×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

இராமநாதபுரம் வீதிகளில் ஜிகாதி தாக்குதல் – காஷ்மீரை நினைவுபடுத்தும் வெறியாட்டம்

Thursday, 20 February 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

ஊரெல்லாம் ஒரே போஸ்டர் ஏதோ இராமநாதபுரத்தில் அப்பாவி முஸ்லீம்களை போலீசார் கொலை வெறிக் கொண்டு தாக்கியதாக ஒரே ஒப்பாரி. இதைக்கண்டித்து ஆர்பாட்டங்கள் வேறு. கடத்தல்காரன் கொலைகாரன் கொள்ளைக்காரன் இவர்களுக்கு எல்லாம் விஐபி அந்தஸ்து கொடுக்கும் நக்கீரன் பத்திரிக்கை இந்துக்கள் முஸ்லீம்களை தாக்கியதாக குற்றச்சாட்டு வேறு! இப்படியெல்லாம் தமிழகத்தில் நடந்திருக்குமா அதுவும் இந்துக்களின் அடிப்படை வழிப்பாட்டு உரிமைகளைக் கூட தட்டிப் பறிக்கும் திரு. நந்தகுமார் அவர்கள் ஆட்சியாளராக இருக்கும் இராமநாதபுரத்தில் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது?

 

  ramanathapuram poster ramanathapuram PFI poster

 

nakkeran news

 

18.02.2014 தேதியிட்ட அனைத்து பத்திரிக்கைகளிலும் தடையை மீறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(PFI) ஊர்வலம் நடத்தியதை தடுத்த போலீசார் மீதும் அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. உண்மை இப்படி இருக்க வீரப்பன் விசுவாசி நக்கீரனுக்கு இந்துக்கள் தாக்குதல் நடத்திய செய்தியை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. கலவர களத்திலிருந்து ஒவ்வொரு செய்திகள் குறித்து வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் சிறப்பு பிரதிநிதி வீர வேலு நாச்சியார் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களையும் பொது மக்களையும் தொடர்புகொண்டு பேசினார்.

 

 

 

ramanathapuram pfi march vilolence newspaper cutting ramanathapuram violence newspaperdinamalar news

 

17.02.2014 அன்று இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) என்ற அடிப்படைவாத முஸ்லீம் அமைப்பினர், இயக்க தினம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கோரினர். கலவரத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன், இந்துக்கள் அதிகம் வசிக்கும் குமாரய்யா கோவில் பகுதி அருகிலிருந்து ஊர்வலத்தைத் தொடங்கி, அடிப்படைவாத முஸ்லீம் அமைப்புக்களின் ஆதிக்கம் அதிகமுள்ள சின்னக்கடை வழியாக ஊர்வலப் பாதையை முடிவு செய்திருந்தனர். இந்தச் சதித்திட்டத்தை உணர்ந்த காவல்துறை, பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளித்து, ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தது.

 

Pfi flag small 

 

ஊர்வலம் செல்லமாட்டோம் என்ற நிபந்தனையை ஒத்துக்கொண்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், 17.02.2014 மாலை 4 மணி அளவில், "குமாரய்யா கோவில் அருகிலிருந்து சீருடை அணிந்து, பேண்டு வாத்தியங்களுடன், அணிவகுப்பு நடத்துவோம்’’ என்று பிடிவாதம் பிடித்தனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வேன், கார் போன்ற வாகனங்களில் நீளமான கொம்புகளில் கொடியைக்கட்டிக்கொண்டு சாரை சாரையாக அடிப்படைவாத முஸ்லீம்கள் வந்திறங்கினர். இதில் பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், பள்ளிமாணவ மாணவிகளும் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படும் திட்டத்துடன் அழைத்துவரப்பட்டனர். சிறிது நேரத்தில் இந்தக் கூட்டம் சுமார் 2000த்தை எட்டிவிட்டது. இந்நிலையில், காவல்துறையினர் ஊர்வலக்காரர்களைக் கலைந்து செல்ல வேண்டியபோது, ADSP திரு.வெள்ளத்துரை அவர்கள் மீது வாகனத்தை ஏற்றிக் கொல்ல முயற்சித்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்தத் தாக்குதலிலிருந்து அவர் உயிர் தப்பினார்.

ramanathapuram pfi march violence

 

இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்குப் பின்னும், காவல்துறையினர் முஸ்லீம் கலகக்காரர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடக்கும்போதே, பி.எப்.ஐ தீவிரவாதிகள் தடையை மீறி ஊர்வலத்தை தொடங்க, வேறுவழியின்றி போலீசார் தடியடி நடத்தினர். ஊர்வலப்பாதையெங்கிலும் மூன்றடி இடைவெளியில் வலுவான கம்பங்களில் பி.எப்.ஐ கொடிகள் கலவரத்திட்டத்துடன் நடப்பட்டிருந்ததாக பாரதி நகரைச் சேர்ந்த சுதாகர் தெரிவித்தார். இவரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இந்தக் கொடிக்கம்பங்கள் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் ஆயுதமாக மாறியது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்த ஒரு இடிபட்ட கட்டிடம், இவர்களுக்கு கலவரம் செய்ய போதுமான கற்களையும் கொடுத்தது. இதுதவிர மிளகாய்ப் பொடி, இரும்புக் கம்பிகள் போன்றவையும் கலவரக்காரர்களால் பயன்படுத்தப்பட்டது.

 

ramanathapuram pfi march-violence3

 

எதிர்பாராத இந்தத் தாக்குதலால் சில நிமிடங்கள் போலீசார் திக்குமுக்காடிப் போனார்கள். இந்தத் தாக்குதலில் ஆய்வாளர் திரு.இராஜாமணி உட்பட 16 காவலர்கள் பலத்த காயமுற்றனர். நிலமை கட்டுக்கடங்காமல் போகவே, காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளைவீசி கூட்டத்தை கலைத்தனர்.

 ramanathapuram pfi police assualt


 17.02.2014 அன்று மதியத்திலிருந்தே இந்த முஸ்லீம்களின் கூடுதலும், அவர்களின் செயல்பாடுகளும், ஒரு கலவரச் சூழலை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்ததால், மதிய உணவிற்குப்பின் பெருவாரியான வியாபாரிகள் கடைகளை திறக்கவில்லை, ஒருசில கடைகள் மட்டுமே திறந்திருந்தன என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் போலீசாரின் தடியடியால் திபு, திபு என்று ஒடிவந்த பி.எப்.ஐ கலவரக்காரர்கள் திறந்திருந்த மெக்கானிக் பட்டறைக்குள் நுழைந்ததை அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஆட்சேபித்தனர். ஆத்திரமுற்ற முஸ்லிம் கலவரக்காரர்கள், கையில் ரட்சையும், நெற்றியில் திலகமும் அணிந்திருந்த பிரவீன் என்ற ஒரு தொழிலாளியை கொடிக்கம்பத்தால் அடிக்கத்தொடங்கினர். இவரை தரையில்போட்டு கொலைவெறியுடன் கழுத்தில் மிதித்தனர். இந்தத் தாக்குதலில் மயங்கிய பிரவீனை டாடா சுமோ வாகனத்தில் தூக்கிப்போட்டுக்கொண்டு முஸ்லீம் கலவரக்காரர்கள் செல்வதைப் பார்த்த காவல் துறையினர் துரத்திச் சென்று அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

ramanathapuram pfi praveen victim

மருத்துவமனையிலிருந்து திரு.பிரவீன் தொலைபேசியில் நமக்கு அளித்த பேட்டியில்

// நான் எப்பொழுதும் நெற்றியில் செந்தூரமும், கைகளில் காப்பு கயிறும் அணிந்திருப்பவன். குமாரய்யா கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள மெக்கானிக் பட்டறையில் வேலை பார்க்கிறேன். சம்பவம் நடந்தபோது பட்டறையின் உரிமையாளர் சாப்பிட வெளியே சென்றிருந்தார். நாலு மணிவாக்கில் போலீஸ் தடியடி நடத்தியபோது கூட்டத்திலிருந்து ஒடி வந்த ஒரு கும்பல் எங்கள் பட்டறைக்குள் புகுந்தது. அவர்களை வெளியே போகுமாறு சொன்னேன். உடன் அவர்கள் என்னை கடுமையாக தாக்க தொடங்கினார்கள். கும்பலில் இருவர் என் இரு கைகளையும் தப்பி ஓட முடியாமல் பிடித்துக்கொண்டு விட்டனர். கும்பலில் இருந்த மற்றவர்கள் கொடிக் கம்பங்களை கொண்டு தாக்கினார்கள். பட்டறையில் என்னைத் தவிர இன்னும் ஐந்துபேர் இருந்தார்கள் அவர்கள் என்னை அடிக்கவேண்டாம் என்று கூறியும் விடாமல் என்னை முஸ்லிம் கலவரக்காரர்கள் அடித்தனர். மேலும் என்னை அவர்கள் சுமோ வேனில் தூக்கி போட்டுக் கொண்டு சென்று விட்டனர். இதைப் பார்த்த போலீஸார் என்னை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தனர். மதியம் சாப்பிட கடையை மூடி சென்றவர்கள் யாரும் கடை திறக்கவில்லை. இந்து மதச்சின்னங்களை அணிந்து இருந்ததால் என்னை அவர்கள் தாக்கினார்கள்.


இப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். கழுத்தை திருப்பவே முடியவில்லை. மருத்துவமனையிலிருந்து நாளை டிஸ்சார்ஜாகும் படி சொல்கிறார்கள். அடித்தவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொடி மூலம் தங்கள் முகத்தை மறைத்திருந்தனர் அதனால் அவர்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை.//  என்று தெரிவித்தார்.

 

இந்த தொலைபேசி உரையாடலின்போது, கூட்டமாக குமாரய்யா கோயில் பகுதியைச் சார்ந்த முஸ்லீம் வியாபாரிகள் மருத்துவமனைக்குள் புகுந்தனர். அவர்கள் பிரவீனிடம் ’’ நீ தனியாக வழக்கு கொடுக்காதே, உனக்காக யாரும் வரமாட்டார்கள் உன் வேலை பாதிக்கப்படும்.” என்று மிரட்டியதை அருகிலிருந்த சுதாகர் நமக்குத் தெரிவித்தார்.

 

இந்த மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் அவர்கள், இந்துக்கள் செந்தூரமும், ரட்சையும் அணிவதால் கலவரம் வருகிறது, அதை தடை செய்யுங்கள் என்று உத்திரவிட்டதை நம் வலைத்தளம் ஏற்கனவே பதிவிட்டிருந்தது.

இந்து சின்னங்களுக்கு தடை - இராமநாதபுரம் கலெக்டரின் தாலிபானிஸம்

 

இந்த ஆணையை நிறைவேற்றுகிறோம் என்று மாணவ மாணவிகளின் கையிலுள்ள கயிற்றை அறுத்த அழகன்குளம் முகமதியா பள்ளி மாணவர்களும் இந்த ஊர்வலத்தில் பள்ளிச் சீருடையுடன் கலந்துகொண்டனர் என்றார் சுதாகர். இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாதத்தை திருப்திப்படுத்த இந்துக்களின் அடிப்படை உரிமையைப் பறித்த கலெக்டர் நந்தகுமார், இந்தக் கலவரத்திற்குப்பின் ஒட்டுமொத்தமாக எல்லா இந்துச் சின்னங்களுக்கும் தடைவிதிப்பாரோ? செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கலெக்டர் அலுவலக வளாகத்தில் காவல் நிலையம் தாக்கப்பட்டபோது கூட கண்டுகொள்ளாதவர்தானே இவர் !

 கலெக்டர் அலுவலக வளாக காவல்நிலையத்தில் தாலிபான் தாக்குதல் – தென் காஷ்மீராகும் இராமநாதபுரம்

 

nandakumar collector

 

இந்தக்கலவரத்தில், தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பணிபுரியும் திரு.சாமுவேல் அவர்களும் தாக்கப்பட்டார். அழகன்குளம் கிராமத்தில், கோயில் அருகாமையில் பக்ரீத் அன்று முஸ்லீம்கள் பசுவதை செய்தனர். இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்த இந்துக்கள் மீது பொய்வழக்குத் தொடுத்தவர் இந்த சாமுவேல். இப்படிப்பட்ட முஸ்லீம் விசுவாசியைக் கூட விட்டுவைக்கவில்லை இந்த வன்முறையாளர்கள்! முஸ்லீம்களின் ஆதரவுக்காக அவர்களை நம்பி சட்டவிரோதமாகவும், தர்ம விரோதமாகவும் செயல்படும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இந்தத் தாக்குதல் பாடமாக அமையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

ramanathapuram alagankulam complaint

 

இந்தக் கலவரம் தொடர்பாக 1100 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பதாக மாவட்டக் கண்காணிப்பாளர் அவர்கள் பத்திரிகைச் செய்தி விடுத்துள்ளார். இப்படி பெயர் தெரியாத 1000 பேர் என்று போடப்பட்ட வழக்குகள் இன்றுவரை சரியான முறையில் நடத்தப்பட்டதில்லை.


news paper cutting 4newspaper cutting small5

 

பா.ஜ.க தலைவர் திரு.H.இராஜா அவர்கள் 26.10.2012 அன்று இளையங்குடியில் தாக்கப்பட்டபோது இது போல் பெயர் குறிப்பிடப்படாமல் பல நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

 

//இந்தக்கலவரத்தில் ஈடுபட்ட பலர் வெளிமாவட்டக்காரர்கள்// என்கிறார் பாரதி நகரைச் சேர்ந்த ஆறுமுகம். மேலும், இந்த ஊர்வலத்தில் //போர்க்கலைப் பயிற்சிபெற்ற கேரளத்தைச் சார்ந்த பலரும் இருந்தனர் என்கிறார் அவர்.

 

//முஸ்லீம் தரப்பில் 17 பேர் அடிபட்டு வந்தார்கள். அதில் நாலு பேர் மட்டும் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் எங்கள் ஊர் மதுரை எங்களை மதுரைக்கு மாற்றிக்கொடுங்கள் என்று கேட்டு எழுதி வாங்கி கொண்டுபோய்விட்டார்கள். இந்த ஊர்வலத்தில் வந்தவர்கள் நிறைய பேர் வெளியூர்கார்கள் தான். கேரளா, மற்றும் மதுரையை சேர்ந்தவர்களும் இருந்தனர். உள்ளூர்க்காரர்கள் மிகக் குறைவுதான். கோரிப்பாளையம், அழகன் குளம், புதுமடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்// என்றார் ஒரு மருத்துவமனைப் பணியாளர் .

 

02.02.2014 அன்று கலெக்டர் அலுவலகம் அருகில் கேணிக்கரைக் காவல் நிலையம் தாக்கப்பட்ட சம்பவத்திலும், வெளியூர் முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டதை நம் வலைத்தளம் குறிப்பிட்டிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும். இப்படி, கலவரம் செய்வதற்கென்றே ஒரு படையை திட்டமிட்டு இஸ்லாமியர்கள் எல்லாப் பகுதிகளிலும் ஏற்படுத்தியுள்ளனர். சொந்த ஊரில் கலவரம் செய்ய வெளியாட்களுக்கு திட்டம் போட்டுக் கொடுத்துவிட்டு, ’’எங்களுக்கு எதுவுமே தெரியாது’’ என்று கையை விரித்து விடுவார்கள். கையை விரிக்கும், இவர்கள் வேறு ஊரில் சென்று தாக்குதலில் ஈடுபடுவார்கள்.

 

இந்த பயங்கரவாதப் பறக்கும் படை (Floating terror group) கலாச்சாரம், 25.10.2013 அன்று கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு தாக்குதலிலும், 16.04.2013 அன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் தாக்குதலிலும் தன் முகத்தைக் காட்டியுள்ளது

 

இந்த முஸ்லிம் பறக்கும் படைகளுக்கு நாடு முழுவதும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதே இராமநாதபுரத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஹசன் அலி அவர்கள் ஊரான பெரியபட்டணத்தில் 25.06.2012 ஆம் தேதி ஆயுதப் பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயிற்சி பெற்றனர். கையும் களவுமாக பிடித்தபின்னரும், இவர்கள் மீது எந்த வழக்கும் போடாமல் காவல்துறையினர் விடுவித்ததின் விளைவு, இன்று காவல்துறையினருக்கே காவல் வேண்டிய நிலைக்கு இராமநாதபுரத்தைத் தள்ளிவிட்டது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களை, கேரளத்திலிருந்து வந்த PFI நிறுவனர் பார்த்துச் சென்றதாகச் சொன்னார் திரு.சுதாகர்.

 

ramanathapuram weapon-training pfi

 

இன்று இராமநாதபுரத்தில், ஒரு சாதாரண முஸ்லீம்கூட பயங்கரவாதத்திலோ, அல்லது அவற்றின் தொடர்பிலோ இருப்பது சகஜமாகிவிட்டது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழிநெடுகிலும் உள்ள இஸ்லாமியர்கள், தங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுத்தனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால் இராமநாதபுரம், மதுரை ரோட்டில் அமைந்துள்ள பயோனியர் மருத்துவமனை, காயம்பட்டவர்களின் விவரங்களை காவல்துறையினருக்குத் தெரிவிக்காமல் சிகிச்சை கொடுத்து அனுப்பிவைத்தது. இச்செயலைச் செய்தவர் டாக்டர் சையது இப்ராஹிம் என்ற முஸ்லீம் என்றார் பட்டினம்காத்தான் பகுதியைச் சேர்ந்த திரு.சரவணன்.

ramanathapuram poilce pfi

 

பயங்கரவாதம் என்றாலே மக்களின் மனதில் பயங்கர கிலியை ஏற்படுத்துவது அதன் மூலம் பயங்கரவாதிகளின் பிடியில் ஒரு சாமானிய மனிதனையும் அரசாங்கத்தையும் கொண்டு வருவதே இவர்களின் நோக்கமாகும். எந்தவொரு சின்ன பிரச்சினையாக இருந்தாலும்  பெரும் திரளாக கூடுவதும் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கவைப்பதும் அதன் மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் இஸ்லாமியர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒரு புறம் வெடிகுண்டு தாக்குதல் துப்பாக்கி தாக்குதல் மூலமும் மறுபுறம் எண்ணிக்கையை காட்டி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் தந்திரத்தையும் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் innocence of muslims  என்ற திரைப்படம் வெளியிட்ட போது  இந்தியாவில் அது தடை செய்யபட்டிருந்தும் நான்கு நாட்கள் சென்னை அண்ணாசாலையை ஸ்தம்பிக்க வைத்து வெறியாட்டம் ஆடினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்நிலையம் மற்றும் பல கட்டப்பஞ்சாயத்துகளில் முஸ்லீம்கள் அதிகளவில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த அச்சுறுத்தும் திரட்சிக்கு இவர்கள் பொது வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்யும் நிகழ்வுகளே காரணமாகிறது. இந்த PFI  ஊர்வலத்தினால் மதுரை இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 மணிநேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மிகவும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளை திட்டமிட்டு தடையை ஏற்படுத்தி தங்களை அளப்பரிய பெரிய சக்தியாக வெளிக்காட்டுவதால் ஏற்படும் அச்ச உணர்வினை வைத்து லாபம் தேடிக்கொள்கின்றனர் இந்த இஸ்லாமியர்கள். இப்படிப்பட்ட போராட்டங்கள் தான் சுற்றுலா தளமாகிய காஷ்மீரத்தை சுடுக்காடாகியுள்ளது.

 

1980 களில் காஷ்மீரில் வெகுஜன முஸ்லீமும்கூட இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் ஆதரவளித்தான். அன்றும், முஸ்லீம் ஓட்டுக்காக கடும் நடவடிக்கை எடுக்க அரசு தவறியது. இஸ்லாமிய வன்முறைக்கு பயந்து மண்டியிட்டது. அடிப்படைவாத முஸ்லீம் கோரிக்கைகளை ஏற்று இந்துக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தது. இன்று காஷ்மீரின் நிலை என்ன? இப்போது அதே நிலை நம் இராமநாதபுரத்திற்கும் வந்துவிட்டது.

 

முஸ்லீம்களின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதுடன், அதை எதிர்க்கும் தேசபக்தர்கள் மீது பொய் வழக்குப் போடுவது, பாரம்பரியமாக நடக்கும் திருவிழாக்களை இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லித் தடைவிதிப்பது, இந்துச் சின்னங்களை தடை செய்வது என்று படிப்படியாக காஷ்மீர் நிலைக்கே இராமநாதபுரம் மாவட்டத்தைக் கொண்டு சென்று விட்டது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும். இன்று காஷ்மீரில் காவல்துறை செயலற்றுப் போனதுபோல், இங்கும் பல இடங்களில் காவல்துறை கீழ்ப்படுத்தப்பட்டதோடு, ஸ்ரீநகர் வீதிகளில் நடக்கும் காட்சிகள், இராமேஸ்வரம் நெடுஞ்சாலையிலும் அரங்கேற்றப்படுகிறது.

 

இப்போதாவது விழித்துக்கொண்டு மத்திய மாநில அரசுகள்பயங்கரவாதக் காஷ்மீராக மாறிவரும்  இராமநாதபுரத்தைக்” காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

Read 5239 times
Rate this item
(0 votes)
Last modified on Wednesday, 06 August 2014 10:00

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

3 comments

 • Comment Link Ramprasad Saturday, 22 February 2014 08:47 posted by Ramprasad

  Politicians including Jaya do nothing even if enough evidences are available to counter terrorism perpetuated by minorities. The recent violent act by Islamic Fundamentalists in Ramanad (TN) is one such case. Vote Bank politics is slowly eating India. And for this reason alone Dr. Swamy has been repeatedly emphasising Hindus to get polarised and join hand with those who give voice for the fundamental rights of Hindus. Will the fellow Hindus wake up?

 • Comment Link karthikeyan Friday, 21 February 2014 15:31 posted by karthikeyan

  Ivargal indiyavaium hindhukalaium alipathaiye kurikolaga kondu seyalpadukindarnar.
  Ingu yaraiyavathum adika venumentral veliyur atkalai konduvathu
  Ninaithathai mudikindranar. Veli nadukalil irunthu varum panathai payanpaduthi ivargal desa thoroga panikalil idupadukindranar.

 • Comment Link சூர்யா Thursday, 20 February 2014 14:29 posted by சூர்யா

  aniyaayam ithu aniyayam ithu aniyaayam

Leave a comment