Home கட்டுரைகள் தேசம் படைப்புத் தத்துவ விளக்கம்

படைப்புத் தத்துவ விளக்கம்

10 second read
0

பஞ்சபூதத் தத்துவம்

பஞ்சபூதங்களையும் சிவபெருமானோடு இணைத்துக் கோயில் கட்டி வைத்தனர் நமது முன்னோர்கள்

ஆகாயம் – சிதம்பரம்  நடராஜர்
வாயு ( காற்று) – காளஹஸ்தி -காளத்தீஸ்வரர்
அக்னி(நெருப்பு) – திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர்
நீர் –  திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர்
பூமி – காஞ்சி ஏகம்பரேஸ்வரர்

சிவலிங்கம்

சிவன் என்பவர் அழிப்பவர் இல்லை; படைக்கப்பட்ட பொருள்கள் மறு உருவாக்கம், மறு சுழற்சி பெறுவதற்கு அருளுபவர்.

ஹிந்து மரபு படி இறத்தல் என்பது ஒரேடியாக அழிந்து தொலைந்து விடுவது என்பதே இல்லை.

இறத்தல் என்பது மீட்டுருவாக்கத்துக்கான முதல் படி. அதாவது பொருட்கள் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வேறு வேறு உருவில் உலகில் உலாவிக் கொண்டுதான் இருக்கும். வடிவம் மாறலாம்; ஆனால் உள்ளே உறையும் சக்தி மாறாது இருக்கும்.

இதைத்தான் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னார். உலகில் உள்ள சக்தியின் அளவு மாறாது. அந்த சக்தி வெளிப்படும் வழிமுறைகள் மாறிக்கொண்டே இருக்கும்.

பனிக்கட்டியாக இருந்த சக்தி, நீராக உருகி வரும், பின்னர் ஆவியாக மாறும். ஆவி ஒருங்கிணைந்து மேகமாகி மழையாகப் பொழியும். நீர் பூமிக்கு வரும். பிறகு பனிக்கட்டியாகவோ நீராவியாகவோ மாறும். இப்படி சுழற்சி நடந்து கொண்டேயிருக்கும்.

இப்படிப்பட்ட மறுசுழற்சிக்கான கோயிலாக நமது முன்னோர்கள் காசி விஸ்வநாதர் கோயிலை அமைத்தார்கள். காசி பாணலிங்கம் மறுசுழற்சிக்கான கடவுள்.

லிங்கம் என்ற சொல் ஒரு குறியீட்டை அல்லது ஒரு தத்துவ நிகழ்வைக் குறிப்பதாகும். உருவமற்ற உருவம்.

லிங்கம் என்பது சூட்சுமப்பொருள் தூலப்பொருளாவதைக் குறிக்கிறது
அதேபோல தூலப்பொருள் நிர்மூலமாகி சூட்சமப்பொருளாவதைக் குறிக்கிறது.

எனவே லிங்கம் என்பது வெறும் சிலை அல்ல. பிறப்பு இறப்பு என்ற சுழற்சியைப் புரியவைக்கும் கருத்தின் அடையாள உருவம்.

 நாராயணர்
நாராயணர் என்பவர் ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது சாய்ந்த நிலையில் இருப்பவர். ஆதி என்றால் முதன் முதல் எனப் பொருள்; சேஷம் என்ற சொல் மீதம் என்று பொருள் ஆதிசேஷம் என்பது முன்னால் இருந்ததன் மிச்சம் என்பது மீண்டும் படைப்பதற்குத் தேவைப்படுகிறது

ஏன் பாம்பின் மீது படுத்திருக்கப் பயன்படுத்தினார் நாராயணர்?
பாம்பு சுருட்டிக் கொள்ளும், தேவைப்படும்போது விரிந்து கொள்ளும்.
அதேபோல் பாம்பு தன் முகத்தில் வாலைக் கவ்வி வட்டமாகவும் இருக்கும். அந்த நிலையில் முதல் எது முடிவு எந்து எனத் தெரியாது .

ஆதிசேஷத்தில் பஞ்சபூதத்தின் குணங்களின் மிச்சம் வந்து தங்கும்.

ஆதிசேஷம் என்பதை அனந்த சேஷம் என்றும் சொல்வார்கள். அனந்த, என்றால் முடிவில்லாதது. இப்படிப்பட்ட படைப்பு என்பது முடிவில்லாதது என்பதைக் குறிக்க அனந்த சேஷன் என்கிறது .

பாகவத் புராணம் 25ஆவது சுலோகம்
“பிரம்மாவின் வாழ்க்கையின் முடிவில்
பிரபஞ்சம் பஞ்சபூதத் தத்துவகுணத்தில் கரைந்து விடும்
வெளிப்பட்டது உள்ளார்ந்ததற்கும் உறையும்
சேஷமாக மீதம் இருக்கும் நீ மட்டுமே இருப்பாய்”
என ஆதிசேஷனைப் பற்றி சொல்கிறது

ஒரு விஷயத்தில் நாம் ஆழ்ந்திருந்தால் அதற்கு லயித்து இருத்தல் என்போம்.
நல்லதொரு பாட்டில், பக்தியில், படிப்பில், வேலையில் மனம் ஒடுங்கி வேறு சிந்தனையின்றி தன்னை மறந்து இருந்தால் அதற்கு லயம் என்று பெயர்

அப்படித்தான் பிரலயம் அதாவது பிரம்மாவின் படைப்பு நின்ற பின்னே உயிரணுக்கள், மீண்டும் ஆதிமூலத்தில் ஆழ்ந்து லயித்திருத்தலால் கரைந்து விடுதல் என்று சொல்லப்படுகிறது

“நாஸதோ வித்யதே ப்பாவோ
நா ப்பவோ வித்யதே சத”
அதாவது
“இல்லாததிலிருந்து இருப்பதைக் கொண்டு வரமுடியாது;
இருப்பது இல்லாதது ஆகாது”

புருஷசூக்தம் இந்தப் படைப்பைப் பற்றி விரிவாக சொல்கிறது

ஓம் எனும் பிரணவம்
அப்படி பிரம்மாண்டம் உருவானபோது ஒலி உண்டாயிற்று. அந்த ஒலி தான் “ௐம்”
அதற்கு பிரணவம் என்று பெயர் பிர என்றால் முதல் மூச்சு. நவ என்றால் எந்நாளும் புதிது என்பதாகும் . பிரணவம் என்பது எப்போதும் புதுப்பொலிவு உடைய பிராணசக்தி எனலாம்.

வேதங்கள் ஆறாயிரம் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னதைத்தான் பின்னாளிலே கிறிஸ்தவம் சொன்னது,  முதலில் ஒலி உண்டாயிற்று. அந்த ஒலி ஆமென் ஆகும் என்றது . ஓம் என்பதைத்தான் கிறிஸ்தவர்கள் ஆமென் என்றார்கள்.

ஓம் என்பது நாபியிலிருந்து ஒலிக்கச் சொல்ல வேண்டும். நாபி என்பது படைப்புக்கடவுளான பிரம்மா உதித்த இடம் .

படைப்பியக்கத்தோடு இயைந்து உள்ள ஒலி ஓம் ஆகும்

பாரதத்து ரிஷிகள் கண்டுபிடித்ததைத்தான் பின்னாளிலே விஞ்ஞானிகள் கண்டு பிடித்து சொன்னார்கள் . அதாவது இந்த பேரண்ட இயக்கத்தைக் கூர்ந்து க்வனித்தால் ஒரு ஒலி வந்து கொண்டே இருக்கிறது .
COSMIC MOCROWAVE BACKGROUND RADIATION என்று சொல்கிறார்கள் .

அதுதாம் ஓம் என்னும் பிரணவ  நாதம்.  

அதனால் தான் நல்ல துவக்கத்திற்கும், மங்கலகரமான துவக்கத்திற்கும் ஓம் என்று உச்சாடணம் செய்து வந்தால் நல்லது நடக்கும்.

சாங்கிய தத்துத்துவத்தில் படைப்பு என்பதை நான்கு நிலையில் விளக்குகிறார்கள்

  1. வாசுதேவா – வாசா என்றால் இருப்பது; திவா என்றால் ஒளிர்வது , அதாவது ஒளிர் நிலையில் இருப்பது
  2. சங்கர்ஷணம் – அழுத்தி வைத்தல்; இழுத்து வைத்தல்
    அதாவது உலகம் விரிவதும் விரிவதை இழுத்துக் கட்டுதலும் ஆகும் விரிந்து சுருங்கும் பிரபஞ்ச இயக்கத்தைக் குறிக்கிறது.
  3. பிரத்யும்னா – ப்ர என்றால் முன்னால் த்யமா என்றால் பளிச்சிடுவது
    அதாவது வெடி சத்தத்துடன் ஒளிரிட்டு வெளிப்படுவதைக் குறிக்கிறது
  4. அநிருதா – நிருதா என்றால் கட்டுப்படுத்து; அநிருதா என்றால் கட்டுக்குள் வைக்க முடியாத எனப் பொருள். உலகம் பரந்த விரிந்த மனிதக் கட்டுக்குள் வைக்க முடியாதது எனப் பொருள்

மூவரின் சகா

பிரம்மா – உலகைப் படைத்துக் கொண்டே இருப்பவர். அண்ட வெளியை விரிவாக்கிக் கொண்டே இருப்பவர். அப்படி விரிவாகும் அண்ட வெளி பொருட்களைப் பிடித்துக் கொள்ளும் திறன் உடையதாய் இருப்பதற்கு சரஸ்வதி உதவுகிறார்.

சரஸ்வதி என்றால் என்ன பொருள்? களஞ்சியம். என்ன களஞ்சியம் ? ஞானக் களஞ்சியம்.

விரிந்த உலகில் படைக்கப்பட்டவைகளை தக்க வைத்துப் பொருத்தி வைக்கும் ஞானம் ஆகும்.  அந்த ஞானத்தை பிரம்மாவுக்கு வழங்குபவர் சரஸ்வதி.

விஷ்ணு பிரபஞ்சத்துள் ஊடுருவி இருக்கிறார். தூணிலும் துரும்பிலும் இருக்கிறர். இவருக்குத் துணை இருப்பவர் லக்ஷ்மி .

லக்ஷ்மி என்ற சொல் லக்ஷியம் என்ற சொல்லிலிருந்து வருகிறது எனலாம்.
லக்ஷ்மி என்பவர் வெறுமனே பொன்னும் பொருளும் பணத்துடன் பார்ப்பது முழுமையான பார்வை இல்லை.

விஷ்ணு ஊடுருவி விரிவடைய வழியை இலக்கைத் தருபவர் லக்ஷ்மி.

சிவன் உலகத்துப் பொருட்களை அழித்து மீண்டும் புத்தாக்கம் செய்பவர். அதற்கு சக்தியைத் தருபவர் பராசக்தி தேவி

எண் 108ன் சிறப்பு

சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி  பூமியின் சுற்றளவின் நீளத்தைப் போல 108 மடங்கு உள்ளது

பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி சந்திரனின் சுற்றளவு விட 108 மடங்கு கூடுதலாக உள்ளது

சூரியனின் சுற்றளவு பூமியின் சுற்றளவை விட 108 மடங்கு கூடுதலானது

 நவீன விஞ்ஞானம் சொன்ன இந்த உண்மையை பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஆர்யபட்டரும், வராகமிகிரரும் சொல்லியிருக்கின்றனர்.

  • ஹிந்து நாட்காட்டி

    ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…
  • நாள்காட்டி பற்றிய தகவல்கள்

    நாள் காட்டி பற்றிய தகவல்கள் பாரத நாட்டில் எத்தனை வகை காலண்டர்கள் இருக்கின்றன தெரியுமா? &nb…
  • ஜோதிடம்

    வானவியல் வல்லுனர்களான வராஹமிஹிரர், ஆர்ய்பட்டர், பாஸ்கராச்சாரியர் ஆகியோர் 1500 ஆண்டுகளுக்கு…
Load More Related Articles

Check Also

ஹிந்து நாட்காட்டி

ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…