×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

மாதவனை துதிக்கும் ஓ.எஸ். அருண் மதமாற்றத்திற்கு துணை போகலாமா? Featured

காலையில் இந்த அழைப்பிதழை பார்த்தவுடன் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

ஓ.எஸ். அருண் அவர்களே! உங்களுடைய கிருஷ்ண பஜன், அபங்க் ஆகியவற்றை கேட்டு பலமுறை வியந்திருக்கிறேன்.

உங்கள் இசையில் என்னை மறந்திருக்கிறேன். என்னைப் போல பலர் உங்களுடைய குரலில் ஒலிக்கும் இசையில் மயங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டு இருக்கிறீர்கள்.

உலகம் முழுவதும் பல மேடை கச்சேரிகள் செய்து புகழின் உச்சியில் இருக்கிறீர்கள். கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறீர்கள்.

துளசிதாசர், கபீர்தாசர், சூர்தாசர் போன்றவர்களின் கீர்த்தனைகளையும், பல்வேறு பஜனைகள் மற்றும் அபங்க்களை பாடிய வாயினால், நம் நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழித்துக்கொண்டிருக்கும் கிறிஸ்தவ மதத்திற்காக பாட எப்படி துணிந்தீர்கள்?

illayaraja deniesஇந்த இடத்தில் உங்களுக்கு ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். ஈ.வே.ரா வாழ்க்கை வரலாறு சினிமா படமாக்கப்பட்ட போது அதில் இசையமைக்க இளையாராஜா அவர்கள் மறுத்து விட்டார். அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு? ஈ.வே.ரா கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். நாத்திகவாதி. ஆனால் நான் கடவுளை வணங்குபவன். கடவுள் மேல் நம்பிக்கையுடைவன் இப்படி முழுவதமாக மாறுபட்ட கருத்து கொண்ட ஒருவரின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு என்னால் இசையமைக்க முடியாது என்று மறுத்து விட்டார். திரைப்படங்களுக்கு இசையமைப்பு அவருடைய தொழிலாக இருந்தும் கூட தான் கொண்ட கொள்கையின் பிடிப்பால் இசையமைக்க மறுத்தார். இதுவல்லவோ ஒரு முன்னுதாரணம்!

இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் உஞ்சவிருத்தி செய்து தானே வாழ்ந்து வந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்நாட்டை ஆண்ட ராஜா ”என் பெயரில் கீர்த்தனைகள் பாடு என்ற போது ராமனை பாடிய வாயால் நான் வேறு சாதாரண மனிதர்களை பாட மாட்டேன்” என்றார். எப்பேர்பட்ட பக்தி அது. அந்த மாதிரியான பக்தியில் உருவான பாடல்களை தானே நீங்கள் மேடையில் பாடி கைத்தட்டல் பெற்று, பெரும் பணம் சம்பாதித்து புகழின் உச்சியில் இருக்கிறீர்கள். உஞ்சவிருத்தி செய்து சாப்பிட்ட நிலையிலும் அவர் தன் பக்தியை விட்டு விடவில்லை. ஆனால் நீங்கள்?

 

 

 

 

 

 

 

நம் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், ஏன் இந்த நாட்டில் உருவான அனைத்து சங்கீதங்களும், அனைத்து கலைகளும் வெறும் பொழுதுபோக்கிற்காகவும், பணம் சம்பாதிபதற்காகவும் ஏற்பட்டவை அல்ல. முற்காலத்தில் எந்த கலைஞனும் அதை அப்படி பார்க்கவும் இல்லை. அவை அனைத்தும் மக்கள் மனதில் பக்தியை வளர்ப்பதற்காக இறைவனால் அளிக்கப்பட்டது தானே! ஆயிரமாயிரம் கீர்த்தனைகள் எழுதிய மகான்கள் எல்லாம் வெறும் இசைக்காகவும், புகழுக்காகவும், காசுக்குமா எழுதினார்கள். அவர்களின் தன்னலமற்ற தூய பக்தியின் விளைவு தானே காலத்தால் அழியாத கீர்த்தனைகளும், பஜனை பாடல்களும். ஊத்துக்காடு வெங்கட சுப்பையருக்கு இறைவனே இசையை கற்பித்தாரே! இவைகளையெல்லாம் நீங்கள் அறியாததா? எத்தனை மேடைகளில் அவருடைய பாடல்களை பாடி கைதட்டல் பெற்று இருப்பீர்கள்?

invitation quotes

அந்த அழைப்பிதழில் பல நூற்றாண்டுகளைக் கடந்த காலத்தால் அழியாத கிறிஸ்தவ கீர்த்தனைகள் என்று போட்டு இருக்கிறதே! அதை கவனித்தீர்களா? ”கிறிஸ்தவ கீர்த்தனைகள்” அவையும் நம் மகான்கள் இறைவனே கதியென்று அவன் பாதத்தில் சரணாகதியடைந்து சுயநலமின்றி தூய பக்தியுடன் எழுதியவைகளும் ஒன்றாகுமா? அந்த மதம் எப்போது தோன்றியது அதன் வரலாறு தங்களுக்குத் தெரியுமா? இன்று கரையான் போல் நம் நாட்டின் பண்பையும் கலாச்சாரத்தையும் சிறிது சிறிதாக சீரழித்துக்கொண்டு இருக்கிறார்களே அதைப் பற்றி யோசித்தீர்களா?

பல நூற்றாண்டுகளைக் கடந்த காலத்தால் அழியாத கிறிஸ்தவ கீர்த்தனைகள் - யாரை ஏமாற்ற இந்த வார்த்தை பிரயோகம்? இந்த வார்த்தை பிரயோகம் நம் அப்பாவி இந்து மக்களை மதமாற்றும் முயற்சி என்பதை நீங்கள் உணரவில்லையா?

 

 

நீங்கள் முதலில் ஆலாபனா என்ற அமைப்பை உருவாக்கி இளம் கலைஞர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சி பல இளம் கலைஞர்கள் இந்த பாரம்பரிய இசையை கற்பதற்கும் அதன் மூலம் இந்த பாராம்பரிய இசை அழியாமல் காப்பாற்றவும் வழிவகுக்கும். அதற்கு என் பாராட்டுக்கள்! அதே சமயம், இது மட்டும் எனக்கு மனநிறைவு தரவில்லை மேலும் ஏதாவது இந்த சமுதாயத்திற்கு நான் பயனுள்ளதாக செய்யவேண்டும் என்று நானும் என் மனைவியும் நினைத்தோம் அதற்காக ரத்ன சங்கமம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம் என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் பேட்டி அளித்து உள்ளீர்கள். (Link: https://timesofindia.indiatimes.com/city/chennai/Vocalist-O-S-Arun-to-screen-documentary-on-Alapana-Trust/articleshow/54542914.cms)

அந்த அமைப்பின் மூலம் முதியோர் இல்லம், ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அனாதை இல்லம் போன்ற இடங்களுக்குச் சென்று காசு செலவழித்து கச்சேரி கேட்க முடியாத அவர்களுக்காக கச்சேரி செய்தும், உணவு வழங்கியும் உதவி வருகிறீர்கள். வரவேற்க வேண்டிய விஷயம். உங்கள் சமூக பொறுப்பு பாராட்டுதலுக்குரியது. இப்படிப்பட்ட நல்ல காரியங்களை செய்யும் நீங்களே இம்மாதிரியான ஒரு இழிவுக்கு வழி வகுக்கலாமா?


இந்த அமைப்பைக் கொண்டு நீங்கள், சிறுமலர்கள், அன்னை பாத்திமா குழந்தைகள் நலச் சங்கம் என்று கிறிஸ்தவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்குச் சென்று உங்கள் கச்சேரியை நடத்தியுள்ளீர்கள். இப்படி தொண்டு நிறுவனம் நடத்துகிறோம் என்கிற போர்வையில் நடக்கும் அராஜக மதமாற்றங்களை நீங்கள் அறிவீர்களா? (Link: http://www.osarun.com/programs.html)


மழை என்ற பெயரில் மஹாகவி பாரதியாரின் பாடல்களை ஆல்பமாக தொகுத்து பாடியுள்ளீர்களே உண்மையிலேயே பாரதியை உணர்ந்து இருந்தீர்களானால் இப்படி ஒரு செயலை செய்ய துணிந்து இருப்பீர்களா?

 

yeshvinpughal

முன்பே யேசுவின் புகழ் என்றொரு ஆல்பம் செய்து இருக்கிறீர்கள். என்னைப் போன்ற பலரின் கேள்வி என்னவென்றால் பாரதி, சூர்தாசர், துளசிதாசர், சத்சங்க பஜனைகள், மீரா பஜன், அபங்க் என்று பாடிய நீங்கள் யேசு புகழ் பாடியது நம் முன்னோர்களுக்கு நீங்கள் செய்த அநீதியாகாதா என்பதே! (Link: http://www.osarun.com/links.html)

 

நம் நாட்டின் பாரம்பரிய இசையான கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் தேர்ந்தவரான நீங்கள், நம் நாட்டை அடிமைப்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து, நம் நாட்டின் செல்வங்களை எல்லாம் சூறையாடிச் சென்று, நம் மக்களை கட்டாய மதமாற்றம் செய்து, நம் பண்பாட்டை அழித்து, நாசம் செய்த கிறிஸ்தவ மத பாடல்களை பாடுவது நீங்கள் கற்ற அந்த வித்தைக்கு அழகா?

 

இது நீங்கள் கற்ற அந்த வித்தைக்கும், அந்த வித்தையை உங்களுக்கு குறைவற அளித்த நாம் போற்றும்  சரஸ்வதி தேவிக்கும், நம் சங்கீத முன்னோர்களுக்கும், உங்களுக்கு இந்த சங்கீதத்தை அளித்த குருவுக்கும் செய்யும் தூரோகம் என்பதை நீங்கள் அறியவில்லையா?


மார்கழி மாத இசை நிகழ்ச்சி என்பது நம் பாரம்பரியத்தை காக்க ஏற்படுத்தப்பட்டது. இசை நிகழ்ச்சிகளை நடத்தும் சபாக்கள் நம் பாரம்பரியமான கர்நாடக இசையை காக்கவும் அவற்றை கொண்டாடவும், இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் செயலாற்றின. இனி அவைகளும் இந்த கலாச்சாரச் சீரழிவுக்குத் துணைச் செல்லுமா?

Read 2537 times
Rate this item
(5 votes)
Last modified on Monday, 06 August 2018 10:45

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment