×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
சமூகம்                       

சமூகம்                       

அரசியலால் சீரழியும் உயர்கல்வி மாணவர்கள்

ரோஹித் வெமுலா தலித் என்கிற ஒரே காரணத்திற்காக அவருடைய சாவை அரசியல் ஆக்கி, அந்தச் சாவிற்கு மத்திய பா.ஜ.க அரசைப் பொறுப்பாக்கி, கேவலமான வாக்கு வங்கி அரசியல் நடத்தி, வருகின்ற சட்டமன்றத் தேர்தல்களில் லாபம் அடைய நினைக்கின்றன. இந்த நிகழ்முறையில் ரோஹித் வெமுலா தன்னுடைய அனைத்து பன்முக அடையாளங்களையும் இழந்து “தலித்” என்கிற ஒற்றை அடையாளத்தை அடைந்துள்ளார். நல்லவேளையாக இந்த இழப்பை அனுபவிக்க அவர் உயிரோடு இல்லை. அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இவ்வாறு செய்வது தங்களுக்கு பேரவமானம் என்பதை தலித் சமுதாயத்தினர் விரைவில் உணர்வது அவர்களுக்கு நன்மை பயக்கும். 

அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை - 2

தமிழகத்தில்  உள்ள  அனைத்துக் கோவில்களிலும் பிராம்மண்ர்கள்தான் அர்ச்சகர்களாக இருப்பது போலவும், மற்ற  ஜாதியினர்  அனுமதிக்கப்படுவதில்லை  போலவும் திராவிட அரசுகளும் மற்ற கட்சிகளும் கிளப்பிவிடுவது வெறும் திராவிட மாயை அன்றி வேறில்லை.  இப்படி  ஒரு  திராவிட  மாயையைக்  கிளப்பிவிட்டுஅதற்கென  ஒரு  அரசாணையைப்  பிறப்பித்து  சட்டமும்  கொண்டு  வருவது  திராவிட  அரசுகள்  செய்யும்  அநியாயம்ஜாதிவாரியாக மக்களைப் பிரித்து விளையாடும் அராஜகம் ஆகும். 

அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை – 1

அரசியல் அமைப்புச் சட்டத்தின், 25, 26வது க்ஷரத்துக்கள், மத நம்பிக்கை மற்றும் மதச் சடங்குகளை கடைபிடிப்பதற்கான சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதி செய்கின்றன. மேலும், 16 வது க்ஷரத்தின் 5 வது பிரிவு, ஒரு மத நிலையத்தில் ஏற்கனவே உள்ள மத விஷயமான அல்லது மதப்பிரிவின் வழிபாடு தொடர்பான அலுவல்கள் பதவிகள், குறிப்பிட்ட மதத்தினர்தாம் இருக்கவேண்டும் என்பதோ, அல்லது, குறிப்பிட்ட தனிப்பிரிவினர்தாம் இருக்க வேண்டும் என்பதோ, அரசின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளில் பாகுபாடு இன்மை என்கிற கோட்பாட்டின் கீழ் வராது என்று சொல்கிறது. அதாவது ஆகம விதிகளின்படி வழிபாடுகள் நடக்கும் இடங்களில், அந்த ஆகமங்களில் சொன்னபடி, அர்ச்சகர்களை நியமிக்கும் உரிமையை உறுதிப்படுத்துகின்றது. இது, அரசியல் சாஸனத்தின் 14வது க்ஷரத்தை மீறுவதாகவும் ஆகாது. 

சகிப்புத்தன்மையற்ற பிரபலங்கள் தேசத்தின் அவமானம்

இன்றும் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களைச் சகித்துக்கொண்டு உடன் வாழும் இஸ்லாமியர்களுடன் நட்புறவு பாராட்டி வரும் தேசம் இந்தியா; இன்றும் கிறிஸ்தவ மதமாற்றங்களைச் சகித்துக்கொண்டு உடன் வாழும் கிறிஸ்தவர்களுடன் நட்புறவு கொண்டிருக்கும் தேசம் இந்தியா; போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் கருத்துச் சுதந்திரமும், மனித உரிமையும் அளித்து, அவர்களின் அன்றாட அராஜகங்களை இன்றுவரைச் சகித்துக்கொண்டிருக்கும் தேசம் இந்தியா. இப்பேர்பட்ட இந்தியாவா சகிப்புத்தன்மை அற்ற நாடு? 
 

பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதியும் ஹிந்து தர்ம சேவைகளும் சாதனைகளும்

ஹிந்து தர்மத்தின் ஆன்மீகப் பாரம்பரியம், கலாச்சாரப் பெருமை, பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், சாஸ்த்திர சம்பிரதாயங்கள், ஆகியவை அனைத்தையும் பாதுகாக்கும் பணியிலும், அவற்றைப் பரப்பும் சேவையிலும், மற்றும் ஆலயப்பாதுகாப்பு, ஆவினங்களின் பாதுகாப்பு, ஆகிய பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் பூஜ்ய ஸ்வாமிஜி. அதோடு மட்டுமல்லாமல், அன்னிய மத நிறுவனங்களால் நமது நாட்டில் நடத்தப்படும் மதமாற்றங்களைக் கடுமையாக எதிர்த்தவர். இந்தியாவின் அமைதி, ஒருமைப்பாடு, வளர்ச்சி ஆகியவை பற்றி மிகுந்த அக்கறை கொண்ட தேசபக்தர் ஸ்வாமிஜி. உலக அளவில் சிறந்த வேதாந்த ஆச்சாரியராக அறியப்பட்ட பூஜ்ய ஸ்வாமிஜி உலகமே மெச்சும் அறிவு ஜீவியாகத் திகழ்ந்தார். 
 

திரு. கிருஷ்ணப்பாஜி அவர்களுக்கு அஞ்சலி

மூத்த ஆர் எஸ் எஸ் தலைவரான திரு.கிருஷ்ணப்பா அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

நாடார் சமூகத்தினரை அவமதிக்கும் CBSE ஒன்பதாம் வகுப்பு பாடம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT – National Council of Educational Research and Training), மத்திய மேனிலைக் கல்வித்துறை (CBSE – Central Board of Secondary Education) பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், “Clothing – A Social History” என்கிற பாடத்தில், சாணார் சமூக மக்களை மட்டம் தட்டும் விதமாக எழுதப்பட்டுள்ளதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

ரவிசுப்ரமணியன் மீது தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும் - வளசை ஜெயராமன்

2500 ஆண்டுகால வரலாற்றுச்சிறப்பு மிக்க பழம்பெருமை வாய்ந்த காஞ்சி காமகோடி பீடத்தின் மீது 2004ம் ஆண்டு அசுரத்தமான தாக்குதல் நடந்தது. உலகெங்கும் உள்ள ஹிந்துக்களால் பெரிதும் பக்தியுடன் மதித்துப் போற்றப்படும் காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது தமிழக அரசு இரண்டு வழக்குகள் தொடர்ந்தது.