் உரையாற்றியவுடன் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. திரு.இராம கோபாலன் வெளியிட டாக்டர் சுப்ரமண்யன் ஸ்வாமி பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து டாக்டர் சுப்ரமண்யன் ஸ்வாமி உரையாற்றினார்.
டாக்டர் சுப்ரமண்யன் ஸ்வாமி உரை
இந்த ஆவணப்பட வெளியீடு நிகழ்ச்சி செய்தித்தாள்களில் இந்தியா முழுவதும் பிரச்சாரம் ஆகவேண்டும் என்கிற கோரிக்கையைப் பலரும் எனக்கு டுவிட்டர் மூலம் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக நான் உங்கள் அனுமதியுடன் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன். வருகின்ற தேர்தலில் இதே விஷயங்களை நான் தமிழிலும் பேசத்தயார்.
முஸ்லிம் மக்களிடையே இருந்த ஜிகாத் இயக்கம் எப்போதும் இந்தியாவின் எதிரிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றது. 1946 பொதுத் தேர்தலில் தமிழகத்தில் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பியவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். பாகப்பிரிவினைக்கு பிறகு, ஜிகாத் மேல் நம்பிக்கை கொண்ட முஸ்லிம் அமைப்புகள் தங்களின் பாதுகாப்புக்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டன. காங்கிரஸும் முஸ்லிம் வாக்கு வங்கியை மனதில் கொண்டு ஆவற்றின் ஆதரவை ஏற்றுக்கொண்டது. விரைவில் தி.மு.க. ஆட்சி அமைத்தபோது, இந்த ஜிகாத் அமைப்புகள் காங்கிரஸை விட்டு வெளியேறி தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டன. அப்போதிலிருந்து தி.மு.க.வுடனும் அ.தி.மு.க.வுடனும் மாறி மாறி கூட்டணி வைத்து வருகின்றன. இதுவே அவர்களின் யுக்தியாக இருக்கின்றது. தங்கள் செயல்பாட்டில் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.
அன்னிய தேசத்திலிருந்து வருகின்றவர்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் கொடுப்பதே நமது பாரம்பரியம். அப்படித்தான் பார்ஸீக்களுக்கும் யூதர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தோம். இந்தியாவிலேயே தொடர்ந்த முஸ்லிம்களுக்கு இந்த நாடு இந்து இந்தியாவாகத்தான் இருக்கப்போகிறது என்பது தெரியும். அவர்கள் பார்ஸிக்களைப்போலவும் யூதர்களைப்போலவும் இருப்பதில், அதாவது உள்ளூர் கலாச்சாரத்தையும் வழக்கங்களையும் கடைப்பிடித்துக்கொண்டும் தங்கள் மதத்தைப் பாதுகாத்துக்கொண்டும் இருப்பதில், நமக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இருக்கவில்லை.
இன்று நாம் ஒரு அறிவியல் உண்மையின் அடிப்படையில் முஸ்லிம்களை ஏற்றுக்கொள்ளச் சித்தமாயிருக்கிறோம். இந்திய ஹிந்துவின் மரபணுவும், இந்திய முஸ்லிமின் மரபணுவும் ஒன்று என்பதே அந்த அறிவியல் உண்மை. ஆகவே, தங்களுடைய மூதாதையர்கள் ஹிந்துக்கள் என்கிற உண்மையை இந்திய முஸ்லிம்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதே நமது கோரிக்கை. ஆனால் அடிப்படைவாத முஸ்லிம்கள் தங்களை ஒரு சர்வதேச சமுதாயமாகக் கருதுகிறார்கள். தற்போது அவர்கள் ISIS போன்ற பயங்கரவாதக் குழுக்களின்பால் ஈர்க்கப்படுகிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இந்தியா ஒரு பூர்த்தி செய்யப்படாத அத்தியாயம் என்று கூறுகிறது ISIS. ஏன் அவ்வாறு கூறுகிறார்கள்?
ஏனென்றால் அவர்கள் வென்று கைப்பற்றிய பெர்ஷியா, மெசபடோமியா, பாபிலோன், எகிப்து என்று அனைத்து நாடுகளையும் 100% இஸ்லாமிய நாடுகளாக சில ஆண்டுகளிலேயே மாற்றிவிட்டார்கள்.
வேலூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மேல்விஷாரம் என்னும் டவுன் பஞ்சாயத்தில் ஹிந்துக்கள் துன்பம் அனுபவித்தனர். விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் திரு.வேதாந்தம் அவர்களுடன் சென்ற போதுதான், அங்கே ஹிந்து தலித்துகள், சாலை வசதி, பள்ளி வசதி, மற்றும் எந்தவிதமான வசதிகளும் கொடுக்கப்படாமல், மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்கிற உண்மையைத் தெரிந்துகொண்டேன். ஆகவே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஹிந்து தலித்துகளுக்கு ஆதரவாக உத்தரவு வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தமிழகத்தில் மேல்விஷாரத்தில் மட்டும் நடக்கவில்லை; அதைப்போல 40 பஞ்சாயத்துக்களில் நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் 5% அல்லது 6% சதவிகிதமே இருந்தாலும் கூட, அவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பகுதிகளில் சிறுபான்மையினருக்கு எந்தவித வாய்ப்புகளும் இல்லை.
மேலும், இந்த ஆவணப்படத்தில் ஒரு காட்சி பார்த்தேன். ஒரு முஸ்லிம் தலைவர் “20,000 போலிஸ்காரர்கள் தான் இருக்கிறார்கள். நாங்கள் 50 லக்ஷம் பேர் இருக்கிறோம்” என்று பேசுகிறார். இந்தியாவில் 200 கோடி ஹிந்துக்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளட்டும். நாங்கள் ஒன்றாக இருக்கத் தயார். முஸ்லிம்களுடன் ஒன்றிணையத் தயாராக இருக்கிறோம். ஆனால், அவர்கள் இந்தியக் குடும்பத்தின் அங்கமாக இருக்க சம்மதிக்க வேண்டும். அதாவது அவர்களுடைய முன்னோர்கள் ஹிந்துக்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே, இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்வது? ஹிந்து ஒற்றுமையால் மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும். இப்போது தமிழகத்தில் பிரச்சனைகள் இருக்கின்றன. ISIS ஆதரவு பெருகுகிறது. தீவிரவாதிகளை அனுப்பும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஜிகாதிகள் எதுவேண்டுமானாலும் செய்ய முடியும் என்கிற நிலை தமிழகத்தில் நிலவுகிறது. ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்! ஆனால் தமிழக அரசு ஒரு நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கையெடுக்கத் தங்களை அனுமதிப்பதில்லை என்று காவல்துறையினர் என்னிடம் புகார் கூறுகின்றனர். இந்த மாதிரியான ஆட்சியில், ஹிந்துக்களாகத் தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றவில்லை என்றால், ஹிந்துக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? ஜிகாத் அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கவும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் முதல்வர் ஜெயலலிதா முன்வரவேண்டும். அவருக்குத் தெரியவில்லையென்றால் மத்திய அரசிடம் கேட்கவேண்டும். மத்திய அரசிடம் ஜிகாத் அமைப்புகளின் பட்டியல் இருக்கிறது.
பெரும்பான்மையினரான நாம் ஒற்றுமையாக இருந்தால் முஸ்லிம்கள் நமக்கு அடங்கி நடப்பார்கள். ஆனால் தமிழகம் போல பணத்துக்காகவும் ஜாதிக்காகவும் ஓட்டுகளைப் போட்டால், அவர்கள் காவல்துறையையும், மக்களையும் மிரட்டுவார்கள். ஆகவே, அவர்கள் தங்களுடைய நலனை நோக்கத்தில் கொண்டு செயல்படுவதைக் குறை சொல்லாமல், நாம் ஒற்றுமையக இல்லாமல் இருப்பதில் குறை கண்டுபிடித்து அதை நிவர்த்தி செய்யவேண்டும். நாம் ஒன்றிணைந்து அரசியல் கட்சிளை நம் காலில் விழவைக்கவேண்டும். நாம் ஒன்றிணைந்தால் அனைவரும் நம் வழிக்கு வருவர்.
நாம் ஒன்றாக இணைந்து ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். நமது அரசியல் சாஸனம் வலிமை மிக்கது. அதன் மூலமாகவே நாம் சாதிக்க முடியும். ஆனால், நீ வன்முறையில் இறங்கினால் நாங்கள் சும்மாயிருக்க மாட்டோம்; இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது எப்படி என்று எங்களுக்குத் தெரியும், என்று ஒரு எச்சரிக்கை விடுக்கலாம்
இன்று ஹிந்து எழுந்துவிட்டான். இனி அவன் இந்த தேசத்தின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் உறுதி செய்ய வேண்டும். நமது மதமும் பண்பாடும் இந்நாட்டின் முக்கிய பெருவோட்டமாகும்; இதில் சிறுபான்மையினருக்கு மற்ற நடுகளை விட அதிக இடமுண்டு; இந்த நாட்டின் கலாச்சாரக் கட்டமைப்பையொட்டி அவர்கள் சகித்துக்கொள்ளப்படுவர்; அதை உறுதி செய்யும் விதத்தில் ஹிந்து சமூகம் கட்டமைக்கப்படும். அதை உடைக்க முயலும் எவரிடமும் நாம் போரிடத் தயாராக இருப்போம். நமக்குத் தேவை வலிமையான ஹிந்து. அதற்காகத்தான் இந்த ஆவணப்படங்களை வெளியிட நான் தில்லியிலிருந்து வந்தேன். நன்றி.
Dr. சுப்ரமணியன் ஸ்வாமி அவர்களின் முழு நீள உரை
பத்திரிகையாளர் சந்திப்பு
டாக்டர் சுப்ரமண்யன் ஸ்வாமி அவர்களின் உரைக்குப் பிறகு, பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு திரு இராம கோபாலனும், டாக்டர் ஸ்வாமியும், திரு.ஹெச்.ராஜாவும், திரு.சுஷில் பண்டிட் அவர்களும் பதிலளித்தார்கள்.
பிறகு நிகழ்சி தொடர்ந்தது. திரு.இராமகோபாலன், ஆவணப்படத்தைப் பற்றியும், ஹிந்து முன்னணி அதைத் தயாரித்ததன் பின்னணி பற்றியும் விளக்குமாறு திரு.பால கௌதமன் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
பால கௌதமன் விளக்கவுரை
கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்ச்சியாக இந்து அமைப்பினர் கொல்லப்பட்டு வந்தார்கள். ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன், பாடி சுரேஷ் என்று வரிசையாகப் படுகொலைகள் நடந்து கொண்டு வந்தன. இந்தப் படுகொலைகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில், மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு சார்பாக ஒரு குழு சென்னைக்கு வந்தது. திரு.பிரகாஷ் ஜாவ்டேகர், திருமதி.நிர்மலா சீதாராமன், திரு.ஆனந்த ஹெக்டே ஆகிய மூவர் குழு வந்தது. அந்தக் குழு வரும் போது ஒரு அறிக்கை கேட்டார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் படுகொலைகள் சம்பந்தமாக இந்துக்கள் சார்பாக ஒரு அறிக்கை வேண்டும் என்று கேட்டார்கள். அந்த நேரத்தில், இதற்கு முன்னால் நடந்த படுகொலைகளில் யாரெல்லாம் குற்றவாளிகள்; என்னென்ன வழக்குகள் போடப்பட்டுள்ளன; எந்தெந்த வழக்குகளில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்; யாரெல்லாம் தண்டனை பெற்றுள்ளார்கள்; 1982 மீனாக்ஷிபுரம் மதமாற்றத்திற்குப் பிறகு, ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் இராம கோபாலன் அவர்களும் தாக்கப்பட்டதிலிருந்து, இன்றுவரை நடந்துள்ள சம்பவங்கள் அனைத்திலும் போடப்பட்ட வழக்குகளில் எத்தனை பேருக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன; தமிழக அரசு எத்தனை வழக்குகளை நியாயமாக நடத்தியுள்ளத, போன்ற விஷயங்களையெல்லாம் தொகுத்து அந்தக் குழுவினரிடம் கொடுக்க வேண்டும் என்கிற முயற்சி செய்யப்பட்டது.
ஆரம்பித்த உடனேயே, அனேகமாக கொலை செய்தவர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்தது. அப்படி விடுவிக்கப்பட்டவர்களே மீண்டும் கொலைசெய்துள்ளார்கள் என்பதும் தெரியவந்தது. 1992லிருந்து மொத்தம் 134 இந்துக்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றனர். 134 சம்பவங்களைப் பற்றியும் விவரங்கள் சேர்ப்பது கடினம் என்பதால், இந்தக் காலக்கட்டத்தை இரண்டாகப் பிரித்து, 1982 முதல் 1998 வரை முதல் பகுதியாகவும், 2006 முதல் தற்போது வரை இரண்டாவது பகுதியாகவும் பிரித்துக்கொண்டு ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன.
2006க்கு பின் பல வெளிநாடுகளின் உதவிகளோடு ஒரு பெரிய நெட்வொர்க் ஆக உருவெடுத்தது. 2006க்கு பின் நடந்த பயங்கரவாத நிகழ்வுகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது மட்டுமல்லாமல் மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தன என்கிற உண்மையும் தெரியவந்தது.
அதன் பிறகு இது சம்பந்தமாகப் பல இடங்களில் இதைப்பற்றி தகவல் சேகரிக்கபட்டன.
சுற்றுப்பயணம் செய்யப்பட்ட பகுதிகள் தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 5 லிருந்து 10 சதவீதம் மட்டுமே. இந்த 10 சதவீதப் பணிகளில் கிட்டத்தட்ட 450 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 450 சம்பவங்களும் மேம்போக்காக சேகரிக்கப்படவில்லை. பத்திரிகைச் செய்தி, காவல்துறை ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகள், முஸ்லிம்களின் பேச்சுக்கள் போன்ற ஆதாரங்களுடன் தான் சேகரிக்கப்பட்டுள்ளன. தகுந்த ஆதாரம் இல்லாமல் எந்தத்தகவலும், சம்பவமும் ஆவணப்படுத்தப்படவில்லை. தகுந்த ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்ட பிறகுதான் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இராம கோபாலன் மற்றும் பால கௌதமன் அவர்களின் உரை:
இராம கோபாலன் உரை
தமிழ்நாட்டில் யாருக்கும் எந்தக் கஷ்டமும் கிடையாது; இந்துக்கள் செளகரியாமாக இருக்கிறார்கள் என்கிற அபிப்பிராயம், தவறான அபிப்பிராயம் தமிழகத்தில் நிலவுகிறது. இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று இந்துக்களே முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விஷயங்கள் தெரியவில்லை. நான் தமிழ்நாடு முழுவதும் வருடத்தில் குறைந்தது 4 தடவை சுற்றுப்பயணம் செய்கிறேன். ஒவ்வொரு இடத்திலேயும் என்ன நடக்கிறது என்கிற விஷயங்கள் எல்லாம் தெரியும். எனக்குத் தெரிந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அந்த அந்த ஊர்களுக்குச் சென்று பார்த்துவிட்டு, அந்த ஊர் தலைவர்களிடம் பேசிவிட்டு, அவர்களுடைய கருத்தைத் தெரிந்துகொண்டு, அவர்கள் மூலமாகத்தான் இந்தக்காரியம் செய்யப்பட்டுள்ளது. தேவர் சமுதாயத்தின் தலைவர்கள், நாடார் சமுதாயத்தின் தலைவர்கள், என்று எல்லா சமுதாயத்தின் தலைவர்களையும் நேரில் சந்தித்துக் கடுமையான உழைப்பிலே தான் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக மக்கள் இந்த ஆவணப்படத்தை வாங்கிப் பயன்பெறவேண்டும்; இந்த ஆவணப்படங்களில் சொல்லப்பட்டுள்ள உண்மைகளைத் தெரிந்து கொண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும்.
இராம கோபாலன் அவர்களின் உரைக்குப் பிறகு, ஹிந்து முன்னணி மாநகரப் பொருளாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை வழங்கினார். பிறகு நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியை பத்திரிகையாளர் திரு. பி.ஆர். ஹரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.