Home கட்டுரைகள் தேசம் ஹிந்து நாட்காட்டி

ஹிந்து நாட்காட்டி

2 second read
0

ஹிந்து நாட்காட்டி

ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம்

பஞ்சாங்கம் என்ற பெயர் எப்படி வந்தது?

5 பாகங்களைக் கொண்டதால் பஞ்சாங்கம்; அவையாவன திதி வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்

திதி என்றால் நிச்சயமாக வருகின்ற ஒன்று என்பதைக் குறிக்கிறது. உதாரணமாக, சிரார்த்தம், அமாவாசை  போன்ற நாட்களில் மூதாதையர் வரும் நாள் அது நிச்சயமாக வருகிறது

அதிதி என்றால் முன்னறிவிப்பின்றி வீட்டுக்கு வருபவர்கள்.

பாரத நாட்டில் அதிதிக்களை தேவர்களுக்கு ஒப்பாக கருதினர்.

மக்கள் பாரத நாட்டில் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு பிரயாணம் சென்றனர், குறிப்பாக தல யாத்திரை செல்பவர்கள்.

அதனால்தான் அந்த காலத்தில் வீடுகள் வாசலில் திண்ணை, திண்டு உண்டு
இப்படிப்பட்ட யாத்திரிகர்கள் எந்த வீட்டிலும் வந்து தங்குவார்கள்.

அவர்களுக்கு உணவும் உபசாரமும் செய்ய வேண்டியது இல்லறத்தான் கடமை என பாரத நாடு சொல்கிறது

பூமி தன்னைத் தானே சாய்வாக இருந்து சுழன்று கொண்டிருக்கிறது

பூமியை சந்திரன் சுற்றி வருகிறது

உத்தராயணம் என்பது சூரியன் வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கும் நாளிலிருந்து தொடங்குகிறது ஆங்கிலக் கணக்குப்படி டிசம்பர் 22 உத்தராயணம் தொடங்குகிறது

தட்சணாயணம் என்பது ஜூன் 22 துவக்கம்.

ஹிந்துக்கள் புண்ய கர்ம காரியங்கள் செய்யும்போது இந்த கோள்களின் நிலையையும் சொல்லி அதில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதைச் சொல்கிறோம்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வந்தால் அமாவாசை
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்தால் பௌர்னமி

ஒவ்வொரு பௌரண்மிக்கும் 27 நட்சத்திரங்களில் 12 நட்சந்திரங்களின் நேர்கோட்டில் சந்திரன் வரும் . அப்படித்தான் மாதத்தின் பெயரை பஞ்சாங்கத்தில் குறிப்பிடுகிறார்கள்.

சந்திரன் சுழற்சியில் இருக்கும்போது தினம் ஒரு நட்சத்திரத்தோடு நேர் கோட்டில் வருவதால் 27 நட்சத்திரங்கள் 27 நாட்களில் மாதா மாதம் வருகிறது

இப்படி நட்சத்திரங்களை வைத்து கணக்கிடுவதை ராசி என்று இந்து சாஸ்திரம் சொல்கிறது

அண்டத்தில் உள்ள கோள்களும் கல்களும் ஒரு ஒழுங்கில் சீராக இயங்கி வருகின்றன

வடதுருவத்துப் பக்கம் துருவ நட்சத்திரம் தெரியும்.

உலகில் பலப்பல நாட்கட்டிகள் உள்ளன.

வங்காளி, கிரேகிரியன் கிரேக்கம், முஸ்லீம் , ஜப்பானியம் எனப் பல  நாட்காட்டிகள் இருக்கலாம். அவைகள் உள்ளூர் நிலையை அனுசரித்து இருக்கும்

ஆனால் ஹிந்துக்களின் நாட்காட்டி கோள்களின் நிலையை வைத்து கணிக்கப்படுவதால்  எல்லோருக்கும் பொருத்தமான நாட்காட்டி ஆகும்

சனாதனத்தின் நாட்காட்டி என்பது மற்ற நாட்காட்டிக்கெல்லாம் தாய் எனச் சொல்லலாம்.

இந்த கோள்களின் சுழற்சியைப் பற்றி சொல்லும்போது மேலை நாடுகளின் கருத்து என்ன எனில் இந்த இயக்கமே புரிந்து கொள்ள முடியாமல் குழப்பமானது என்பதாகும்

ஆனல் ஹிந்துக்களின் கணிப்புப்படி உலகம் கோள்கள் அனைத்தும் ஒரு துல்லியக் கணக்கில் இயங்குகின்றன என்பனவாம்

இந்த சீரான இயக்கத்தை தர்மம் என ஹிந்து தர்மம் சொல்கிறது

சிறுகோள்கள் கூட ஒரு ஒழுங்கில் சுழல்கின்றன

இந்த சுழற்சியைத் துல்லியமாக கவனித்த ஹிந்து மூதாதையர்கள் நட்சத்திரம் இருக்கும் இடத்தை வைத்து நாள் திதி நல்ல  நேரம் எனக் கணித்துச் சொல்லிவிடுவர் . அதனால் அச்சடித்த நாட்காட்டி தேவையே இல்லாமல் இருந்தது.

  • நாள்காட்டி பற்றிய தகவல்கள்

    நாள் காட்டி பற்றிய தகவல்கள் பாரத நாட்டில் எத்தனை வகை காலண்டர்கள் இருக்கின்றன தெரியுமா? &nb…
  • ஜோதிடம்

    வானவியல் வல்லுனர்களான வராஹமிஹிரர், ஆர்ய்பட்டர், பாஸ்கராச்சாரியர் ஆகியோர் 1500 ஆண்டுகளுக்கு…
  • காலம் நேரம்

    காலம் நேரம் அடிப்படையில் காலம் என நாம் சொல்வது அண்டவெளியில் உள்ள கோள்களின் அசைவைப் பொருத்த…
Load More Related Articles

Check Also

நாள்காட்டி பற்றிய தகவல்கள்

நாள் காட்டி பற்றிய தகவல்கள் பாரத நாட்டில் எத்தனை வகை காலண்டர்கள் இருக்கின்றன தெரியுமா? &nb…