Home கட்டுரைகள் வந்தேமாதரம் – நமது தேசியகீதம்

வந்தேமாதரம் – நமது தேசியகீதம்

1 min read
0

ஆயிரம் ஆண்டுகாலமாக அடிமை தளத்தில் சிக்கி தன்னிலை மறந்து நெடுந்துயிலில் ஆழ்ந்து இருந்த பாரதத்தைத் தட்டி எழுப்பிய பாடல் வந்தேமாதரம் என்று புத்தகங்களில் படித்தபோதும், பேச்சாளர்கள் வாயிலாக கேட்ட போதும் வந்தேமாதரப் பாடலை வரலாற்று கோணத்தில் தான் பார்க்க முடிந்தது. ஆனால் பாரதியின் மொழிபெயர்ப்பை கையில் வைத்துக்கொண்டு திருமதி M.S. சுப்புலட்சும் அவர்கள் பாடி கேட்கும்பொழுது ஒரு சாதாரண மனிதன் கூட எப்படி சுதந்திரப் போராட்ட வீரன் ஆனான் என்பதை உணர முடிகிறது. இந்த உணர்வை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள இந்தப் பாடல் உதயமான அக்ஷயநவமியில் (ஆங்கில தேதி நவம்பர் 7 1975) வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

இந்தப்பாடலை பா ட மாட்டோம், இது எங்கள் மதத்திற்கு எதிரானது என்றும் எங்கள் மத உணர்வை புண்படுத்துகிறது என்று முரண்டுபிடிக்கும் முஸ்லிம்களும் அவர்களுக்காக கூக்குரலிடும் ஜந்துக்களும் தேச பக்தியோ, மனித உணர்வோ இல்லாத ஜடங்களாகத் தான் இருக்க முடியும் என்று இந்த பாடலை கேட்ட உடன் உணரலாம்.

வந்தேமாதரம் !

மகாகவி சுப்பிரமணி பாரதியின் தமிழாக்கம்:

நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களம்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை, (வந்தே)

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் நிற்கவும்
கூடு திண்மை குறைந்தனை’என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை,அரும்பதங் கூட்டுவை
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை (வந்தே)

அறிவுநீ,தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடை
மருமம்நீ,உடற்கண் வாழ்ந்திடும் உயிர்நீ;
தோளிடை வன்புநீ நெஞ்சகத்து அன்புநீ
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம்,தேவி,இங்குனதே. (வந்தே)

பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ! (வந்தே)

திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை;
மருவு செய்களின் நற்பயன் மல்குவை,
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை, பல்பணி பூண்டனை;
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் வங்காள மொழி பாடல்:

sujalaaM suphalaaM malayaja shiitalaaM
SasyashyaamalaaM maataram ||
Shubhrajyotsnaa pulakitayaaminiiM
pullakusumita drumadala shobhiniiM
suhaasiniiM sumadhura bhaashhiNiiM
sukhadaaM varadaaM maataraM ||

Koti koti kantha kalakalaninaada karaale
koti koti bhujai.rdhR^itakharakaravaale
abalaa keno maa eto bale
bahubaladhaariNiiM namaami taariNiiM
ripudalavaariNiiM maataraM ||

Tumi vidyaa tumi dharma
tumi hR^idi tumi marma
tvaM hi praaNaaH shariire
Baahute tumi maa shakti
hR^idaye tumi maa bhakti
tomaara i pratimaa gaDi
mandire mandire ||

TvaM hi durgaa dashapraharaNadhaariNii
kamalaa kamaladala vihaariNii
vaaNii vidyaadaayinii namaami tvaaM
Namaami kamalaaM amalaaM atulaaM
SujalaaM suphalaaM maataraM ||

ShyaamalaaM saralaaM susmitaaM bhuushhitaaM
DharaNiiM bharaNiiM maataraM |”

Load More Related Articles

Check Also

ஸ்ரீ அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை

உங்களுடைய சபையின் ஆண்டுவிழாவில் பேசும்படி என்னைக் கேட்டுக்கொண்டப்பொழுது இன்றையப் பேச்சுப் …