×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது - இராமநாதபுரம் தாலிபான் நிர்வாகத்தின் அராஜகம்

Saturday, 14 June 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

rss1 small

 

இன்றும் (14.06.2014) நாளையும் RSSன் மாநில பொதுக்குழு கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் பகுதியில் நடைபெற்றுவருகிறது. அதன் பகுதியாக வழக்கமாக நடைபெறும் மாலை நேர விளையாட்டு மற்றும் உடற்பயற்சி வகுப்பு (ஷாகா) அக்கடற்கரையில் நடைபெற்றது. இதில் சுமார் 350 பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இடம் முழுவதையும் ஏதோ தீவிரவாதிகளை முற்றுகையிடுவது போல் அனைவரையும் சுற்றி வளைத்தனர். காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் DSP அண்ணாமலை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. DSP அண்ணாமலை மிகவும் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது உபயோகிக்க ஆர்.எஸ்.எஸ், அமைப்பினர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.

 

இது குறித்து சுதேசி இயக்கத்தின் முன்னாள் மாநில பொறுப்பாளர் திரு. நம்பி நாராயணனை தொடர்பு கொண்டபோது அவர் நம்மிடையே நடந்த நிகழ்வுகளை பின்வருமாறு கூறினார்.

 

பீச்சில் பயற்சி மேற்கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்காரர்களிடம் காவல்துறையினர் வந்து இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரும் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு ஆர்.எஸ்.எஸ், அமைப்பினர் எங்கள் பயற்சி முடியப்போகிறது நாங்கள் இன்னும் சிறிது நேரத்தில் பிரார்த்தனை முடித்து விட்டு கிளம்பி விடுவோம் இது ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடம்தானே. இங்கு எங்கு வந்தது சட்ட ஒழுங்கு பிரச்சினை என்று கேட்டிருக்கிறார்கள். காவல்துறையும் இதை ஏற்று பிரார்த்தனை செய்ய அனுமதித்து விட்டு பிரார்த்தனை செய்யும்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை நோக்கி மிகவும் மோசமான வார்த்தைகளால் DSP திரு. அண்ணாமலை ஆழ்வார் திட்டினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இதற்கு எதுவும் பதிலளிக்காமல் அமைதியாக கலைந்து செல்ல முற்பட்டபோது DSP அண்ணாமலை ஆழ்வார் “பொட்டப் பசங்களா” தைரியம் இருந்தால் எங்களை எதிர்கொள்ளுங்கள் ஏன் ஓடுகிறீர்கள்? என்று கேவலமாக பேசியுள்ளார். அதற்கு அமைப்பினரும் யாரை பார்த்து இப்படி கூறுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். நீங்கள் தான் அப்படி நடந்து கொள்ளுகிறீர்கள் என்றும் கூறியுள்ளனர். உடன், அமைதியாக கலைந்து செல்ல இருந்தவர்கள் அனைவரையும் போலீஸ் படை கொண்டு கைது செய்துவிட்டார். இது குறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டருக்கு போன் மூலம் தொடர்புகொள்ள முயன்றபோது மாவட்ட கலெக்டரின் இணைப்பு கிடைக்கவில்லை. இந்து முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் திரு. இராமமூர்த்தி காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனனுக்கு போன் செய்தபோது அவர், நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கைது செய்யச்சொல்லி வாய்மொழி உத்தரவு அளித்துள்ளேன். எந்த பிரச்சினையும் செய்யாமல் உங்கள் தலைவர்களை இதற்கு உடன் பட சொல்லுங்கள் சிறிது நேரத்தில் விடுவித்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு திரு.இராமமூர்த்தி அவர்களை எதற்காக கைது செய்கிறீர்கள் காரணம் என்ன என்று கேட்டதற்கு அதற்கு பதிலளிக்காமல் கைது செய்யச்சொல்லிவிட்டேன் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.

 

இந்த பீச் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். என்பது தடை செய்யப்பட்ட இயக்கம் கிடையாது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடமாக இருப்பதால் பொதுமக்களுக்கு எந்த இடையூரும் இல்லை. அதேபோல், இந்நிகழ்வினால் பொதுமக்கள் யாரும் இது எங்களுக்கு இடையூறு ஆக உள்ளது தடுத்து நிறுத்தங்கள் என்று மனு கொடுக்கவில்லை.  எந்த ஒரு காரணமும் இல்லாம் கைது செய்யவேண்டிய அவசியம் என்னவென்பதே நம் கேள்வி. தேவிபட்டிணம் என்றாலே முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதி என்று முடிவு செய்து, இதை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளார்கள். இரண்டு நாட்கள் முன்பு இங்கு ஊர்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அமைதியாக கலைந்து செல்ல இருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கைது செய்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் அவர்களை வேண்டுமென்ற கலைந்து செல்ல அனுமதிக்காமல் கைது செய்துள்ளனர். மேலும், ஒரு மாநில பொறுப்பாளரின் சட்டை காலரை பிடித்து திட்டியுள்ளார். அமைதியாக செல்பவர்களை வேண்டுமென்றே கைது செய்ய வேண்டுமானால் அவர்களை கண்டிப்பாக கைது செய்யவேண்டும் என்ற உத்தரவு இருந்திருக்கவேண்டும் என்றே நாங்கள் நினைக்கிறோம். இந்த விஷயம் தெரிந்தவுடன் தமிழகம் முழுவதும் 22 இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. விஷயம் கைமீறி போவதை உணர்ந்த காவல்துறையினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம் வந்து நீங்கள் போகலாம் உங்களை விடுவித்து விட்டோம் என்று கூறியுள்ளார்கள். அதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் எங்களை காரணமேயில்லாமல் கெட்ட வார்த்தைகளால் திட்டி எங்கள் மாநில பொறுப்பாளரை காலரை பிடித்து ஏசி எங்களை கைது செய்த திரு அண்ணாமலை DSP எங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் அப்பொழுது தான் கலைந்து செல்வோம் என்று கூறியுள்ளார்கள். என்ன செய்வதென்று தெரியாத காவல்படை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் அவ்விடத்தை விட்டு ஓடிப்போய்விட்டார்கள். உடன் நாங்கள் காவல்துறை கண்காணிப்பாளரை சந்திக்கவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினோம் முதலில் மறுத்து விட்டு நாங்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் சந்திக்க அனுமதி கொடுத்தார்.

 

ஆர்.எஸ்.எஸ். இரண்டு மாநிலத்தின் (தமிழகம் மற்றும் கேரளா) பொறுப்பாளர் திரு.பத்மகுமார், விஜயபாரதம் ஆசிரியர் திரு.வீரபாகு, மாவட்டத்தின் இந்து முன்ணனி பொறுப்பாளர். திரு. இராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ்ஸின் தென்மாநிலசெயலாளர். திரு. ஆடலரசன் மற்றும் நான். நாங்கள் அனைவரும் காவல்துறை கண்காளிப்பாளரை சந்தித்து பின்வருமாறு கேட்டோம். “பிரச்சினையை இல்லாமல் அமைதியாக கலைந்த செல்ல இருந்த எங்களை எதற்காக கைது செய்தீர்கள்?” என்று கேட்டதற்கு இது குறித்து விசாரணை நடத்துவதாக கூறினார். உங்களுக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று தான் வந்தோம் என்றும் கூறினார். நாங்கள் அதற்கு கேட்டோம் அது தான் பிரச்சினையே வரவில்லையே நாங்கள் தான் அமைதியாக கலைந்து சென்று விட்டோமே என்று கேட்டோம் அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. DSP அண்ணாமலை ஆழ்வாரை மன்னிப்பு கேட்கச் சொன்னபோது அவர் தொப்பியை கீழே எறிந்து இதற்கு நான் நாய் பிழைப்பு பிழைக்கலாம் என்று கூறினார். இவ்வாறு நம்பி நாராயணன் கூறினார்.

 

 

rss 2 small

 

banner small

 

dindigul protest small

 

madurai protest

 

ramnad protest1

 

மேலும், இந்த பிரச்சினை அதிகாரிகள் மட்டத்திலும் பூதாகாரமாக உருவெடுப்பதை உணர்ந்த காவல்துறையினர், முஸ்லீம் தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் முகாமின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த தயாரனாதால் ஆர்.எஸ்.எஸ்.னிரை காப்பற்றவே இந்த நடவடிக்கை என்று ஒரு கட்டுக்கதையை பரப்பி வருகின்றனர்.

  • குண்டு வீசி முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கும் அளவிற்கு இராமநாதபுரத்தில் வலுபெற்றுவிட்டனர் என்றால் இந்த சட்ட ஒழுங்கு சீர்கேட்டுக்கு அரசு அதிகாரிகள் ராஜினாமா செய்வாரா?
  • குண்டுவீசி தாக்கவரும் தீவிரவாதிகளை பிடிப்பதற்கு காவல்துறையா? அல்லது தீவரவாதிக்கு பயந்து அப்பாவி மக்களை கைது செய்வதற்கு காவல்துறையா? தீவரவாதிகள் குண்டுவீச போகிறார்கள் என்றால் விவரம் தெரிந்து அரசு பயங்கரவாதிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
  • வலுவான அரசு தமிழக அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா அவர்களே இதுதான் உங்கள் போலீஸ் நிர்வாகத்தின் இலட்சணமா?

 

இதற்கு முன் இந்த மாவட்டத்தில் சாமி ஊர்வலம் செல்ல அரசு அனுமதி மறுத்தது. முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் நுழைய அனுமதியில்லை என்ற பெயர் பலகையை அனுமதித்தது. கோயில் அருகில் பசுவதை செய்ததை கண்டித்து புகார் கொடுத்த இந்துக்களை காவல் துறை கைது செய்தது. கலவரம் செய்யும் முஸ்லீம்கள் கேணிக்கரை காவல் நிலையத்தை தாக்கிய போது மாவட்ட கலெக்டர் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தது.

 

இராமநாதபுரம் என்ற பெயரை RAMNOT என்று முஸ்லீம்கள் அழைப்பதை அரசு ஆதரித்து மகிழ்ந்தது. உலகத்திற்கே பாரதத்தின் உயர்வை நிலைநாட்டிய சுவாமி விவேகானந்தரின் நினைவுச் சின்னத்தை முஸ்லீம்கள் தகர்த்தனர்.  பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கும் முஸ்லீம்களை பிரதான அரசியல் கட்சிகளான அதிமுகவும், திமுகவும், காங்கிரஸ்ம் எம்.எல்.எகளாகவும், எம்.பிகளாகவும், பஞ்சாயத்து தலைவர்களாகவும் அவர்களை அரியனையில் ஏற்றிவைத்து அழகுபார்த்தனர். இதன் விளைவு இந்த மாவட்டத்தின் தாலிபான் தலைவர் (மாவட்ட கலெக்டர்), பள்ளிகூடங்களுக்கு இந்து மாணவர்கள் இரட்சையோ, திலகமோ அணிந்து வந்தால் பாதுகாப்பு கொடுக்கமுடியாது ஆகையால் இவைகளை தடைசெய்கிறேன் என்று ”பட்வா” பிறப்பித்தார். இந்தத் தொடர் அவலங்களின் அடுத்தப்படி கடற்கரையில் கூட இந்துக்கள் கூட அனுமதியில்லை என்ற இழிநிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் முல்லா, பேகம் ஆட்சிமாற்றம் இன்னும் எந்த நிலைக்கு நம் தமிழர்களை தள்ளுமோ?

 

ஆனால், பாரதியின் வாக்கு பாரதத்தில் பொய்த்ததில்லை. தர்மத்தின் வாழ்வுதனை ஜிகாத் (சூது) கவ்வும். மறுபடியும் தர்மமே வெல்லும். ஓட்டுக்காக பணத்திற்காக பதவிக்காக சிறுபான்மையினரை தாஜா செய்ய இந்துக்களின் அடிப்படை உரிமையை கைவைக்கும் சட்ட விரோத, தர்ம விரோத சக்திகளை வேரும் வேரடி மண்ணோடும் களையெடுக்க உறுதி பூணுவோம்.

 

இந்த இராமநாதபுரம் மாவட்டம் எப்படி தாலிபான் தலைநகராக மாறியது என்பதை தெரிந்து கொள்ள கீழ்காணும் லிங்க்களை கிளிக் செய்து படிக்கவும்.

இராமநாதபுரம் வீதிகளில் ஜிகாதி தாக்குதல் – காஷ்மீரை நினைவுபடுத்தும் வெறியாட்டம்

தலிபான் கலெக்டரின் ஒப்புதல் வாக்குமூலம்

கலெக்டர் அலுவலக வளாக காவல்நிலையத்தில் தாலிபான் தாக்குதல் – தென் காஷ்மீராகும் இராமநாதபுரம்

இந்து சின்னங்களுக்கு தடை - இராமநாதபுரம் கலெக்டரின் தாலிபானிஸம்

ராமேஸ்வரம் கிராமங்களில் இந்துக்கள் நுழைய ஃபத்வா (தடை)

ராமநாதபுரம் அரசு அதிகாரிகளின் ஹிந்து விரோத போக்கும், இஸ்லாமிய பயங்கரவாத வளர்ச்சியும்

இராமேஸ்வரம் கிராமங்களில் பட்வா- எது உண்மை?

Read 2720 times
Rate this item
(1 Vote)
Last modified on Tuesday, 14 October 2014 09:59

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment