×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் : ஆவணப்படத்தின் ஆங்கில இந்தி பதிப்புகள் வெளியீடு

Tuesday, 10 May 2016 16:41 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
தமிழகத்தில் பெருகிவரும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தீவிரவாத, பயங்கரவாத ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றிய “தமிழகத்தைக் குறி வைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்” என்கிற ஆவணப்படத்தை இந்து முன்னணி கடந்த ஃபிப்ரவரி மாதம் 21-ம் தேதி சென்னையில் வெளியிட்டது.
 
 
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் உயர்திரு.இராமகோபாலன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர்.சுப்பிரமணியன் சுவாமி, பாஜக தேசியச் செயலாளர் திரு.ஹெச்.ராஜா மற்றும் காஷ்மீர் பண்டிட் சமுதாயத் தலைவர் திரு.சுஷில் பண்டிட் ஆகியோர் 3 DVD-க்கள் கொண்ட அந்த ஆவணப்படத்தை வெளியிட்டனர்.
 
 
பின்னர் தில்லி சென்ற ராமகோபாலன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களையும் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரென் ரிஜிஜுவையும் சந்தித்து, தமிழகத்தில் நிலவி வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தேசிய புலனாய்வு நிறுவனத்தின் மூலம்  விசாரணை செய்து அதைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தார். 
 
 
 
 
 
Ramagopalan meets Kiran Rijiju
 
 
 
 
 
அதனைத் தொடர்ந்து, இந்த முக்கியமான ஆவணப்படத்தின் ஆங்கில மற்றும் ஹிந்தி பதிப்புகள் இந்தியாவின் தலைநகர் தில்லியில் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதியன்று வெளியிடப்பட்டன. தில்லியைச் சேர்ந்த “தமிழ் கலாச்சார மன்றம்” என்கிற அமைப்பினால் நடத்தப்பட்ட தமிழ் புத்தாண்டு விழாவில், இந்து முன்னணி நிறுவனர் உயர்திரு.இராமகோபாலன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர்.சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் ராணுவ வீரர் மேஜர் ஜெனரல் ககன் தீப் பக்ஷி, “RAW” அமைப்பின் முன்னாள் அதிகாரி திரு.ஆர்.பி.என்.சிங், எழுத்தாளரும் “Vigil Online” இணையதளத்தின் ஆசிரியருமான திருமதி.ராதா ராஜன் மற்றும் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஒருங்கிணப்பாளர் திரு.எம்.ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் ஆவணப்படத்தின் ஆங்கில மற்றும் ஹிந்தி பதிப்புகள் வெளியிடப்பட்டன.
 
 
 
 
 
 
English Hindi Documentary Release
 
 
 
 
விழாவின் தொடக்கத்தில் பேசிய முன்னாள் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பக்ஷி, “காஷ்மீர், காமரூபம் (அஸ்ஸாம்), கன்யாகுமரி (தமிழ்நாடு) ஆகிய மூன்று முக்கிய சக்தி பீடங்களிலும் பயங்கரவாதம் பற்றி எரிகின்றது. பாகிஸ்தானை அடித்தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளும், பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ (ISI) அமைப்பும் திட்டமிட்டு இந்தியாவின் மீதான இந்தத் தாக்குதல்களை நடத்துகின்றன. தற்போது இலங்கை வழியாகவும் அவர்களுடைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் பேசிய ஜெனரல் பக்ஷி, “தற்காப்பை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இனி பயன்படாது. போர்திறனுடன் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; தேச விரோத சக்திகளை ஒடுக்குவதற்குத் தேவையான சக்திவாய்ந்த யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும்” என்றும் கூறினார். இறுதியாக, “தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளை மீண்டும் குடியேற்றம் செய்வதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த சில நாட்களாக தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) நடந்து வரும் பிரச்சனையால் மேலும் 2000 அகதிகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால், இங்கிருந்தும் பலரை அகதிகளாகக் கொண்டு அடைக்கலம் அளிக்க வேண்டியிருக்கும்” என்று பேசி முடித்தார்.   
 
 
 
 
 
 
 
Major General Bakshi
 
 
 
 
 
அடுத்து ஆவணப்படத்தின் முக்கிய அமசங்களை எடுத்துரைத்தார் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பால கௌதமன். தமிழகத்தில் ஜிகாத் அமைப்புகள் எவ்வாறு காலூன்றி செயல்படுகின்றன என்பதை வரைபடங்களுடன் விளக்கினார். பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தின் பாதைகள் முழுவதும் எவ்வாறு அடிப்படைவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, அதன் மூலம் அவர்கள் தங்கள் தேசவிரோதச் செயல்களை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதை விரிவாக விளக்கினார். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் தொழிலாளர் நலச்சங்கங்களில் இந்துத் தொழிலாளர்களும் தங்கள் பாதுகாப்பிற்காக அங்கத்தினர்களாகச் சேரும் அவல நிலை ஏற்பட்டிருப்பதையும் எடுத்துக் காட்டினார். 
 
 
“சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தமிழகத்தைத் தீவிரவாத பூமியாக மாற்றவில்லை; தீவிரவாத தமிழகம் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்குத் தீவிரவாதிகளை அனுப்புகிறது” என்று கூறிய கௌதமன், “தமிழகத்தில் நடந்து வரும் ஜிகாத் இந்து-முஸ்லிம் சமுதாயங்களுக்கிடையயேயான மோதல் அல்ல; தேசத்திற்கு எதிரான அபாயம் ஆகும்” என்று கூறி முடித்தார்.      
 
 
 
 
 
Bala Gauthaman Speech
 
 
 
 
 
 
அவருக்கு அடுத்தபடியாகப் பேசிய இந்திய உளவு அமைப்பான R&AW அமைப்பின் முன்னாள் இணைச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.என். சிங், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் மூலமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படும் அபாயங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். “நமது பூமியில் இருந்து பிறந்த மதக்கொள்கைகள் நமக்கு முக்தி அளிக்கக்கூடியவை; ஆனால் நமது தேசத்துக்கு வெளியே உள்ள மதக்கொள்கைகள் அழிவுக்குத்தான் வழிவகுக்கும்” என்று கூறினார். 
     
 
 
அவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் ராதாராஜன், இந்திய மண்ணில் நடக்கும் பயங்கரவாதத்தையும் சர்வதேச அளவில் பல நாடுகளில் நடந்து வரும் பயங்கரவாதத்தையும் எடுத்துக்கூறி, அவைகளுக்கு இடையே இருக்கும் கொள்கை மற்றும் நிதி தொடர்புகளையும் விளக்கிப் பேசினார். அயல்நாட்டு நிதியுதவியுடன் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் மூலம் எவ்வாறு நம்முடைய நாட்டு நலன் பாதிக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் பாகிஸ்தான் கொள்கையிலும், அமெரிக்க உறவுக் கொள்கையிலும் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்திய அவர், நமது உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் அது அவசியம் என்றார். தமிழகத்தில் நடந்து வரும் ஜிகாத் தாக்குதல்கள் பற்றியும் விரிவாகப் பேசிய ராதாராஜன், மத்திய அரசு அவ்விஷயத்தில் உடனடியாக உரிய கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
 
இறுதியாக “தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலை” என்கிற தலைப்பில் பேசிய டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமி, “தமிழகத்தில் நிலவி வரும் பயங்கரவாதச் சூழலை அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவருவது அவ்வளவு ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஆளும் அரசு வலிமையான அரசாக இருந்தால் இது சாத்தியமே. அரசு வலிமையானதாக இருக்கும் பக்ஷத்தில், தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்கி, தேச விரோத சக்திகளைத் தனிமைப் படுத்தி அழிக்கலாம்” என்றார். அதற்கு உதாரணமாக, அவர் மத்திய அமைச்சராக இருந்த பிரதமர் சந்திரசேகர் அரசு 1990-ல் தி.மு.க அரசை பதவியிலிருந்து விலக்கியதைச் சுட்டிக் காண்பித்தார். 
 
 
 
 
 
 
Delegates
 
 
 
 
 
 
“எதிர் தாக்குதலுக்குப் பயந்து ஹிந்துக்கள் வன்முறையை எதிர்த்து நிற்பதில்லை” என்று கூறிய ஸ்வாமி, ”அவர்கள் தங்களுடைய இந்தப் பலவீனமான போக்கிற்கு காரணங்கள் கண்டுபிடிக்கும் மனப்பாங்கு உடையவர்கள்” என்றார். “சௌதி அரேபியாவில், ஹிந்துக்கள் தங்கள் வீட்டின் உள்ளே கூட பூஜைகள் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை; ஆனால் இந்தியாவில், மாற்று மதத்தவர்களுக்குப் பரிபூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக் காட்டினார்.  
 
 
 
“தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கையுடன் இராம கோபாலன் உள்துறை அம்மைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை சந்தித்தது நல்லது” என்று கூறிய ஸ்வாமி, “35% ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்து பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்த முடியுமென்றால், 80% ஹிந்துக்கள் ஒற்றுமை கொண்டால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை எண்ணிப்பாருங்கள்” என்று கூறிய டாக்டர் ஸ்வாமி, ”இந்திய நாட்டில் அமைதி நிலவுவதற்கு ஹிந்து பெரும்பான்மையினரின் ஒற்றுமை வேண்டும்” என்றார். 
 
 
 
 
 
Ramagopalan Rajnath Singh Meet
 
 
 
 
 
 
அதனைத் தொடர்ந்து ஆவணப்படத்தின் ஆங்கிலப் பதிப்பும், ஹிந்திப் பதிப்பும் வெளியிடப்பட்டன. முன்னதாக, தமிழ் கலாச்சார மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஆர்.வெங்கடேஷ் வரவேற்புரை வழங்கினார். “காஷ்மீரில் வேர்கள்” அமைப்பின் நிறுவனர் சுஷில் பண்டிட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  
 
 
இறுதியாக அரங்கில் இருந்த அனைவரும் தேசிய கீதம் பாட விழா இனிது நிறைவுற்றது. 
Read 548 times
Rate this item
(3 votes)
Last modified on Saturday, 04 June 2016 17:51

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment