×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

vashistar

சப்த ரிஷிகளுள் ஒருவரான வசிஷ்டர், ஆதியில் பிரம்ம தேவரின் மானச புத்திரராகத் தோன்றினார். பின்னொரு முறை பிரம்மதேவர் உண்டாக்கிய அக்னியிலிருந்தும், சூரிய குல மன்னனான நிமியின் சாபத்தினால் தேகம் இழந்த போது, வருணன், ஊர்வசி இருவருடைய புதல்வனாகவும் தோன்றினார் வசிஷ்டர். இவ்வாறு மூன்று முறைகள் அவதரித்திருக்கிறார் வசிஷ்ட மஹரிஷி.

 

இவை தவிர, வசிஷ்ட மஹரிஷி அவதரித்ததைக் குறித்த வேறொரு புராணமும் இருக்கிறது..மித்ரன், வருணன் என்று இரண்டு தேவர்கள் இருந்தனர். அந்த இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் என்பதால் அகத்தியர், வசிஷ்டர் இருவரும் மைத்ராவருணி என்ற பெயரால் அழைக்கப்படுவதாக ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

வசிஷ்டர் பிரஜாபதிகளுள் ஒருவர். கர்தமப் பிரஜாபதி, தேவஹூதி தம்பதியினரின் மகளான அருந்ததி, வசிஷ்டரின் தர்ம பத்தினி.. கற்பரசிகளுக்கு உதாரணமாக விளங்குபவள். சப்தரிஷி மண்டலத்தில் சஞ்சாரம் செய்யும் வசிஷ்டருடன் இணைபிரியாமல் நக்ஷத்திர உருவில் பின் தொடர்பவள் அருந்ததி.

 

வசிஷ்டரின் புத்திரன் சக்தி (சக்திரி).. சக்தியின் புத்திரன் பராசரர், பராசரரின் மைந்தர் வேதவியாசர், வியாசரின் புதல்வர் சுகப்பிரம்ம ரிஷி.

 

ஆதியில் சூரிய வம்சத்துக்கு குலகுருவாக இருந்தவர், பின் நிமியின் சாபத்தால் தேகம் இழந்து, மீண்டும் பிறந்ததும் இக்ஷ்வாகு மன்னரின் வேண்டுகோளை ஏற்று இக்ஷ்வாகு வம்சத்துக்கு குலகுருவானார். அவருக்காக, பிரம்ம லோகத்தில் இருந்து சரயு நதியை கோசல தேசத்துக்கு கொண்டு வந்தார் வசிஷ்டர்.

 

சரஸ்வதி நதி தீரத்தில் ஆசிரமம் அமைத்து, குருகுல முறையில் கல்வி கற்பித்து வந்த வசிஷ்ட மஹரிஷி, தேவலோகப் பசுவான காமதேனுவையும், அதன் கன்றான நந்தினியையும் பராமரித்து வந்தார். ரகு வம்சத்துச் சக்கரவர்த்தியான திலீபன், வசிஷ்டரின் ஆலோசனைப்படி, தேவலோகப் பசுக்களுக்கு சேவை செய்து, அதன் காரணமாகப் புத்திர பாக்கியம் பெற்றான்.

 

சூரிய வம்சத்துச் சக்கரவர்த்தியான தசரதனின் ரதம், பத்து திசைகளிலும் செல்லும்.. வசிஷ்ட முனிவரின் அனுக்கிரகமே அதற்குக் காரணம்.

 

தசரதருக்கு புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் ஆலோசனையைத் தந்து, யாகத்துக்குப் பொறுப்பெற்று நடத்தி, ஸ்ரீராம, பரத, லக்ஷ்மண, சத்ருக்னர்களின் அவதார மஹோத்சவத்துக்கு காரணராக இருந்த பெருமை வசிஷ்டரையே சேரும்.

 

ஸ்ரீராமருக்கும் அவரது சகோதரர்களுக்கும் குருவாக இருந்து அனைத்து வித்தைகளையும் கற்பித்த மகிமை பொருந்திய மஹரிஷி இவர்.

 

ரிக்வேதத்தில் ஏழாவது மண்டலம் முழுவதையும் ஒன்பதாவது மண்டலத்தில் 67, 90, 97- வது சூக்தங்களையும் செய்தவர் வசிஷ்ட மஹரிஷி. மேலும் வாசிஷ்ட இராமாயணம், வசிஷ்ட ஸ்மிருதி ஆகியவையும் வசிஷ்டர் அருளியவை.

 

வசிஷ்டரின் பெருங்கொடையாக மதிக்கப்படுவது, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முகமாக அவர் அருளிய யோகவாசிஷ்டம். இது இராமகீதை என்றே சிறப்பிக்கப்படுகின்றது.

 

வசிஷ்டரது வழித்தோன்றல்கள், வசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக அறியப்படுகின்றார்கள்..தென்னிந்தியாவில், 'கௌண்டியன்யச' கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும் வசிஷ்டரின் வழித்தோன்றல்களாகவே கருதப்படுகின்றார்கள்.

 

வசிஷ்ட கோத்திரப் பிரவரம் 'வசிஷ்ட, வாசிஷ்ட, ஏகார்ஷேய...' என்பதாக இருக்கிறது...ஆயினும் சில பிரிவினர்,

 

வாசிஷ்ட வாசிஷ்ட,மைத்ராவருண,கௌன்டின்ய,த்ரயார்ஷேய என்றும், பராசர வாசிஷ்ட,சாக்த்ய, பாராசர்ய,த்ரயார்ஷேய என்றும் கூறுகின்றனர்.

 

நேபாளத்தைச் சேர்ந்த, பண்டாரி, பட்டராய், சுயால், சுயேல், முதலான பிரிவினர், வசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக அறியப்படுகின்றார்கள்.

 

Read 2198 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 18:34

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment