Home கட்டுரைகள் தேசம் நாள்காட்டி பற்றிய தகவல்கள்

நாள்காட்டி பற்றிய தகவல்கள்

10 second read
0

நாள் காட்டி பற்றிய தகவல்கள்

பாரத நாட்டில் எத்தனை வகை காலண்டர்கள் இருக்கின்றன தெரியுமா?

 பாரத நாடு சுதந்திரம் அடைந்தபோது காலண்டர் சீர்திருத்தக் குழு என ஒன்று ஏற்படுத்தப்பட்டது . அதற்கு மேஜய் மேக்னாத் சாஹா என்பவர் தலவரக இருந்தார்

1952லிருந்து 1957 வரை 5 ஆண்டுகளுக்கு இந்தக் குழு ஆய்வு செய்தது. ஐந்தாண்டுகள் ஆய்வு செய்த கமிட்டி கண்டுபிடித்துச் சொன்ன தகவல்கள் –

  1. விவசாயம் வானத்தை  நம்பி இருக்கிறது . தாவரங்கள் பயிர்கள்
  2. கடல்வழிப் பயணத்தின் போதும் வானத்து நட்சத்திரங்களை வழிகாட்டியாகக் கொண்டு பயணித்தனர்

பாரதத்தில் 7300 வகையான காலெண்டர்கள் இருந்தன.

இந்த 7300ல் 30 கேலண்டர்கள் பிரபலமானவைகளாக இருந்தன

30லிருந்து ஒன்றைத் தேர்வு செய்தார்கள்  அதுவே சாலிவாகனர் நாட்காட்டி, இப்போது அதிகாரபூர்வ கேலண்டராக இருக்கிறது

பாரத நாட்டு தேசிய கேலன்டராக சாலிவாகனர் கேலண்டர் உள்ளது

அதிகார பூர்வ கேலண்டர் என ஒன்று இருந்தாலும், மத சம்பந்தமான விஷயங்களுக்கு, ஆட்சிக்கு என பல வேறு கேலண்டர்கள் பழக்கத்தில் இருக்கின்றன

அதுதான் ஹிந்து தர்மத்தின் அழகு;  இங்கே பல கேலண்டர்கள் பழக்கத்தில் இருந்தன என்றாலும் ஒன்றை ஒன்று  நிராகரிப்பதாக இல்லை; எல்லா அணுகுமுறைகளையும் ஏற்றுக்கொள்வதாக அமைந்திருக்கிறது

சூரிய வழி நாட்காட்டியை அனுசரிப்பரவர்கள் சித்திரை 1 என்பது புத்தாண்டாகிறது

சந்திரனை அடிபட்டையாக கொண்டவர்களுக்கு யுகாதி அன்று புத்தாண்டாகிறது .

ஹிந்துக்களுக்கு ஆண்டு துவக்கம் என்பது மத்திய ரேகை அருகே வரும்போது பகலும் இரவும் சம அளவில் இருக்கும் நாளாகும்.

கிரிகோரியன் காலெண்டர்
உலகெங்கும் இந்த கேலண்டரே பயன்படுத்தப்டுகிறது
அதுவும் கி .மு  கி.பி என்று சொல்லப்பட்டது; கிறிஸ்துக்கு முன் , கிறிஸ்துக்கு பின்

ஆனால் டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்ததாக சொல்லப்படுகிறது
ஆனால் புத்தாண்டு ஜனவரி 1 என துவங்குகிறது .

ஏசு பிறந்த தேதியிலேயே குழப்பம் நிலவுகிறது.

ஐசக் அசிமினோவ் என்ற அமெரிக்கர் சொல்கிறார் ஏசு பிறந்த தேதி தவறு. அந்தத் தவறை வைத்தே காலேண்டரை கணிக்கிறோம்.

அதன் பிறகு பல குழப்பங்கள் மாற்றங்கள் அந்த கேலண்டரில் வந்தன

இந்த கிரேகிரியன் கேலண்டரை ஏற்றுக்ம்கொண்ட கடைசி நாடு இங்கிலாந்து ஆகும்.

பாரத நாட்டில் புத்தாண்டு

பாரத நாட்டில் புத்தாண்டு என்பது சூரியன் மத்தியதர ரேகையைக் கடக்கும் காலத்தில் தான்.

மாதம் வார நாட்களும் கோள்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு   சூரியன்
திங்கள்  சந்திரன்
செவ்வாய்  செவ்வாய்
புதன்  புதன்
வியாழன்  வியாழன்
வெள்ளி  வெள்ளி
சனி  – சனி

ஒருவரின் பிறப்பை அடைப்படையாகக் கொள்ளாமல், கோள்களின் அமைப்பைக் கொண்டு நேரத்தைக் கணிப்பதால் ஹிந்து  நாட்காட்டி விஞ்ஞான முறைப்படி சரியானது .

  • ஹிந்து நாட்காட்டி

    ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…
  • ஜோதிடம்

    வானவியல் வல்லுனர்களான வராஹமிஹிரர், ஆர்ய்பட்டர், பாஸ்கராச்சாரியர் ஆகியோர் 1500 ஆண்டுகளுக்கு…
  • காலம் நேரம்

    காலம் நேரம் அடிப்படையில் காலம் என நாம் சொல்வது அண்டவெளியில் உள்ள கோள்களின் அசைவைப் பொருத்த…
Load More Related Articles

Check Also

ஹிந்து நாட்காட்டி

ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…