×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
சமூகம்                       

சமூகம்                       

இந்து அறநிலையத்துறையில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு

உலக நாடுகளில், தேர்தல் என்று வந்தால் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் நாட்டிற்காக எப்படி எல்லாம் நன்மை செய்தோம் என்று பட்டியல் இடுவார்கள். ஆனால் நமது நாட்டில் சிறுபான்மையின மதக்கூட்டத்தினரை திருப்திப்படுத்த என்ன செய்தோம் என்று கூறிக்கொள்வதை தான் இந்த போலிமதச்சார்பின்மைவாதிகள் பெருமையாக கருதுகிறார்கள்.

 

இந்த வகையில் நம் தமிழக அரசு செய்துள்ள பின்வரும் அறிவிப்பு அயோக்கியத்தனத்தின் உச்சம். மத வெறிக்கு பெயர் போன ஔரங்கசிப் கூட செய்ய நினைக்காத ஒரு மாபெரும் விஷயத்தை செய்து வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி உள்ளது தமிழக அரசு. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான அரசு உதவி பெறும் பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து உள்ளது இந்த அரசாங்கம்.

Ban on hoisting Tricolor. Government buckles to Jihadi threat?

Villupuram, a north eastern distritct of TamilNadu, is fast becoming another strong hold of Jehadi forces in TamilNadu. Lying 100 miles south of Chennai, the district predominantly has a Hindu population and a has a lot of temples of fame. We also have a Jain Math there called Jina Kandhi Math in this district.

The Jehadi forces have managed to be tacit in their activities mainly due to media silence. The shocking show of Jehadi strength has happened during the Republic Day celebrations this year. We had the news breaking through the social media site Facebook. One of the users shared letter from the Villupuram town Police Inspector that hoisting the Tricolor on 26th of January'14 would cause religious tension between Hindus and Moslems and hence permission for hoisting Tricolor was denied.

 

Freeing temples from state control

What is scandalous is the corruption after the takeover of temples as politicians and officials loot the temple’s wealth and land, and divert donations of devotees to non-religious purposes

The Supreme Court delivered a landmark judgment on January 6, 2013, allowing my Special Leave Petition that sought the quashing of the Tamil Nadu Government’s G.O. of 2006 which had mandated the government takeover of the hallowed Sri Sabhanayagar Temple (popularly known as the Nataraja temple).

சிதம்பரம் கோவில் வழக்கு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்த உண்மைகள் – 4

நாத்திக, திராவிட, தமிழ்-தீவிரவாத இயக்கங்களுக்குச் சரியான பாடம்
”தில்லை நடராஜனையும் ஸ்ரீரங்கத்து ரங்கநாதனையும் பீரங்கி வைத்துத் தகர்க்கும் நாள் என்னாளோ, அன்னாளே எங்களுக்குப் பொன்னாள்” என்கிற துவேஷம் மிகுந்த கோஷத்தை கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட பாரதிதாசன் முன்வைத்தார். திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் அந்தக் கோஷத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து பேசிவந்தனர். அவர்களுடன் மாவோயிஸ்டு தீவிரவாதிகளும் சேர்ந்துகொண்டு சிதம்பரம் கோவிலை எப்படியாவது கையகப்படுத்துமாறு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு அரசுகளுக்கும் மாற்றி மாற்றி அழுத்தம் கொடுத்து வந்தனர்.

 

ஆனால் அவர்கள் தலையில் இடியென விழுந்துள்ளது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

காஷ்மீர் இனப்படுகொலைக்கு வயது 24

பாரத நாடு, பிரிவினைக்குப் பின் சந்தித்த மாபெரும் இனவெளியேற்ற நாள் ஜனவரி 19, 1990. இந்த நாளில், 5000 ஆண்டுகால வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தாங்கி நிற்கும் நான்கு லட்சம் காஷ்மீர் இந்துக்கள் ஒட்டுமொத்தமாக காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஏன் இந்த இந்துக்கள் வெளியேற்றப் பட்டனர்?

 

உலகம் முழுவதும் இஸ்லாமியக் குடையின் கீழ் வரவேண்டும் என்ற அடிப்படைவாத தத்துவத்தால் நம் நாடு 1947ல் பாகிஸ்தானை இழந்தது. இந்த இஸ்லாமிய அடிப்படைவாதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜம்மு காஷ்மீரின் இஸ்லாமிய பெரும்பான்மை இயல்பை முன்வைத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானோடு இணைய வேண்டும் என்று அங்குள்ள முஸ்லீம்கள், பாகிஸ்தான் மற்றும் ஏனைய அடிப்படைவாத முஸ்லீம்களுடன் சேர்ந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதே காஷ்மீர் பயங்கரவாதம். ஆனால், காஷ்மீரில் வாழும் இந்துக்கள், பாரதத்திலிருந்து காஷ்மீர் பிரிந்து செல்வதை விரும்பவில்லை என்பதோடு, இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட சட்ட நிர்வாகத்தையும் ஏற்கவில்லை. இங்குள்ள இந்துக்கள் எப்போதுமே தேசப்பிரிவினை, மதவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக முன்னணியில் இருந்தவர்கள். ஆகையால் இந்த அமைதியை விரும்பும், நவீன சிந்தனை கொண்ட இந்துக்கள், தீவிரவாத வன்முறையின் முக்கிய இலக்காகியிருக்கிறார்கள்.

 

காஷ்மீரிலுள்ள இந்துக்களை வேரறுக்க இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பின்பற்றிய வழிமுறைகள் என்ன?

சிதம்பரம் கோவில் வழக்கு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்த உண்மைகள் – 3

தீய சக்திகளின் திமிராட்டம்
இதனிடையே நாத்திக, திராவிட இனவெறி, தமிழ் தீவிரவாத, மாவோயிஸ இயக்கத்தவர்கள் தீக்ஷிதர்களுக்குத் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படுத்தி வந்தார்கள். அன்னிய நாடுகங்களிலிருந்து நிதி பெற்று “மனித உரிமை” என்கிற போர்வையில் இயங்கி வரும் என்.ஜி.ஓக்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தனர்.

 

சிதம்பரம் கோவிலில் சைவத் திருமுறைகளைப் பாட அனுமதிப்பதில்லை, அங்கே தீண்டாமை அனுசரிக்கப்படுகிறது போன்ற போலியான குற்றச்சாட்டுகளைச் சொல்லி அவ்வப்போது கோவிலின் முன்னே போராட்டங்களையும் ஆர்பாட்டங்களையும் நடத்தி வந்தனர். அந்த கும்பலில் கிறிஸ்தவ இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இருந்தனர்.

 

இந்தக் கும்பல் ஆறுமுக சாமி என்கிற போலி ஆசாமியை “ஓதுவார்” என்று சொல்லி அந்த ஆசாமி மூலம் தீக்ஷிதர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தினர். அந்த ஆசாமி கோவிலுக்குள் தேவாரம் பாடும்போது தீக்ஷிதர்கள் அவரை அடித்து விரட்டியதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தை அப்போதைய தி.மு.க அரசும் மற்ற திராவிட கட்சிகளும் மறைமுகமாக ஆதரித்தன. ஆதரவு எந்த அளவுக்குச் சென்றதென்றால், அந்தப் போலி ஓதுவாருக்கு திமுக அரசு மாதம் ரூ.3000 சம்பளம் கொடுத்தது. மேலும் அவரின் சார்பாக ஒரு பிரபல வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வாதாடினார்.

சிதம்பரம் கோவில் வழக்கு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்த உண்மைகள் பகுதி 2

இது சம்பந்தமான மற்ற தீர்ப்புகள்

1954-ல் சிரூர் மடம் சம்பந்தப்பட்ட வழக்கில் (Commissioner, HR & CE Madras Vs. Sri Lakshimindra Thirtha Swamiar of Shri Shirur Mutt – SPA 1954) உச்ச நீதிமன்றம், “அரசியல் சாஸனத்தின் 26வது க்ஷரத்தின்படி கோவில் அல்லது மடத்தின் வழிபாட்டு முறைகளையும் மற்ற சம்பிரதாயங்களையும் தீர்மானிக்கும் முழு உரிமை சம்பந்தப்பட்ட மத உட்பிரிவினருக்கு மட்டும்தான் உண்டு. அதில் தலையிட வெளியில் உள்ள அதிகார மையங்களுக்கு உரிமை இல்லை. அம்மையங்களின் அதிகார எல்லைக்குள் அம்மடமோ, கோவிலோ வராது” என்று தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிதம்பரம் கோவில் வழக்கு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்த உண்மைகள் பகுதி 1

சிதம்பரம் சபாநாயகர் கோவில் வழக்கில், அக்கோவில் நிர்வாகம் “தில்லை மூவாயிரவர்” என்று போற்றப்படுகின்ற தில்லைவாழ் அந்தணர்களான சிதம்பரம் தீக்ஷிதர்களுக்கே சொந்தமானது; அக்கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றி இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த தமிழக அரசு, நிர்வாகத்தை மீண்டும் தீக்ஷிதர்கள் வசமே ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக உறுதியான தீர்ப்பு அளித்துள்ளது.

 

அரசியல் சாஸனப்படி, அதன் க்ஷரத்து 26-ன் கீழ் சிதம்பரம் தீக்ஷிதர்கள் “மத உட்பிரிவினர்” (Religious Denomination) என்கிற அந்தஸ்தை உடையவர்கள். ஆகவே சிதம்பரம் கோவிலை நிர்வகிக்க அவர்களுக்கு பரிபூரண உரிமை உண்டு. தீக்ஷிதர்களின் இந்த உரிமைகளை இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 107வது பிரிவும் உறுதி செய்கிறது. மேலும், இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 45-வது பிரிவின் கீழ் ஒரு கோவில் நிர்வாகத்தைச் சரி செய்து முறைப்படுத்த குறிப்பிட்ட கால அளவிற்குத்தான் செயல் அலுவலரை நியமிக்க முடியும். நிர்வாகத்தை முறைப்படுத்திய பின் சம்பந்தப்பட்டவர்களிடம் அதை மீண்டும் கொடுத்துவிடவேண்டும். ஆகவே, எந்தக் காரணத்தைக்கொண்டும் நிரந்தரமாக ஒரு செயல் அலுவலரை அரசு நியமிக்க முடியாது.

 

சிதம்பரம் கோவிலைப் பொறுத்தவரை இந்த இரண்டு சட்டப்பிரிவுகளுமே தமிழக அரசால் மீறப்பட்டுள்ளன. எனவே தான், அரசு வழக்கறிஞர்களால் உண்மையான முறையில் நீதிமன்றத்தில் வாதம் புரிய இயலவில்லை. உண்மையின் பக்கமே நீதி நின்றது; சட்டம் தன் உயர்மாட்சியை நிலைநாட்டியுள்ளது. 

சீமானின் ஹிந்து விரோத பேச்சு; அரசு நடவடிக்கை தேவை

கடவுள் மறுப்பையும், இனவெறியையும், அடிப்படையாக வைத்து வளர்ந்த திராவிட இயக்கம் “தமிழ்” “தமிழர்” என்கிற பெயர்களில் பிரிவினைவாதத்தையும் விதைத்தது. விதைக்கப்பட்ட பிரிவினைவாதம் பின்னாளில் தேச விரோதமாகவும் தீவிரவாதமாகவும் வளர்ந்தது. இந்த வளர்ச்சிக்கு அன்னிய நிறுவனங்களும் துணை போனதால் கடவுள் மறுப்பு என்பது ஹிந்து விரோதமாக, அதாவது ஹிந்துக் கடவுள்களை மட்டுமே மறுக்கும் விதமாக, மாறியது. ஹிந்துக் கடவுள் மறுப்பு என்பது நீட்டிக்கப்பட்டு, தமிழ் வெறியும், பிராம்மண வெறுப்பும், சம்ஸ்க்ருத துவேஷமும் ஊட்டப்பட்டு, தமிழ்/தமிழர் என்கிற பெயரில் ஹிந்து கலாச்சாரத்தையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும் பழிக்கும் ஒரு தீய பண்பாடு உருவானது. இந்தத் தீய பண்பாடு திரைப்படங்கள் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் பரப்பப்பட்டது.

பொங்கலா, புத்தாண்டா - கருணாநிதியே பதில் சொல்!

இன்று பொங்கல் திருநாள்! கதிரவனுக்கு நாம் நன்றி செலுத்தும் நாள். இன்று தான் கதிரவன் மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த நாள் கதிரவன் வடக்கு நோக்கித் திரும்பும் நாள் என்ற அடிப்படையில் கதிரவனை மையப்படுத்திக் கொண்டாடப்படுகிறது. இத்திருநாள், கதிரவனை மையப்படுத்திக் கொண்டாடும் வழக்கம் 12 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டதென்றாலும், இது ஒரு வரவேற்கத்தக்க பழக்கமே!

 

இந்தத் திருவிழா, சூரியனை மையப்படுத்திக் கொண்டாடிய தமிழர் விழா, இதுவே தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லி தமிழ் வியாபாரம் செய்பவர்கள் முன்வைக்கும் சில வாதங்களைப் பார்ப்போம்!

 

தையே தக்கது, தையே தக்கது, தையத் தக்க தையத் தக்க என்று குதித்தவர்களின் கூற்று என்ன ?