×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

கங்கையைக் கொன்றான்! ஜோர்டானை வென்றான்! ஜம் ஜம்மில் நீர் கோவைப் பாடினான்!

Monday, 18 July 2016 10:37 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

யார் இவர் ? தெரிகிறதா?
இவர் ஓட்டுக்காக வீசிய அடுக்கு மொழியை பாருங்கள்!
//கங்கை கொண்டான்! கடாரம் வென்றான்! கலிங்கத்துப் போர் பரணி பாடினான்!//
யார் என்று இப்போது நினைவுக்கு வந்திருக்குமே!.

 

KARUNANIDHI thmni 1540750f

 

 

 

 

இந்த வசன கர்த்தாவின் சமீபத்திய பேட்டி இது.

 

கேள்வி :- தபால் அலுவலகங்களில் புனித "கங்கை நீர்" விற்பனை அமோகமாக நடை பெறுகிறதாமே?

பதில்: பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால், இதே தபால் அலுவலகங்களில் திருநீறு, குங்குமம் ஆகியவையும் விற்பனைக்கு வந்து விடும். பக்தர்கள் கவலைப்படத் தேவையில்லை. "மதச் சார்பற்ற குடியரசு" என இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த அளவுக்குக் கேவலப்படுத்தப்பட்டு வருவதை, யாராலும் கற்பனை செய்தும் பார்த்திட இயலாது.

(http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-opposes-sale-gangajal-post-offices-258155.html)

 


நியாயம் தான்! குங்கும வியாபாரமும் வந்து விடுமாம்!


மஞ்சள் குங்குமத்தின் பெயரில் மஞ்சள் பத்திரிகை நடத்தியவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!


2014 ஆம் ஆண்டு ஜம் ஜம் சென்று நீர் எடுத்து வர முஸ்லிம்களுக்கு அரசு கொடுத்த மானியம் 533 கோடி!


ஆண்டுதோறும் பெத்தலஹேம், நாசரத், ஜெருசலம் போன்ற ஊர்களைச் சுற்றிவிட்டு ஜோர்டான் நதியில் தண்ணி எடுக்கும் கிறிஸ்தவர்களுக்கு அரசு கொடுத்துவரும் ஊக்கத் தொகை 20 ஆயிரம்!


இந்துக்களின் மத நம்பிக்கையை வைத்து 200 மில்லி கங்கை நீர் ரூ.15, 500 மில்லி கங்கை நீர் ரூ.22 என்று அரசு விற்று வருவாய் ஈட்டப் போகிறது!


நம் வசன கர்த்தா சொல்வதைப் போல
//"மதச் சார்பற்ற குடியரசு" என இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த அளவுக்குக் கேவலப்படுத்தப்பட்டு வருவதை, யாராலும் கற்பனை செய்தும் பார்த்திட இயலாது.//
என்பது சரியாகத்தான் இருக்கிறது.


ஜம் ஜம் சென்று நீர் எடுக்கவும், ஜோர்டான் நதிக்குச் சென்று நீர் எடுக்கவும் அரசு கோடிகளை அள்ளி வீசுவதால் காப்பாற்றப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மை, கங்கை நீரை விலைக்கு விற்றதால் சின்னாப்பின்னமாகி விட்டது என்று சொன்னால் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் கங்கையால் பாவம் வந்துவிட்டதாக நம் வசன கர்த்தா சொல்வதைப் பார்த்தால் அவருக்கு //அருள் மணக்குது அன்பு சுரக்குது அரபு நாட்டிலே// என்ற அவர் கட்சிக்காரரின் பாடலில் மட்டுமே நம்பிக்கை உள்ளது போல் தோன்றுகிறது.


கங்கையைக் கொன்றான்
நம் நாட்டிலுள்ள நீர் நிலைகளை உயர்வாகச் சொல்ல ’கங்கை’ என்று அழைப்பது வழக்கம். பாரம்பரியம் தெரிந்த மீனவர்கள், கடலை கங்கை என்றே அழைப்பார்கள். அதனால்தான் கடலோரத்தில் அமைந்த கோயில்களிலுள்ள அம்மனுக்கு கங்கை அம்மன் என்று பெயர். பல ஆற்றங்கரைகளில் கங்கை அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. ஜம் ஜம், ஜோர்டான் நீருக்கு நிகரான பெயராக கங்கை இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத நம் வசன கர்த்தா, அந்தப் பெயருக்கு காரணம் நீர் நிலைகள் என்பதை அறிந்து, ஆறு, குளம், ஏரி என்று நீர் நிலைகளைப் பட்டா போட்டார் ! மணலைச் சுரண்டினார்! அருள் மணக்கும் அன்பு சுரக்கும் அரபு நாடாக நம் நாட்டை மாற்றியுள்ளார். இந்தச் சாதனைக்காக அவருக்கு ’கங்கையைக் கொன்றான்’ என்ற பட்டத்தைக் குயக்கோடன் கொடுத்துள்ளார். இந்தப் பட்டம் பெற்ற நம் வசன கர்த்தா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம், ஈரான் போன்ற நாடுகளில் ISI முத்திரைக்கும் மேலே special தரத்துடன் செயல்படும் ISIS ன் அன்புச் சுரப்பையும், அருள் மணத்தையும் இந்த கங்கை ஓடும் பூமியில் ஏற்படுத்துவார் போலும்!

//நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை//

ஒரு நதியில் நல்ல நீர் இல்லாமல் போவது அந்த நதியின் பிழை இல்லை என்ற இந்தக் கம்ப இராமாயண வரி, பிற்காலத்தில் வரவிருக்கும் கங்கையைக் கொன்றானை மனதில் வைத்து கம்பனால் எழுதப்பட்டதோ என்னவோ!
ரம்ஜான் நோம்புக் கஞ்சிக்கு தமிழக அரசு 4,600 டன் அரிசி கொடுத்தது. அதற்கு அரசு செலவிட்டது 2.14 கோடி. அப்படியென்றால் கிலோவிற்கு ரூ.4.65. இந்த அடிப்படையில் பார்த்தால், மத்திய அரசால் மானியத்தில் தமிழக அரசிற்கு வழங்கப்பட்ட அரிசியைத்தான் ஜெயலலிதா கொடுத்துள்ளார். //பா.ஜ.க ஆட்சி தொடர்ந்தால்// என்று பதிலைத் தொடங்கும் வசன கர்த்தா, பா.ஜ.க அரசு கொடுத்த மானிய அரிசியை ரம்ஜான் நோம்புக்குக் கொடுத்ததை மதச்சார்பின்மைக்கு இழுக்கு என்று ஏன் சொல்லவில்லை?


ரம்ஜான் நோம்பு உடலுக்கும் மனதிற்கும் நல்லது, அமாவாசை கார்த்திகை விரதங்கள் மூடத்தனமானவை என்று சொன்னவர்தானே நம் வசன கர்த்தா! இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை! சங்க இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் குறிப்பிடப்பட்ட நோம்பு ரம்ஜான் நோம்பு என்று சொன்னாலும் சொல்வார் நம் வசன கர்த்தா! பிள்ளைப் பிறை என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. மூன்றாம் பிறையை அது குறிப்பதனால் கண்ணகி பேகம் என்று கூட அவர் எழுதலாம்! கண்ணகி சிலைக்கு பர்தா கூடப் போடலாம்! ஆனால் கங்கையை அவரால் அணையிட முடியாதே!


சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை, தொண்டை மன்னன் இளந்திரையனிடம் உதவி கேட்டு நிற்கும் அரசர்களின் கூட்டத்தை, கங்கைக் கரையில் நீத்தார் சடங்கு செய்ய படகில் முந்தியடித்துக் கொண்டு போகும் கூட்டத்துடன் ஒப்பிடுகிறது.

// பொன்கொழித்து இழிதரும் போக்குஅருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்// (பெரும்பாணாற்றுப்படை 431-432)

காஞ்சியை ஆண்ட மன்னன் ஒரு தமிழன், அவனைப் புகழ்ந்து பாடுபவர் சங்கப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்! இதில் வசன கர்த்தாவிற்கு வசனம் இருக்காது. அப்படியென்றால், கங்கைக்கரையில் ஈமைக் கிரியைகளைச் செய்யும் பழக்கம் சங்க காலம் முதல் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வருவதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.


இதே கருத்தை கலித்தொகையின் 60 வது பாடல் சுட்டிக்காட்டுகிறது. காதலன், காதலியின் மீதுள்ள ஏக்கத்தால் அவன் படும் அவஸ்தையை தோழியின் மூலம் தூது அனுப்புகிறான். தூது சென்ற தோழியிடம் வாரணாசியில் (காசி) இறந்து போன முகம் தெரியாதவர்களுக்கெல்லாம் கருமம் செய்வதுபோல, தெருவிலுள்ளவனுக்கெல்லாம் நீ ஏன் கவலைப் படவேண்டும் என்று காதலி மறுமொழி கொடுத்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்தக் கலிப்பாவை கலித்தொகை காட்சிகள் எழுதிய வசன கர்த்தா படித்தாரோ என்னவோ!

//தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ
வாரணவாசி பதம் பெயர்தல்// (கலித்தொகை, பாடல் 60)

நம் வசன கர்த்தாவின் படைப்பில் திரைக்கு வந்தது பூம்புகார்! கல்பனா என்ற கன்னட சினிமா நடிகையை மாதிரியாகக் கொண்டு வடிக்கப்பட்டச் சிலைதான் தமிழகத்தில் அரசியல் ஆக்கப்பட்ட கண்ணகி சிலை. மங்கள தேவியை, காவிய நாயகியை தலைவிரி கோலமாக வடித்த தமிழ் மரபரியா முத்தமிழ் வித்தவர், இதற்கு நேர்மாறாக தெய்வமாகக் கண்ணகியை பாவித்துச் சிலை வடித்து பூசனை செய்தவன் சேர மன்னன் செங்குட்டுவன். அவன் அமைத்த கண்ணகி ஆலயம் தேனி மாவட்டத்தை ஒட்டிய கேரள எல்லையில் அமைந்துள்ளது. இந்தச் சிலையை வடிக்க இமயத்திலிருந்து கல் எடுத்து கங்கைக் கரையில் நூல்களின் கூறுபாட்டை உணர்ந்தோரைக் கொண்டு சேரமன்னன் நீராட்டியதாக சொல்கிறது சிலப்பதிகாரத்தின் நீர்ப்படைக் காதை.

செங்குட்டுவன் தன் சின வேல் தானையொடு
கங்கைப் பேர் யாற்றுக் கரை அகம் புகுந்து
பால் படு மரபின் பத்தினிக் கடவுளை
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து (சிலப்பதிகாரம், நீர்ப்படைக் காதை)

பூம்புகார் சினிமாவிற்கு கதை எழுதும்போதாவது நிதானமாகப் படித்திருந்தால் நம் வசன கர்த்தாவிற்கு கங்கையின் அருமை தெரிந்திருக்கும்.

பாரத நாட்டில் கப்பல் படை அமைத்த முதல் மன்னன் என்ற பெருமையைப் பெற்ற இராசேந்திரச் சோழன், சிவனாரை நீராட்ட கங்கை நீரைத் தன் தலையில் சுமந்து வந்தான். அந்தப் பொற்குடத்தை அவன் வைத்த இடம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள த்ரைலோகி. இராசேந்திரச் சோழனால் அமைக்கப்பட்ட நீர் நிலையின் பெயர் சோழ கங்கம். மேடையில் கங்கை கொண்டான் என்று கரகரப்புத் தொண்டையில் பேசும் போது, தஞ்சைத் தரனியிலுள்ள ஊர்களின் வரலாற்றை நினைவு கூர்ந்திருந்தால் நம் வசன கர்த்தாவிற்கு ’கங்கை கோபம்’ வந்திருக்காது!

தமிழர்களின் உயர்வான மரபைக் காப்பாற்ற பா.ஜ.க அரசு, கங்கை நீரை அஞ்சல் நிலையங்களில் கிடைக்கச் செய்து தொண்டமான் இளந்திரையனும், சேரன் செங்குட்டுவனும் இராசேந்திரச் சோழனும் செய்த நற்செயல்களை நாமும் செய்ய வசதி செய்து தந்துள்ளது. அன்பையும் அருளையும் ISIS கருணையுடன் பாலை வனத்தில் நுகரும் நிதி வசன கர்த்தாவிற்கு கங்கை நீர் சாக்கடையே! அதைக் கொடுக்கும் அரசு மதவாதமே! தொண்டைமானும், சேரனும், சோழனும் மதவாதிகளே!

Read 7103 times
Rate this item
(2 votes)
Last modified on Monday, 18 July 2016 10:49

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link Ranganathan Thursday, 27 October 2016 16:12 posted by Ranganathan

    Excellent articles. Please write to me

Leave a comment