Home கட்டுரைகள் தேசம் காலம் நேரம்

காலம் நேரம்

22 second read
0

காலம் நேரம்

அடிப்படையில் காலம் என நாம் சொல்வது அண்டவெளியில் உள்ள கோள்களின் அசைவைப் பொருத்து கணக்கிடுவதாகும்.

யுகம் என்றால் என்ன? யுகம் எப்படி கணக்கிடப்படுகிறது?

அஹோராத்ர என்ற சமஸ்க்ருதச் சொல் இரு பதங்களின் இணைப்பு ஆகும்

அஹ – என்றால் பகல்; ராத்ரி என்பது இரவு

இப்படி பகலும் இரவும் தொடர்ச்சியாக மாறி மாறி வருவதால் இதற்கு அஹோராத்ர எனப் பெயர்

இதிலிருந்துதான் ஹோரை என்ற பதம் நேரத்தைக் குறிப்பதாக வருகிறது

ஹோரா என்ற சொல்லிலிருந்துதான் ஹோராலஜி என்ற ஆங்கிலச் சொல் வந்துள்ளது. கால விஞ்ஞானத்திற்கு ஹோராலஜி எனப் பெயர்.

Horoscope என்ற ஆங்கிலச் சொல்லும், ஹோரா என்வதிலிருந்து வந்ததுதான்.

Hour என்ற ஆங்கிலச் சொல்லும் ஹோரா என்பதிலிருந்து வந்ததுதான்.

இந்த உலகம் ஆறாயிரம் ஆண்டு முன்னால் அறுபதனாயிரம் ஆண்டு முன்னால் என ஒவ்வொருவரும் கணக்கு சொல்லும்போது, வேதம் சொல்கிறது ‘தொடக்கமும் முடுவும் இல்லா அனாதி அனந்தம் காலம் ஆகும்

4 யுகம்      என்பது   சதுர்யுகம்  43,20,000 வருடங்கள்
71 சதுர்யுகம் என்பது ஒரு மன்வந்தர
14 மன்வந்தர என்பது ஒரு கல்பம்
30 கல்பம் என்பது ஒரு பிரம்ம மாசம்
12 பிரம்ம மாசம் என்பது ஒரு பிரம்ம வருஷம்
50 பிரம்ம வருஷம் ஒரு பரார்த்த
2 பரார்த்த என்பது 1, 54,58,68,800,00, 000

கிருத யுகம்     = 17,28,000 வருடங்கள்
த்ரேதா யுகம்  =  12,96,000 வருடங்கள்
த்வாபர யுகம் =    8,64,000 வருடங்கள்
கலி யுகம்         =    4,32,000 வருடங்கள்

மொத்தம் 43,20,000 வருடங்கள்

சூரிய மண்டலம் என்பது ஒரு தட்டு போன்ற பகுதியில் பொருந்தியுள்ளன.

ஒரே தளத்தில் எல்லா கோள்களும் உள்ளன.  கிருஷ்ணர் கையில் இருப்பதும் சுதர்சனச் சக்கரம்.

யுகம் என்பது பல லட்சம் ஆண்டுகளாகக் கொடிருக்க வேண்டும் என்பதில்லை

கலியுகம் என்பது ஆங்கிலக் கணக்குப்படி கிமு 3102 , பிப்ரவரி 18 அன்று தொடங்கியது

இந்தக் கலியுகம் என்பது 4,32,000 வருடங்களில் முடிவடைகிறது

யுகம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்க வேண்டும் என்பதல்ல.

யுகம் என்றால் நேர் கோட்டில் வருவது என்று பொருள்.

தினம் சூசியன் பூமி பொருந்து வருவதால்  ஒவ்வொரு நாளையும் யுகம் எனலாம்.

யுகம் என்ற சொல் யோகம் என்ற சொல்லிருந்து வந்ததாகும். யோகம் என்றால் இணைவது என்ற பொருள்

தூரத்தை அளப்பதற்கும் யோஜனா என்ற அளவைப் பயன்படுத்தினார்கள் நமது முன்னோர்கள்

யோஜனா என்பது இன்றைய நிலையையும் வரவேண்டியதையும் இணைப்பதாகும்.

அதனால் தான் நலத் திட்டங்களுக்குக் கூட யோஜனா என்று சொல்லப்படுகிறது

ப்ரதான் மந்திரி யோஜனா, என்று சொல்வதற்குக் காரணமும் அதுதான்

வேத காலத்து ரிஷி கவி என்ற தபஸ்வி , அருணபிரஷ்ணா என்ற பகுதியில் சொல்கிறார், சூரிய மணடலம் சுழல்வதைக் கண்டேன் என்கிறார்.

இந்த சுழற்சியை அகக்கண்ணால் கண்டார்

அண்ட வெளியிலே பல் வேறு சூரியன்கள் உள்ளன.

நமது பால்வெளி மணடலத்தில் சூரியன் 27 முறை சுற்றி வந்து விட்டது; 28வது சுழற்சியில் இருக்கிறது என்று நவீன விஞ்ஞானம் சொல்கிறது
இதையே நமது ரிஷிகள் முன்பே சொன்னார்கள் ‘அஷ்டா வம்ஸதி அதாவது 28வது சதுர்யுகம்

மன்வந்தரா

பால்வெளி மண்டலமும் சுழன்று கொண்டே இருக்கிறது

இதற்கு மன்வந்தரா எனப்பெயர்  30,67,20,000 வருடங்கள் ஒரு மன்வந்தரா.

சூரியனின் காலம் ஒரு கல்பம் ஆகும் 432, 00,00,000 வருடங்கள்

ஒரு கல்பம் என்பது பிரம்மாவின் ஒரு நாள்

2 கல்பம் என்பது பிரம்மாவின் பகல் இரவு ஆகும்

12 பிரம்ம மாசம்  என்பது ஒரு பிரம்ம வருஷம்

பாஞ்ச மண்டலம்
————————

சந்திர மண்டலம் என்பது சந்திரன் சூரியனைச் சுற்றி வருவது ஆகும்

பிருத்வி மண்டலம் என்பது பூமி சூரியனைச் சுற்றி வருவதாகும்

சூர்ய மணடலம் என்பது சூரியன் நீள் வட்டப்பாதையில் சுழல்வது ஆகும்

பால் வெளி மண்டலமே சுழற்சியில் உள்ளது அதற்கு பரமேஷ்டி மண்டலம் எனப் பெயர்

அண்டத்திலுள்ள அனைத்து பொருட்களும் ஒரு மையத்தைச் சுற்றி வருகின்றன அதற்கு சுயம்பு மண்டலம் எனப்பெயர்

பாயோஜன்
கோள்களுக்கு இடையே உள்ள தூரத்தை நாம் ஒளியாண்டு கணக்கில் சொல்கிறோம்

இதையே நமது முன்னோர்கள் பாயோஜனா என்றார்கள். பா என்பது பாஸ்கரா என்ற பதத்திலிருந்து வருகிறது பாஸ்கரா என்றால் சூரியன் ஒளி ..

  • ஹிந்து நாட்காட்டி

    ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…
  • நாள்காட்டி பற்றிய தகவல்கள்

    நாள் காட்டி பற்றிய தகவல்கள் பாரத நாட்டில் எத்தனை வகை காலண்டர்கள் இருக்கின்றன தெரியுமா? &nb…
  • ஜோதிடம்

    வானவியல் வல்லுனர்களான வராஹமிஹிரர், ஆர்ய்பட்டர், பாஸ்கராச்சாரியர் ஆகியோர் 1500 ஆண்டுகளுக்கு…
Load More Related Articles

Check Also

ஹிந்து நாட்காட்டி

ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெ…