உங்களுடைய சபையின் ஆண்டுவிழாவில் பேசும்படி என்னைக் கேட்டுக்கொண்டப்பொழுது இன்றையப் பேச்சுப் பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, ஹிந்து மதம் என்ற தலைப்பில் சில வார்த்தைகள் பேசக் கருதியிருந்தேன். இப்பொழுது எனது உத்தேசத்தை நிறைவேற்றுவேனா என்பதைச் சொல்ல முடியதவனாய் இருக்கிறேன். ஏனெனில் நான் இங்கு அமர்ந்ததும் என் மனதில் உள்ள ஒரு வார்த்தையை நான் உங்களுக்கும், பாரத சமுதாயம் முழுவதற்க்கும் பேச வேண்டியதிருக்கிறது. அந்த வார்த்தை நான் ஜெயிலிருந்தபோது எனக்குத் தரப்பட்டது; அதை என் மக்களுக்குச் சொல்வதற்காகவே வெளி வந்திருக்கிறேன். இங்கு நான் கடைசி தடவையாக வந்து ஓராண்டிற்கு …