×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

இதிஹாச நாயகர்களும் இந்த மண்ணின் பாரம்பரியமும்

Thursday, 05 December 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
ramajanmabhoomi2
 
உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு
ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை
கண்டிலா நகர்அது காண்பான்,
அமைப்புஅருங் காதல் அதுபிடித்து உந்த,
அந்தரம், சந்திராதித்தர்
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு
இயம்பல்ஆம் ஏதுமற்றுயாதோ! 
 
அயோத்தி நகருக்கு ஈடான, உவமை காட்டத்தக்க இன்னொரு நகரத்தை, உமையொரு பாகனாம் கயிலையம்பதியும், திருமகளும் நிலமகளும் நாயகனாய் வணங்கும் வைகுண்டபதியும், பொறுமையின் திருவுருவாய் விளங்கும் சத்தியலோகத்துப் பிரமனும்கூடக் கண்டதில்லை. அயோத்தி மாநகரத்துக்கு உவமையாகச் சொல்லக் கூடிய நகரம் எது என்பதைக் கண்டறியும் அடக்கமுடியாத ஆவலால் தானே சந்திரனும் சூரியனும் வானத்தில் கண்ணை இமைக்காமல் வலம் வருகிறார்கள். இதற்கு மேல் அயோத்தியின் சிறப்பு குறித்து எடுத்தியம்ப ஏதுமில்லை” என்பது தன் வீட்டுக் கட்டுத்தறியையும் கவிபாடச் செய்த கம்பநாட்டாழ்வார் சொல்
 
 
அத்தகைய அயோத்தி நகரம் இன்று பிரச்சினையின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது, இராமபிரானுக்கு ஆலயம் எழுப்பும் பணிக்கு ஏகப்பட்ட இடைஞ்சல்கள். இரும்பு மனிதர் சர்தார் படேல் சோம்நாத் ஆலயத்தை எழுப்பியது போலவே இங்கும் வெள்ளையர் வெளியேறியதும் செய்திருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சினை முற்ற முகாந்திரம் இல்லை. இந்து மத சார்பு என்று இது போன்ற மீட்புகளைத் தடுத்த நேருவின் முட்டாள்தனம் இன்று நாம் இன்னும் இது குறித்து விவாதித்துக் கொண்டே இருக்கிறோம்.
 
 
இராமர் இங்கே பிறக்கவில்லை என்று சிலர் வாதிடுகின்றனர். என்ன ஆதாரம்? உடனே பிறந்தார் என்பதற்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கிறதா என்கின்றனர். அட மூடர்களே! முன்காலத்தில் மக்கள் சக மனிதனையும் அவன் வாக்கையும் நம்பினார்கள். எதையும் எழுதி வைத்துக்கொண்டு அதையும் மறுத்து வழக்காடும் மூடத்தனம் இருந்ததில்லை. இராமர் இங்கே பிறந்தார் என்பதற்கு ஆதாரம் காலங்காலமாக அங்கே நடந்துவரும் வழிபாடு. தொல்லியல் துறை ஆராய்ச்சி இப்போது அதை நிரூபித்துள்ளது. வேறென்ன ஆதாரம் வேண்டும்?
 
 
அறிவுஜீவிகள் என்றறியப்படுவோர் பலரும் ஆராய்ந்து அறிந்து விஷயங்களைச் சொல்வதில்லை. எதையும் சற்றே மேம்போக்காக அறிந்து கொண்டு பிறகு அதற்கான ”ஏன் எதற்கு எப்படி” விவகாரங்களைத் தங்கள் சிந்தனைக்கு எட்டிய வரையில் யோசித்துச் சொல்லிவிடுகின்றனர். அறிவு ஜீவி ஒளிவட்டம் இருப்பதால் இவர்கள் கூற்று சநாதன தர்மத்தின் விரோதிகளுக்கு ஆயுதமாகி விடுகிறது.
 
 
சிலகாலம் முன்னே விகடனில் மதன் இது போன்றதோர் தொனியில் ஒரு கருத்தைச் சொன்னார். “ஒரிஜினல் மஹாபாரதத்தில் க்ருஷ்ணன் கடவுளாக்ச் சொல்லப்படவில்லை. பின்னே வந்த பக்தி மார்க்கத்தவர்கள் அப்படிப் புனைந்து விட்டார்கள்” என்று ஹாய் மதன் கேள்வி பதில் பகுதியில் சொன்னார்.
 
 
ஒரிஜினல் மஹாபாரதத்தைப் படித்தாரா? விநாயகப் பெருமானின் கையெழுத்தைப் பார்த்தாரா? ஓலைச்சுவடிகள் எங்கே உள்ளன? க்ருஷ்ணன் கடவுள் இல்லை என்றே வியாசர் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரா அல்லது குறிப்பில் காட்டியுள்ளாரா? என்னென்ன காரணாங்களால் அந்த முடிவுக்கு வந்ததாக வியாசர் சொல்லியிருக்கிறார்? இவற்றுக்கு மதனரிடமிருந்து பதில் இன்றுவரை இல்லை.
 
 
ஆக அறிவுஜீவிகள் பலர் ஒருசில விஷயங்களில் மட்டும் சிறப்புக் கொண்டு அதனாலேயே எதைப்பற்றியும் கருத்துக்கூறத் தமக்குத் திறமுண்டு என்ற தன்னார்வக் (கோளாறு) அடிப்படையில் பேசிவருவது தெளிவாகிறது. ஆதராங்களுடன் மறுக்க ஆளில்லாதவரை ஆட்டம் தொடரும். ஆதாரத்துடன் மறுத்தால், சட்டம் பேசுவர், சட்டப்பூர்வமாக மறுத்தால் மத நம்பிக்கை வரும். முதலிலேயே ஆண்டாண்டு காலமாக மதநம்பிக்கை அடிப்படையில் அயோத்தியில் வழிபாடு நடக்கிறதே அதற்கு என்ன பதில்? மீண்டும் ஆதாரம், சட்டம் என்று சுற்றிச் சுற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறோம்.
 
 
இராமபிரானுக்குக் கோவில் கட்டக் கோரும் வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தின் முப்பரிமாணத் தீர்ப்பு சற்றே ஒவ்வாததாக இருந்தாலும் ஒரு அடிப்படையை வலுப்படுத்துகிறது. “இந்நாட்டு மக்களின் நெடுநாளைய நம்பிக்கை மதிக்கப்படவேண்டும். அதனால் இராமர் பிறந்த இடம் இராம ஜன்ம பூமியே” என்பது இவ்விஷயத்தில் தீர்ப்பின் சாரம். ஆகவே காலங்கடந்த முறையீடு என்ற ஆங்கிலேய  நீதிபதிகளின் தீர்ப்பு செல்லாது என்று முடிவாகிறது.
 
 
ஆங்கிலேய நீதிபதிகளின் தீர்ப்பை மேற்கோள் காட்டி நம் நீதித்துறையின் தீர்ப்பை மறுப்பது பாரதத்தின் இறையாண்மைக்கு எதிரான செயல். நீதிமன்றத்தில் வழக்காடுகிற போது வாதத்துக்கு வலுச் சேர்க்க பிறநாட்டு நீதிமன்றத் தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்படுவது வழக்கம். ஆனால் அவை அனைத்தையும் ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பை ஒரு மேற்கோளைக் காட்டிப் பழிப்பது நீதிமன்ற அவமதிப்பு.
 
 
இராமபிரானுக்குக் கோவில் கட்டுவது குறித்த நீதிமன்றத் தீர்ப்பையும், கோவில் கட்டுவதில் ஏற்படுத்தப்படும் சிக்கல்கள் குறித்தும் கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பால கௌதமனும் தமிழக தவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜைனுலாப்தீனும் வாதிட்டனர். கேப்டன் நியூஸில் இதை நேரலை செய்தனர். மறு ஒளிபரப்பில் பல்வாறாக வெட்டி ஒட்டி பால. கௌதமன் வைத்த பல வாதங்களை நீக்கி ஒளிபரப்பினர்.
 
 
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் உண்மை மறையாது என்பதற்கேற்ப இதோ அந்த முழு விவாதத்தின் காணொளி(கள்).
 

 

 

 

வெளி நாட்டு நிறுவனமும் தொல்லியல் துறையும் இணைந்து வீடியோ பதிவு ஆதாரத்துடன் நடத்திய அகழ்வாராய்ச்சி புகைப்படங்களை காண இங்கே கிளிக் செய்யவும். 

 

http://vsrc.in/index.php/articles/2013-04-20-19-52-39/item/110-2013-12-06-04-34-55.html

 

 மேலும் இது தொடர்பான கட்டுரைகளை இங்கே காணலாம்.

இராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை.

Read 2395 times
Rate this item
(1 Vote)
Last modified on Monday, 30 March 2015 06:20

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment