×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
ஆன்மீகம்

ஆன்மீகம்

முழுமையான இறையனுபவம் – 9 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

பண்டைய காலத்தில் இங்கே “கங்காத்வார்” என்கிற கோவில் இருந்ததாக நம்பப்படுகிறது. அதுவே கங்காத்வாரம் என்கிற பெயர் வரக்காரணம். சகரர்களை எரித்துச் சாம்பலாக்கிய கபில மஹரிஷி தவம் புரிந்த இடமான இது கபிலஸ்தலம் என்றும் மாயாபுரி என்றும் வழங்கப்படுகிறது. கங்கா தசரா நாளில்தான் சிவபெருமான் தன் தலைமுடியிலிருந்து கங்கையைக் கீழே விட, அந்நதி ஹரித்வாரை வந்தடைந்தது. எனவே, இங்கே கங்கா தசரா என்னும் விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கே கொண்டாடப்படும் கும்பமேளா மிகவும் பிரசித்தி பெற்றது. வியாழன் கிரகம் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது. அது மட்டுமில்லாமல் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அர்த்த கும்பமேளாவும் இங்கே பிரசித்தம். இரண்டு விழாக்களிலும் பல லக்ஷக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

 

 

 

முழுமையான இறையனுபவம் – 8 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

ரிஷிகேஷ் ஹிந்துக்களின் மிகப்புனிதமானத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ’இமாலய மலைத்தொடர்களின் நுழைவாயில்’ என்றும் போற்றப்படுகிறது. ”ரிஷிகேஷ்” என்கிற மஹாவிஷ்ணுவின் பெயருக்கு “இந்திரியங்களுக்கு அதிபர்” (புலன்களின் கடவுள்) என்று பெயர். ரைப்ய மஹரிஷி தன் புலன்களை அடக்கி இந்தத்தலத்தில் கடுந்தவம் புரிய, அவருக்கு ரிஷிகேஷ் நாராயணராக மஹா விஷ்ணு காட்சி தந்ததால் இந்தத்தலம் ரிஷிகேஷ் என்று பெயர் பெற்றது.

 

 

 

முழுமையான இறையனுபவம் – 7 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

இரண்டு அல்லது மூன்று நதிகள் சந்திக்கும் இடங்கள் பிராயாகை என்று சொல்லப்படுகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாகை (அல்லஹாபாத்) மிகவும் பிரபலமான சிறப்பு வாய்ந்த தலமாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் இது. இங்கேதான் உலகப் புகழ் பெற்ற கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. இதே போல, உத்தர்கண்ட் மாநிலத்திலும் ”பஞ்ச பிரயாகை” என்று சொல்லப்படுகிற ஐந்து பிரயாகைகள் உள்ளன. விஷ்ணு பிரயாகை, ருத்ர பிரயாகை, நந்த பிரயாகை, கர்ண பிரயாகை, தேவ பிரயாகை ஆகியவை. இவை அலக்நந்தா நதியுடன் வேறு ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடங்கள் ஆகும். 
 
 
 
 

முழுமையான இறையனுபவம் – 6 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

பத்ரிநாதர் ‘பத்ரீசர்’ என்றும் குறிப்பிடப்படுகிறார். இவர் வைணவர்களுக்கு வைகுண்டநாதராகவும், சிவனடியார்களுக்கு பஞ்சமுகி சிவனாகவும், அம்மன் உபாசகர்களுக்கு காளியாகவும் காட்சி தருகிறார் என்பது நம்பிக்கை. 
 
 

முழுமையான இறையனுபவம் – 5 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

 

The Kedarnath Temple

 

உத்தர்கண்ட் மாநிலத்தில் ருத்ரப் பிரயாகை மாவட்டத்தில் உள்ளது கேதார்நாத். கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3500 மீட்டர்கள் (11,700 அடிகள்) உயரத்தில் இமயமலைச்சாரலில் அமைந்துள்ளது இத்தலம். 22,850 அடி உயரத்தில் “மஹாபந்த்” எனப்படும் பனிச்சிகரத்தின் வாயிலில் இருக்கிறது கேதார்நாத்.

முழுமையான இறையனுபவம் – 4 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

கங்கை நதியின் பிறப்பிடமான கங்கோத்ரி கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3400 மீட்டர் (11,200 அடிகள்) உயரத்தில் அமைந்திருக்கிறது. பகீரதனின் தவத்தால் பூவுலகிற்குள் நுழைந்தவள் ஆதலால் கங்கை இங்கே பாகீரதியாகவே தோன்றுகிறாள்

முழுமையான இறையனுபவம் – 3 - (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

”சார்தாம்” என்று சொல்லப்படுகிற ஹிமாலய யாத்திரைக்கு அரசு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். 

முழுமையான இறையனுபவம் – 2 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

நமது பாரத தேசத்தைப் புண்ணிய பூமியாகக் கருதுகிறோம். கடவுள்கள் அவதரித்த தேசம்; ரிஷிகளும் முனிவர்களும் பிறந்து, கடுந்தவம் புரிந்து, பிரபஞ்சத்தின் ஒலிகளைக் கிரகித்து அவற்றை மந்திரங்களாக வெளிக்கொணர்ந்த தேசம்; 

முழுமையான இறையனுபவம் – 1 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை - பயணத் தொடர்)

சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் வளர்ந்த வேத நாகரீகத்தின் அசைக்க முடியாத சாட்சியாகத் திகழ்கிறது பழம்பெருமை வாய்ந்த கலாச்சார, ஆன்மீகப் பாரம்பரியம் மிகுந்த புண்ணிய பூமியான நமது பாரத தேசம்.

சிவராத்திரி தரிசனத்தில் சிவத்தலங்களும் சில வருத்தங்களும்

கடந்த ஃபிப்ரவரி 17 செவ்வாய்க்கிழமை சிவராத்திரியன்று, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சிறு குழுவினர், பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்களுடன் சில சிவத்தலங்களுக்குச் சென்று சிவபெருமானைத் தரிசித்து வரலாம் என்று இரவு ஒன்பது மணியளவில் கிளம்பினோம்