
பாரதம் – பெயர் எப்படி வந்தது?
நமது நாட்டை பரதன் என்ற அரசன் ஆண்டான். அதனால் இந்த நாட்டிற்கு பாரதம் எனப் பெயர் வந்தது; அவனின் வழித் தோன்றல்களாகிய நாம் பாரதியர்கள் என அழைக்கப்படுகிறோம் என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டுளதை பலர் அறிவார்காள்.
உண்மை தான். ஆனால் பாரதம் என்று நமது நாடு அழைக்கப்படுவதற்கு இன்னும் பல நுணுக்கமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்தால் நாம் ஆச்சர்யப்பட்டுப் போவோம்
பூகோள ரீதியான விளக்கம்:
விஷ்ணு புராணத்தில் பாரத நாட்டின் எல்லைகளாக சொல்லப்பட்டவை
தெற்கே மகா சமுத்திரம் இருக்கிறது; வடக்கே ஹிமாசலம் இருக்கிறது.
பனிமலைக்குத் தெற்கே உள்ளதும், மகாசமுத்திரத்துக்கு வடக்கே உள்ளதுமான நிலப்பகுதி பாரதம் என அழைக்கப்படுகிறது என்று விஷ்ணு புராணம் சொல்கிறது
சரி பாரதம் என்று இந்த நிலப்பகுதியை ஏன் அழைக்க வேண்டும் ?
ரிக் வேதத்தில் விஸ்வாத்திர முனிவர் இப்படிச் சொல்கிறார்-
“பாரதம் ஜனம் – பாரதத்தின் மக்கள், குடிகள்
பா என்றால் சமஸ்க்ருதத்தில் ஒளி
ரதம் என்றால் ஞானத்தை விரும்புபவன்; போற்றி மதிப்பவன்
பாரதம் என்ற நம் நாட்டில் தான் ஞான ஒளியை மக்கள் விரும்பிப் போற்றி பின்பற்றி வருபவர்களாக இருக்கிறார்கள் .
அப்படி என்றால் உலகில் மற்ற நாடுகள் எதை விரும்பின?
உலகில் 5 வகை அரசர்கள் இருந்தார்கள் எனச் சீனக் குறிப்பு ஒன்று சொல்கிறது
- சைனா – மானுடர்களின் அரசன்
சீன மக்கள் அதிகாரத்துக்குக் கட்டுப்படுபவர்கள்
அரசாங்க விதிகளை தவறாமல் கடைபிடிப்பவர்கள் - துருக்கியர்கள் – சிங்கத்தின் அரசன்
துணிவும் முரட்டுத்தனமும் உடையவர்கள். - பாரசீகம் – அரசர்களுக்கெல்லாம் அரசர்
செல்வம், பெருமை, செழிப்பான நிலம்,
அதிகமாக மக்கள் குழுமி இருக்கும் இடம் - ரோமாபுரி – ஆண்களின் அரசன்
கட்டுமஸ்தான் உடல், அழகிய முகம் - பாரதியர்கள் – ஞானத்தின் அரசன்
ஞானம் கிளை விட்டு விரிந்த அறிவு உடையவர்கள்
உலகிலேயே விஞ்ஞானத்தை வளர்த்த முதல் நாடு
அதனால் உலகின் மற்ற நாடுகள் உடலழகிலும் அதிகாரத்திலும், மிருகபலத்தால் அதிகாரம் செலுத்துபர்களாகவும், அதிகாரத்துக்கு அடி பணிந்து போகும் மனிதர்களாகவும் இருந்த போது, பாரத நாடு மட்டுமே கல்வி அறிவில் ஞானத் தேடலில் ஒளி பொருந்திய நாடாக இருந்து வந்திருக்கிறது என்று சைனாக்காரனின் குறிப்பும் சொல்கிறது
மேலும் சம்ஸ்க்ருதத்தில் பரதன் என்றால் உலோகம் என்ற பொருளும் உண்டாம்.
பாரதியோ என்றால் உலோகக் கலை என்பதாகும்;
தாதுக்களிலிருந்து உலோகத்தை உண்டாக்கும் கலையை சிறப்பாக அறிந்தவர்கள் என்பதாலும் பாரதம் என்ற பெயர் வரக் காரணம்.
சரித்திர ரீதியான விளக்கம்
பாரதம் என்று பெயர் நிலவ வேறு காரணங்கள் என்னென்ன?
நமது நாட்டில் பரதன் என்ற பெயர் பல பேருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது
ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காளிதாஸர் எழுதிய சாகுந்தல நாடகம் மிகப் பிரபலமானது; அதில் வரும் சகுந்தலை- துஷ்யந்த் தம்பதியின் மகன் பரதன்; அந்த பரதனைப் பெற்ற நாடு பாரத நாடு என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்ப்ட்டுள்ளது
அப்படி சொல்லப்பட்டாலும் , இந்த பரதனுக்கு முன்னாலேயே, இராமாயண பரதன், இராமனின் சகோதரன் வசித்துள்ளான்; அதற்கும் முன்னாலே இராமன், பரதன் தோன்றிய இஷ்வாகு குலத்திலே இவர்களுக்கு மூதாதையராக பலப்பல ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே ரிஷப தேவர் என்ற முனிவர் இருந்தார்; அவரின் மகன் ஜடபரதன்
ஜடபரதன் தவ வலிமையால் புலன்களை அடக்கி தூய வாழக்கை வாழ்ந்ததால்,
அந்தத் தூயவான் பரதன் வழித்தோன்றலாகிய நாம் பாரதியர்களாகவும், இந்த நாடு பாரத நாடு என்றும் அழைக்கப்பட்டது.
இந்த ரிஷப தேவரைத்தான் ஜைனர்கள் தங்களின் முதல் தீர்த்தங்கராக மதிக்கிறார்கள். இவரிம் சகோதரர்தான் பாகுபலி.
எனவே ஆதி ஆதி காலம் தொட்டு பாரதம் என்றே இந்த நாடு அழைக்கப்பட்டு வந்துள்ளது .
பாரத நாட்டின் சிறப்பு
பூமியில் பாரத நாட்டின் நிலப்பகுதி விசேஷமான அம்சங்களை உடையது
பாரதி என்ற சொல் பா + ரதி எனப் பிரித்துப் பார்க்கலாம்
பா என்றால் ஒளி
ரதி என்றால் மகிழ்பவள்
அதாவது பாரத நாட்டில் தான் சூரிய ஒளி மகிழ்வோடு வீசுகிறது
பாரத நாட்டுக்கு கிழக்கே உள்ள நிலப்பகுதிகள் தினம் தினம் திடீரென்று மழை பெய்யும் ; அரை நாள் தான் சூரிய ஒளி இருக்கும்
பாரதத்துக்கு மேற்கே உள்ள நாடுகள், பாலைவனமாகவும், சூரியன் சுட்டெரிப்பதாகவும் உள்ளது
ஆனால் நம் பாரத நாட்டுல் தான் சீதோஷ்ண நிலை சம அளவில் வெய்யிலும் மழையும் பருவத்துக்கு ஏற்றவாறு வீசுகிறது.
பாரதத்து எல்லை
தெற்கே மகா சமுத்திரம், வடக்கே ஹிமாலயம் ( ஹிம என்றால் பனி; லயம் என்றால் உறைவிடம்) மேற்கே சிந்து சாகரம், கிழக்கே கங்கை சாகரம்
கிழக்கே அருணாச்சல் ; அருணா என்றால் முதல் சூரிய ஒளி; அச்சல் என்றால் மலை பகுதி. சூரிய கதிர் முதன்முதலில் படும் இடம் அருணாச்சல் பிரதேஸம்
மேற்கே அஸ்தாச்சல் ; அஸ்தம் என்றால் மறைதல் அச்சல் பகுதி
சூரியன் உதித்து மறையும் எல்லையைக் கொண்டது பாரத நாடு எனவே சரித்திர ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் பாரத நாடு ஒரே நாடாக இருந்து வந்துள்ளது; அதாவது கலாச்சார ரீதியாக ஒரே நாடாக இருந்து வந்துள்ளது
அரசியல் ரீதியாக பல்வேறு ராஜ்ஜியங்கள் இருந்தன; ஆனால் அந்த ராஜ்ஜியங்கள் பாரத நாட்டு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு ஆட்சி செய்து வந்தன.
பாரதம் எப்படி இந்தியா ஆயிற்று?
சிந்து நதிப் பகுதிகளை
1) பாரசிகர்கள் துருக்கியர்கள் சி என்பதை ஹி என்றனர்; சிந்து என்பது ஹிந்து ஆயிற்று
2) கிரேக்கர்கள் ஹிந்த் என்பதை ஹ நீக்கி இந்த் என்றனர்
3) பிரான்ஸ் நாட்டவர் இந்த் என்பதை இன்டே என்றனர்
4) இங்கிலாந்துக்காரன் இன்டே என்பதை இன்டியன் என்றான்
அப்படித்தான் சிந்து என்பது இன்டியன் என்று மருவியது
நிறைவாக
இமயத்துக்கும் இந்து மகாசமுத்திரத்துக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு கலாசார ரீதியாக ஒரே நாடாகத்தான் எல்லா மன்னர்களாலும் கருதப்பட்டு வந்துள்ளது.
பாரதம் என்பது ஞானத்தின் இருப்பிடமாகக் கருதப்பட்டது. பாரதியர்கள் ஞானச் செல்வத்தைப் போற்றிப் பாதுகாப்பவர்களாக இருந்து வந்துள்ளார்கள்
உலகிலேயே சம சீதோஷ்ண நிலையைக் கொண்ட வளமான நாடாக பாரதம் இருந்து வந்துள்ளது என்பதை அறிகிறோம். அதுமட்டுமல்ல ரிஷிகளின் வழித் தோன்றல் நாம் என்ற பெருமையும் கொண்டவர்களாக இருக்கிறோம்.
ஜெய் ஹிந்த் !
