பிரபஞ்சத் தோற்றமும் உள்ளடக்கமும்
நவீன விஞ்ஞான ஆராய்ச்சியில் இப்போது கடவுள் துகள் பற்றிப் பேசுகிறார்கள். அதில் அண்ட வெடிப்புக்குப் பின்னே தான் துகள்கள் உருவாயின. அதன் பின்னேதான் பொருட்கள் உண்டாயின எனக் கண்டு பிடித்துச் சொல்கிறார்கள்.
இங்கே கேள்வி என்ன என்றால் ஒன்றுமில்லாதது என்றால் வெடிப்புக்குப் பின் எப்படி துகள்கள் வந்தன என்பதே நம் முன்னே இருக்கும் கேள்வி.
வேதமோ அந்த நிலையைத் துல்லியமாக என்ன என்று சொல்கிறது. அதாவது அண்ட வெடிப்புக்கு முன் சக்தியும் பொருளும் அடங்கிய நிலையில் இருக்கும்போது ஒன்றை ஒன்று இழுத்தபடி இருந்தன. அதைத்தான் திருப்பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்ற பாம்பை கயிறாக் கொண்டு மேரு மலையை மத்தாகக் கொண்டு கடைந்த உருவகத்தைச் சொன்னார்கள்.
இப்போது நவீன விஞ்ஞானம் படைப்புக்கு முன்னான ஒடுங்கிய நிலையில் அங்கே எலெக்ட்ரான்களோ, ப்ரோட்டான்களோ கிடையாது. நியூட்ரான் மட்டுமே உண்டு என்கிறது. நியுட்ரான் என்பது பொதுவானது . ஏதுமற்ற தன்மை என்றும் கொள்ளலாம்.
வேத சூக்தத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்றால் திருப்பாற்கடல் என்ற இடத்தில் நாராயணர் மிதந்து கொண்டிருக்கிறார் .
நர என்றால் தண்ணீர். அயனம் என்றால் ஓய்வாக பயணிக்கிறார்.
மனிதனுக்குள்ளும் 70 சதவீதம் தண்ணீர் இருப்பதால் நரன் என மனிதனை சொல்கிறோம்.
காலம் என்று எதுவும் இல்லை; இடம் என்று எதுவும் இல்லை. என்றாலும் நாராயணர் மிதக்கிறார் நகர்கிறார் என்கிறோம். குண நிலையில் நாராயணர் இருக்கிறார். நமது புலன் வழிப்பட்ட மனத்தால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் நாம் புரிந்து கொள்வதற்காக இப்படி உருவகப்படுத்திச் சொல்கிறோம்
நாராயணர் யோக நித்திரையில் ஆதிசேஷம் என்ற பாம்பின் மீது பள்ளிகொண்டிருப்பதாக சொல்கிறோம். அதுதான் ஹிரண்யகர்ப்ப நிலை
இரு படைப்புக்கு இடைப்பட்ட நிலையில் அசைவற்ற நிலை.
இந்த நிலையைத் தான் சத்தியம் என்பது ஒன்றுதான் என்கிறோம் ஏகம் சத் என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்வார்கள்
இந்த ஒன்றிலிருந்துதான் பஞ்ச பூதங்கள் வெளிப்படுகின்றன. மஹாலக்ஷ்மியும் தோன்றுகிறார்.
பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணர் நாபியிலிருந்து தாமரை வந்து மலர்கிறது ,இது ஆகாயம் அல்லது பரவெளியின் தோற்றத்தைக் குறிக்கிறது
அந்தத் தாமரை மீது பிரம்மா அமர்ந்திருக்கிறார். எனவே பிரம்மா நாராயணரின் மகன் ஆவார்.
தாமரை ஏன் ஹிந்துக்களுக்குப் புனிதமானது என்றால் தாமரை தண்ணீர் அளவைப் பொருத்து வளரும். நீரில் நனையாது.
இங்கே சிவ புராணத்தில் மிக அருமையான சம்பவத்தை நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள். பிரம்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானின் அடிமுடி காண முயலும் படலம்.
பிரம்மாவுக்கு தான் எப்படிப் பிறந்தோம் என்ற கேள்வி வருகிறது. நான் தான் உன்னைப் படைத்தேன் என விஷ்ணு சொல்கிறார். பிரம்மாவுக்கு அந்த பதிலில் திருப்தி கிடைக்கவில்லை. வாதம் பிறக்கிறது
உடனே இருவரும் உலகம் படைக்கப்பட்டதால் உண்டான ஒளிப் பிழம்பை ஆராய முற்படுகிறார்கள் . பிரம்மா மேல் நோக்கி ஆராய முயல்கிறார் . விஷ்ணு கீழ் நோக்கி ஆராய முயல்கிறார்
ஆனால் இருவராலும் அறிந்து கொள்ள முடியவில்லை
அதனால் இங்கே சிவம் பெரியவர் என்பதல்ல;. இது ஒரு குறீயீட்டுச் சம்பவம் அதாவது தொடக்கமும் முடிவும் இல்லாத பரந்த ப் பெருவெளி.
விஷ்ணு கீழ் நோக்கி சென்றது என்பது துளைத்துத் துளைத்து உலகின் எல்லா அணுக்குள்ளும் சென்றார் என்பதைத் தான் “விஷ்ணு’ என்ற பதம் உணர்த்துகிறது
அதனால் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் நாராயணன் எனச் சொல்கிறோம்.
பிரம்மா படைப்பவர்
விஷ்ணு காப்பவர்
சிவன் மறு உருவாக்கம் செய்பவர்; அழிப்பவர் இல்லை
மாறிக் கொண்டே இருப்பதுதான் உலக இயல்பு. மாறவில்லை என்றால் உலகம் நகராது . எனவே சிவன் மாற்றத்தை நிர்வகிப்பவர். இருப்பதை அழைப்பவர் இல்லை.
ரிக் வேதம் சொல்கிறது ஹிரண்யகர்ப்பத்திலிருந்து பஞ்சபூதங்கள் வந்தன
உலகம் பஞ்சபூதத்தால் ஆனது; தேவர்களும் பஞ்சபூதத்திலிருந்துதான் வந்தார்கள்
அதனால் தான் ஹிந்துக்கள் உலகைப் பிரபஞ்சம் என்கிறோம்.
பிர + பஞ்சம் அதாவது விசேஷமான வஸ்துவிலிருந்து 5 பொருட்கள் அல்லது பூதங்கள் உருவாகின.
ஆகாசம் = ஆகாயம்
வாயு = காற்று
தேஜஸ் = ஒளி நெருப்பு
அபஹ = அப்பு என்ற நீர்
ப்ருத்வி = மண் பூமி
பஞ்ச பூதம் என்பது வெறும் பொருட்கள் அல்ல; குணங்களோடு கூடிய படைப்பு எனக் கொள்ள வேண்டும்
ஆகாயத்தை சப்தத்தைக் கேட்க முடியும்
வாயுவை உணர முடியும் கேட்க முடியும்
நெருப்பை பார்க்க முடியும், உணர முடியும் கேட்க முடியும்
நீரை பார்க்க முடியும், சுவைக்க முடியும் உணர் முடியும் கேட்க முடியும்
பூமியை அல்லது மண்ணை பார்க்க முடியும், சுவைக்க முடியும் உணர முடியும் முகர முடியும் கேட்க முடியும்.
அதனால் தான் சிவ பெருமானுக்கு பஞ்ச பூதத் தலங்கள் உள்ளன.
எனவே ஹிந்துக்களின் குருக்களான ரிஷிகள் அகமுக ஆராய்ச்சி மூலமாகவே பிரபஞ்சம் தோற்றம் இயக்கம் ஆகியவற்றை துல்லியமாகக் கணக்கிட்டு நாம் புரிந்து கொள்ளும் வகையில் கோயில்கள் கட்டி உலக ரகசியத்தையும் தத்துவத்தையும் விளக்கியுள்ளார்கள் எனப் புரிந்து கொள்ளலாம்
