வானவியல் வல்லுனர்களான வராஹமிஹிரர், ஆர்ய்பட்டர், பாஸ்கராச்சாரியர் ஆகியோர் 1500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள்.
தீர்க்கதமா என்ற ரிஷி பலப்பல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன வாழ்ந்தவர். நட்சத்திரத்தைக் கூர்ந்து கவனிப்பவர்.
தீர்க்கதமா என்றால் நீண்ட நெடிய இருட்டையும் கூர்ந்து கவனிக்கத்தக்க வலிமை உடையவர்கள் என்பதாகும்.
ஹிந்து முறைப்படி வானசாஸ்திரமும் ஜோதிஷம் என்று தான் சொல்லப்படுகிறது; ஜாதக பலாபலன்களை கணித்து நடக்கப்போவதை சொல்லும் ஜோதிடமும் ஜோதிஷம் என்றுதான் சொல்லப்படுகிறது
ஜோதிடம் என்று வரும்போது சூரியன் சந்திரன் குரு சனி செவ்வாய் புதன் சுக்கிரன். பூமியோடு நெருங்கிய தொடர்பு உடையவை இவைகளே. இந்த கிரகங்களை பூமியிலிருந்து நாம் கண்ணால் காண முடியும்.
பூமி மத்தியில் இருக்க, சூரியன் சந்திரன் மற்ற 5 கிரகங்கள் அவைகளை சுற்றி 27 நட்சத்திரங்கள் ஆகியவை கடிகாரம் போல் இருக்கின்றன.
வானத்து நட்சத்திரங்கள் மற்ற கிரகங்கள் ஆகியவை தொடர் நகர்வில் இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் நட்சத்திரங்கள் பார்ப்பதற்கு ஸ்திரமாக இருப்பது போலத் தோன்றுகிறது .
அதனால் தான் பிரபஞ்ச இயக்கத்தின் அடிப்படையில் வேதங்களும் மறூருவாக்கம் செய்யப்படுகின்றன. இப்போது உள்ள வேதங்கள் 28வது தடவையாக மறூருவாக்கம் பெற்றவை
வியாஸர் என்றால் பிரித்து சேர்ப்பவர். ஆனால் வேதங்களைத் தொகுத்தவர் வியாசார் என்கிறோம். முர்ணாகத் தோன்றினாலும், வியாசர் மூலத்தை ஆழமாகப் பார்த்து அவற்றிலிருந்து குறிப்பிட்ட சுலோகங்களை எடுத்துத் தொகுத்தவர்.
ஜோதிஷம் என்பது
1) கணித ஜோதிஷம் – கணக்கு பற்றியது
2) சித்தாந்த ஜோதிஷம் – விண்ணைப் பற்றியது
3) பலித ஜோதிஷம் – பலன் சொல்லும் ஜோதிஷம்
ஜோதிஷம் என்பது நாள் காட்டி, நல்ல நேரம் கெட்ட நேரம், எந்த செயலை எப்போது செய்யலாம், விவசாயம் எப்போது செய்யலாம், சுபகாரியம் எப்போது செய்யலாம் என்ற கணிப்புக்குக்காக ஜோதிடம் இருக்கிறது
பாரதிய விஞ்ஞான் முறை வியப்பான இரு விஷயங்களைச் செய்துள்ளது
ஒன்று பூமியை மையமாக வைத்து கணித்தல்.
மற்றொன்று கோள்களை மையமாக வைத்துக் கணித்தல்
என்ற இரண்டு வகையிலும் துல்லியமாக காலக் கணக்கீடு செய்துள்ளது
மக்கள் வசிப்பத்ற்கு ஏதுவான இடம் பூமி என்பதால் பூலோகம் எமச் சொல்லப்படுகிறது . மேலும் உருண்டை வடிவில் இருப்பதால் போகோளம்
உலகம் முழுவதும் அதுவும் குறிப்பாக கிறிஸ்தவம் பூமி தட்டையானது நடுவில் இருப்பது என்று சொல்லி வந்தபோது மார்க்கண்டேய புராணத்தில் உலகம் உருண்டையானது , பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று துல்லியமாக சொல்லியிருக்கிறது
வேதமும் தெளிவாகச் சொல்கிறது பூமியைச் சுற்றும் சந்திரன், கூடவே சூரியனையும் பூமியோடு சேர்ந்து சுற்றுகிறது .
சந்திரனுக்கு பூமி தாய் ஆகிறாள்; சூரியன் தந்தை ஆகிறார்.
கிரகம் என்று நாம் சொல்வதற்குக் காரணம் கோள்கள் பரவெளியில் தமக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து சுழல்கின்றன.
ஆத்ரி மகரிஷி கிரகணங்களைப் பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லியிருக்கிறார்.
ஹிந்து ஜோதிஷம் மேலை நாடுகள் கண்டுபிடிப்பதற்கு பலபபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே துல்லியமாக கணித்திருக்கிறது .
