×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
ஆன்மீகம்

ஆன்மீகம்

வர்ணாஸ்ரம விதாயினீ - ஒரு பாமரனின் புரிதல்

சமீபத்தில் இணைய விவாதம் ஒன்றில் ஒரு சிந்தனையாளரால் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அவரைப்போலவே பல சிந்தனையாளர்கள் அந்த குறிப்பிட்ட விவாதப் பொருள் குறித்த சரியான பார்வையும் தெளிவான புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள். இவர்களைப் படிக்கும் வாசகர்களும் அதே தவறான புரிதலைச் சரியான புரிதலாக எண்ணிவிட வாய்ப்புகள் உண்டு. அப்போது அவர்கள் தங்களை அறியாமலேயே தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட விவாதம் வர்ணாஸ்ரமம் பற்றியது. பொதுவாகவே வர்ணாஸ்ரம்ம் பற்றிய குழப்பமான புரிதல்கள் மக்களிடையே உண்டு. எனவே நம்மால் முடிந்த அளவிற்கு அதைத் தெளிய வைக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை. 

 

வேதங்களும், ஸாஸ்திரங்களும் சத்தியங்கள்!

வேதங்களும், உபநிஷதங்களும் சத்திய பிரமாணங்கள் ஆகும். அவைகளில் கூறியிருப்பது அனைத்தும் சத்தியம், தர்மம், நியாயம், நேர்மை, அன்பு முதலியன ஆகும். அவைகள் என்றைக்கும், நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் எக்காலத்திற்கும் ஏற்புடையது. அவற்றை இவ்வுலக மக்களாகிய நாம் நமது வாழ்க்கையில் விடாமல் கடைபிடித்தால் நாமும் நமது சந்ததியினரும் உய்வோம், ஏற்றம் பெறுவோம், பயனடைவோம்.