×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

சபரிமலையில் வெளிப்பட்ட அசாதாரண பக்தி – வாழ்த்துவோம்! வணங்குவோம்! Featured

Saturday, 18 August 2018 17:54 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வருடந் தோறும் நிரபுத்ரி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் பொன்னேர் பூட்டி விதை விதைப்பார்கள். அதை ஆடியில் அறுவடை செய்வார்கள். அப்படி ஆடி மாத கடைசியில் தங்கள் வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்யும் முதல் அறுவடை நெல்லை இறைவனுக்கு நைவேத்தியமாக சமர்ப்பித்து வருவது வழக்கம். இது கேரளா முழுவதிலும் உள்ள அனைத்து கோவில்களிலும் நடக்கும். சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமிக்கும் பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த முதல் நெற்கதிர்களை எடுத்துக் கொண்டு தந்திரி மற்றும் மேல்சாந்தி தலைமை தாங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்று அதை தந்திரி மேல்சாந்திகளிடம் சமர்ப்பிக்க அவர்கள் சுவாமி ஐயப்பனுக்கு சமர்ப்பிப்பார்கள். அதன் பிறகு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதன் மூலம் சுபிட்சம் ஏற்படும் என்பது மட்டுமல்லாமல், நல்ல விளைச்சலை கொடுத்த இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் இதை கடைபிடித்து வருகிறார்கள்.

Pampa floodஇவ்வாண்டும் இந்த உற்சவம் ஆகஸ்டு 15ம் நடைபெற இருந்த நிலையில் கேரளா மாநிலம் முழுவதும் வரலாறு காணாத மழை பொழிந்து மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மோசமான வானிலையால் நிரபுத்ரி உற்சவம் நடக்குமா என்ற நிலை உருவானது. பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டு 100மீட்டர் உயரத்திற்கு காட்டாறாக ஓடத் தொடங்கியது. சபரிமலை கோவிலுக்குச் செல்லும் வழிகள் எங்கும் மரங்கள் முறிந்தும், நிலச்சரிவு ஏற்பட்டும் சாதாரணமாக்க் கோவிலை அணுக முடியாத நிலை. இந்த நிரபுத்ரி பூஜைக்காக வெளிமாநிலத்திலிருந்து வந்த பக்தர்களை கேரள அரசு பத்தனம்திட்டா, எருமேலி போன்ற இடங்களிலேயே தடுத்து திருப்பி அனுப்பியது. நிரபுத்ரி பூஜை நடக்குமா என்ற நிலை ஏற்பட்டது.

 

 

 

 

 

 

 

 

39196358 1094386820726934 3892002194295095296 n சபரிமலை கோவில் நிர்வாகம் நெற்கதிர் இல்லாமல் பூஜை மட்டும் நடத்துவது என்ற முடிவிற்கு வந்தது. இந்நிலையில் தான் அம்மாநிலத்தைச் சேர்ந்த ஜொபின், குருப், சந்தோஷ், ஜோபி என்னும் 4 இளைஞர்கள் இந்த நெற்கதிர்களை கோவிலுக்கு கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றனர். தங்கள் உயிரை துச்சமென என்றெண்ணி இறைவன் மேல் கொண்ட மாறாத பக்தியினால் இந்த இளைஞர்கள் நெற்கதிர்களை சுமந்து கொண்டு பம்பை நதியின் வெள்ளத்தை கடந்து அக்கரைச் சென்று இறைவனுக்கு சமர்ப்பித்தனர். இந்த நான்கு இளைஞர்களின் நம்பிக்கைக்கும் பக்திக்கும் உறுதுணையாக இருந்து காப்பாற்றியுள்ளார் சுவாமி ஐயப்பன். இந்தச் சம்பவம் அந்த இளைஞர்கள் கடவுள் மேல் கொண்ட அசாத்தியமான பக்தியையும் நம்பிக்கையையும் காட்டுகிறது. இந்த இளைஞர்களின் பக்தி நமக்கு நம் நாயன்மார்களை நினைவு கூற வைக்கிறது. இந்த இளைஞர்கள் நம் காலத்தில் வாழ்ந்து வரும் நாயன்மார்கள் என்றே சொல்லலாம். இது போல் இன்றும் நம் நாட்டில் ஏராளமானவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இறைவன் தன் பக்தர்களின் தொண்டை விளக்கம் காண வைப்பான் என்பதை நமக்கு பெரியுபுராணம் உணர்த்துகிறது. இந்த இளைஞர்களின் இறைத்தொண்டை பார்க்கும் போது நமக்கு அரிவாட்டாய நாயானாரின் இறைத்தொண்டுதான் நினைவுக்கு வருகிறது.

 

 

 

 

 

013 Arivataya Nayanar 1024x564 அரிவாட்டாய நாயனார் என்பவர் திருத்துறைபூண்டி அருகில் இருக்கும் கணமங்கலம் எனும் கிராமத்தில் வசித்துக்கொண்டு அவ்வூரில் வீற்றிருந்த சிவபெருமானுக்கு அனுதினமும் செந்நெல் கொண்டு அமுது படைத்து அத்துடன் கீரையும் மாவடுவும் சேர்த்து இறைவனுக்கு சமர்ப்பித்து இறைத்தொண்டாற்றி வந்தார். இவரின் பக்தியை உலகறியச் செய்ய இறைவன் திருவுளம் கொள்ளவே அவருக்கு சோதனைகள் அளித்தான். அவருக்கு வறுமையை கொடுத்தான். அந்நிலையிலும், அவர் தான் உணவருந்தாமல் நீர் மட்டும் அருந்தி, கூலிக்கு நெல்லறுத்து அதில் கிடைத்த செந்நெல்லில் இறைவனுக்கு அமுதுபடைத்து வந்தார். ஒரு சமயம் அவ்வாறு செந்நெல்லில் படைத்த அமுதையும் மாவடையும் எடுத்துக்கொண்டு வயல்வெளியில் செல்லும் போது வயல் இருந்த வெடிப்பில் கால் மாட்டிக்கொண்டு கீழே விழுந்தார் அவர் கையில் இருந்த அமுதும் பூமியில் கொட்டியது. மீண்டும் அமுது படைத்து இறைவனுக்கு சமர்ப்பிக்க நேரம் இல்லாத காரணத்தினால் அவருடைய திருத்தொண்டு தடைப்பட்டு விட்டதே என்று வருந்தி அரிவாளால் தன் கழுத்தை அறுத்துக்கொள்ள முற்பட்டார். அப்போது வெடிப்பிலிருந்து இறைவனின் கரம் வெளியாகி அவர் கையை பிடித்தது. அதே நேரத்தில் மாவடு கடிக்கும் சப்தமும் கேட்டது. நாயனார் தன் உணவை இறைவன் விரும்பி சாப்பிட்டதை எண்ணி ”சிறியேனின் உணவையும் உண்டருளியுள்ளாயே இறைவா என்று நா தழுதழுக்க கூறி கண்ணீர் மல்க இறைவனை வணங்கி நின்றார்.

 

 

இன்று இந்த இளைஞர்கள் வீரச்செயல் இந்த நாயனாரின் பக்திக்கு சிறிதும் குறைந்தது அல்ல. அன்று அந்த பக்தனின் தொண்டை விளக்கம் காட்ட இறைவன் அவருக்கு வைத்த பரிட்சையைப் போல், இன்று இந்த இளைஞர்களின் பக்தியையும், திருத்தொண்டையும் இந்த நிகழ்வின் மூலம் நமக்கு இறைவன் வெளிக்காட்டி இருக்கிறார்.

சபரிமலை சுவாமி ஐயப்ப தரிசனம் என்பது பக்திக்கும் தொண்டிற்குமானது. அது உரிமை போராட்டத்திற்கானது அல்ல. சமீபத்தில் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என்று முஸ்லீம் மதத்தைச் சார்ந்த ஒருவரால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உடன் இது மிக பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை குலைப்பதாக அமைந்தது.

உச்ச நீதிமன்றம், ஊடகங்கள் போன்றவை நம்முடைய மதநம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி வருகின்ற சூழ்நிலையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நம் மண்ணின் பாரம்பரியத்தையும், சம்பிரதாயங்களையும் காப்பாற்ற, வாழ்ந்து கொண்டு இருக்கும் இவர்களை சிரம் தாழ்ந்து வணங்குவோம்! நாயன்மார்கள், ஆழ்வார்களைப் வணங்குவது போல இவர்களும் நம் வணக்குரியவர்களே!

Read 742 times
Rate this item
(9 votes)
Last modified on Saturday, 18 August 2018 18:31

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment