×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

குமரி மீனவ போராட்டம் உண்மை நிலை - தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி Featured

Friday, 15 December 2017 17:03 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் பிரிவினைவாதத்தை தூண்டவேண்டும், அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்ற நோக்கத்திலும் கிறிஸ்துவ மிஷினரிகள் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்சாரத்தை நாடு முழுவதும் பரப்பி தேசியத்தை பலவீனப்படுத்தப் பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்து சர்ச் செய்யும் மோசடிகளை தோலுரித்துக்காட்ட ஒரு வீடியோ பதிவை பதிவிட்டிருந்தோம். அதைத்தொடர்ந்து வந்த சர்சையில் ஒரு பகுதியாக இன்று (15.12.2017) தி ஹிந்து தமிழில் மீனவர் போராட்டத்தில் தீய நோக்கத்தை பகிரங்கமாக வெளிக்கொண்டு வந்துள்ள பத்திரிக்கை பேட்டியை தி ஹிந்து தமிழ் பத்திரிக்கை பின்வருமாறு பிரசுரித்துள்ளது.

//புயல் நிவாரண மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு எந்திரத்தை முடக்கவும், மீனவ சமுதாயத்துக்கு துரோகம் செய்யும் முயற்சியும் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வலம் வந்தது.

சென்னையில் வசிக்கும் சமூகவியல் ஆராய்ச்சியாளரான, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகவுதமன், ‘குமரி மாவட்டத்தில் மீனவர்களை சுயமாக சிந்திக்க விடாமல், அனைத்து முடிவுகளையும் பாதிரியார்களே எடுக்கின்றனர்’ என பகிரங்கமாக குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: ஒக்கி புயல் பாதிப்பு நடவடிக்கை துரிதமாக நடந்து வந்தது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக வந்து, மீனவப் பிரதிநிதிகளை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். கேரள கடல் பகுதியில் இருந்து இந்திய கடற்படையினர் மீனவர்களை வேகமாக மீட்கத் தொடங்கினர். ஆனால், 5 நாட்களுக்குப் பின்னர் மீனவர் பிரச்சினையை திசைதிருப்ப சூழ்ச்சி நடந்தது. இதில் சின்னத்துறை பாதிரியார் ஷபின், பூத்துறை பாதிரியார் ஆன்றோ ஜோரிஷ் ஆகியோர் தீவிரம் காட்டினர். பாதிரியார் ஷபின், பச்சை தமிழகம் அமைப்பின் தலைவர் சுப உதயகுமாரின் நண்பர். இவர்கள்தான், கூடங்குளம் அணு உலை போராட்டத்தையும் முன்னின்று நடத்தியவர்கள்.

ஆர்.கே.நகர் தேர்தல்

மெரினா, நெடுவாசல் போராட்டத்துக்குப் பின், தமிழகத்தில் வேறு பிரச்சினைகள் இல்லை. இந்நேரத்தில், மீனவர்கள் காணாமல்போன விஷயத்தை ஆயுதமாகப் பயன்படுத்தினர். மீனவர்களை மீட்க அரசு எதுவும் செய்யவில்லை என்ற கருத்தை திணித்து, அவர்களின் உணர்வுகளைத் தூண்டி, தீவிர போராட்டக் களமாக மாற்றினர். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து தேர்தல்களிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக மீனவ வாக்கு வங்கிகள் உள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர் வாக்குகள் நிறைந்துள்ளன. இப்போராட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள மீனவ மக்களிடம் அரசுக்கு எதிரான கருத்தைக் கொண்டு போய் சேர்ப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மத்திய அரசின் நடவடிக்கையால் வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்தவ அமைப்புகளுக்கு வரும் நிதி ஆதாரங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதற்கான எதிர்ப்பையும் இப்போராட்டம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். மீனவர்கள் இயற்கை சீற்றத்தில் காணாமல் போவது என்பது எதிர்பாராதது. அதில் மீட்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளதா என்பதைத்தான் பார்க்கவேண்டும். அதை அரசியல் ஆக்கக்கூடாது. அனைத்து பகுதிகளைப் போலவும் விஏஓ, தாசில்தார் கட்டுப்பாட்டில் மீனவ கிராமங்களின் செயல்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என்றார் பால கவுதமன்.//

  

அதன் இணைப்பை கீழே காணலாம்

http://tamil.thehindu.com/tamilnadu/article21669675.ece

Read 2235 times
Rate this item
(0 votes)
Last modified on Friday, 15 December 2017 17:47

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment