×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
சமூகம்                       

சமூகம்                       

370வது சட்டப் பிரிவு பெண்களுக்கு எதிரானது - சசிதரூர் மனைவியான சுநந்தா ஆங்கில சேனலில் பேட்டி.

370வது சட்டப் பிரிவு பெண்களுக்கு எதிரானது. இந்த 370 வது சட்டம் உமர் அப்துல்லாவுக்கு தருகிற உரிமை அவரது சகோதரிக்கு தர மறுக்கிறது என்று கூறிய மோடி பேச்சினை மையமாக வைத்து NDTV யில் நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய சசி தரூர் மனைவியான சுநந்தா புஸ்கர் கூறியது:

இது 2006,2007,2008 கால கட்டங்களில் நடந்த விஷயம். என்னுடைய சொந்த மாநிலமான ஜம்முவில் ஒரு நிலம் வாங்க நினைத்தேன். நான் இது சம்பந்தமாக, ஒரு அதிகாரியை தொடர்பு கொண்ட போது, நீங்கள் ஜம்முவில் நிலம் வாங்க முடியாது என்றார். ஏனென்றால், எனக்கு அப்பொழுது மலையாளி ஒருவருடன் திருமண முடிந்து இருந்தது. அவர் என் முன்னாள் கணவர். அவர் உயிருடன் இல்லை. நான் அப்பொழுது ஒரு விதவை. இருந்தும் என்னால் அங்கு நிலம் வாங்க முடியவில்லை. நான் 2006,2007,2008 இந்த மூன்று வருடங்களும் தொடர்ந்து முயற்சி செய்தேன். ஆனால் 370வது சட்டப் பிரிவின்படி நான் ஜம்முவில், வெளி மாநிலத்தை மணந்தவள் என்ற 'ஒரேயொரு காரணத்தால்’ நிலம் வாங்கும் உரிமையை இழந்து விட்டதாக கூறினார்கள். எனது குழந்தைகளும் வாங்க முடியாது என்ற நிலை இன்றும் உள்ளது. என்னுடைய தோழி, காஷ்மீரியை மணந்தாள். அவளுக்கு நிலம் வாங்க அனுமதி உள்ளது. அவளது குழந்தைகளுக்கும் அந்த உரிமை உள்ளது.

பெங்களூரு குண்டு வெடிப்பின் பிண்ணனியில் தமிழக முஸ்லிம் அறக்கட்டளை

தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் அல் உம்மா இயக்கம் ஒரு முஸ்லிம் அறக்கட்டளை அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஏப்ரல் 17ம் தேதி பெங்களூரு பா ஜ க அலுவலகத்துக்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டு இருப்பதாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்

நாத்திகவாதம், மதமாற்றம், பிரிவினைவாதம், போலி மதச் சார்பின்மை போன்ற எண்ணற்ற சக்திகள் நமது இந்து தர்மத்தை நிலை குலைய பல விதமான முயற்சிகளை செய்கின்றன. இந்த நாசகார சக்திகள் அந்நிய உதவியும், ஊக்கமும் பெற்று பட்டி தொட்டிதோறும் இந்து விரோத செயல்களை செய்து வருகின்றன. இவற்றிற்கு சாவு மணி அடிக்க தமிழகத்தில் ஒரு ஆன்மீக புரட்சியை அமைதியான முறையில் நடத்தி வருபவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள்.

 

தங்கமான கையிருப்பு

கட்டுரையாளர் - -  திரு.எஸ்.குருமூர்த்தி, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறை நிபுணர்

தங்கத்தின் இறக்குமதிக்கு எதிராக போர் தொடுத்து வரும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், அண்மையில் நடப்பு நிதியாண்டு 2013-14ல் தங்கத்தின் இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்படும், என்று கூறினார்.  இந்த தெய்வீக உலோகத்தின் இறக்குமதியைக் கட்டுப் படுத்தியதில் வெற்றி கிடைத்து விட்டது போல பறைசாற்றிக் கொண்டார். இந்தக் கூற்று உண்மையா? இதன் பின்னணியில் நடந்து கொண்டிருப்பது என்ன? 

வந்தேமாதரம் - நமது தேசியகீதம்

ஆயிரம் ஆண்டுகாலமாக அடிமை தளத்தில் சிக்கி தன்னிலை மறந்து நெடுந்துயிலில் ஆழ்ந்து இருந்த பாரதத்தை தட்டி எழுப்பிய பாடல் வந்தேமாதரம் என்று புத்தகங்களில் படித்தபோதும், பேச்சாளர்கள் வாயிலாக கேட்ட போதும் வந்தேமாதர பாடலை வரலாற்று கோணத்தில் தான் பார்க்க முடிந்தது. ஆனால், பாரதியின் மொழிபெயர்ப்பை கையில் வைத்துக் கொண்டு திருமதி.M.S.சுப்புலட்சுமி பாடி கேட்கும்பொழுது ஒரு சாதரண மானிடன் கூட எப்படி சுதந்திர போராட்ட வீரன் ஆனான் என்பதை உணர முடிகிறது. இந்த உணர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த பாடல் உதயமான அக்‌ஷய நவமி (ஆங்கில தேதி Nov 7 1875) யில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

இந்தப்பாடலை பாட மாட்டோம் , இது எங்கள் மதத்திற்கு எதிரானது என்றும் எங்கள் மத உணர்வை புண்படுத்துகிறது என்று முரண்டுபிடிக்கும் முஸ்லிம்களும் அவர்களுக்காக கூக்குரலிடும் ஜந்துக்களும் தேச பக்தியோ, மனித உணர்வோ இல்லாத ஜடங்களாகத் தான் இருக்க முடியும் என்று இந்த பாடலை கேட்ட உடன் உணரலாம்.

வந்தேமாதரம் !

கற்பனை, பிதற்றல், புரட்டு, சூது

உலகம் முழுவதும் இந்துக்களாலும், சமணர்களாலும், சீக்கியர்களாலும், இந்திய பண்பாட்டை ஏற்று கொள்ளும் பிற மதத்தவர்களாலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி.  இந்த தீபாவளியைத் தன் ஆத்திரம் தீர முன்னோடி நாளிதழ்களான The Deccan Chronicle, The Asian Age ஆகியவற்றின் Op Ed பகுதியில் அடித்துத் துவைத்திருக்கிறார் கஞ்சன் இலையா என்ற புதின எழுத்தாளர்.

சர்தார் படேல், பண்டித நேரு, ஆர்.எஸ்.எஸ்: கட்டுரை

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் நாட்டின் பிரதமராக ஆகியிருந்தால், இந்த பாரதம் உன்னதமான நிலைக்கு வந்து இருக்கும் என்று திரு. நரேந்திர மோதி தெரிவித்த கருத்தால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன, இது ர்ச்ச் தடை உள்ளிட்ட விஷயங்களைத் தொடர்புபடுத்தி ஆதாரம் இல்லாமல் பல புனைவுகள் ஊடகங்களில் இடம் பெற்று வருகிறது. இவை அனைத்தையும் சீர் நோக்கி பார்த்து உன்மையை அரங்கத்திற்கு கொண்டு வந்துள்ள  Ayush Nadimpalli அவர்களின் ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்.

இதோ ஆங்கில கட்டுரையின் லிங்க்

பாட்னாவில் குண்டு வெடிப்பு

மைனாரிட்டி ஓட்டு அரசியல் வாக்கும், மைனாரிட்டிகளை தாஜா செய்வதையே லட்சியமாக கொண்டு செயல்படும் அறிவுஜீவிகள்
மற்றும் ஊடகங்களின் ஹிந்து விரோதபோக்கினாலும் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. நினைக்கும் இடத்தில் , நினைத்த மாதிரியே குண்டு வைக்கும் அளவிற்கு வேர் ஊன்றி உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கம் நிபந்தனையற்றது

தி ஹிந்து பத்திரிக்கையில் the forgotten promise of 1949 என்ற தலைப்பிலான கட்டுரையில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம், தான் அரசியல் சார்பில்லாமல் இருப்பதாக வாக்களித்ததால் தான் சர்தார் படேல் அதன் மீது விதிக்கப்படிருந்த தடையுத்தரவை 1949ல் அகற்றினார் என்று கட்டுரையாளர் வித்யா சுப்ரமணியம் அவர்கள் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

 

ஆனால் ஆர்.எஸ்.எஸ் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை. 1949ம் ஆண்டு எந்த உறுதி மொழியும் அளிக்கவில்லை என்றால், அதை மீறுவது என்ற கேள்வி எங்கே 2013ம் ஆண்டு எழுகிறது? என்பதை கட்டுரையாளர் திரு. எஸ். குருமூர்த்தி அவர்கள் தெளிபடுத்துகிறார்.