Home கட்டுரைகள் தேசம் உலகம் உருவானது எப்படி?

உலகம் உருவானது எப்படி?

3 second read
0

சிருஷ்டி விஞ்ஞானத்தைப் பற்றி இந்தக் கட்டுரை மூலம் அறிந்து கொள்வோம்.

வேத புராணப் பார்வையில் உலகம் எப்படி உருவானது என்று அறிந்து கொள்வதற்கு முன் அபிரகாமிய மதங்கள் படைப்பு என்ன சொல்லிற்று, அவை உண்மைதானா என்பதனையும் அறிந்து கொள்வோம்

இன்றைக்கு விஞ்ஞானத்தை பொருளாதாரத்தைப் பற்றியெல்லாம் போதிக்கின்ற புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களான கேம்பிரிட்ஜ், ஹார்வேர்டு, ஆக்ஸ்ஃபோர்டு யேல் போன்றவை தொடங்கப்பட்டதன் நோக்கமே கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காகத் தான் .இறையியல் கோட்பாட்டைப் பரப்பவே ஆரம்பிக்கப்பட்டன.

அங்கே கூட என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டது என்றால் உலகம் 7 நாட்களில் ஆண்டவனால் படைக்கப்பட்டது.

தியாலஜி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வார்த்தையின் மூலம் திவ்ய என்ற சம்ஸ்க்ருத சொல்லாகும். திவ்ய என்றால் தெய்வீகமானது என்று பொருள்.

கி மு 700லே சிரியன்  நாகரீகம் என்ன சொன்னது என்றால் ஆதி நீர்ப்பரப்பிலிருந்து அப்சு, டியமெட் என்ற கடவுளர்கள் தோன்றினர்

கிமு 1500லே அத்ராஹிஸ் என்ற படைப்புக் காப்பியத்தில் பாரசீக நாகரீகம் சொன்னது என்ன என்றால் டியமெட் மற்றும் மார்தத் என்ற கடவுளர்கள் தோன்றினர்

கிமு 3000லே பாபிலோனியன் நாகரீகம் ஜெனெஸிஸ் புத்தகத்தின் மூலம் படைப்பு பற்றி சொல்லியிருப்பது என்ன எனில் கடவுளர்கள் தோன்றிய பின்னே உலகம் தோன்றியது என்றும் அந்த கடவுளர்களுக்கு பெயர்களும் சூட்டினர்

ஆனால் இந்த நாகரீகங்கள் படைப்பு பற்றிய தொடர் செய்திகளை இழந்து விட்டன. அதனால் உலகம் உருவானதைப் பற்றி சரியாக விளக்க முடியவில்லை

அதே சமயம் பாரத நாட்டு மரபிலே தான் உலகம் உருவானவிதமும் அதன் தொடர்ச்சியாக உலக இயக்கத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய குறிப்புகளும் இலக்கியத்திலே, பழக்கவழக்கத்திலே, சொல்லாடல்களில் நீடித்து வருகிறது

ஆல்பர்ட் ஐஸ்டீன் –

பகவத் கீதையைப் படித்த பின்னரே படைப்பின் சூட்சமம் தனக்கு விளங்கியதாகச் சொல்கிறார்

எட்வின் ஹப்பிள் என்ற விஞ்ஞானி 1923ல் என்ன சொன்னார்?  இந்த உலகில் பலபல நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. பிரபஞ்சம் மிக மிக விரிந்தது அங்கே அனேகம் கோள்கள் மண்டலங்கள் உள்ளன என்றார்.

1927ல் பெல்ஜியம் ரோமன் கத்தோலிக்கப் பாதிரி அப்பி ஜார்ஜ் லிமத்ரே என்ன சொன்னர் என்றால் உலகம் என்பது பிரபஞ்ச முட்டை வெடித்ததிலிருந்து பிறந்தது என்றார்.. பிரபஞ்ச முட்டை என்பது  சக்தியும் பொருளும் திரண்டு ஒன்றாக இருந்த நிலை ஆகும்.

வேதத்தின் பார்வையில் சிருஷ்டி

இந்த பிரபஞ்ச முட்டை என்பதை வேதம் ஹிரண்ய கர்ப்பம் என்கிறது

அண்டம், பிரம்மாண்டம் என்ற சொற்கள் பிரபஞ்சத்தைக் குறிக்கும் சொற்கள் ஆகும் . அண்டம் என்றால் முட்டை; பிரம்மாண்டம் என்பது விரிந்து பரந்த முட்டை. அதாவது உலகம் அல்லது பிரபஞ்சம் உருண்டையாக இல்லாமல் முட்டை வடிவில் இருக்கிறது .

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஐன்டீன் போன்ற நவீன விஞ்ஞானிகள் சொன்னதை 5000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே ரிக் வேதம் துல்லியமாக படைப்பு பற்றி சொல்லி விட்டது

வியாஸர் போன்ற ரிஷிகள் அகமுகமாக உள்ளுக்குள்ளே நோக்கி உலக ரகசியங்களைக் கண்டறிந்தார்கள். கோள்கள் இயக்கங்கள் என்பதையெல்லாம் டெலெஸ்கோப் இல்லாமலே கண்களை மூடி தியான நிலையிலே உலகின் சூட்சமங்களைக் கண்டறிந்து தெளிவாகத் தந்துள்ளனர்

நமது ரிஷிகள் சொன்னதைத்தான் பல தொலை நோக்குக் கருவிகள் உதவியுடன் பருப்பொருளைப் பகுத்துப் பார்த்து ஆராய்ச்சிக்கு பின் உலகம் என்பது வெடித்துச் சிதறியதன் மூலம் உருவானது என்றனர் .

ரிக் வேத ஸ்லோகம் ஒன்றில் உலகம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது, எப்படி உருவாயிற்று என்று சொல்கிறது –

எதுவுமில்லை, எதுவுமில்லை என்பதுமில்லை;
காற்று இல்லை, வானமும் இல்லை
மூடிய நிலையில் சூன்யம்……
அனைத்தும் ஓய்வாக இருந்தது எங்கே?
பரந்த படைப்பு எப்போது நடந்தது என யார் அறிவார்?
கடவுளர் யாரும் அப்போதே பிறக்கவில்லை
உண்மை என்ன என்று யார் வெளிக்கொணர்ந்தார்?
எப்போது உலகம் மலர்ந்தது?
தெய்வக் கரங்கள் வடிவமைத்தவனோ, அல்லது இல்லையா?
தன்னையே காட்டிக் கொள்ள முடியும் என்றாலே தான்
சொர்க்கத்தில் இருக்கும் தெய்வத்தாலேயே சொல்ல முடியும்.

கடவுள் என்று நாம் வழிபடுபவர்களும் பிரபஞ்சப்படைப்பின் அங்கம் என்று வேதம் சொல்கிறது

படைத்தவனும், படைக்கப்பட்டவைகளும் ஒரே தத்துவத்தைச் சார்ந்தவை

உலகம் படைக்கப்பெறுகின்ற அதே சமயத்திலே தான் பிரபஞ்சத்தில் உள்ளார்ந்து இருந்த தெய்வங்களும் வெளிப்பட்டன.

ஆபிரகாமிய மதங்கள் சொல்வது என்ன? கடவுள் தோன்றினார், பிறகு உலகை அவர் படைத்தார்
பிரகாமிய மதமான சனாதனம் சொல்கிறது, கடவுளும் உலகமும் ஒரே சமயத்திலே தோன்றின .

ஹிரண்ய கர்ப்பத்தில் உள்ளார்ந்த நிலையிலிருந்த சக்தியும், பொருளும் வெடித்துச் சிதறி உலகம் உருவானது

நாசதிய சதகம் சொல்வது என்ன என்றால் “தனது சக்தியால் காற்று இன்றியே பிரபஞ்சம் சுவாசித்தது , அதாவது நுரையீரல் சுவாசம் போல் சுருங்கி விரிந்தது,

இந்த சுருங்கி விரிதல் என்பது துடிப்பது போன்றது . ஊஞ்சல் ஆட்டம் போன்றது

இப்படியான தொடர் சுருங்கி விரிவதால் மனம் என்ற வஸ்து தோன்றியது, அதனால் இயக்கம் என்ற நிலை வந்தது; இயக்கம் வெடிப்புக்குக் காரணமானது

இந்த ஹிரண்ய கர்ப்பத்தின் இயக்கத்தால் அளவற்ற வெப்பமும் ஒளியும் உண்டானது எனவே உலகம் வெளிச்சத்திலிருந்து தான் தோன்றியது

கோள்கள் வெப்பத்துடனே தான் இருக்கின்றன.

இந்த சுருங்கி விரியும் இயக்கத்தைத் தான் புராணத்தில் குறியீடாக மத்து வைத்துக் கடைவது போல் திருப்பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் கடைவதாக சொன்னார்கள் அப்படி கடைந்ததால் கிடைத்தது அமிர்தம். அமிர்தம் உண்டால் மரணம் இல்லை

அதனால் தான் படைக்கப்பட்ட உலகில் அனைத்தும் இயக்கத்திலேயே இருக்கின்றன . அசைவற்று இருக்க முடியாது . செயல் புரிந்து கொன்டே தான் இருக்க முடியும்.

அதனால் தான் கிருஷ்ணர் கீதையிலே கர்ம யோகத்திலே  மிக அழகாக என்ன சொன்னார் எனில் பிறவி எடுத்த மனிதன் கணப்பொழுதேனும் செயலில் இல்லாமல் இருக்க முடியாது . அதனால் நல்ல காரியங்களிலே ஈடுபட்டு வீடுபேறு அடையவேண்டும் என்கிறார்

அருவத்திலிருந்தே உருவம் பிறக்கிறது என்று வேதம் சொல்கிறது

இந்த உயர்ந்த தத்துவத்தை இந்தியாவுக்கு வந்த அரேபிய அறிஞர் அல்பிருனி கிதாபுல் ஹிந்த் என்ற தனது புத்தகத்தில் வியந்து குறிப்பிடுகின்றார்.
“ஹிந்து பண்டிதர்கள் கடவுளை புள்ளித் தத்துவமாகச் சொன்னார்கள். பருபொருளுக்கு உரிய குணங்கள் இந்த மையப் புள்ளிக்குக் கிடையாது.

இந்த புள்ளி என்பதை , கடவுள் என்பவர் சிறிய புள்ளி என்று படிப்பறிவு அற்றவர்கள் சொல்கிறார்கள். புள்ளி என்பது எதைக் குறிக்கிறது என்று அறியாதவர்களாக இருக்கிறார்கள்”

எனவே பாரத நாட்டு வேத மரபு படி அருவத்திலிருந்து உருவம் உடைய உலகம் ஒரு மாய விளையாட்டால் தோன்றியது எனலாம்.
உலகம் என்பது இயங்கிக் கொண்டே இருக்கும்.  வட்ட அலை தோன்றித் தோன்றி மறையும் போது சலனத்தை ஏற்படுத்துவது போல உலகம் இயக்கம் சலனத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.




  • ஹிந்து நாட்காட்டி

    ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…
  • நாள்காட்டி பற்றிய தகவல்கள்

    நாள் காட்டி பற்றிய தகவல்கள் பாரத நாட்டில் எத்தனை வகை காலண்டர்கள் இருக்கின்றன தெரியுமா? &nb…
  • ஜோதிடம்

    வானவியல் வல்லுனர்களான வராஹமிஹிரர், ஆர்ய்பட்டர், பாஸ்கராச்சாரியர் ஆகியோர் 1500 ஆண்டுகளுக்கு…
Load More Related Articles

Check Also

ஹிந்து நாட்காட்டி

ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…