×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
பாரதத்தாயின் பாத மலர்கள்

பாரதத்தாயின் பாத மலர்கள்

தியாகச் சுடர் வீரன் வாஞ்சிநாதன்!

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயில் பயணம் செய்திருக்கிறீர்களா? திருநெல்வேலிக்கு சற்று முன்னால், மணியாச்சி என்றொரு ரயில் நிலையம் வரும். இப்போது உறக்கத்தின் பிடியில் அமைதியாக இருக்கும் அந்த நிலையம், சென்ற நூற்றாண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு வீர வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விட்ட ஒரு ரயில் நிலையமாகத் திகழ்ந்தது.

"தேசபந்து" சித்தரஞ்ஜன் தாஸ்

கல்கத்தாவில் நவம்பர் மாதம் 5ம் தேதி 1870ம் ஆண்டு பிறந்தார் சித்தரஞ்ஜன் தாஸ். மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ‘மருத்துவர்கள்’ குடும்பத்தைச் சேர்ந்தவர் தாஸ். அவரது தந்தையார் Bhuben Mohan Das ஒரு வழக்குரைஞர் மட்டுமல்ல, பத்திரிக்கையாளரும் கூட. அவரது தாயார் நிஸ்தாரிணி தேவி. அவரது தந்தையார் காரணமாக தாஸ் தர்க்க ரீதியான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டார், தாயாரின் பாதிப்பு காரணமாக பரந்த மனப்பான்மையும், ஆழ்ந்த விருந்தோம்பல் பண்பையும் பெற்றிருந்தார். ஒரு குழந்தையாக, தாஸ் மனதில் தேச பக்தி ஊறிப் போயிருந்தது, அவர் தேசபக்தி கவிதைகளை ஒப்பித்தார்.

ஜான்சியின் வீராங்கனை ராணி லக்ஷ்மிபாய்

1857ம் ஆண்டு நிகழ்ந்த முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னணி வீராங்கனையாக விளங்கிய ஜான்ஸி ராணி என்று அழைக்கப்படும் ராணி லக்ஷ்மிபாய் இந்தியாவில் ப்ரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக விளங்கினார். இந்திய வரலாற்றில் அவரை இந்தியாவின் ஜோஆன் ஆஃப் ஆர்க் என்று அழைக்கிறார்கள். அவரை மணிகர்ணிகா என்ற பெயர் கொண்டு அழைப்பார்கள். அவரது குடும்பத்தினர் அவரை பிரியத்தோடு மனு என்று கூப்பிடுவார்கள். தளிர் வயதான 4 வயதிலேயே அவர் அன்னையை இழந்தார். இதன் விளைவாக அவரை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர் தந்தையார் தோள்களில் சுமத்தப்பட்டது. படிப்பை மேற்கொள்ளும் அதே நேரத்தில், குதிரையேற்றம், வாட்பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற போர்க் கலைகளிலும் அவர் பயிற்சி பெற்றார். பிறந்த போது மணிகர்ணிகா எனவும், பிரியத்தோடு மனு எனவும் அழைக்கப்பட்ட ராணி லக்ஷ்மிபாய் 1835ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி சதாராவின் துவாதஸி மாவட்ட்த்தைச் சேர்ந்த மஹாராஷ்ட்டிர கர்ஹடே அந்தணக் குடும்பத்தில் வாராணசியில் பிறந்தார். அவரது தந்தையார் மோரோபந்த் தாம்பே பேஷ்வா 2ம் பாஜி ராவின் அரசவையில் பணி புரிந்த பின்னர், மனுவுக்கு 13 வயதான பின்னர் ஜான்ஸியின் மஹாராஜா கங்காதர் ராவ் நெவால்கரின் அவைக்கு குடி பெயர்ந்தார்.

மேவாரின் சிங்கம் மஹாராணா ப்ரதாப சிம்மன்

மஹாராணா ப்ரதாப் சிங்கின் பெயரோடு நாளைத் துவக்கினால், மதிப்பானது, மங்களமானது. தன் இன்னுயிரைக் கொடுத்து தேசத்தை, தர்மத்தை, கலாச்சாரத்தை, நாட்டின் சுதந்திரத்தைக் காத்த, மாண்பும் வீரமும் செரிந்த அரசர்களில் அவரது பெயர் தலையாயது. அவரது தீரம் குறித்த புனிதமான நினைவு கூர்தல், இதோ.

புரட்சிச்சுடர் விநாயகர் தமோதர் சாவர்க்கர்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் வகிப்பவர் வீர சாவர்க்கர். அவரது பெயரைச் சொன்னால் சர்ச்சை கிளப்பப் படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் மிகச் சிறந்த புரட்சியாளர்களில் ஒருவராக அவரை சிலர் கருதுகிறார்கள்; ஆனால் பிறரோ அவரை சமயவாதி என்றும், இத்தாலிய சாணக்கியன் என்று கருதப்படும் Machiavelliயைப் போன்ற சூழ்ச்சிக்காரர், குயுக்தியான ராஜதந்திரி என்றும் கருதுகிறார்கள். வீர சாவர்க்கர் ஒரு மகத்தான பேச்சாளர், அற்புதமான எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர், கவிஞர், தத்துவ ஞானி, சமூக சேவகர். அவர் ஹிந்து சமயத்தின் மிக நேர்த்தியான பண்டிதர். அவர் தான் telephone, photography, parliament போன்ற பல ஆங்கிலச் சொற்களுக்கு ஹிந்தி மொழிப் பதங்களை அளித்தவர்.

 

தியாகச் சுடர் பிபின் சந்திரபால்

இரு குழல் துப்பாக்கிகளையோ, இருமுனைக்கத்தியையோ நீங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். யாராவது மூன்று குழல் துப்பாக்கி என்றோ, மும்முனைக் கத்தி என்பதையோ கண்டதுண்டா? கேட்டதுண்டா? அப்படிப்பட்ட துப்பாக்கி அல்லது கத்தியின் ஒரு குழல் அல்லது முனை தான் இன்று நாம் சந்திக்கவிருக்கும் பெருந்தகை. Bal-Pal-Lal என்ற கடந்த நூற்றாண்டுத் துவக்கத்தில் சுதந்திரப் போராட்டக் களத்தைக் கலக்கிய தீரர்கள் மூவரைத் தாம் நாம் அவ்வாறு அழைக்கிறோம். பால கங்காதர திலகர் என்ற Balம், பிபின் சந்திர பாலர் என்ற Palம், லாலா லஜபதி ராய் என்கிற Lalம் தான் அந்த முக்குழல் துப்பாக்கிகள். இந்த மூவேந்தர்களில் இன்று நாம் சந்திக்கவிருப்பது................. பிபின் சந்திர பால் (Bipin Chandra Pal.)

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்......1857

முதல் சுதந்திரப் போராட்டம், 1857ன் சுதந்திரப் போராட்டம், இந்திய கலகம், மகத்தான இந்திய கலகம், சிப்பாய் கலகம், சிப்பாய் புரட்சி, மகத்தான கலகம், 1857 புரட்சி என்றெல்லாம் பல பெயரிட்டு அழைக்கப்படும் இந்த போர் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் வேண்டி பாரதத் தாயின் தலைமைக்கு ஏங்கிய சேய்களுக்கும், பாரதமாதாவின் பக்தர்களுக்கும், கௌரவத்தையும், மானத்தையும் விரும்பியவர்களுக்கும், இது இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக மலர்ந்தது. ஆனால் இந்தியாவைக் கூனச் செய்ய வேண்டும், இந்தியர்கள் நெஞ்சு நிமிர்ந்து, நேர் கொண்ட பார்வையோடு, நெஞ்சில் துணிவோடு, நேர்மைத் திறத்தோடு இருக்கக் கூடாது, பாரத அன்னை என்றும் கொடுஞ்சங்கிலிகளில், காரிருள் சிறைகளில், குன்றிக் குறுகி, கூன் விழுந்து, நடைத் தள்ளாடி, நாடிச் சுருங்கி, நொடித்திக் கிடக்க வேண்டும் என்று துடிக்கும் ஆவி கொண்ட கொடும் அரக்கர் தம் பொல்லாத நெஞ்சத்தின் மாறாத வெளிப்பாடு தான் 1857ம் ஆண்டு போரை, வெறும் சிப்பாய்க் கலகம் என்றும், சிப்பாய் புரட்சி என்றும் புரட்டுப் பேசத் தூண்டுகிறது. இந்த துரோக பட்டியலில் அந்நியர், நம்மவர் என்று கொடுமதி கொண்ட கொடுமதியாளர்களும், தாய்ப்பாசம் அற்ற புல்லர்களும், மண் பற்று அற்ற நன்றி கொன்றவர்களும், பிறரை வதைத்து, கொடுமைப்படுத்தி, கசக்கிப் பிழிந்து அவர் கண்ணீரில் பிழைப்பு நடத்தும் ஆங்கிலேயத் தனம் நிரம்பிய சுதேசிகள், ஆங்கிலேயர்கள் என பல வகைப்பட்டோர் அடக்கம். வரலாற்றின் மறைக்கப்பட்ட, கண்ணுக்கு மறுக்கப்பட்ட படலங்களைப் புரட்டிப் பார்த்தால், சுதேசிகளும், விதேசிகளும் அன்று தொட்டு இன்று வரை செய்து வரும் பச்சை துரோகங்களும், போடும் வேஷங்களும், பற்றி நினைக்க நினைக்க... ஐயகோ... அம்மா நெஞ்சு பொறுக்குதில்லையே..... உன் நோவு பார்க்க முடிவதில்லையே.... உடம்பு நடுங்குகிறதே,.... கண்ணில் நீர் சொரிகிறதே..... நாவு குழறுகிறதே..... குருதி குமுறுகிறதே.... உனக்கு பாதகம் செய்வோர்களைத் துண்டு துண்டாக்கி வேள்வியில் உனக்கு ஆஹுதியாக்க கைகள் படபடக்கிறதே! அம்மா! அம்மா! விடிவு வாராதோ! நின் மேன்மை பொலியாதோ! பொலபொலவெனவே விடியல் வரட்டும், சடசடவெனவே உன் சங்கிலி பொடியட்டும், கலகலவெனவே கயவர் நெஞ்சு கலங்கட்டும், நகையணிபவளே!, உன் நகையொலி திசை எங்கும் பரவட்டும்!! ஜெய் பவானி, பாரத மாதா!! என்ற கோஷம் திக்கெட்டும் முழங்கட்டும்!!.............. இப்படிப்பட்ட தாகங்களை மனதில் ஏந்தி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் புரட்சிகள் வெடித்தன. அதற்கு அச்சாரமாக 1857 ஜனவரி மாதமே இராணுவ தளங்களில் புரட்சிக்கான வெளிப்பாடு தெரியத் தொடங்கியது. அது முழு வீச்சில் மே மாதம் வெடித்து ஓய்ந்த போது, இந்தியாவில் ப்ரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கொடுங்கோலாட்சி முடிவுக்கு வந்து, 1858 முதல் ப்ரிட்டிஷ் சர்க்காரின் அடக்குமுறை, அடிமைத்தன ஆட்சி உருவெடுத்தது. சில சமஸ்தானங்கள் பெயரளவுக்கு தன்னாட்சி பெற்றிருந்தாலும், இந்திய துணைக்கண்டம் ப்ரிட்டனின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டது.

 

இன்று ஜலியன் வாலாபாக் நினைவு தினம் - பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம்.

ஏப்ரல் மாதம் 10ம் தேதி 1919.... அமிர்தசரஸ் நகரின் துணை ஆணையர் இல்லத்தை நோக்கி, நாடுகடத்த ஆணையிடப்பட்ட 2 பிரபலமான தலைவர்களை விடுவிக்கக் கோரி, ஒரு கும்பல் ஊர்வலம் சென்றது. அவர்களை நோக்கி ஒரு ராணுவப் பிரிவு சுட்டது. அன்றே பிறகு பல வங்கிகள், பிற கட்டிடங்கள், ப்ரிட்டிஷ் அரசின் சின்னமாகக் கருதப்படும் எந்த அமைப்புக்கும் தீவைக்கப்பட்டது. தனித் தனி சம்பவங்களில் 4 ஐரோப்பியர்கள் கொலை செய்யப்பட்டார்கள்; அதே நேரம் 20 இந்தியர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள். அடுத்த 2 நாட்கள் அமிர்தசரஸ் நகரம் அமைதியாக இருந்தது, ஆனால் அந்த பயங்கர அமைதி, பிளவுபடாத பஞ்சாப் மாகாணத்தின் பிற பகுதிகளின் புரட்சிக் குரலின் பிரதிபலிப்பாகத் தோன்றியது. இரயில்வே தண்டவாஙங்கள் வெட்டப்பட்டன, தந்திக்கம்பங்கள் நொறுக்கப்பட்டன, அரசு அலுவலகங்கள் எரிக்கப்பட்டன....