ஹிந்துக் கடவுளர்கள்
பேரண்டம் சிதறி கடவுளர்கள் வெளிப்பட்டனர்.
பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகள் தத்தம் செயல்பாட்டுக்காகத் தோன்றினார்கள்
மும்மூர்த்திகள் செயல்பாட்டுக்கு சக்தி அளிப்பதற்காக தேவியர்களும் தோன்றி உடன் நின்றனர், முறையே சரஸ்வதி, லக்ஷ்மி, துர்க்கை ஆவார்கள்.
இவர்களைத் தவிர படைப்புத் தத்துவத்தில் கணேசர், சூரியன் கார்த்திகேயன் ஆகியோரையும் சேர்த்துக் கொண்டார்கள்.
கணேசர் என்ற சொல் கண ஈசர் என்பதாகும். கண என்றால் எண்ணிக்கை, எண்ணிக்கையில் கூடுதலானது,, ஈசர் என்றல் கடவுள்
கணக்குக் கடவுள் கணேசர் ஆவார்.
மதம்
மதம் என்ற சொல் மனிதன் தனது சிந்தனையைப் பயன்படுத்தி சிந்தித்து, தர்க்கம் செய்து புரிந்து கொண்டு அவரவர் கடவுளை அடையும் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறை என்கிறார்கள் ஞானிகள்
ஷண்மதம்
படைப்பை ஆறு வழிகளில் கண்டு புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஷண்மதம் தருகிறது
அதனால் பாரத நாட்டில் மதம் என்றாலே கண்மூடித்தனமாக ஒரு புத்தகத்தையோ ஒரேக் கடவுளையோ நம்பும் வழிமுறையே கிடையாது
அவரவர் விருப்பப்படி உண்மையை உணர வழிமுறைத் தேர்ந்தெடுக்க முடியும்.
மத நம்பிக்கை என்பதே பாரத நாட்டில் கிடையாது. மத அனுபவம் என்பதே உண்மை. இறைவனை வெறுமனே நம்பாமல் இறைவனௌ உணர வேண்டும் என்பதே ஆகும்.
6 மதங்கள் ஆவன
சைவம் – சிவனை வழிபடுவது
வைணவம் – விஷ்ணுவை வழிபடுவது
சாக்த்ம் – பராசக்தியை வழிபடுவது
காணபத்யம் – கணேசரை வழிபடுவது
கௌமாரம் – முருகரை வழிபடுவது
சௌரம் – சூரியனை வழிபடுவது
கணேசர் – யானை முகத்தோடு உள்ளார் . கணேசர் என்பவர் மனதை மன இயக்கத்தை, மனதால் வரும் சங்கடங்களை நீக்குபவர் . விக்ன விநாயகர் என்கிறோம்.
மேலும் யானை முகம் ஏன் ? யானை உருவத்தில் பெரியது மட்டுமல்ல, மற்ற பெரிய மிருகங்களை விட, யானையின் மூளை அளவு அதன் உடக் அளவிற்கு பொருத்தமான சதவீதத்தில் இருக்கிறது . யானை மட்டுமே மனிதனைப் போல் உள்ளே உணரும் தன்மை உடையது. யானை எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும்; மனமும் அப்படித்தானே?
கார்த்திகேயர் – குமாரகுரு; என்றும் இளமையானவர்.வசீகரிக்கும் அழகு உடையவர். தகப்பனுக்கே பிரணவத்தை போதித்தவர்.
சூரியர் – ஒளி சக்தி உயிர் சக்தி என அனைத்தும் சூரியனை நம்பி உள்ளன. சூரியனைப் பற்றிச் சொல்லும்போது 7 குதிரைகள் பூட்டப் பெற்று பயணிப்பதாக சொல்லப்படுகிறது ஏன் ? சூரியனிலிருந்து வெளிப்படும் 7 வண்ணத்தை குறிக்கிறது.
1032 ஆண்டு பாரதம் வந்த அல்பிருனி என்ற இஸ்லாமிய அறிஞர் ஆச்சர்யமாகக் குறிப்பிடுவது என்ன என்றால் ஹிந்துக்களின் தெய்வ வழிபாட்டு முறை ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது, அவர்கள் சொல்லும் கடவுள் தத்துவம் அருவாய் இருக்கிறது பிறகு உருவாய் ஆயிற்று என்று, அந்த உருவங்களையும் துல்லியமாக சொல்கிறார்கள், அந்த கடவுளர்களுக்குக் கல்யாணம் செய்து குழந்தைகளும் இருப்பதாகச் சொல்கிறார்கள் . அவர்கள் இப்படிச் சொன்னாலும் அவற்றில் ஒரு தர்க்கமும் உண்மையும் இருக்கிறது, ஏனெனில் அவர்கள் சொல்வது படைப்பு இயற்கையை ஒட்டியே உள்ளது.
அல்பிருனி சமஸ்க்ருதம் பயின்று ஹிந்து தர்ம வழிமுறையைப் பாராட்டிய இஸ்லாமிய அறிஞராக இருந்திரிக்கிறார் என்பது ஆச்சரயமான செய்தியே.
தர்மம்
தர்மம் என்பது இயல்பு. எது ஒன்று ஒரு பொருளைத் தாங்குகிறதோ அந்த குணத்திற்குத் தர்மம் என்கிறோம்.
மதம் எதுவானாலும் தர்மத்தை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே சனாதனத்தின் சிறப்பு ஆகும்
மத சுதந்திரம் உண்டு; ஆனால் தர்மம் என வரும்போது கடமையாக அதை செய்ய வேண்டும் என்று பாரத நாட்டு ஞானமரபு சொல்கிறது
தர்மம் என்பது குணத்தை வைத்து வருவது .
மதத்தை மாற்றிக் கொள்ளலாம்; மதத்தை நிராகரிக்கலாம்.
ஆனால் தர்மத்தை நிராகரிக்கக்கூடாது
அதனால்தான் பாரத நாட்டில் பல மதங்கள் இருக்கின்றன. ஆனாலும் ஒன்றுக்கொன்று இணைந்து இணக்கமாக இருங்க்கின்றன. பல அரசகுடும்பங்களில் ராஜா ஒரு மதத்தவராகவும், ராணி வேறு மதத்தவராகவும் இருந்தார்கள்
ஆனால் கிறிஸ்தவம் இஸ்லாம் வந்த பின்னே தான் நம் நாட்டு மதங்கள அனைத்தும் ஹிந்து என்ற ஒரு குடையின் கீழ் வந்து விட்டது.
கிறிஸ்தவமும் இஸ்லாமும் நம்முடைய கணக்குப்படி மதமாகாது . அவைகள் அன்னிய மதங்களே .
தெய்வத்ததுவம்
- பரம் – உள்ளும் புறமும் கடந்த நிலை பரமாத்மா, பரமேஸ்வரா
- வியூகம் – 4 நிலைகள் வாசுதேவா, சங்கர்ஷணா, பிரத்யும்னா, அனிருத்தா
- வைபவம் – அவதாரங்கள், வழிபடத்தக்க கடவுளர்கள்
- அந்தர்யாமி – பொருட்களின் உள்ளே உட்பொருளாய் இருப்பவர்
- அர்ச்சா – மூர்த்தி, சிலை வடிவில் கோயிலில் இருப்பவர் வழிபடப்படுபவர் .
அவதாரம் என்ற சொல் இரு பதங்களைக் கொண்டது . அவா என்றால் கீழே, தரா என்றால் இறங்குதல்; அதாவது கடவுள் இறங்கி வருதலை அவதாரம் என்கிறோம்
அதே போல மூர்த்தி என்றுதான் சொல்ல வேண்டும். சிலை எனச் சொல்லக் கூடாது .
