Home கட்டுரைகள் தேசம் ஹிந்து நாகரீகத்தின் வரலாறு

ஹிந்து நாகரீகத்தின் வரலாறு

4 second read
0

ஹிந்து நாகரீகத்தின் வரலாறு

ஹிந்து நாகரீகத்தின் வரலாறு என்று பிரிட்டீஷ்காரன் மூலம் நமக்குத் தரப்பட்டது  பொய்களையும் கட்டுக்கதைகளையும் உடையது.

பாரத நாட்டு வரலாறு என்பது அநாதியானது. வருட மாதத் தேதி முறையில் கிறித்தவர்கள் சொல்லும் கால அளவுக்குள் அடைத்து விட முடியாதபடி மிக நீண்டது; புராதானமானது .

எனவே வெள்ளையன் செய்த சூழ்ச்சி என்ன என்றால் கிரேக்க நாகரீகத்தை ஆதாரமாகக் கொண்டு ஹிந்துக்களின் வரலாற்றை வசதியாக மாற்றி எழுதினான்

எல்ஃபின்ஸ்டன் என்ற அதிகாரி என்ன சொன்னான் என்றால் அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு  முன்னால் பாரதத்தில்  நிகழ்ந்ததாக எந்த ஒரு பொது நிகழ்ச்சியோ அதன் காலத்தையோ குறிப்பிட்டு சொல்ல முடியாது.

அதாவது அலெக்ஸாண்டர் படையெடுப்புக்குப் பின்னர் தான் பாரதம் நாகரீகம் அடைந்தது; அதனால் அதன் பின்னரே பாரத வரலாற்று நிகழ்வுகள் நடந்ததாக கணக்கில் கொள்ள முடியும் என சூழ்ச்சி  முடிவினை அறிவித்தான்

அதே சமயம்

பாரதத்துக்கு வந்த பிரிட்டீஷ் அதிகாரிகளுக்கு நேர்ந்தது என்ன?

பாரதத்துக்கு வந்து பணி செய்து விட்டு இங்கிலாந்து திரும்பிய ஆபிஸர்கள் நடுவே பெரிய விவாதமும் கருத்துப் பரிமாற்றமும் நடந்தன

எதைப் பற்றி என்றால் பாரதத்துக்கு வந்து பணி செய்து விட்டு திரும்பும் பிரிட்டீஷார் சிந்தனையில் உயர்ந்து நல்ல குணமும் நல்ல நடத்தையும், அமைதியும் உடையவர்களாக ஆனதால், அதைக் கண்டு வியப்படைந்த இங்கிலாந்து அரசு அதிகாரிகள் எப்படி இப்படி எனக் கேட்டனர்

அதற்கு அந்த பாரதத்துக்கு வந்து சென்ற அதிகாரிகள் பாரதத்தைப் போற்றி பேசினார்கள். அவர்கள் எழுதிய கட்டுரை ஒவ்வொன்றும் நூறு பக்கத்துக்குக் குறையாததாக இருந்தன. முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

என்ன என்று? இந்தியர்கள் உயர்ந்த  நாகரீகமும் பண்பாடும் உடையவர்கள். நம்மை விட கலாசாரத்தில் பழக்கவழக்கத்தில் சிறந்தவர்கள். அவர்களை நாம் ஆள்வது என்பது முறையல்ல என்று ஏகமனதாக எல்லோரும் சொன்னர்கள்.

அது பிரிட்டீஷ் அரசுக்குக் கலக்கத்தைத் தந்தது

அதனால் 1808 ஆண்டில் ஜேம்ஸ் மில், சார்லஸ் கிரான்ட் என்பவர்களிடம் பிரிட்டீஷ் அரசு ஒரு பணியை ஒப்படைத்தது .

அந்தப் பணி என்னவென்றால் பாரதத்தைப் பற்றி மட்டமாக எழுத வேண்டும்

  1. இந்தியா என்பது இழிவான நாடு,
  2. ஹிந்து சிந்தனை என்பது குப்பை,
  3. சம்ஸ்க்ருதம் என்பது மொழியே இல்லை;
  4. சம்ஸ்க்ருதம் செயற்கையான மொழி,
  5. சமஸ்க்ருதம் என்பது பிராம்மணர்கள் தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்ள உருவாக்கிய மொழி.

இப்படி ஒரு வரலாற்றுத் திரிபை பொய்யை பாரதத்துக்கு வராமலேயே இங்கிலாந்தில் இருந்தபடியே இந்திய வரலாறு என்று எழுதினார்கள்

அப்படி எழுதிய வரலாறையே இந்தியாவுக்கு பணி செய்யத் தேர்வான பிரிட்டீஷ் அதிகாரிகளுக்குப் போதித்து மூளைச் சலவை செய்து அனுப்பி வைத்தார்கள்

முந்தைய அதிகாரிகள் சொன்ன நல்ல விஷயங்களை மறைத்து விட்டு, இழிவான சிந்தனையை ஊட்டி அனுப்பிய காரணத்தால் இங்கே வந்த பிரிட்டீஷ் அதிகாரிகளும் கடுமையான முறையிலேயே நடந்து கொண்டார்கள், அவர்களுக்கும் அப்படி கடுமையாக இருக்கும்படிதான் சொல்லி அனுப்பப்பட்டது .

 இதன் அடிப்படையிலேயே இங்கிலாந்து அதிகாரி கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தான். இந்தியர்களையும் மூளைச் சலவை செய்தான்.

அல்பிருனி

பிரிட்டீஷார் வருவதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்னாலேயே முஸ்லீம் ஆட்சி இருந்தபோது அரேபியாவிலிருந்து இஸ்லாமிய அறிஞர் அல்பிருனி பாரதம் வந்திருந்தபோது, இந்த நாட்டின் ஆன்மீக மரபைக் கண்டு மிரண்டுபோனார்.

ஹிந்துக்கள் அருவாய் உருவாய் இலதாய் உளதாய் எனக் கடவுள் தத்துவத்தைத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தனர் என்று  கிதாபுல் ஹிந்த் என்ற தனது புத்தகமான பாரத நாட்டு வரலாற்றில் குறிப்பிடுகின்றார்.

ஹிந்துக்களின் கடவுள் தத்துவம் உலகம் தோன்றிய விவரம் ஆகியவை துல்லியமானதாகவும் ஆச்சர்யம் அளிப்பதாகவும் இருக்கிறது என்று குறிப்பிடுகின்றார்

அல்பிருனி சம்ஸ்க்ருதம் பயின்று அதன் மூலம் சுவடிகளைப் படித்து பாரத நாட்டு மேன்மைகளைப் பெருமைகளை உணர்ந்த பின்னே கிதாபுல் ஹிந்த் என்ற பாரத நாட்டு வரலாற்று நூலை அரபியில் எழுது கின்றார்

எனவே பிரிட்டீஷ் அரசாங்கம் திட்டமிட்டு ஹிந்துக்களின் நாகரீகம் பண்பாடு ஆகியவற்றை இழிவு படுத்தி கொடுமை செய்தது என்று புரிந்து கொள்ள முடிகிறது

பிரிட்டீஷ் சொன்ன வரலாற்றையே தான் இன்னமும் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைத்துள்ளோம் என்பது வேதனை

உலகம் தோன்றியே 4000 ஆண்டுகள் தானா?

அயர்லாந்து பாதிரி ஜேம்ஸ் உஷர் என்பவர் , உலகம் தோன்றியது காலை 9 மணிக்கு அக்டோபர் மாதம் 23ம் தேதி கி மு 4004 ஆண்டு தான் என்கிறார்

அதனால் பிரிட்டீஷாரும் ஹிந்து வரலாற்று நிகழ்வுகளை அதற்குள் அடைக்கப் பார்த்தனர்

அதன் விளைவாக மேக்ஸ் முல்லர் என்ற பிரிட்டீஷ் ஆய்வாளர் கி மு 1500ல் ஆரியர் படையெடுத்து பாரதத்துக்குள் வந்தார்கள், அதன் பின்னர் கி மு 1200ல் தான் வேதங்கள் எழுதப்பட்டன என்றார். அவரை பெரிய அறிஞர் என இந்திய அறிஞர்களும் அன்று சொன்னதுதான் வேதனை

ஆனால் கி பி 1670ல் க்றிஸ்டியன் ஹூகன் என்ற ஆய்வாளர் இந்துக்களின் பெருமையைக் குறிப்பிடுகின்றார். பிரபஞ்சத்தில் பலப் பல சூரியன்கள் உள்ளன, சூரிய குடும்பங்கள் உள்ளன, உலகம் என்பது முடிவற்றது, அதனால் புள்ளிக்கும் குறைவான இடத்திலும் இருக்கும், அளப்பரியவும் இருக்கும் எனத் துல்லியமாக ஹிந்துக்கள் விவரிக்கிறார்கள். அவர்களது விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் வியக்கத்தக்கதாய் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்து ஞான மரபு என்பது அனுபவத்தினால் விளைந்தது. கிறிஸ்தவ முஸ்லீம்களைப் போல் ஒரு புத்தகத்தை அல்லது ஒரு நபரைச் சார்ந்தது இல்லை என்பது உண்மை. வெறும் நம்பிக்கை அடிப்படையில் வந்தது இல்லை.

உலகம் தோன்றியது எப்போது என்று சொல்லவே முடியாது, ஏனெனில் அது முடிவில்லா பேரியக்கம் என ஹிந்து மெய்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

  • ஹிந்து நாட்காட்டி

    ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…
  • நாள்காட்டி பற்றிய தகவல்கள்

    நாள் காட்டி பற்றிய தகவல்கள் பாரத நாட்டில் எத்தனை வகை காலண்டர்கள் இருக்கின்றன தெரியுமா? &nb…
  • ஜோதிடம்

    வானவியல் வல்லுனர்களான வராஹமிஹிரர், ஆர்ய்பட்டர், பாஸ்கராச்சாரியர் ஆகியோர் 1500 ஆண்டுகளுக்கு…
Load More Related Articles

Check Also

ஹிந்து நாட்காட்டி

ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…