Home கட்டுரைகள் தேசம் புராண இதிகாசங்கள்

புராண இதிகாசங்கள்

12 second read
0

நமது புராண இதிகாசங்கள் நடந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் அவைகள் நடந்தேறியதற்கான துல்லியமான காலக் கணக்கும் இருக்கிறது.

இன்றைக்கு மேற்கத்தியத்தனமான சிந்தனையில் ஆங்கிலப் படிப்பில் மூளையைத் துவைத்துக் கொண்டு விட்ட பாரதியர்களுக்கு புராணம், இதிகாசம் ஆகியவை கற்பனையாக இருக்குமோ என்ற சிந்தனையும் இருக்கலாம். அல்லது இது ஹிந்து மதம் சார்ந்த நம்பிக்கைகள் எனத் தோன்றலாம்.

அதற்குக் காரணம் நம்மை ஆண்ட பிரிட்டீஷ்காரன்  நம்மை மூளைச் சலவை செய்து  MYTHOLOGY கட்டுக்கதை  என்று நம்மை நம்ப வைத்து விட்டான்

கிறிஸ்தவர்கள் நம்பிக்கைப் படி உலகம் தோன்றிய நாள் 23 அக்டோபர் கி மு 4004 அதுவும் காலை 9 மணி. அதன் பிறகு   கி பி 350 முதல் 1350 வரை 1000 ஆண்டுக்ளை அவர்கள் இருண்ட காலம் என்கிறார்கள்.

அந்த 1000 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதற்கான குறிப்புகளை அவர்கள் தரவில்லை. ஏனென்றால் அந்த 1000 ஆண்டுகள் கிறிஸ்தவர்கள் ஐரோப்பாவில் ஓயாச் சண்டையில் இருந்தார்கள். என்ன சண்டை ?  கிறிஸ்தவத்தைப் பரப்ப முயன்று மதமாற்ற முயன்று , அதனை கடிமையாக எதிர்த்த பூர்வ குடிகளோடு ஓயாத சண்டை , அதனை சிலுவைப்போர் என்று அவர்கள் சொல்கிறார்கள் சிலுவைப் போரில் பூர்வகுடிகள் கோடிக் கணக்கில் எரித்துக் கொல்லப்பட்டனர்.

1350க்கு பிறகே ஐரோப்பிய நாடுகளில் மெல்ல மெல்ல விஞ்ஞானப் பார்வை தலை தூக்குகிறது அப்படி ஒரு விஞ்ஞானப் பார்வை பைபிளுக்கு எதிராக இருந்தால் அந்த விஞ்ஞானியைக் கொன்றனர் .

அவர்களைப் பொருத்தவரை கிரேக்கர்களின் தாக்கத்தாலேயே உலகம் நாகரீகம் அடைந்தது ; அதாவது  அலெக்சாண்டர் கி மு 323ல் பாரதம் வந்தான் அதன் பிறகே பாரத நாடு நாகரீகம் அடைந்தது. அதற்கு முன்னால் துவும் நடக்கவில்லை அதனால் புராண இதிகாச காலம் என்பதெல்லாம் கட்டுக்கதை என்று முடிவு செய்தான் மேலும் பிரிட்டிஷாரில் ஆட்சிக்குப் பிறகுதான் பாரத நாடு பண்பாடு பெற்றது என்று வரலாற்றைத் திரித்து உலகையும் நம் சந்ததியையும் நம்ப வைத்தான்.

ஆனால் பாரத நாட்டுக் காலக் கணக்கு என்பது தனிமனித சாதனைகளைக் கொண்டோ, அரசர்களின் வீரக் காம விளையாட்டினை அடிப்படையாகக் கொண்டோ கணக்கிடப்படுவதில்லை நாட்களைக் கணக்கு வைத்து வரலாற்றைத் தொகுப்பதில்லை பாரத நாட்டில் 22 முறைகளில் கால நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறார்கள் புராணங்களும் அதில் ஒரு வகை

இதிகாசம்

இதிகாசம் என்ற சொல் மூன்று பதங்களைக் கொண்டது இதி+  ஹ +  அச =  இது இப்படியாக நடந்தது இது இப்படியாக நடந்தது என்று யாரால் சொல்ல முடியும்?  நடந்த சம்பவத்தை நேரில் கண்டவர்களாலேயே சொல்ல முடியும் இராமாயணத்தை இயற்றிய வால்மீகி ராமாயண காலத்திலேயே வாழ்ந்தவர்; நடந்ததைக் கண்டவர் மகாபாரதத்தைத் தொகுத்த வியாசர், மகாபாரதக் காலத்தவர்; நேரில் கண்டவர் அதனால் ராமாயணமும் மகாபாரதமும் இதிகாசம். இந்த இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட பல்வேறு இராமாயணங்களும், மகாபாரதமும், காவியங்கள் என அழைக்கப்பட வேண்டும்

அதனால் ராமாயணம் மகாபாரதம் அகிய இரண்டையும் ஆங்கிலத்தில் கூட MYTHOLOGY எனச் சொல்லாமல் ITHIHASA என்றே சொல்ல வேண்டும் . ஏனெனில் ராமயானமும் மகாபாரதமும் கட்டுக் கதைகள் அல்ல. நடந்தவை

ராம் என்றால் ஞானத்தின் சொரூபம் என்று பொருள். ராம் என்றால் வசீகரமானவன், வனப்புடையவன் ஒளிரபவன் எனவும் பொருள்

ரவி என்றால் சூரியன் ஒளி; சூரிய வம்சத்தில் வந்த இராமன் ஒளிர்பவன் அதனால் தான் பாரத நாட்டில் பெயர் சூட்டுவதில் கவனம் கொடுக்கிறோம்.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும்போது எந்த குணத்தில் மகன் சிறக்க வேண்டுமோ அந்தப் பெயரைச் சூட்டுவார்கள்; குறிப்பாக இறைவன் நாமத்தை பெயராகச் சூட்டுவார்கள். இன்றைய காலம் போல் ஃபேஷனுக்குப் பெயர் சூட்டும் வழக்கம் பாரத நாட்டு வழிமுறையில் இல்லை

பரதன் என்று இராமனின் தம்பிக்கு ஏன் பெயர் தெரியுமா?

இராமரின் பெருமையைப் போற்றியவன் பரதன்; பரதன் என்றால் போற்றூபவன் எனப் பொருள் . பிறந்ததுமே தசரதன் இராமனைப் போற்றும் தம்பியாக திகழ வேண்ரும் என பரதன் எனப் பெயர் சூட்டினான் அதன் படியே பரதன் இராமனைப் போற்றும் தம்பியாகவே இருந்தான்.

கிருஷ்ணா என்பதும் காரணப்பெயர் . கரு நீலத்தில் இருந்த காறணத்தினால் கிருஷ்ணா என்ற பெயர்.

புராணம்

புராணம் என்றல் பழைமையானது என்றாலும் இப்போதும் பொருத்தமாக இருப்பது. புராணங்களும் சம்பவங்களைத் தொகுத்த ஒரு முறை ஆகும் பிரம்ம புராணம் என்பதில் 100 கோடி செய்யுள்கள் இருந்தன. அதனையே வகைப் படுத்தி 18 புராணங்களாக்கப் பட்டன்

ஒவ்வொரு புராணத்திலும் பத்தாயிரத்துக்கும் அதிகமான செய்யுள்கள் இருக்கின்றன இந்த புராணங்களுக்கு உப புராணங்களும் உண்டு

புராணங்கள் சம் காலத்துக்கும்பொருந்தக்கூடியவை. மனிதனின் செயல்கள் மனம் வாழ்க்கைக்கு பொருத்தமானது . எனவே புராணங்களை myth  கட்டுக்கதை எனச் சொல்வது சரியில்லை.

  1. சர்க்கம் – படைப்பு
  2. விசர்க்கம் – பிரளயம், அழிப்பு
  3. பிரதிசர்க்கம் – மறு படைப்பு
  4. வம்சம் – மானுட வழித் தோன்றல்

வம்சானு – காலக் கிரமப்படி மனிதர்களின் குறிப்பு

எனவே புராணம் என்பது சரித்திரம் அல்ல புராணம் என்பது படைப்பின் குறிப்பு

எனவே ஹிந்துக்களின் இதிகாச புராணங்கள் வெறும் நடந்த கதைத் தொகுப்பு இல்லை. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டி ஆகும். ஹிந்துக்களின் வரலாற்றுப் பயணத்தின் திசைகாட்டி ஆகும்.

கர்னல் சார்லஸ் ஸ்டுவார்ட் என்ற ஆங்கிலேயன் ( 1757- 1828) சொல்கிறான்
“ ஹிந்துக்களைப் பார்க்கிறேன். பணிவு நேர்மை ஒழுக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் இதைக் காண முடியவில்லை”

எனவே ஹிந்துக்களின் சமயம் என்பது வெறும் நம்பிக்கை இல்லை;  அது ஒவ்வொரு ஹிந்துவும் அனுபவித்து அறியும் வாழ்க்கை முறை ஆகும்

  • ஹிந்து நாட்காட்டி

    ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…
  • நாள்காட்டி பற்றிய தகவல்கள்

    நாள் காட்டி பற்றிய தகவல்கள் பாரத நாட்டில் எத்தனை வகை காலண்டர்கள் இருக்கின்றன தெரியுமா? &nb…
  • ஜோதிடம்

    வானவியல் வல்லுனர்களான வராஹமிஹிரர், ஆர்ய்பட்டர், பாஸ்கராச்சாரியர் ஆகியோர் 1500 ஆண்டுகளுக்கு…
Load More Related Articles

Check Also

ஹிந்து நாட்காட்டி

ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…