×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்திக்கு கொலை மிரட்டல் – இராமநாதபுரத்தில் தலைவிரித்தாடும் இஸ்லாமிய பயங்கரவாதம்

Saturday, 25 October 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

இராமநாதபுரம் SP பட்டிணத்தில் 14.10.2014ம் தேதியன்று விசாரணைக்காக கைது செய்யப்பட்ட செய்யது முகமது என்ற ரவுடி காவல்துறை விசாரணையின் போது காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. காளிதாஸை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள காவல்துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட போது செய்யது முகமது இறந்து விட்டார்.

இதைத் தொடர்ந்து SP பட்டிணத்தை இஸ்லாமியர்கள் கலவர பூமியாக மாற்றினர். பேருந்துகளில் இருந்த முஸ்லீம்களை மட்டும் பத்திரமாக இறங்கி போகச்செய்து விட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்திரவு இருக்கும்பொழுது முன் அனுமதி பெறாமல் வேன்களில் கொடி கட்டி ஊர்வலமாக சென்று அரசு மருத்துவமனையின் முன் ஆர்பாட்டமும் அராஜகமும் செய்துள்ளனர். இவை அனைத்தையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது.

muslims protest ramnad

நீதி விசாரணை முழுவதுமாக முடியாத நிலையில் காவல்நிலையத்தில் ரவுடித்தனம் செய்த செய்யது முகமதுவிற்கு அரசு ரூ.5,00,000/- ம் கொடுக்கப்பட்டதை கண்டித்தும், அந்த பணத்தை திரும்ப பெற கோரியும், இச் சம்பவத்தை காரணம் காட்டி அராஜகம் செய்து வரும் இஸ்லாமிய அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இராமநாதபுரம் இந்து முன்னணியின் சார்பில் திரு. கே. இராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் அவர்கள் இன்று (17.10.2014) மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. மயில்வாகனனிடம் மனு கொடுத்துள்ளார்.

ramamoorthy1

 

இதையடுத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் 18.10.2014 அன்று //தோழர் ராமமூர்த்தி அவர்களுக்கு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதற்கு கண்ணியமான முறையில் பதில் கொடுப்பது நம்முடைய கடமையாகும் ஆதலால் 94431 02915 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்// என்று முகநூல் முஸ்லிம் மீடியா என்ற பேஸ்புக் பேஜ் மூலம் முஸ்லீம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

 

 

அந்த முகநூல் பக்கத்தின் லிங்க்: https://www.facebook.com/pages/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/318795831612907

 

அதில் குறிப்பு என்று போட்டு:

//1.யாரும் பதிவு செய்யாத நம்பரிலிருந்து போன் செய்யவே கூடாது.
2. யாரும் வெளிநாட்டிலிருந்து நெட் நம்பரிலிருந்து போன் செய்ய கூடாது.
3. இரவு பன்னிரண்டு மணிக்கும் பிறகு போன் செய்து தூக்கத்தை கெடுக்கும் விதமாக தொந்தரவு செய்ய கூடாது.
4. கட்டாயமாக ஆபாசம் இல்லாமல், கண்ணியமான முறையில் பேச வேண்டும்//

 

 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அப்துல் ரஹீம் என்பவர் //புரிந்து கொண்டோம்// என்றும், முகவை ரஹ்மத்துல்லாஹ் என்பவர் //சரிங்க நல்ல ஐடியா நன்றி// என்றும் பதில் அளித்துள்ளனர்.

 

முகநூலில் இந்த பதிவிற்கு கீழே கமெண்டில் திரு. இராமமூர்த்தியின் குடும்பத்தை மிகவும் ஆபாசமாக திட்டியும் பதிவிட்டுள்ளார்கள்.

இந்த பதிவினை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து இராமமூர்த்தி அவர்களுக்கு தொடர்ச்சியாக தொலைபேசி மிரட்டல் அழைப்புகள் 24.10.2014 இரவு வரை வந்த வண்ணம் உள்ளது. அந்த தொலைபேசி மிரட்டலில்
//செய்யது முகமதுவை சுட்டுக்கொன்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராடின இயக்கத்தின் மீது எப்படி நடவடிக்கை எடுக்க கோரலாம். கலெக்டர் மற்றும் எஸ்.பியிடம் நீ கொடுத்த மனுவை வாபஸ் வாங்காவிட்டால் உன்னை தீர்த்துக்கட்டிவிட்டுவோம் செய்வோம் என்று மிரட்டியுள்ளார்கள். செய்யது முகமது ரவுடி என்று உனக்கு எப்படிடா தெரியும். உன் பொண்டாட்டியின் கையை பிடித்து இழுத்தானா என்று கேட்டு ஆபாசமாக பேசியுள்ளார்கள். மேலும், இந்த மனுவை திரும்ப பெறாவிட்டால் இராமநாதபுரத்தில் மிக பெரிய பிரச்சினை உருவாகும் என்றும் மிரட்டியுள்ளார்கள்.//

இப்படி மிரட்டியும், ஆபாசமாக பேசியும் இதுவரை சுமார் 95 அழைப்புகள் வந்துள்ளது. இவை அனைத்தும் அழைபேசி அழைப்புகளும் வெளிநாட்டிலிருந்து நெட் அழைப்புகளாக வந்துள்ளது. இதுவரை இந்த அழைப்புகள் எண்களை பார்த்தால் நமக்கே புரியும். அவை மலேசியா, துபாய் நாட்டு எண்களிலிருந்து வந்துள்ளது.

 

+92366
+81-551-55-12
+60163929008
+38583329936
+301
+85698853638
+4044
+1-079-9
+980574
+97433616571
+4745257299
+1-365-904
+1-404-588
+81-6-9700-45712
+60102990543 malasiya rebai
+60146009765
+679804
+85378822
+38587509434
+38063819
+78602352
+00966503585137
2355663
+1-236-075
+55995487
+3444
+441
+6744

 


குறிப்பு’ என்று முகநூலில் குறிப்பிட்டது என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்பது தான். இந்த குறிப்பை புரிந்து கொண்டேன் என்ற அப்துல்ரஹீம்ன் பதிவு முஸ்லீம்கள் எப்படி சமிக்ஞை செய்கிறார்கள் என்பதை வெளிக்காட்டியுள்ளது. அதன் பின், திரு இராமமூர்த்திக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் வந்த நேரம் முஸ்லீம்களின் திட்டத்தை நிரூபித்தும் விட்டது.

இது குறித்து திரு. இராமமூர்த்தி அவர்கள் ஆதாரத்துடன் 20.10.2014 அன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ”கொலை மிரட்டல் விடுத்தும், பொது அமைதியை கெடுப்போம்" என்றும் மிரட்டல் விடுத்த முஸ்லீம் சமூக விரோதிகள் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒரு ரவுடி, அவர் முஸ்லீம் என்பதற்காகவே 5 லட்சம் ரூபாயை விசாரணை முடியும் முன்பே அளித்து பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசின் போக்கின் விளைவாக பயங்கரவாதிகள் பகிரங்கமாக சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுக்கும் நிலை உருவாகியுள்ளது. அதே பதிவில் மதுஸ்ரீ என்பவர் இந்த பேஜை தடைச் செய்யவேண்டும் என்று கூறி உள்ளதற்கு முடிந்தால் தடைசெய்து பார் நாங்கள் எதற்கு துணிந்தவர்கள் என்று பதிலளித்துள்ளனர்.

muganool muslim media page4

இப்படி காவல்துறை அலட்சியமாகவும், பயங்கரவாதத்திற்கு அடிப்பணிந்தும் செல்லும் நிலையை கண்டித்து வீரத்துறவி. ஐயா இராமகோபாலன் அவர்கள் அளித்துள்ள அறிக்கை பின்வருமாறு.

ramagopalanji small

// கொலை மிரட்டலைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்..   இந்து முன்னணி பொறுப்பாளருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்..

இராமநாதபுரத்தில் செய்யது முகம்மது என்பவனை காவல்துறை அதிகாரி சுட்டதில் அவன் இறந்ததை அடுத்து அங்கு இந்து கடைகளையும், இந்துக்களையும் முஸ்லீம்கள் குறிவைத்துத் தாக்கினர். இது குறித்து காவல்துறை அதிகாரியிடம் புகார் மனு அளித்த இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் ராமமூர்த்தி அவர்களுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 95 மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் சில மலேசியாவிலிருந்தும், துபாய் போன்ற இடங்களிலிருந்தும் வந்துள்ளன.

இது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தும், மிரட்டல் விடுத்தவர்களை காவல்துறை கண்டுபிடித்து கைது செய்யவில்லை. இன்று நவீன தொழிநுட்பம் வளர்ந்த நிலையிலும் காவல்துறையின் மெத்தனபோக்கால் செயல்படவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

பாடி சுரேஷ் குமாருக்கு வந்த கொலைமிரட்டலை காவல்துறை அலட்சியம் காட்டியதாலேயே கொலை நிகழ்ந்தது என்பதால் இந்துக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. அதுபோல் காவல்துறை உயர் அதிகாரி இந்து இயக்கப் பொறுப்பாளர்கள் தாக்கப்பட்டதையும், கொலையுண்டதற்கான காரணத்தையும் கொச்சைப்படுத்தி திசைத்திருப்ப கொடுத்த அறிக்கை காவல்துறையின் மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன்பின் அவர்கள் அதனை திருத்திக்கொண்டனர். ஆனால், இன்னமும் இந்து இயக்கத்தினரை கொன்ற கொலை குற்றவாளிகள் மற்றும் கொலைக்கு உடந்தையானவர்கள், மறைந்திருக்க இடம் கொடுத்தவர்கள், நிதி கொடுத்து ஆதரித்தவர்கள், விசாரணையை திசைத்திருப்பியவர்கள் முதலான குற்றவாளிகள் முழுமையாக கைது செய்யவில்லை. அனைத்து குற்றங்களிலும் காவல்துறை சிலரை கைது செய்து விசாரணையை முடிக்க முனைப்பு காட்டுகிறது என்பது அப்பட்டமான உண்மை.

முழுமையாக கைது செய்திருந்தால் மீண்டும் மீண்டும் கொலை மிரட்டல்களும், கொலை முயற்சிகளும் நடைபெற இடம் இருக்குமா?

இராமநாதபுரம் பொறுப்பாளர் இராமமூர்த்திக்கோ, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் யாருக்கோ ஏதும் முஸ்லீம் பயங்கரவாதிகளால் தீங்கு நேர்ந்தால், அதற்கு தமிழக காவல்துறையும், தமிழக முதல்வருமே பொறுப்பு.

காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு தொடர்ந்து கண்காணித்து, குற்றவாளிகளை, மிரட்டல் விடுப்போரை கண்டுபிடித்து கைது செய்து கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இந்துக்களின் பொறுமைக்கு ஓர் அளவு உண்டு. அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால், அது தமிழகத்திற்கு நல்லதில்லை என்று தமிழக அரசை இந்து முன்னணி எச்சரிக்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)//

இந்த எச்சரிக்கையின் தீவிரத்தை உணர்ந்து காவல்துறையும், தமிழக அரசும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

Read 6892 times
Rate this item
(3 votes)
Last modified on Saturday, 25 October 2014 15:02

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment