மஹாராணா ப்ரதாப் சிங்கின் பெயரோடு நாளைத் துவக்கினால், மதிப்பானது, மங்களமானது. தன் இன்னுயிரைக் கொடுத்து தேசத்தை, தர்மத்தை, கலாச்சாரத்தை, நாட்டின் சுதந்திரத்தைக் காத்த, மாண்பும் வீரமும் செரிந்த அரசர்களில் அவரது பெயர் தலையாயது. அவரது தீரம் குறித்த புனிதமான நினைவு கூர்தல், இதோ. யாருக்குத் தான் மேவாரின் மகத்தான அரசன் மஹாராணா ப்ரதாப் சிங்கைப் பற்றித் தெரியாது? இந்திய சரித்திரத்திலேயே, இந்தப் பெயர் வீரம், சாகஸம், தியாகம், பலிதானம் ஆகிய குணங்களுக்காக எப்போதும் கருத்தாக்கம் கொடுக்கும் பெயராக விளங்கி வந்திருக்கிறது. பப்பா ராவல், ராணா …