×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
சமூகம்                       

சமூகம்                       

ஈஞ்சம்பாக்கத்தில் சமய வகுப்பு தொடக்கம்

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசிக்கும் இந்து மீனவ சமுதாய மாணவர்களுக்காக வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் சமய வகுப்பினை இன்று(04-05-2014) தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள கௌரி அம்மன் கோவிலில் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட இந்து மீனவ சிறுவர்கள், சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர்கள் இந்து வழிப்பாட்டு பாடல்களைக் கற்றுத் தந்ததோடு பொது அறிவு வினாடி வினா நிகழ்ச்சியையும்,விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் ஊர் பெரியவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

வாரந்தோறும் இப்பகுதி குழந்தைகளுக்காக இம்மாதிரி சமய வகுப்புகளை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் கௌரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தவேண்டும் என்றும் ஊர்மக்கள் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தினரை கேட்டுக்கொண்டனர்.

இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது

ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் 'அடிமனத்திலிருந்து உண்மையாக' ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய நிலையைப் பார்த்து வருகிறோம். நாத்திகம் பேசினாலோ, மதமாற்றம் செய்தாலோ சாதி வேறுபாடு ஒழிந்துவிடுமா?

 

சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் இறை உணர்வுக்கு ஆட்பட்ட அடியார்களுக்கு மட்டுமே சாதி தொலைந்திருக்கிறது. வெளி வேஷதாரிகள் சுயநலமிகளாக இருந்தனர் என்பதை ஒதுக்கி விட்டு இறையடியார் வாழ்வையே நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சநாதன தர்மத்தின் அடிநாதம் - வாழு வாழவிடு

சதாசிவ சமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -  என்பது ஆதிகாலம் தொடங்கி இன்று வரை தொடரும் குரு பரம்பரை வணக்கம்.

 

ஸ்ரீ குரு அல்லது ஆதி குரு என்று அறியப்படுபவர் சிவபெருமான். இவர் மௌனத்தால் தம் சீடர்களுக்குப் பாடம் போதித்தவர். உன்னுள்ளே எழும் கேள்விகளுக்கு பதிலை உனக்குள்ளே தேடு என்று சனத் குமாரர்களுக்கு தக்ஷிணாமூர்த்தியாக இருந்து வழிகாட்டியவர், இவரது வழிகாட்டலில் வந்த குரு பரம்பரையில் மகரிஷி வியாசர் வேத மந்திரங்களையும் புராணங்களையும் தொகுத்து வைத்தவர்.


அவருக்குப் பிறகு நமக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் சநாதன தர்மம் பல சவால்களைப் பல திசைகளிலும் சந்தித்த போது தோன்றியவர் ஆதிசங்கர பகவத்பாதர். மக்கள் சடங்குகள், செயல்முறைகளை காரணம் அறியாது கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்ததைக் கண்டு வருந்தி உபநிஷதங்களுக்கும் பிரம்மசூத்திரத்திற்கும், பகவத் கீதைக்கும் விளக்கவுரைகளை எழுதினார். வாழ்வியல் முறைக்குத் தெளிவான வழிகாட்டும் நெறிகளாக அவை இன்றும் விளங்குகின்றன.

தமிழகத்தில் தழைக்கும் பயங்கரவாதம் - வீரத்துறவி. ஐயா. இராமகோபாலன் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை

01.05.2014 அன்று சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் வெடித்த வெடிகுண்டுகளும், அண்ணா மேம்பாலத்தை தகர்க்க நடந்த சதி முறியடிப்பும், 30.04.2014 அன்று கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளியும் தமிழகத்தில் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருப்பதை நிரூபித்துள்ளது.

THE UNHOLY NEXUS OF ITALY-UZBEKISTAN TO VANQUISH BHARAT

Wherever elections occur, social groups in those countries in order to increase representation of their interests or ensure dominance in the forthcoming government or to satisfy their requirements, would strive for a government favourable to them. Similarly many foreign powers too, strive to establish their influence and to improve their economies, would conspire to form a government in other countries that would take a positive stand vis-a-vis their interests.

பாரதத்தை வீழ்த்த இத்தாலி – உஸ்பேக்கிஸ்தான் கூட்டுச் சதி

எந்த நாட்டில் தேர்தல் வந்தாலும் அந்த நாட்டிலுள்ள சமூகக் கூட்டங்கள் அவர்களது பிரதிநிதித்துவத்தை கூட்டுவதற்கோ அல்லது அமையவிருக்கும் அரசில் அவர்களது ஆதிக்கத்தை செலுத்துவதற்கோ அல்லது அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவான அரசு அமைய முயற்சி மேற்கொள்வார்கள். இதுபோலவே பல வெளிநாட்டு சக்திகளும் அவர்களது ஆதிக்கத்தை நிலை நாட்டவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் அரசு பிற நாடுகளில் அமைய வேண்டும் என்பதற்காக சதி வேலைகளில் ஈடுபடுவார்கள்.

வந்தே மாதரம் பிறந்த கதை

வந்தே மாதரம், சுஜலாம், சுஃபலாம், மலயஜசீதலாம்
சஸ்ய ச்யாமலாம், மாதரம்.

இந்த தேசிய பாடலை அறியாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? அகில இந்திய வானொலியைக் காலையில் கேட்பவர்களுக்கு இது பழகிப் போன மந்திரம். இதை நமக்கு அளித்தவர் தாம் பங்கிம் சந்திர சாட்டர்ஜி. அவர் பல புதினங்களைப் படைத்திருக்கிறார்; அவற்றில் ஒன்று தான் ஆனந்த மடம். இந்தப் புதினம் விடுதலைப் போராட்டம் பற்றிய விறுவிறுப்பான தகவல்கள் அடங்கியது; வந்தே மாதரம் இந்தப் புதினத்தின் ஒரு பகுதியாக இடம் பெறுவது.

அறமற்ற துறையின் கீழ் சீரழியும் பழனி முருகன் கோவில் நிர்வாகம் - 2

தமிழக அரசின் ஹிந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் பழனி முருகன் கோவிலின் கோசாலை மர்மங்களைப் பற்றியும், கோவில் அருகில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையைக்கூட அகற்றாமல் இருக்கும் நிலை பற்றியும் பார்த்தோம். கோவில் நிர்வாகத்தில் உள்ள மேலும் பல சீர்கேடுகள் பற்றிப் பார்ப்போம்.

 

 

 

WOMEN ATTACKED IN A MAARIYAMMAN TEMPLE PROCESSION AT POLLACHI, TAMILNADU - ISLAMIC ATROCITY

In the heart of Pollachi city situated in western Tamilnadu is a famous temple of Maariyamman (Bhagawathy). In the festival of this temple, devotees from four districts, including Tiruppur and Coimbatore participate and celebrate it in a grand manner. In this festival, which is celebrated for 22 days, one of the most famous feature is the Temple Car procession. This Temple Car procession would take place for 3 days and one important feature is that, Hindu women of these places carry mud pots with fire in it (poovodu eduthal), and this festivity takes place for 5 days. Every day women belonging to a particular area carry these fire pots in a procession, circumambulate the temple and have a darshan of Amman (Bhagawathy). This Temple Car festival is celebrated every year during the Thamizh month of Maasi, Maagh.

அறமற்ற துறையின் கீழ் சீரழியும் பழனி முருகன் கோவில் நிர்வாகம்!

ஒரு மதச்சார்பற்ற அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் கையகப்படுத்தி நிர்வாகம் செய்வது அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்கிற உண்மையை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 45-வது பிரிவின் கீழ் ஒரு கோவில் நிர்வாகத்தைச் சரி செய்து முறைப்படுத்த குறிப்பிட்ட கால அளவிற்குத்தான் செயல் அலுவலரை நியமிக்க முடியும். நிர்வாகத்தை முறைப்படுத்திய பின் சம்பந்தப்பட்டவர்களிடம் அதை மீண்டும் கொடுத்துவிடவேண்டும். ஆகவே, எந்தக் காரணத்தைக்கொண்டும் நிரந்தரமாக ஒரு செயல் அலுவலரை அரசு நியமிக்க முடியாது” என்று தெளிவாகவும் உறுதியாகவும் தீர்ப்பளித்துள்ளது.