பாரதம் – பெயர் எப்படி வந்தது? நமது நாட்டை பரதன் என்ற அரசன் ஆண்டான். அதனால் இந்த நாட்டிற்கு பாரதம் எனப் பெயர் வந்தது; அவனின் வழித் தோன்றல்களாகிய நாம் பாரதியர்கள் என அழைக்கப்படுகிறோம் என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டுளதை பலர் அறிவார்காள். உண்மை தான். ஆனால் பாரதம் என்று நமது நாடு அழைக்கப்படுவதற்கு இன்னும் பல நுணுக்கமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்தால் நாம் ஆச்சர்யப்பட்டுப் போவோம் பூகோள ரீதியான விளக்கம்: விஷ்ணு புராணத்தில் பாரத நாட்டின் எல்லைகளாக சொல்லப்பட்டவைதெற்கே மகா சமுத்திரம் இருக்கிறது; …
